0 மறுமொழிகள்
வாழ்க்கைக்கு உதவவும்  கல்வியே சிறந்த கல்வி
ஜெர்மன் நாட்டு அறிஞர் பேச்சு

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஜெர்மன் நாட்டை சார்ந்த அறிஞரும்,தமிழ் மரபு அறக்கட்டளை தலைவருமான முனைவர் சுபாஷினி மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினர்.



                          நிகழ்வுக்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்து லெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன்,எல்.ஐ.சி.வினை தீர்த்தான்,அழகப்பா பல்கலைகழக அலுவலர் காளைராஜன்,மணலூர் அழகு மலர் பள்ளி தாளாளர் யோகலேட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெர்மன் நாட்டை சார்ந்த அறிஞரும்,தமிழ் மரபு அறக்கட்டளை தலைவருமான முனைவர் சுபாஷினி மாணவர்களிடம் பேசுகையில் , நிறைய வாசித்தால் நல்ல குணங்கள் ஏற்படும்.வாழ்க்கைக்கு தேவையான கல்வியை கற்று கொண்டால் சிறப்பாக இருக்கும்.மனப்பாடம் செய்வதால் எந்த பயனும் இல்லை.ஜெர்மானியர்கள் கடமை உணர்வு அதிகம் உள்ளவர்கள்.அங்கு இயற்கை சூழ்நிலை நன்கு பாதுகாக்கபட்டுள்ளது.இயந்திரவியல் கல்வி முறை அதிகம் .அறிவை ஆக்க பூர்வமாக பயன்படுத்தும் நாடுகளில் ஜெர்மன் முன்னிலை வகிக்கிறது.
                        தமிழகத்தில் தொன்மையான விசயங்களான கல்வெட்டுகளை பாதுகாக்க வேண்டும்.கற்கும் பருவத்தில் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.கணிதம்,கணிபொறி தொடர்பான அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்.நேரம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும்.இதன் மூலம் பெரிய வெற்றிகளை அடையலாம்.புத்தகங்களை நிறைய வாசித்தல் நல்ல குணங்கள் உண்டாகும்.இனத்தின் வரலாறை பாதுகாப்பதுதான் சந்திதியனரின் முக்கிய கடமை என்றார்.ஜெர்மன் நாட்டில் அதிகமான வளர்ந்த தொழில்நுட்பம் பயன்படுவதால் அந்த நாட்டை தேர்ந்தெடுத்து அங்கு சென்று பணிபுரிந்து வருகின்றேன். எந்த விசயம் நமக்கு வரவேயில்லை என்று நினைக்கிறோமோ அதனை மீண்டும்,மீண்டும் முயற்சி செய்து அது நன்றாக வரும் வரை அதனை தொடர்ந்து செய்ய வேண்டும்.நிச்சயம் நம்மால் அதனை அடைந்து விட முடியும்.கணினி மூலமாக நல்ல கல்வியை பெற்று வாழ்க்கையில் சிறந்த வெற்றியை பெற முயற்சி செய்ய வேண்டும்.அது உங்களால் முடியும்.உங்களின் கேள்வி கேட்கும் ஆற்றல் என்னை வியக்க வைக்கிறது. அதற்கு என் பாராட்டுக்கள்,என்றார்.

பின்னர்  பள்ளியின் செயல்பாடுகளைப் பாராட்டி  மாணவர்களுக்கு கணினி கற்கும் வகையில் கணினி வழி கல்விக்காக கணினி ஒன்றினை பரிசாக வழங்கினார்.

       கல்வி கற்பது வாழ்வில் இன்றியமையாதது. கல்வி கற்பதன் மூலம் பல வாழ்வியல் முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும். சிறந்த கல்வி யாளர்களாக வர வேண்டும். வாழ்க்கை முழுவதும் பல வழிகளிலும் கல்வி தான் சிறந்த ,உற்ற நண்பனாக இருக்க முடியும். வீதிகளில் பல இடங்களிலும் பார்க்கும் போது ஆங்காங்கே குப்பை கிடக்கிறது. குப்பைகளை கொட்டக் கூடாது. அதற்கான இடங்களில் கொட்ட வேண்டும்.யாரேனும் குப்பையை கொட்டினால் அதைஎடுத்து தொட்டியில் போடவேண்டும். குப்பைகளை கண்ட இடங்களில் போட்டால் ஏற்படும் கெடுதல்களை பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இளம் வயதிலேயே கீரை போன்ற சத்தான உணவு வகைகளை சாப்பிட வேண்டும், என்றார்.                    
       
மாணவர்கள் காயத்ரி, செந்தில்குமார், தனலெட்சுமி, ராஜேஷ், அய்யப்பன், ராஜேஸ்வரி, ரஞ்சித், ஜெனிபர், ராஜி உட்பட பலர் கேள்விகள் கேட்டனர்.ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.நிறைவாக ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஜெர்மன் நாட்டை சார்ந்த அறிஞரும்,தமிழ் மரபு அறக்கட்டளை தலைவருமான முனைவர் சுபாஷினி மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினர்.

Posted by Chokkalingam Lakshmanan at 09:16 


மண்ணின் குரல்: நவம்பர் 2016: பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய உமையம்மை ஓவியம்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

பல்லவர்கால பாறைக்கோயில்களும் குடைவரைக்கோயில்களும் தமிழகத்தின் கோயில்கட்டுமானக் கலைக்குத் தனிச்சிறப்பை வழங்குகின்றன. செஞ்சிக்கு அருகே உள்ள மண்டகப்பட்டு, தளவானூர் போல பல்லவர்க்கால கோயில் கட்டுமானக் கலைக்குப் புகழ்ச்சேர்க்கும் ஒரு கோயில் பனைமலை தாளகிரீஸ்வரர் கோயில். 



செஞ்சியிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் இருக்கின்றது "பனைமலை". இந்த மலைப்பகுதியைச் சார்ந்தார் போன்ற பெரிய ஏரி அமைந்துள்ளது. மலையைச் சுற்றிலும் விவசாய நிலங்கள் சூழ்ந்திருக்கின்றன. இயற்கை வளம் நிறைந்த ஒரு பகுதி இது. அருகாமையில் இருக்கும் விவசாயிகள் இந்த நிலங்களில் விவசாயம் செய்வதால் இந்தப் பகுதியும் இதன் சுற்றுப்புறப்பகுதியும் பசுமை குன்றாது கண்களைக்கவரும் எழிலுடன் திகழ்கின்றது. 

காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் என்ற சிறப்பினைப் பெறும் 2ம் நரசிம்மவர்ம (கி.பி695-722) பல்லவனால் கட்டப்பட்டது  இந்தக் கோயில். இந்த மன்னன் இராசசிம்மன் என்றும் அழைக்கப்படுகின்றான். பல்லவ மன்னர்கள் கலைகளை வளர்த்தவர்கள். பாறைக் கோயில்கள், குடைவரைக்கோயில் கட்டுமானங்கள், பாறைகளைக் குடைந்து புடைப்புச் சிற்பங்களாக தெய்வ வடிவங்களை வடித்தல் ஆகியவற்றோடு கவின் மிகு ஓவியங்களையும் கோயில்களில் சுவர்ச்சித்திரங்களாக இணைக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டனர் என்பதற்கு பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய பாறை ஓவியங்கள் சான்றாக அமைகின்றன. 

கோயில்களைக் கட்டி இறைவழிபாட்டையும் கலைகளையும் போற்றியது போல வேளாண்மைக்கு உதவும் வகையில் ஏரிகளை அமைத்து விவசாயத்தை விரிவாக்கியதில் தமிழகத்தில் பல்லவ மன்னர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. கன்று விரிந்து கடல் போலக் காட்சியளிக்கும் பனைமலை ஏரியும் இதற்குச் சான்றாக விளங்குகின்றது. 

ஸ்ரீ கைலாசநாதர் கோயிலை போலவே கோயில் சன்னிதானத்தில் சுவர் ஓவியங்களை இக்கோயிலிலும் தீட்டி இருக்கிறார்கள். அதற்கான சுவடுகள் ஆங்காங்கே இன்றும் தெரிகிறன. இந்தக் கோயிலின் சிறப்பு எனக் கருதப்படுவது கோயிலுக்கு இடப்பக்கம் இருக்கும் சன்னிதியில் இருக்கும் உமையம்மையின் ஓவியம். ஓவியத்தின் பெரும்பாலான பகுதிகள் சிதைந்தாலும் கூட இன்றும் ஓரளவு காணக்கூடிய வகையில் இந்த ஓவியம் இருக்கின்றது என்பது ஆறுதல் அளிக்கும் ஒன்று. 

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2016/11/blog-post_26.html
யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=CBaq-dxKGqM&feature=youtu.be

இப்பதிவில் என் உடன் வந்து புகைப்படங்கள் எடுக்க உதவிய ஸ்ரீதேவி, உதயன் ஆகியோருக்கு என் நன்றி.


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!






































அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​


Dec 2016 - Jan 2017 THF Programs - Event Calendar

9 மறுமொழிகள்


THF event Calendar




முனைவர்.சுபாசிணி பங்குபெறும் மலேசிய தமிழக நிகழ்வுகள்

மலேசியா
6.12.2016 -  மலேசியத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க நிகழ்வு -சொற்பொழிவு. கிள்ளான்,  கே.பி.எஸ் நிறுவனம், முதல் மாடி. மாலை 6 மணி


தமிழகம்
13.12.2016 - வள்ளலார் கலை அறிவியல் கல்லூரி

15.12.2016 - தேவகோட்டை சேர்மன் மாணிக்கம் பள்ளி - கணினி வழங்கும் விழா

15.12.2016 - சிவகங்கை மாவட்டம் மணலூர் அழகுமலர் மெட்ரிகுலேஷன் பள்ளி அருங்காட்சியகத் திறப்புவிழா

16.12.2016 - மதுரை அமெரிக்கன் கல்லூரி - வரலாற்று ஆவணங்கள் கண்காட்சி, கல்வெட்டு பயிற்சிப்பட்டறை

18.12.2016 - உலக வழக்கறிஞர்கள் சங்க நிகழ்வு- கருத்தரங்கம், மதுரை

19.12.2016 - மதுரை - தமிழ்ப்பள்ளி நிகழ்வுகள்

20.12.2016 - கோவை பாரதியார் பல்கலைக்கழக பன்னாட்டுக் கருத்தரங்கம்

21.12.2016 - அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி

23.12.2016 - பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி - கருத்தரங்கம்

27.12.2016 - திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி - பன்னாட்டுக் கருத்தரங்கம்

29.12.2016 - வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க்கப் பேரவை, 12ம் ஆண்டு விழா, 4ம் ஆண்டு தமிழிசை விழா, தி.நகர், சென்னை

4.1.2017 - ஈரோடு மாவட்டம், வாசவி கல்லூரி - கருத்தரங்கம்
4.1.2017 - ஈரோடு மாவட்டம், சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி- கருத்தரங்கம்

5-6.1.2017 - ஈரோடு மாவட்டம், குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கலை அறிவியல் கல்லூரி கண்காட்சி &  கருத்தரங்கம்

7.1.2017 - மதுரை அமெரிக்கன் கல்லூரி - Women Empowerment -International conference

8.1.2017 - கவி.வளநாடன் நூல் வெளியீட்டு விழா, காரைக்குடி
8.1.2017 - வள்ளலார் காட்டிய வாழ்வு நெறி, குறுந்தகடு வெளியீடு, மதுரை


மலேசியா
21.1.2017 - பன்பாட்டு மீட்சி - கருத்தரங்கம், மலாயா பல்கலைக்கழகம்




மண்ணின் குரல்: நவம்பர் 2016: திருச்சி தூயவளனார் கல்லூரியின் வரலாறு

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 



முதன் முதலில்  நாகப்பட்டினத்தில் தூயவளனார் கல்லூரி தொடங்கப்பட்டது. பின்னர் திருச்சிக்கு மாற்றம் செய்து அது முதல் திருச்சியிலேயே இக்கல்லூரி செயல்பட ஆரம்பித்தது.

தூய வளனார் கல்லூரியின் செயலாளர் திரு.செபாஸ்டியன், இந்த கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் திரு.சூசை ஆகியோர் கல்லூரியைப்பற்றிய அறிமுகத்தை வழங்குகின்றனர்.

 கல்லூரியின் அதிபர் அருட்தந்தை.பிரிட்டோ   இக்கல்லூரியின் வரலாற்றை விவரிக்கின்றார். அதில் குறிப்பாக:
  • 170 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்படும் கல்லூரி
  • 16ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தின் கடலோரப்பகுதிகளிலும் மேலும் பல நகர்களிலும் சமயம் பரப்பும் பணியிலும் நலிவுற்ற மக்களுக்குச் சேவைகளைச் செய்து வந்தமை
  • வீரமாமுனிவரின்   சமய, தமிழ் மொழி நடவடிக்கைகள்
  • பிரான்சு நாட்டிலிருந்து வந்த பாதிரிமார்களின் சேவைகள்
  • ராபர்ட்.டி.நோபிலியின் சமய, தமிழ் மொழி நடவடிக்கைகள் - மதுரை
  • கல்வியை பரவலாக அனைத்து தரப்பு மக்களுக்கும் உரியதாக்க பாதிரிமார்கள் செய்த  முயற்சி
  • இக்கல்லூரியின் ஆய்வுத் துரைகள்
  • இக்கல்லூரியின் மிகப்பெரிய நூலகம்
  • இக்கல்லூரியில் படித்த அறிஞர்கள்
...
இப்படி   பல தகவல்களை விரிவாக இப்பேட்டியில் கேட்கலாம்.


இப்பேட்டியைச் செய்ய உதவிய தமிழ்த்துறை பேராசிரியர் திரு.சூசை அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.


விழியப் பதிவைக் காண:      http://video-thf.blogspot.de/2016/11/blog-post_34.html
யூடியூபில் காண:       https://www.youtube.com/watch?v=68-p5W-Pq8I&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
































அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES