THF Announcement: E-books update: 26/04/2015 *மலையாள அனுபோக மாந்திரீக ஆசிரியன்*

9 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் ஆவணம் மின்னூல் வடிவில் இணைகின்றது.நூல்:  மலையாள அனுபோக மாந்திரீக ஆசிரியன் (மூலமந்திர அந்திரத்துடன்)
எழுதியவர்: ப.வடிவேலு செட்டியார் அவர்களால் பண்டைய ஏட்டுப்பிரதியைக் கொண்டு எழுதப்பெற்றது
பதிப்பாளர்: மதுரை முதலியார் ஷ்ண்முகானந்தா புத்தகசாலை, மதறாஸ்

நூல் குறிப்பு:  

உச்சாடத்திற்கு உரிய மலையாள மந்திரங்கள் யந்திரங்களுடன் உள்ளன.

இந்த நூலை தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்திற்காக வழங்கியவர் டாக்டர்.கி.லோகநாதன் அவரகள்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 415

மின்னாக்கம்:  சுபாஷிணி
மின்னூலாக்கம்: சுபாஷிணி


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​மண்ணின் குரல்: ஏப்ரல் 2015:தென்னாப்பிரிக்காவில் தமிழ்க்கல்வி

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

மாலா லட்சுமணன் - தென்னாப்பிரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் மூன்றாவது சந்ததியைச் சேர்ந்தவர். 180 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்து வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். ஆங்கில ஆசிரியராக பயிற்சி பெற்ற இவர் தமிழ் மொழியின் மேல் உள்ள ஆர்வத்தால் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றிருக்கின்றார். முதுகலையும் முடித்து தற்சமயம் முனைவர் பட்ட ஆய்வினை தமிழ் மொழிக்கும் ஆப்பிரிக்க சூலு இன மொழிக்கும் உள்ள தொடர்பினை ஆய்வு செய்து வருகின்றார்.

தென்னாப்பிரிக்க இந்தியத்தூதரகம் நடத்தும்  மொழி வகுப்பில் இவர் தமிழாசிரியராக பணிபுரிகின்றார்.

தென்னாப்பிரிக்க இந்திய தூதரகத்தில் ஹிந்தி மொழி இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகின்றது. ஆனால் தமிழ் மொழிக்கு கட்டணம் கட்டியே கற்றுக் கொள்ள வேண்டிய நிலை. பணம் கட்ட வேண்டுமென்பது எங்களுக்கு பிரச்சனையில்லை. ஆனால் இங்கு காட்டப்படும் பாரபட்ஷம் தான் மனதை உறுத்துகின்றது. இது ஒரு மானப்பிரச்சனை என்று குறிப்பிடுகின்றார். 

பேட்டியைக் கேட்டுப் பார்க்கவும்.

இப்பதிவினை இவ்வருடம் ஏப்ரல் மாதம் டர்பன் நகரில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். 

விழியப் பதிவைக் காண:http://video-thf.blogspot.de/2015/04/blog-post.html
யூடியூபில் காண:https://www.youtube.com/watch?v=3wiscFDD4cE&feature=youtu.be


​மாலா, நான், ப்ரேமி

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் - மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 1 ஏப்ரல் 2015

1 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.

காலாண்டு இதழாக வெளிவர உள்ள இந்த மின்னிதழில் ஒவ்வொரு காலாண்டிலும் தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட சிலதேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும்.

இந்தக் காலாண்டின் மின்னிதழ் இன்று  வெளியீடு காண்கின்றது.

இந்த வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது தமிழக எல்லைக்கப்பால் தவழும் தமிழ்ப்பண்பாடு என்பதாகும்.

மின்னிதழை வாசிக்க!!


அட்டைப்படக்குறிப்பு: மகாத்மா காந்தியடிகள் தாம் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்த சமயத்தில் தங்கி இருந்த  சர்வோதயா இல்லத்தின் முன்பகுதியில் ஒரு அச்சு ஆலையை உருவாக்கி நடத்தி வந்தார். 1903ம் ஆண்டில் தொடக்கப்பட்ட அந்த அச்சு ஆலையின் புகைப்படமே  இச்சஞ்சிகையின் அட்டைப்பகுதியை அலங்கறிக்கின்றது.

நம் மின்னிதழை வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


மண்ணின் குரல் 20ம் நூற்றாண்டு ஆரம்ப கால மலாயா செய்திகள்

1 மறுமொழிகள்
வணக்கம்.

மின்தமிழ் நண்பர்கள் அனைவருக்கும்  சித்திரை முதல் நாள் நல்வாழ்த்துக்கள்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று  இன்று வெளியீடு காண்கின்றது. மலேசிய தமிழறிஞர் டாக்டர். ரெ.கார்த்திகேசு அவர்கள் மலேசிய தமிழர்கள் மட்டுமன்றி இந்திய இலக்கிய உலகிலும் நன்கு அறியப்படுபவர். பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் இவர். இவருடன் ஒரு பேட்டியை இவ்வருடம் ஜனவரியில் மலேசியாவில் இருந்த சமயத்தில் பதிவாக்கினேன். 

இப்பேட்டியில்:
 • 20ம் நூற்றாண்டின் மலாயாவின் ஆரம்ப நிலை
 • திராவிடர் கழக உறுப்பினர்களின் தமிழ் முயற்சிகள்.
 • மலேசிய தமிழ் பத்திரிக்கைகள்
 • திராவிடர் கழகத் தாக்கத்தால் தமிழ் முயற்சிகள்
 • தமிழர் திருநாள் - கோ.சாரங்கபாணி
 • இசை ஆர்வம் - சகோதரர் ரெ.சண்முகம்
 • இந்தியர் என்ற அடையாளம் 
 • மலேசிய இலக்கிய முயற்சிகள் 
 • இலங்கைத் தமிழர்களின் இலக்கிய முயற்சிகள்
 • முதல் நாவல் - பத்துமலை மர்மம், கோரகாந்தன் கொலை..
 • ரப்பர், செம்பனை தோட்டத் தமிழர்கள் நிலை
 • தற்காலத் தமிழர்களின் நிலை, வளர்ச்சி
 • மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள்

விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2015/04/20.html

யூடியூபில் இப்பதிவைக் காண:     https://www.youtube.com/watch?v=_8_Kl_e0eyU&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 37  நிமிடங்கள் கொண்டது.

அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES