மண்ணின் குரல்: மார்ச் 2015:​ஸ்ரீ பகவான் ஆதிநாதர் ஆலயம் - விழுப்புரம் மாவட்டம்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று   இன்று வெளியீடு காண்கின்றது. 



மேல்சித்தாமூர் சமண மடம் இருக்கும் அதே ஊரில் அருகாமையில் இருப்பது ஆதிநாதர் ஆலயம். ஆலயத்தினுள் பிரகாரப் பகுதியில் முதலில் பார்சுவநாதர் முன்னே இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  உள்ளே கருவரை பகுதியில் ஆதிநாதர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 
கருங்கல்லில் அமைக்கப்பட்ட ஆதிநாதர் சிற்பம் தவக்கோலத்தில் அமர்ந்திருக்க தலைப்பகுதியில் முக்குடையுடனும் இரு புறமும் சாமரதாரிகளுடனும் இருக்கும் இந்தச் சிற்பத்தைக்  காணலாம். 
இங்கு தற்போது இருக்கும் ஆலயம் ஏறக்குறைய 800 ஆண்டு பழமையானது என ஆலய நிர்வாகத்தார் குறிப்பிடுவதையும், ஆயினும் அப்பகுதியில் அதற்குப் பல நூறாண்டுகளுக்கு முன்னரே ஆதிநாதர் ஆலயம் இருந்தது என்பதனைக் காட்டும் பழமையான கருங்கற் சிலைகளும் இதே ஜினாலயத்தின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருக்கின்றன.

தற்சமயம் இந்த ஆலயத்தில் யுகாதி பண்டிகை சிறப்புடன் கொண்டாடப்படுகின்றது.

உழவுத் தொழில் என்று மட்டுமல்லாது பஞ்சத்தில் வாடிய மக்களுக்கு கைத்தொழில் கற்றுக் கொடுத்து வாழ்விற்கு ஆதாரம் உழைப்பு என சொல்லிக் கொடுத்தவர் ஆதிநாதர் என ஆலய நிர்வாகி குறிப்பிடுவதையும் இந்தப் பதிவில் காணலாம்.

இந்தப் பேட்டியில் மேலும்..
  • தீர்த்தங்கரர் உருவங்கள், அவற்றின் சின்னங்களின் அடிப்படையில் விளக்கப்படுகின்றன
  • யட்ஷன் யட்ஷி பற்றிய விளக்கம்
  • இந்தக் கோயிலில் பிரசித்தி பெற்ற பத்மாவதி தாயாரின் வழிபாடு 
  • தீர்த்தங்கரர்கள் அவர்களின் எண்ணிக்கை.தனித்தனியாக 
  • பாகுபலி.. 
  • ஆதிநாதர்..
  • நேமிநாதர்
  • பிரதிஷ்டை செய்யப்பட்ட பிம்பங்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்ற விளக்கம்
  • தீர்த்தங்கரர் உடலில் பதிக்கப்படும் முக்கோண வடிவின் விளக்கம்
  • படிப்படியான சடங்குகளின் விளக்கம்
  • சிலைக்கு உயிரோட்டம் கொடுக்கக்கூடிய பண்டிதர்கள் ..
  • யந்திரம்
  • இங்கே ஆலயத்தில் பாதுகாக்கப்படும் ஓலைச்சுவடிகள்
  • கந்தவர்கள் தேரை இழுத்துக்கொண்டு செல்வது போல அமைக்கப்பட்டுள்ள ஆலயத்தின் தங்கத்தேர்
பதிவு 20 நிமிடங்கள் கொண்டது. முதல் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பதிவில் விளக்கம் தொடரும்.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2015/03/blog-post.html

யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=7wdAzKug7ik&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 20 நிமிடங்கள் கொண்டது.

குறிப்பு: இந்தப் பதிவினை நான் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீட்டிற்காகச் செய்ய உதவிய மேல்சித்தாமூர் ஜைன மடத்திற்கும் மடத்தின் தலைவருக்கும், நண்பர்கள் பிரகாஷ் சுகுமாரன், இரா.பானுகுமார், ஹேமா ஆகியோருக்கும், என் உடன் வந்திருந்து பல தகவல்களை வழன்கி உதவிய டாக்டர்.பத்மாவதி அவர்களுக்கும் என் தனிப்பட்ட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES