வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்களின் கையெழுத்தில் அமைந்த ஒரு கடிதம்

0 மறுமொழிகள்
எட்டயபுரத்தில் நான் சந்தித்தவர்களில் மிக முக்கியமானவர் ரகுநாதன் நூல் நிலையத்தின் மேலாளர் திரு.இளசை மணியன் அவர்கள்.  அவரை நூலகத்தில் சந்தித்த வேளையில் கிடைத்தற்கு அரிதான சில நூல்களை எனக்குக் காட்டினார். அத்தோடு வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்களின் கையெழுத்தில் அமைந்த ஒரு கடிதம் ஒன்றினையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இக்கடிதத்தை இங்கே காணலாம்.    இது 30.11.1933ல் எழுதப்பட்டதாக திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.


அன்புடன்
முனைவர்.சுபாஷிணிதெலுங்குக்குத் திருமுறை

0 மறுமொழிகள்
ஓம்.
இறைவன் திருவருளால் இறைவான் முழுதும் பன்னிரு திருமுறைகள் மொழிபெயர்ப்பு நிகழட்டும்.பிறமொழி இலக்கியங்களும் தமிழுக்கு அணி சேர்க்கட்டும்.தண் கருணைப் பேராறு வல்லமை அருளட்டும்.அயராது உழைத்திடும் பெருமதிப்பிற்குரிய பெரியோரும் திரு சச்சிதானந்தம் அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் பல்லாண்டு ஆரோக்கியத்துடன் வாழ்கவென இறைவனை இறைஞ்சுகின்றேன்.தமிழ்நூல் வாழ்கவே.
அன்பன் வெ.சுப்பிரமணியன் ஓம்.


பன்னிரு திருமுறை -
தெலுங்கு மொழிபெயர்ப்பு
திருமலை - திருப்பதித் தேவஸ்தானம் நடத்திய
ஆலோசனைக் கூட்டம்
இடம்: திருமலை - திருப்பதித் தேவஸ்தானம் (திதிதே. TTD), கீழைத் திருப்பதி, பத்மாவதி விருந்தினர் இல்லத்திற்கு அருகில் உள்ள பணியாளர் பயிற்சி மையக் கருத்தரங்கு அறை.
நாள்: 16-2-2010 காலை 11 மணி
வருகை தந்தோர்:
1. முனைவர் கவிதா பிரசாதர், செயலாளர், தருமப் பிரச்சாரப் பரிசத்து, திதிதே.; Dr. R. Kavitha Prasad, Secretary, Dharma Prachara Parishad, TTD.
2. திரு. ச. இலட்சுமணய்யா, சிறப்பு அலுவலர், திதிதே.; Mr. S. Lakshmanaiah, Special Officer, TTD.
3. முனைவர் செஞ்சு சுப்பையா, பதிப்பாசிரியர், பாலபாரதி, நூல் தொடர், திதிதே.; Dr. P. Chenchu Subbiah, Editor, Bala Bharathi Series, TTD.
4. முனைவர் கே.க. சர்வோதன ராவ், ஓய்வு பெற்ற தெலுங்குப் பேராசிரியர்; Dr. K. Sarvothana Rao, Retd. Prof of Telugu.
5. திரு. பி. ஆர். ரங்கராஜன், ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர்; Mr. P. R. Rangarajan, Retd. Prof of Tamil.
6. முனைவர் டி. சின்னி கிருஷ்ணய்யா, ஓய்வு பெற்ற தெலுங்குப் பேராசிரியர்; Dr. D. Chinni Krishnaiah, Retd. Prof of Telugu.
7. முனைவர் என். எஸ். ராமமூர்த்தி, ஓய்வு பெற்ற பதிப்பாசிரியர், திதிதே. Dr. N. S. Ramamoorthy, Retd. Editor, TTD.
8. திரு. சி. சைல குமார், முதன்மைப் பதிப்பாசிரியர், Mr. C. Shaila Kumar, Chief Editor, TTD.
9. முனைவர் சொக்கலிங்கம், தமிழ்ப் பதிப்பாசிரியர், திதிதே.
10. மறவன்புலவு க. சச்சிதானந்தன், சென்னை - காந்தளகம், தருமை ஆதீனத்தின் பன்னிரு திருமுறை மின்னம்பல தளச் www.thevaaram.org செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர்.
11. புலவர் க. ஆறுமுகம், தருமை ஆதீனப் புலவர், சென்னை.
12. திரு. வி. திவாகர், பன்னிரு திருமுறை - தெலுங்கு மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர், விசாகப்பட்டினம்.
13. திருமதி. சசிரேகா பாலசுப்பிரமணியம், சென்னை - காந்தளகம், பன்னிரு திருமுறை மின்னம்பலத் தள அமைப்பாளர்.
14. செல்வி நித்தியா கணேசன், சென்னை - காந்தளகம், பன்னிரு திருமுறை மின்னம்பலத் தள அமைப்பாளர்.

கூட்டக் குறிப்பு, புகைப் படங்கள், செயற்றிட்ட அறிக்கை யாவையும் இணைப்புகளில் பார்க்க.
செய்தியை ஊடகங்களோடும் நண்பர்களோடும் பகிர்க.
நன்றி


--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. SachithananthanThe Fire Yogi of Tanjore

0 மறுமொழிகள்
The Fire Yogi of Tanjore

The Fire Yogi is a 47 minute documentary exploring the journey of a Yogi who has the extraordinary ability to use a unique breathing technique to get into union with Fire. This documentary portrays.

தமிழ்மணி - சங்க காலத்தில் சுயமரியாதை!

0 மறுமொழிகள்

தமிழ்மணி - சங்க காலத்தில் சுயமரியாதை!

 

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து "சுயமரியாதை" என்ற சொல் தமிழர்களுக்குப் பழக்கமாகிவிட்டதொன்று எனில் மிகையல்ல. 

ஆனால், சுயமரியாதை என்பது நமது முன்னோர்கள் வாழ்க்கையில் இயல்பாக அமைந்ததொன்று.

இன்றைக்கு அதிகாரம் பெற்ற யாரிடத்தும் கற்றறிந்த மாந்தர் யாராயினும், வளைந்தும், நெளிந்தும், குனிந்தும், கும்பிட்டும் புகழ் மொழிகளை 
மட்டும் பாடி இன்புறுவதைக்  காணலாம். 

சுயமரியாதை என்பதே பிறர்க்குக் காட்டும் மரியாதையே என்பதாயிற்று!

தமிழ்கூறு நல்லுலகம் சங்ககால சுயமரியாதை பற்றி என்ன சொல்கிறது?

பிறரைப் பாடி பரிசில் பெறும் வறிய புலவன் ஒருவன், நாடாளும் மன்னனை, அவனது அவையிலேயே தன் சுயமரியாதை உணர்வை 
வெளிப்படுத்திக் காட்டும் முகமாக ஒரு பாடல் பாடினார் எனில் அவரை நாம் நினைக்கத்தானே வேண்டும்?

வனப்பு மிக்க வளங்கள், எங்கு நோக்கினும் சிறு மலைகள், சில்லென்ற சிற்றோடைகள், நீண்டு நெளியும் சிறு நதிகள் இவைகள் தாம் 
திருக்கோவிலூரை முதன்மை நகராகக் கொண்ட மலையமானாட்டிற்கு அழகு சேர்ப்பவை. 

பகைவர்கள் வெல்ல இயலாத வீரம் செறிந்த பூமி. 

இந்நாட்டை அந்நாளில் வல்வில் ஓரியை வென்று கொல்லியை கொடையாகச் சேரனுக்கு ஈந்த பெருவீரன் வள்ளல் திருமுடிக்காரி ஆண்ட காலமது.

இவன் அரசுக் கட்டிலில் அமர்ந்து கோலாச்சிய பழம்பெரும் பதிக்கு "செறுத்த செய்யுள் செய் செந்நாவின் வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்" வந்தார்.

காரியின் பெரும்வீரம், ஈகைக் குணம் அறிந்த கபிலர், காரியின் 
  • கொடைச் சிறப்பு
  • கொற்றச் செழிப்பு
  • குணநலன்
  • பிறநலன் 
இவற்றின் பொருள் விளங்க, புகழ் தோய்ந்த பாடல் பல எழுதி அவனது அத்தாணி மண்டபத்தில் அவனிடம் அளிக்கிறார். 

வரையாது வழங்கும் வள்ளல் திருமுடிக்காரி அன்றைய நாளின்கண் அரண்மனை வந்துற்ற அத்துணை புலவர்களுக்கும் அளித்தான் வெகுமதிகளை ஒருசேர, 
ஒரு நிறையோடு!

கிடைத்தது அரசப்பொருள் என்றெண்ணி மயங்கிடாது, மகிழ்ச்சி அடையாது மாறாக வருந்தினார். 

வாழ்வது வறுமையில் என்றாலும் பாடிப் பிழைப்பது தொழில் என்றாலும், செம்மை சேர் செம்பொருளிடத்து அல்லாது, இம்மையில் எவர்க்கும் தலை குனியாது 
வாழும் புலனழுக்கற்ற அந்தணாளன் அல்லவா? 

கபிலர். நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம், குற்றமே என்ற பெரும்புலவர் நக்கீரரின் நண்பர் அல்லவா கபிலர்?

தக்கவாறு தம் புலமை அறியாது பிறரோடு ஒன்றாக எண்ணிய வள்ளலின் திருமுகம் நோக்கிக் கூறலானார். 

பகை குலம் அஞ்சும் புகழ்வேந்தே! பாரில் புகழ் பரக்க வாழும் வள்ளலே! நான் கூறுவதைச் சிறிது கேட்பாயாக. 

வையத்தில் உள்ள ஒரு வள்ளலை நாடி பரிசில் பெறவிழையும் பொருந்திய அவனும் வந்தவர்களுக்கு எல்லாம் இல்லை என்னாது பரிசுகளை 
அளிப்பது அவனுக்கு மட்டுமல்ல, அவனையொத்த எவர்க்கும் எளிதே! 

வள்ளல்கள் யாரும் இதைச் செய்யாதிரார். 

இதற்கு வேண்டுவனவெல்லாம் மனம் ஒன்றே!

ஆயின், பரிசில் பெற வருவோர் யாரும் ஒரே நிலையான தகுதியைக் கொண்டவர்களாக அல்லர். 

ஒவ்வொருவரும், அவரவர்தம் கல்வி, கேள்வி குண நலன்களுக்கு ஏற்ப வேறுபடுவர். 

இந்நிலையில், பரிசில் பெற விழையும் அனைவரையும் அவரவர்தம் தகுதிக்கு ஏற்ப பரிசில் அளிப்பதே சாலச் சிறப்பு. 

ஆனால், இவ்வகையில் வருகின்றவர்களை அளவிடும் ஆற்றல் வேண்டும் ஆளும் அரசனுக்கு! 

உன்பால் இவை இரண்டு குணநலன்களும் நிரம்ப இருக்கும் எனக் கருதியே இவண் வந்தனை யான். 

ஆனால் வரிசைக் காணும் பேராற்றல் நின்பால் இல்லை என்பதை ஈண்டு உணருகிறேன்.

வள நாட்டை ஆளும் வளவ! 

நினது மனம் பரிசில் அளிக்கும் குணம் மட்டும் உடையது, என்பதை யாரும் ஏற்கவில்லை. 

வரிசை அறியும் அறிவும், ஆற்றலும் உடையவன் நீ என்பதைத்தான் நான் காண விரும்புகிறேன். 

எல்லோரையும் பொதுவாக எண்ணி பரிசில் அளிக்காது அவரவர் தகுதி அறிந்து பாராட்ட விழைய வேண்டும். 

இதுவே என் போன்றோருக்கு உவகையும், உறுதியையும் ஈட்டும் பொருளாக அமையும். 

இனி வரும் காலத்தில் இவ்வண்ணம் செய்து புகழ் கொண்டு புரப்பாயாக என்ற பொருளில் சுயமரியாதை ததும்பும் பாடல் ஒன்றைப் 
பாடிச் சென்றார். 

பாடல் இதுதான்.

"ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
  பலரும் வருவர் பரிசில் மாக்கள்;
  வரிசை அறிதலோ அரிதே, பெரிதும்
  ஈதல் எளிதே; மாவண் தோன்றல்!
  அது நன் கறிந்தனை யாயின்,
  பொது நோக்கு ஒழி மதி புலவர் மாட்டே" 
(புறம் - 121)

டி.எஸ்.தியாகராசன்

நன்றி:- தினமணி,

Kannan Natarajan 

 

-- 


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES