THF Announcement: E-books update: 08/11/2015 *திருக்குடந்தைத் தல வரலாறு*

2 மறுமொழிகள்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.


நூல்:திருக்குடந்தைத் தல வரலாறு
நூல் பதிப்பு: என்.ராஜகோபால் அய்யங்காரால் பதிப்பக்கப்பெற்று வெளியிடப்பெற்றது.

நூல் குறிப்பு: 
ஆலயம் பற்றிய பல தகவல்களை வழங்கும் நூல்.


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 441

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.
மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்

இவர்கள் அனைவருக்கும் நன் நன்றி!


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​

மறுமொழிகள்

2 comments to "THF Announcement: E-books update: 08/11/2015 *திருக்குடந்தைத் தல வரலாறு*"

இன்னம்பூரான் said...
November 8, 2015 at 3:19 PM

தற்பொழுது அதிகாலை 4 மணி. பிரஹ்ம முஹூர்த்தம் என்பார்கள். எழுந்தவுடன் கோபுர தரிசனம். என்னுடைய முன்னோர்களுடன் உறவாடியவர்களின் சம்பந்தத்தை இங்கு காண்கிறேன். என்னுடைய தாத்தா யாரையும் ஓஹோ ஓஹோ என்று புகழமாட்டார். நூலாசிரியர் தி. ஶ்ரீனிவாசார்யார் ஸ்வாமி அதற்கு விதி விலக்கு. அறங்காவலர் டி.என். ராஜகோபாலய்யங்கார் அவருக்கு மிகவும் வேண்டப்பட்டவர். கோபுரத்துக்கு இடது பக்கம் தென்படும் சார்பு போடப்பட்ட வீடு என் தம்பியின் மாமனார் வீடு.

முகவுரை எழுதிய ஏ.வி.கோபாலாச்சாரியார் ஸ்வாமி ஸர். எஸ்.வரதாச்சாரியரின் (என் அத்திம்பேரின் அண்ணா) சம்பந்தி.நான் அடிக்கடி அவரை சந்தித்து இருக்கிறேன். கோயில் அழகின் மறு உருவம். சிற்பங்கள் அபாரம். ஸுபாஷிணி மூலம் கிடைத்த தரிசனம் மேலும் அபாரம். திட்டமிட்டு, வளர் பிறையை போல எழுதப்பட்ட இத்தகைய இலக்கியமணம் வீசும் தலபுராணங்களை காண்பது அரிது. அதில் சொல்லப்பட்ட கற்பூர ஆராத்தி என்பது தெளிவு.

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கிய திரு.சிவராமகிருஷ்ணன், மின்னாக்கம் செய்தவரும் என்னை மறந்தவருமான டாக்டர்.திருவேங்கடமணி,
மின்னூலாக்கம் செய்த திரு.சுந்தர் கிருஷ்ணன் ஆகியோருக்கும், என்னை என்றும் மறவாத ஸுபாஷிணிக்கும் நன்றி, வணக்கம், தீபாவளி வாழ்த்துக்கள்.
இன்னம்பூரான்
09 11 2015

pathykv said...
November 8, 2015 at 10:28 PM

On the right side third house belonged to Sri Kannan Swami, who later became Andavan. His son Aravamudan was my class mate in Town High School. Sri Swami used to request me to help his son in his studies. I regularly received his blessings when he was Andavan.

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES