THF Announcement: ebooks update: 29/10/2011 பாக சாஸ்திரம்

0 மறுமொழிகள்
வணக்கம் நண்பர்களே!
 
இன்று ஒரு தமிழ் மின்னூல் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இணைக்கப்படுகின்றது. நூல் விபரமும் பெயரும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நூல் பெயர்: பாக சாஸ்திரம்
பதிப்பு:  பாலவிர்த்தி போதினி அச்சுக்கூடம் (ஜீ.ஆர். பாவைய நாயுடு)

நூல் வெளி வந்த ஆண்டு: 1908

நூல் எண்: 282

மின்னாக்கம்: திரு.ஆண்டோ பீட்டர்
மின் நூல் உருவாக்கம்:  முனைவர்.சுபாஷிணி 

இந்த நூலை மின்னாக்கத்திற்கு வழங்கியவர்: முனைவர்.இரவா (இரா.வாசுதேவன்)


நூல் குறிப்பு:
சமையற்கலையை விளக்கும் ஒரு பழம் நூல் இது.

சமையற் கூடம் (பாகசாலை)  அதன் அளவு, பயன்படுத்தும் பாத்திரங்கள், கருவிகள், பாக சாலையில் சமைப்பவரின் குண நலன்கள் ஆகையவை முதலில் விளக்கப்படுகின்றன.

அடுத்து சாதம் சமைக்கும் முறை, தாளிக்கும் முறை, ஆகியவை விளக்கப்படுகின்றன.
பின்னர் காய்கறிகளைப் பற்றிய விளக்கம் வருகின்றது. இதைத் தொடர்ந்தார்போல, கிழங்கு வகைகள், கீரை வகைகள் விளக்கப்படுகின்றன. 

பின்னர் நவதானிய வகைகள் விளக்கப்படுகின்றன. 

பின்னர் மசாலா பொடி தயாரிக்கும் வகை விளக்கப்படுகின்றது. இதனை அடுத்து மோர் கடையும் வகையும் பின்னர் குழம்பு செய்யும் வகையும் விளக்கப்படுகின்றன. 

பல குழம்பு வகைகள் தொடர்ந்து செயல்முறை விளக்கங்களோடு வருகின்றன. மோர்க்குழம்பு செய்யும் விதத்திலேயே பல வகைகள் இன்னூலில் இடம் பெற்றுள்ளன. 

பின்னர் சட்னி செய்யும் வகைகள் விளக்கப்படுகின்றன.  பின்னர் இனிப்பு வகைகள் செய் முறையும் விளக்கப்படுகின்றன. 

பின்னர் குறிப்பிட்ட சில பிணி உள்ளவர்களுக்கான சமையல் விளக்கங்கள் இடம்பெறுகின்றன. பின்னர் பழங்கள் பற்றிய விளக்கம் வருகின்றது. அதற்கு அடுத்து புலவு வகைகள் விளக்கப்படுகின்றன.

தொடர்ந்து மீன் வகைகள், மீன் சமையல் செய்முறைகள் விளக்கப்படுகின்றன. அதனை அடுத்து முட்டையைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள் விளக்கம் இடம் பெறுகின்றது.

இதனை அடுத்து தித்திப்பு பலகாரங்களின் செயல் முறை விளக்கம் இடம்பெறுகின்றது.

இதனைத் தொடர்ந்து ஆட்டிறைச்சி சமையல் விளக்கம் வருகின்றது.  பட்சி வகை சமையல் இதனைத் தொடர்கின்றது. 

இறுதியாக பால், அதன் குணங்கள் வகை வகையாக விளக்கப்படுகின்றது.

நூலை வாசிக்க!

   
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


கல் வட்டங்கள்

0 மறுமொழிகள்


Fwd: The Mysterious Island | World Religion Culture and People

0 மறுமொழிகள்

The Mysterious Island | World Religion Culture and People

You are here: 

Home

 / 

Weird

 / The Mysterious Island

Madeira Island – Many say that Jules Verne when he wrote "The Mysterious Island", said as the island of Madeira.
Who knows, maybe the way it is …
Before you are very beautiful and mysterious images of the sky taken on the island.

Madeira is a Portuguese archipelago that lies than 400 km north of Tenerife, Canary Islands, in the north Atlantic Ocean and an outermost region of the European Union. The archipelago comprises one of the two Autonomous regions of Portugal (the other being the Azores located to the northwest), that includes the islands of Madeira, Porto Santo, the Desertas and the Savage Islands. Madeira was re-discovered by Portuguese sailors in the service of Infante D. Henrique in 1419, and settled after 1420. The archipelago is considered to be the first territorial discovery of the exploratory period of the Portuguese Age of Discovery.

Mysterious Island  The Mysterious Island

Mysterious Island 1 The Mysterious Island

Mysterious Island 2 The Mysterious Island

Mysterious Island 3 The Mysterious Island

Mysterious Island 4 The Mysterious Island

Mysterious Island 5 The Mysterious Island

Mysterious Island 6 The Mysterious Island

Mysterious Island 7 The Mysterious Island

Mysterious Island 8 The Mysterious Island

Best From Web
kalthonRi

0 மறுமொழிகள்
 
 

 அண்மையில் (விடுமுறையில்) நான் படித்த, பிடித்த கட்டுரை ஒன்றை நினைவுப் பேழையிலிருந்து எடுத்து இங்கே என்மொழியில்; சொற்களில் தருகிறேன். 
'முன் தோன்றி குடி" என்ற தலைப்பில் அப்துல்ரகுமான் எழுதிய கட்டுரை அது.


தமிழினமும் தமிழ்மொழியும் தொன்மை வாய்ந்தவை என்பது வியப்பிற்கும் பெருமைக்கும் உரியது. தமிழ் ஆதிமொழி.

தமிழின் தொன்மையை கூற வேண்டி வந்தால் கண்ணை மூடிக்கொண்டு ஒரு பழம்பாடல் வரியை அனைவரும் ஒப்பிப்போம். அது: 'கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி" என்கிற வரி.

இந்த வரியை அறியாத தமிழர்களே இல்லை என்னுமளவுக்கு இந்தச் சொற்றொடர் அழியாப் புகழ் பெற்றது. இதன் புகழ் எந்த அளவுக்கு என்று கேட்டால், இதை எழுதியவர் பெயரோ, இந்தப் பாடலின் மற்ற வரிகளோ பலருக்கும் தெரியாது. அவையெல்லாமும் மங்கிப்போகிற அளவுக்கு இந்த வரி பிரகாசமடைந்துள்ளது. 

ஆயினும், இதே பாடல்வரியை வைத்துக்கொண்டு, தமிழை, தமிழர்களை கேலி செய்பவர்களும் உள்ளனர். அவர்களும் தமிழர்களே என்பதுவும் அறிந்து வருந்தத்தக்கது.

"அதெப்படி, கல் தோன்றி ( பின்) மண் தோன்றாக் காலத்து" என்று வருவது சரியாக இருக்கும்?" என்பது அவர்களின் கேலி வினாக்களுள் ஒன்று. "கல் தோன்றியா பின்பா மண் தோன்றும்?"

அது மட்டுமல்லாமல், வாளோடு முன் தோன்றி மூத்த குடி" என்பது எப்படி சரியாக இருக்கும்? என்பதும் அவர்களின் வினா.

ஒருவேளை, 'வாலோடு முன் தோன்றி மூத்த குடி' என்பதாக இருக்குமோ என்று கூறி நகைக்கவும் செய்கின்றனர். உண்மையில் அவர்கள்தாம் நகைப்புக்குரியவர்கள். தன் இனவரலாறு அறிந்திராத அவர்கள் நகைப்புக்குரியவர்தாமே.

இந்தப் பாடல் புறப்பொருள் வெண்பா மாலை என்ற நூலில் காணப்படுகிறது. இதை எழுதியவர் ஐயனாரிதனார் என்பார்.

மனித இன வரலாற்றில், தொடக்கக் காலத்தில் மனிதன் மலையில் தான் வசித்துவந்தான். மலையில்தான் இயற்கை உணவுகளான காய்கனிகள் கிடைத்தன. உறைவிடமாகக் கொள்ள இயற்கையான குகைகளும் வாய்த்தன. தமிழ் அகப்பொருள் திணைகளுள் முதலாவதான 'குறிஞ்சி' மலையும் மலைசார்ந்த இடமும் பற்றியதே, தமிழில் 'கல்' என்ற சொல் மலையையும் குறிக்கும்.

'கல் இயங்கு கருங் குற மங்கையர்' என்று கம்பர் சொல்வதில் வருகிற 'கல்'லுக்கு, மலை என்றுதான் பொருள். (மலையில் வாழ்கிற கருநிற குறத்தியர்).

ஆக, 'கல்' தோன்றி என்பதற்கு 'மலை தோன்றி' என்று பொருள். அதாவது மலைவாழ் காலமாகிய 'குறிஞ்சி வாழ்க்கை தோன்றி' என்று பொருள்.

ஆதியில் மலையில் வசித்துவந்த மனிதன், பின்னர் ஆடுமாடுகள் உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகளைப் பழக்கி அவற்றை ஓட்டியபடி காட்டுக்கு வந்தான். தமிழ் அகப்பொருள் இலக்கணம், காடும், காடுசார்ந்த இடத்தையும் முல்லை என்று சொல்கிறது.

சரி, "மண் தோன்றாக் காலத்து" என்றால்?
மண் என்பது சிறப்புப் பொருளில் நிலத்தைக் குறிக்கும். குறிப்பாக, விவசாய நிலத்தையே அப்படிக் குறிப்பிடுவர். ("இந்த மண்ணுக்கு என்னமா விளைஞ்சிருக்கு, பாருங்களேன்). ஆக, மண் தோன்றாக் காலம் என்றால், வயல் தோன்றாத காலம், அதாவது, மனிதன் விவசாயத்தை அறியாத காலம் என்று பொருள்படும். வயலும் வயல் சார்ந்த இடத்தை தமிழின் அகப்பொருள் இலக்கணம் 'மருதம்' என்றழைக்கிறது.

மலை வாழ்க்கையாகிய 'குறிஞ்சி' தோன்றி, வயல் வாழ்க்கையாகிய 'மருதம்' தோன்றுமுன்பே 'முல்லை'யாகப் பூத்தது தமிழினம் என்பதே 'கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து…' என்பதற்குப் பொருள்.

மலை வாழ்க்கையில் கற்களையே மனிதன் ஆயுதமாகப் பயன்படுத்தினான்.
உலோகத்தாலான ஆயுதங்களை மனிதன் பயன்படுத்தத் தொடங்கியது 'காட்டு'வாழ்க்கையில்தான். கி.மு மூவாயிரத்தில் எகிப்தியர்கள் உலோக ஆயுதங்களைப் பயன்படுத்திய காலக்கட்டத்திலோ அதற்குச் சற்று முன்னதாகவோ இந்தியர்களும் உலோகப் பயன்பாட்டை அறிந்திருந்ததாக வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய இனங்களுள் தொன்மை மிக்கது தமிழினமே. முதன்முதலாக இரும்பாலான வாளை செய்தவன் தமிழனே. சேக்ஸ்பியர் "இந்திய வாள்" என்று சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.

இப்போது முழுப்பாடலையும் பார்ப்போம்:
பொய்யகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக் 
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி.


வையகம் போர்த்த வயங்கொலி நீர் என்பது எதைக்குறிக்கிறது ?

நோவாவின் காலத்தில் மிகப் பெரிய கடல்கோள் ஏற்பட்டு பூமி கடலால் சூழப்பட்டது. (நூஹ்) நோவாவின் பேழையில் இருந்த உயிரினங்களைத் தவிர அனைத்து உயிரினங்களும் அழிந்துபட்டன. இதை பைபிள் உள்ளிட்ட மதநூல்கள் தெளிவாகக் கூறுகின்றன. பின்னர், நோவாவின் சந்ததிகளிலிருந்தே மனித இனம் பல்கிப் பெருகியது.

சில காலம் கழித்து வெள்ளம் வடியத் தொடங்கியது. அப்போது, வெள்ளம் வடியவடிய, உயரமான மலைகள் தானே முதலில் தோன்றும். அதன்பிறகே மண் தோன்றும் அல்லவா! 

நோவாவின் பேழையில் இருந்தவர்கள் ஆயுதங்களும் வைத்திருந்திருப்பார்கள் அல்லவா! அதில் வாளும் இருக்கத்தானே செய்யும். அதைத்தான் ஐயனாரிதனார் இப்படிக் குறிப்பிடுகிறார்:
வையகம் போர்த்த வயங்கொலி நீர் – கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே' வாளோடு
முன் தோன்றி மூத்த குடி


நோவா எனப்படும் நூஹ் தமிழினத்தின் ஆதிமூதாதை எனக் கொள்ள இடமளிப்பதாக ஐயனாரிதனாரின் இந்தப் பிரசித்திப் பெற்ற பாடல் உள்ளது.


பின்குறிப்பு: கவிக்கோ அப்துல்ரகுமானின்,கட்டுரையின் இறுதியில் கூறப்பட்டுள்ள இந்தக் குறிப்பு அறுதியிட்டதோ, உறுதிபட்டதோ அன்று. விவாதத்திற்கு இடமளிக்கும் ஒன்றே என்று நான் நினைக்கிறேன்.

(கவிக்கோவின் சிந்தனை என் எழுத்துகளில்)
Thanks: இப்னு ஹம்துன்
Labels:
Fwd: மக்களும் மரபும் (குறவர் மக்கள்)

0 மறுமொழிகள்
 

ஓம்.

மக்களும் மரபுகளும்

 மக்களும் மரபுகளும் என்ற நூலில் குருவிக்காரர்கள் பறிய சில குறிப்புகள் காணப்படுகின்றன.

இதோ:

          நரிக்குறவர்கள் அல்லது குருவிக்காரர்கள் என்று கூறப்படும் மக்கள், தென் மாநிலங்களைச் சேர்ந்த நாடோடி இனத்தவர். இவர்கள் மத்திய மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்ததாகக் கருதப்படுகின்றனர். தென் மாநிலங்களில் சில நூற்றாண்டுகளாக வழ்ந்து வந்தாலும் தங்கள் தனித்தன்மையைக் காப்பதில் மிகவும் கவனமாக இருந்துவரும் இவர்கள், வேறு எந்த இனத்துடனும் கலந்துவிடுவதில்லை.

         நறிக்குறவர்கள் அனைவரும் இந்துக்கள். சமய உணர்ச்சி மிக்கவர்களான இவர்கள், தங்கள் கடவுளளர்களைத் தங்கள் இருப்பிடங்களிலேயே வணங்குகின்றனர். அக்கடவுளின் உருவங்கள் ஒரு துணி மூட்டையில் வைக்கப்பட்டு, அந்தத் துணிமூட்டை சாமி மூட்டை என்று அழைக்கப்படுகிறது.

         ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு சாமி மூட்டை உண்டு. குடும்பத் தலைவரால் மரியாதையாகவும், கவனமாகவும் அம்மூட்டை பாதுகாக்கப்படுகின்றது.  சாமி மூட்டையில் உள்ள துணியில், பலி கொடுக்கப்பட்ட விலங்கின் இரத்தத்தில் தோய்க்கப்பட்ட துணியும் அடங்கியிருக்கும். இவற்றை அவர்கள் பரம்பரையாக உள்ளதாகக் கூறிக் கொள்வார்கள்.

         இரத்தத்தில் தோய்க்கப்பட்ட பாவாடை ஒன்று 'சாமி பாவாடை' என்று பெயர் பெற்று அவர்களிடையே உள்ளது. நரிக்குறவப் பெண்கள் சாமி மூட்டையைத் தொடுவதற்கு அனுமதிக்கப் படுவதில்லை; அத்துடன் ஒரு பிரிவைச் சார்ந்தவர்களின் சாமி மூட்டையை அடுத்த பிரிவைச் சார்ந்தவர்கள் தொடுவதில்லை. அடுத்தவர்களுக்குத் தங்கள் சாமி மூட்டையைப் பிரித்துக் காட்டுவதில்லை. அவர்களுக்குத் தொட அனுமதியும் இல்லை. பிரித்துக் காட்டவும் விரும்புவதில்லை.

         ஆண்களும் பெண்களைப் போன்று தலையில் சிகை வளர்த்துக் கொள்கின்றனர்.வழிபாடு செய்யும் பொழுது, தன் தலையை விரித்துப் போட்டுகொண்டு  சாமி மூட்டையைத் திறப்பான் குடும்பத் தலைவன். பின்னர், இரத்தம் தோய்ந்த பாவடையை அணிந்து, வழிபாடு செய்வான்.

         பூவும், மஞ்சள் தூளும் தேவதைகளின் முன் படைக்கப்படும். பலி கொடுத்த மிருகத்தின் இரத்தமும் தேவதை முன் படைக்கப்படும். தேவதைகளின் முன் நடனமாடியபடி, அந்த இரத்தத்தில் புரள்வான் குடும்பத் தலைவன்.

         ஒரு குடும்பத்தில் மகன்  மணம் புரிந்துகொண்டால், தகப்பனின் சாமி மூட்டையில் ஒரு பகுதி அவனுக்குக் கொடுக்கப்படும். குடும்பத்தில் மூத்த மகன் தந்தையினுடைய சாமி மூட்டைக்கு வாரிசாகக் கருதப்படுகிறான். எனவே, அவனுடைய சாமி மூட்டையில் உள்ள இரத்தம் தோய்ந்த துணி, ஏழு அல்லது எட்டு தலைமுறைகள் கடந்த மிகப் பழமையானதாகக்  கூட இருக்கும்.

         எப்பொழுதெல்லாம் பூஜை நடத்துகின்றனரோ, அப்பொழுதெல்லாம் உறவினர்களையும், கோத்திரக் காரர்களையும்    ( தந்தை வழி உறவினர்கள்) அழைத்து, அவர்களுக்குத் தலைக்கு ஐந்து ரூபாயும், சம்பந்திகளுக்கு இரண்டு ரூபாயும் அன்பளிப்பாகக் கொடுப்பார்கள்.

பின் குறிப்பு(என் அனுபவத்தில் கண்டது)

         1950-ஆம் ஆண்டில் முக்கூடல் நகரில், தாமிரபரணி ஆற்றில் நீராடச் செல்கையில் தாமிரபரணியோடு உள்ளாறு கலக்கும் இடத்தில் ஒரு மேட்டினில் நரிக்குறவர்களின் திருவிழாவினையும், அதில் பலியிடுவதற்காக ஒரு எருமை மாட்டினை நிறுத்தி அவர்கள் சடங்கு பூஜை முறை செய்துகொண்டிருந்தபோது பார்த்திருக்கிறேன். ஆனால் பலியிடுவதை நேரில் பார்க்கும் துர்பாக்கியம் வேண்டாம் என விலகிச் சென்றுவிட்டேன்.

         நரிக்குறவர்கள் மலைவாழ் பழங்குடியினர் பட்டியலில் அரசு வைத்துள்ளது. 'திருநாளைப் போவார்' என்ற அடை மொழி அவர்களுக்குத் தகும். மாநிலம் முழுவதிலுமான பிரபலமான உற்சவங்கள் பற்றிய முழு விபரங்கள் அவர்களுக்கு மனப்பாடமாய்த் தெரியும். முதலாம் திருநாள் தொடங்கி பிரம்மோர்சவம் முடிவாகும் வரையிலான பஞ்சாங்கம் போன்று கன கச்சிதமாக தெரிவிப்பார்கள். அவர்கள் சொந்தமாக குடியிருக்க வீடுவாசல் இல்லாமலிருப்பதாலும் சொந்த நிலம் வாங்கவோ விவசாயம் செய்யவோ, அன்றி விவசாயக் கூலி வேலை செய்வதற்கோ நோங்குவதில்லை.

        

         திருநெல்வேலித் தேவர் ஒருவர் இந்த நாடோடி மக்களுக்குக் கடன் தந்து உதவுவார். அவரிடம் நான் உரையாடுகையில் அவர் இம்மக்களை மிகவும் உயர்வான நாணயம் மிக்கவர்கள் என்று குறிப்பிட்டார். நிரந்தர முகவரியுள்ளவர்களுக்குக் கூட வங்கி  பணம் கடன் தருவதற்குப் பிணைப் பொருள் கேட்கின்ற நிலையில், ஒரு இடத்தில் தங்காமல் பெயர்ந்துகொண்டே இருப்பதுமான, சொத்து சுகம் இல்லா ஏழை மக்களிடம் சரிவர கடன் திரும்பப் பெறவியலுமா என்று கேட்ட போது அவருடைய நடைமுறைகளைச் சொன்னார்.

        "அவர்கள் குழுக்களாகத் தான் சென்று கொண்டிருப்பார்கள். திருநாள் விழாக்கள் பிரபல்யமான ஊர்களில் நடைபெறும் காலங்களில் அங்கே சென்று குடில்களை புறம்போக்கு பூமி,  தரிசு நிலங்கள், கோயில் அருகில் ஒதுக்குப் புறத்தில், ஆற்றுக் கரையோரங்களில் அமைதுக் கொள்வார்கள். பித்தளை, பாசிமணி, பெண்கள் விரும்பும் அலங்காரப் பொருள்கள் ஆகியவற்றுடன் விற்பனை தொடங்குவர்.

         சுற்றுப் பயணமாக என் விருப்பப்படி அந்த அந்த ஊர்களில் முகாம் இட்டிருக்கும் குழுக்களைச் சந்திப்பேன். அவர்களுடன் அவர்கள் தங்கும் இடத்திலேயே விருந்தினர் மாளிகையாக ஒரு குடில் அமைப்பார்கள். அதில் நான் தங்குவேன். அவர்கள் உண்ணும் உணவில் சிறந்ததை எனக்குத் தருவார்கள். நேர்த்தியாக சுவையாகவும்  இருக்கும். வெளியிலிருந்து வாங்குவதையும் அவர்களின் குழந்தை முதல் பெரிசுகள் வரை ஒன்றாக அமர்ந்து பங்கீடு செய்து உண்போம். நான் திரும்பும் போது அவரவர் திரும்பத் தரவேண்டிய தொகையை நல்ல தவணைகளாகப் பெறுத் திரும்புவேன். என்னுடைய பயணச் செலவுக்காக ஒரு அற்பத்தொகையை வட்டியாகப் பெற்றுக் கொள்வேன். அந்த மக்கள் பிறர் தயவில் வாழ விரும்புவதில்லை."

         அவர்கள் பேசும் மொழி எழுத்தில்லாத ஒன்று. ஆனால், அவர்கள் பிராந்திய மொழி அனைத்திலும் உரையாட வல்லவர்கள். தொடர்வண்டி நிலையத்தில் போர்ட்டர்கள் பிற மாநிலத்தவருடன் சரளமாகப் பேசுவதும் சண்டையிடுவதிலும் வல்லவர்களாய் இருப்பது போன்று  நரிக்குறவ மக்கள் திறமையானவர்கள்.

         ஆண்கள் நரி, முயல் வேட்டையாடுவர். பறவைகளையும் வேட்டையாடி புசிப்பர்.ரவைத் துப்பாகியும், கவுட்டையில்  கட்டப்பட்ட' கேடாபெல்ட்' , கைத்தடி ஆகியவை அவர்களுடைய ஆயுதம்.

         எப்படி அவர்கள் நரிபிடிப்பார்கள் என்று கேட்டபோது அதனை நடித்துக் காட்டினார்கள். நரித்தோல் ஒவ்வொருவரிடமும் இருக்கும். நரித்தோலுக்குள் ஒருவர் ஒளிந்து மறைந்து இரவினில் நரிகள் நடமாட்டம்  உள்ள இடங்களில், அசல் நரி குதித்துக் கும்மாளம் செய்வதுபோன்று வாலை ஆட்டிக் கொண்டு இறந்து கிடக்கும் ஒரு ஆட்டின் உடம்பின் மீது தாவியும் நரியினைப் போன்று ஊளையிட்டுக்கொண்டும் போக்குக் காடுவார்கள். கையில் குறுந்தடி ஒன்று இருக்கும். தூரத்தே நின்று நோட்டம் விடும் குள்ளநரி ஆராய்ந்து,  மறைந்து குதித்து விளையாடும் மனிதனின் அருகில் வந்தவுடன் சமயம் பார்த்து தக்க தருணத்தில் கைதடியினால் அடிக்கப்பட்டு மண்டை சிதறி குருதிப் புனலில் சாயும்.

         காடை கௌதாரி, குருவி வகைகள், மாந்தோப்புக் கிளி. இவறை உயிருடன் கண்ணி வைத்தும் வலையினாலும் பிடித்து உயிருடன் வளர்ப்போருக்கு விற்பனை செய்வார்கள். திருவிழாக் காலங்களில் கோயில் சப்பரத்தில் உற்சவர் எழுந்திருத்து ஆகி புறப்பாடு செய்கையில், பெட்ரோ மாக்ஸ் விளக்குகள் சுமந்து செல்ல இவர்கள் ஆணும் பெண்ணும் ஈடுபட்டுக் கூலி பெறுபவார்கள். 

      வாஷிங்டன்னில்  திருமணம் என்ற நகைச் சுவைத் தொடரில் சாவி அவர்கள் திருமணத்தின் போது நரிக்குறவர்கள்  பெட்ரோமாக்ஸ் விளக்குகள் தூக்கிச் செல்லும் போது அங்குள்ள நாய்கள் அவர்களைக் கண்டு குரைக்காததால், இந்தியாவினின்றும் நாய்கள் இறக்குமதி செய்தும், பூசணிக்காய்களுக்கு  பிளாஸ்டிக் காம்புகள் அளித்தும், ராக்பெல்லர் மாமியிடம் சொன்ன ஒரு சேதிக்கு அவர் கேட்பார்," அப்பளம் இடும் பாட்டியின் கால் வலிக்கு ஏன் கைவைத்தியம் செய்யவேண்டும் என்று கேட்பார்.

         ஆண்களில் சிலர் மூக்கு குத்தி மூக்குத்தி அணிந்திருக்கின்றனர். தினமும் குளிக்கவேண்டிய அவசியம் இல்லை. இல் அடு கள் அருந்திவந்தவர்கள், தற்பொது தயார் நிலையில் சாராயம் கிடைப்பதால் இல்அடுகள் இல்லையாம்.

         பெண்கள் கையில் சிறிய மெல்லிய கம்பிகள், ஊசிமுனைக் குறடு ஆகியவற்றுடன் சோர்வின்றி கோர்த்து முறுக்கிக் கொண்டே இருப்பார்கள். தியாகிகள் நடமாடும் போதும் அமர்ந்திருக்கும் போதும் தக்கிளியில் நூர்த்துக் கொண்டே செல்வது போன்று உழைப்பார்கள்.அல்லது நரம்பு போன்றவற்றில் வித விதமான பாசி மணிகளை அலங்காரமாகக் கோர்த்து கண்ணைக் கவரும் மாலைகளாக உருப்பெறும்.

          தற்சமயம் கேரளாவின் சபரிமலையில் பாசிமணிச் சரம்கள் மிகுதியாக விலை போயிற்றாம். அங்கு கலை நுணுக்கமான பின்னல் மணிமாலைகள் கவர்ச்சி தருகின்றனவாம். நல்ல சந்தையாம்.

         மதுரையில் அலங்கா நல்லூரில் நரிக்குறவர்களுக்கு குடியிருப்பு மனைதொடர் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.நிர்வகிப்பதில் பல சங்கடங்கள் அவர்கள்  உணர்கிறார்கள்.

மதுரை வடக்கு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் நரிக்குறவர் குடியிருப்புகள் உள்ளன.

         கழிவின் கிழிந்த காகிதங்கள், திரும்பவும் உருக்கும் பிளாஸ்டிக் பைகள் சேகரம் ஆகியவை தற்காலத்திய வருமான வழிகளாக சிறுவர்களும் குடும்பமும் ஈடுபடுகின்றனர். 

          எக்ஸோனரா வின் மூலம் கழிவுக் குப்பைகள் வெளியேற்றும் பணியில் சிலர் இருக்கின்றனர்.

          ஒட்டன் சத்திரம் ரயில் நிலையத்தில் முன்பு ஒரு நாள் முன் இரவில் நான்  சென்றுகொண்டிருந்தபோது ஒரு ஆடவன் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்த பெண்மணியின் கூந்தலைக் கைகளால் அள்ளிப் பிடித்து சண்டையிடுவது போன்று தோன்றியது. சற்றே அவர்கள் பக்கம் நின்று அவனிடம் என்னவென்று கேட்டேன். அவள் தன் மனைவி என்றும் அவளுக்கு வரும் ஒருதலை மண்டயிடிக்கு வைத்திய சிகிச்சையாக தலை மயிரை இழுத்து சிறிது நேரம் பிடித்தால் இதமாக இருக்குமாம். அக்குபிரஷர் இடங்கள் சில அவனிடம் சொல்லிக் கொடுத்துவிட்டு என் கைவசம் இருந்த சில மாத்திரைகளையும் கொடுத்துச் சென்றேன்.

ஒரு முதுமொழி உண்டு,'குறத்தி பிள்ளை பெற குறவன் மருந்து குடித்தானாம்' என்பார்கள். ஒருவருக்காக ஒருவர் முன்நின்று விரும்பி செயலாற்றுவதை கூறுவார்கள் போலும்!

         இந்த வகுப்பைச் சேர்ந்த சில பெண்கள் ஆங்காங்கே படித்துவருகிறார்கள் கல்வியின் அவசியத்தை உணர்ந்து வருகிறார்கள். போட்டிமிகுந்த இவ்வுலகில் கரையேற்றிவிட ஆளில்லை. துயரத்தில் ஆழ்த்த பலர் இருக்கின்றனர்.

         'குறத்திமகன்' என்ற திரைப்படம் இயக்குநர் கோபாலகிருஷ்ணன் தந்தார்.

அன்புடன்

வெ.சுப்பிரமணியன் ஓம்.


வெ.சுப்பிரமணியன்sri Raamamirtham

0 மறுமொழிகள்

Ilakkiya sahaptham La.Sa.Ra. / ஒரு இலக்கிய சகாப்தம் லா.ச.ரா.

லா.ச.ரா. சொல்லுவாராம் "கதை எழுதுவது பெரிய விஷயமல்ல. அந்த அழகிய சிற்பத்தை இழைத்து இழைத்து தட்டித் தட்டி கண்மூடாமல் நகாசு வேலை செய்து சிற்பத்தின் கண்திறந்து உக்ரஹத்தை வரவழைக்க வேண்டும்"

முது பெரும் எழுத்தாளரான லா.ச.ரா. என்று மரியாதையுடன் அழைக்கப்படும் லா.ச.ராமாமிருதம் அவர்கள் தனது 92வது வயதில் சென்னையில் காலமானர். அவர் நினைவிற்கு அஞ்சலி செய்யும் வகையில் சில நினைவுகள் - நிகழ்வுகள்:

1916ஆம் ஆண்டு அக்டோபர் 30ந் தேதி லால்குடியில் பிறந்தார் லா.ச.ரா. மத்திய தர வகுப்பில் பிறந்த அவர் ஆரம்பத்தில் அமெரிக்க எழுத்தாளர் ஹெமிங்வேயால் கவரப்பட்டாலும் அவருடைய மனமெல்லாம் தமிழ் மீதே இருந்தது. சுமார் 50 ஆண்டு காலங்கள் தனது பிரமிக்க வைக்கும் நடையில் இலக்கியம் படைத்து, பலருக்கு ஒரு ஆதரிச எழுத்தாளராக விளங்கினார். பல எழுத்தாளர்களுக்கு அவர் தூண்டுகோலாய் விளங்கினார்.

அவர் தம் 17வது வயதில் "தி எலிபண்ட்" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதிய கதை பிரசுரமானது. ஆரம்ப காலத்தில் அவர் எழுதிய கதைகள் மணிக்கொடி இதழில் பிரசுரமாகின.

இதுவரை 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 புதினங்கள், 6 கட்டுரைத் தொகுப்புக்கள் வெளியாகியுள்ளன. அவருடைய கட்டுரை நூல் சிந்தாநதி 1989வது ஆண்டில் சாகித்ய அகாடமி விருது பெற்றது. தவிர உலகக் கவிஞர் மன்றத்தின் கவுரவ விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, காஞ்சிப் பெரியவரின் சுதாரஸ சதுரஹ விருது ஆகிய பல விருதுகள் அவருக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. அவருடைய கடைசிக் கதை அமுத சுரபியில் வெளியானது. அவருடைய கதைகளின் சிறப்பே அவருடைய தனித்தன்மை மிக்க வித்தியாசமான நடை.

தங்களைப் போன்ற இளைய எழுத்தாளர்களுக்கு லா.ச.ராவும் தி. ஜானகிராமனும் இரு கண்கள் போன்று எனக் குறிப்பிடும் எழுத்தாளர் எஸ். ஷங்கரநாராயணன் "லா.ச.ரா. உணர்வுகளின் மைக்ராஸ்கோப், சொற்களின் சூத்ரதாரி, இவர் கதைகள் வார்த்தைகளின் விஸ்வரூபம். லா.ச.ரா.வின் உலகம் குறுகியது என்று கூறுபவர்கள் கூட அது ஆழமானது என்று மறுக்க முடியாது" என்று லா.ச.ரா.வின் சிறுகதைத் தொகுப்பின் முகவுரையில் கூறுகிறார்.

"மாதத்திற்கு தனி மனிதர் பத்து நாவல்கள் எழுதும்போது லா.ச.ரா. சிறுகதையை மாதக் கணக்கில் செதுக்கவார்" என அவரது குமாரர் சப்தரிஷி குறிப்பிடுகிறார்.

இனி அவருடைய மந்திர நடையில் சில:

"அப்பாவின் கறு கறு தாடி தொப்புள் வரை இறங்கி மாலைக்காற்றில் ஜோரா வெட்டிவேர்தட்டி மாதிரி அசைஞ்சுண்டிருக்கும்"

"அம்மாவின் வார்த்தைகளைக் கேட்டதும் மாம்பழத்துள் கத்தி இறங்குவதுபோல் அடிவயிற்றில் சில்லிப்பு துண்டமிட்டது"

"சவுக்கு நுனியில் கட்டிய ஈயக் குண்டு போல் வார்த்தைகள் தெறித்தன."

"அம்மா பரந்து, தளர்ந்து செந்தாழை மேனியோடு எங்கோ பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கையில் என்னவோ யாக குண்டத்தில் நின்றெரியும் நெருப்பைப் போல கிட்ட அண்டக்கூட நெஞ்சு அஞ்சும்"

லா..ச.ரா. சொல்லுவாராம் "கதை எழுதுவது பெரிய விஷயமல்ல. அந்த அழகிய சிற்பத்தை இழைத்து இழைத்து தட்டித் தட்டி கண்மூடாமல் நகாசு வேலை செய்து சிற்பத்தின் கண்திறந்து உக்ரஹத்தை வரவழைக்க வேண்டும்"

அவருடைய ஜனனி, பாற்கடல், த்வனி, பச்சைக்கனவு, குரு- ஷேத்ரம் ஆகிய கதைகள், அவைகளில் காணப்படும் மந்ததிரச்சொற்கள் யாவும் படிப்பவரின் மனதில் வெகுகாலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

கவிஞர் அபி சொல்வது போல" லா.ச.ரா.வின் சொல் வார்த்தையன்று. மொழியைத் தாண்டியது. வெளிப்பாடு அப்புறம் உள்பாடு எனும் இவறறின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியது"

"லா.ச. ரா. ஒரு தனிப்பாதையில் எழுதினார். அவர் மறைவுடன் ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது" என அசோக மித்ரன் கூறுகிறார். மறுக்க முடியாத நிஜம்.

நன்றி: அசோகமித்ரன் கட்டுரை தினமணியில், லா.ச. ராமாமிருதம் கதைகள் (ராஜ ராஜன் பதிப்பகம் ஆகியவை)

***Ataiyalam kattiya Athmanathar

0 மறுமொழிகள்
அடையாளம் காட்டிய ஆத்மநாதர்.
<-=0-=-=-=-=-=-(<>)(<>)=-=-=-=-=-=-=-=-0=->

பாண்டியனின் அமைச்சரான துண்டகன் பேராசைக்காரன். சிவபுரம் ஆவுடையார் கோயில் அருகிலுள்ளது). என்ற கிராமம் முப்போகம் விளையக்கூடியது என்று கேள்விப்பட்டான். தன் அதிகார பலத்தால் சிவபுரத்து மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்துக்கொண்டான். எல்லைக் கற்களை எடுத்தெறிந்தான்.

அதனால் இறைவனிடம் முறையிட எண்ணிய அந்தணர்கள் ஆவுடையார் கோயில் ஸ்ரீ ஆத்மாநாதரரிடம் முறையிட்டு அழுதனர் “ வலுத்தவனுக்கு வாழ்வு; இளைத்தவனுக்கு ஏமாற்றம்” என்பது தான் நீதியா? என்று விம்மினர்.

ஸ்ரீ ஆத்மநாதர் முதியவர் வடிவில் வந்து அந்தணர்களிடம் “என் பெயர் பரமசாமி. ஊர் சிதம்பரம். உங்கள் கிராமத்தை மந்திரி துண்டகன் ஆக்கிரமத்துக் கொண்ட விபரமெல்லாம் அறிவேன். என் மூதாதையர்கள் இந்த ஊரின் பட்டயத்தை என்னிடம் தந்துள்ளனர். அதைக் காட்டி உங்கள் சொத்தை மீட்டுத் தருகின்றேன். அப்படிச் செய்தால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து, 300-இல் ஒரு பாகத்தை எனக்குக் கொடுப்பீர்களா?” என்று கேட்டார்.

”ஐயா! வயதானவராக இருக்கிறீர்!” துண்டகன் ஆள்வைத்து அடிப்பான். உங்கள் பெண்டு பிள்ளைகளை நாசம் செய்வான். வந்தவழி பார்த்துக்கொண்டு போய்விடுங்கள். அவன் பட்டயத்தை பிடுங்கிக் கொண்டு உங்களைப் பாழும் கிணறில் தள்ளிவிடுவான்” என்றனர் அந்தணர்கள்.

”என் தோற்றத்தை வைத்து எடை போடாதீர்கள். உங்களின் கட்டுமஸ்தான பிள்ளைகளின் எலும்புகள் நொறுங்கியிருக்கலாம்.. என் மனைவிபத்திரகாளி மாதிரி. என் பிள்ளைகள் கிட்டே வாலாட்ட முடியாது. அதிலும் சின்னவன் மலையையே தகர்த்துவிடுவான். தைரியமாயிருங்கள். ஒப்பந்தத்துக்குச் சம்மதமா?” என்றார் வந்தவர்.

”மொத்த நிலத்தையும் பிடுங்கிக் கொண்ட துண்டகனிடமிருந்து மீண்டு வருவதில் தானே பாகம் கேட்கிறீர்கள்? யானை தின்ற கரும்பு முழுசாகக் கிடைக்கும் பட்சத்தில் கட்டாயம் உங்களுக்குப் பங்கு கிடைக்கும்.” என்றனர் அந்தணர்.

பரமசுவாமி மதுரை சென்றார். ஆடி வீதியில் நின்றவாறு உரக்க, “ அரசன் செங்கோல் தவறலாமா? அது வளையாமல் இருந்தால்தானே புகழ் நிலைத்து நிற்கும்! கறுப்புப் பசு வெள்ளைப் பாலைக் கறக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள். அப்படியில்லை! சிவப்புப் பசு இரத்த நிறத்தில் பால் சொறியத் தொடங்கிவிட்டது. எதனால்? மன்னன் கண்ணைக் கட்டிக் கொண்டதால்! தானம் கொடுத்துவிட்டு பின்னாலே சென்று பறிக்கின்ற கொடுமையைக் கண்டவருண்டா? நான் கண்டிருக்கிறேன்” என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கூச்சலிட்டார்.

கொற்றவனுக்குச் செய்தி எட்டியது. அவரை அழைத்துவரச் செய்து விசாரித்தான். சிவபுர மகிமையையும், நிலங்கள் பறி போனதையும் பாண்டியனின் குலப் பெருமையையும் கூறித் தன்னிடமிருந்த பட்டயத்தைக் காண்பித்தார் முதியவர்.

ஆத்திரம் கொண்ட அரசன் அமைச்சரை அழைத்து விசாரித்தான். துண்டகன் தான் தயாரித்திருந்த போலிப் பட்டயத்தை எடுத்து பவ்யமாக நீட்டினான்.. இரண்டையும் ஒப்பிட்ட அரசன், “இந்த பூமிக்குள்ள அடையாளம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்” என்று இருவரிடமும் கேட்டான்.

இந்தப் பரந்த நிலத்தின் ஈசான்ய மூலை பாறை பூமி. அது வரண்டு தரிசாகக் கிடகிறது” என்றான் மந்திரி. “ பாறை இருப்பது உண்மை. ஆனால் அது வறண்ட நிலமல்ல. அதில் நான் தண்ணீர் வரவழைத்துக் காட்டுகிறேன்” என்றார் வயோதிகர்.

அரசன் இருவரையும் அழைத்துக் கொண்டு சிவபுரம் வந்தான். உடன் மற்ற மந்திரிகளும், சேனாதிபதியும் பரிவாரங்களோடு வந்தனர்.. “பெரியவரே! எங்கே தோண்டினால் நீர் வரும்?” என்று அரசன் வினவ, பாறைமேட்டில் ஓரிடத்தைக் காட்டி கங்கையை நினைத்தார் வயதானவராக வந்த ஈசன். அரசனுடன் வந்தவர்கள் கடப்பாறையால் அந்த இடத்தில் நான்கு குத்து போடுவதற்குள் தண்ணீர் பீரிட்டது.

அமைச்சர் துண்டகன் தண்டிக்கப் பட்டான். “ஸ்வாமி சிவ புரத்தின் நான்கு எல்லைகளையும் காண்பிக்க வேண்டும்” என்று மன்னன் கேட்க அப்படியே அடையாளம் காட்டிய பெரியவரை அந்தணர்கள் பிரம்ம ரதத்தில் ஏற்றி, ஊர்வலமாய் அழைத்துவந்து நிலத்தை 301 பங்காகப் பிரித்து ஒரு பாகத்தை அவருக்கு வழங்கினர்.

அந்த நொடியில் இறைவன் அந்த்ர்த்தியானமாயினார். “சொக்கேசராக வந்து, பிட்டுக்கு மண் சுமந்தவர், இங்கே நிலத்தை மீட்டு நீதி தவறாதபடி என்னைக் காத்திருக்கிறார் ” என்று பாண்டியன் புளகித்தான்.

ஆவுடையார் கோயிலில் ஸ்ரீ ஆத்மநாதரைச் சேர்த்து நம்பியார்கள் 301 பேர் என்று குறிப்பிடப்படுகிறது. நம்பியார்களே ஸ்ரீ ஆத்மநாதரை பூஜை செய்கின்றனர்.
-=-=-
வெ.சுப்பிரமணியன் ஓம்

bojarajan

0 மறுமொழிகள்
Reload Original PagePrint PageEmail Page
போஜராஜன் சபையில்… | Sangatham

போஜராஜன் தன் தலைநகரான தாரா நகரை கலைகளின் சிகரமாகவே வைத்திருந்தான். கவிஞர்கள், தத்துவ மேதைகள் அவன் ஆட்சியில் பெரு மதிப்பு பெற்று சிறந்து விளங்கினர். காவியங்கள் இயற்றினர். அவனது சபையில் காளிதாசன், பாணன், வரருசி, தண்டி என்று சம்ஸ்க்ருத கவிஞர்கள் பலரும் வீற்றிருந்தார்கள். அரசர்களை அண்டி பரிசு பெற்று செல்வது பாணர்கள் – கவிஞர்கள் வழக்கம். இதனால் போஜ மகாராஜனின் அவையில் தினம் ஒரு சுவையான சம்பவம் நிகழும்.

சில சமயம் போஜன் கவிதையில் ஒரு அடி மட்டும் கொடுக்க மற்ற கவிஞர்கள் அதனை நிறைவு செய்ய முயற்சி செய்வர். இதற்கு ஸமஸ்யா பூர்த்தி என்று பெயர். பெரும்பாலும் காளிதாசனே ஸமஸ்யா பூர்த்தி செய்வதில் சிறந்து விளங்கினான். போஜன் காளிதாசனை தன் ஆருயிர் நண்பனாகவும் கொண்டிருந்தான். இவர்கள் குறித்து தமிழில் கூட சிவாஜி கணேசன் காளிதாசனாக நடித்து வெளிவந்த மகாகவி காளிதாஸ் (1966) திரைப் படம் பலருக்கு நினைவிருக்கும். இதில் போஜ ராஜனாக முத்துராமன் நடித்திருந்தார்.

போஜ மகாராஜன் அரசவையில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்களைப் பற்றி பார்ப்போம்.

***

ஒரு முறை போஜ ராஜனின் சபையில் திருடன் ஒருவனை பிடித்து வந்தார்கள். அவனை யாரென்று விசாரித்து, அவனது செய்கையின் பேரில் கடும் கோபம் கொண்ட போஜன், மரண தண்டனை விதித்தான். அப்போது அந்த திருடன், போஜனை நோக்கி அழகிய சம்ஸ்க்ருத கவிதை ஒன்றை சொன்னான்:

ப⁴ட்டிர்நஷ்டோ பா⁴ரவீயோ’பி நஷ்டோ பி⁴க்ஷுர்நஷ்டோ பீ⁴மஸேநோ’பி நஷ்ட: |
பு⁴க்குண்டோ³’ஹம் பூ⁴பதிஸ்த்வம் ஹி ராஜந்பாபங்க்தாவந்தக: ஸம்நிவிஷ்ட: ||

[भट्टिर्नष्टो भारवीयोऽपि नष्टो भिक्षुर्नष्टो भीमसेनोऽपि नष्ट: |
भुक्कुण्डोऽहं भूपतिस्त्वं हि राजन्भापङ्क्तावन्तक: संनिविष्ट: ||]

மரண தண்டனை பெற்ற திருடன் சொல்கிறான், ஹே ராஜன், பட்டி நஷ்ட: (பட்டி மரணமடைந்தார்), பாரவி நஷ்ட: பாரவியும் மரணமடைந்தார், பிக்ஷுவும் மரணமடைந்தார். பீமசேனனும் மரணமடைந்தார். புக்குண்டன் நான், பூபதி நீங்கள், ப..பா… வரிசையில் யமன் நுழைந்திருக்கிறான்… என்று சொன்னான். அவன் சொன்ன கவிதையில் இருந்த நகைச்சுவையை ரசித்து, “தொலைந்து போ..” என்று போஜன் அவனை மன்னித்து அனுப்பினான்.

***

அக்காலத்தில் மன்னர்கள் நள்ளிரவில், மாறுவேடத்தில் தன் நகரை சுற்றி வந்து, நேரடியாக நகரின் நிலை பற்றி அறிந்து கொள்வர். திருடர் அபாயம் இல்லாது இருக்கிறதா, சாலை, தண்ணீர் கிணறு, தர்ம சத்திரம் போன்ற பொது வசதிகள் மக்களுக்கு நேரடியாக கிடைக்கிறதா, சந்தேகப் படும் படி ஒற்றர் நடமாட்டம் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள இவ்வாறு ஊரைச் சுற்றி வருவதற்கு பெயர் நகர்வலம்.

போஜனும் ஒரு முறை நகர்வலம் வரும் போது ஒரு வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்தான். நள்ளிரவில் விளக்கெரிய காரணம் என்ன என்று அறிந்து கொள்ள, நெருங்கிச் சென்று சாளரம் (ஜன்னல்) வழியாகப் பார்த்தான். உள்ளே ஒரு அதிசயக் காட்சி. அந்த வீட்டில் மனைவி அமர்ந்திருக்க கணவன் அவள் மடியில் தலைவைத்து படுத்திருந்தான். அவர்களது அருகில் தூளியில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை கண்விழித்து துளியை விட்டு இறங்கி விட்டது.

அருகில் இருந்த விளக்கைப் பார்த்து அதன் அருகில் செல்ல துவங்கியது. இதைக் கண்ட மனைவி பதறி, அக்னி தேவனைத் துதித்தாள். பதிவிரதையான அவள், கணவனை உறக்கத்திலிருந்து எழுப்புவது பாவம் என்று அக்னி தேவனை நோக்கி தன் சிசுவை எரித்து விடாதே என்று வேண்டினாள். அந்த குழந்தை விளக்கின் நெருப்பைத் தீண்டியும் தீ சுடவில்லை. ஆச்சரியமான இந்த நிகழ்வைக் கண்டான் போஜன்.

மறுநாள் அவையில் இந்த நிகழ்வை மனதில் வைத்து புலவர்களைப் பார்த்து சொன்னான் “நேற்று இரவு ஒரு அதிசய நிகழ்ச்சியைப் பார்த்தேன். ஒரு வீட்டில் தீ சந்தனக் குழம்பானது” (“ஹுதாசனஸ் சந்தன பங்க சீதள:”) என்று சொன்னான். அப்போது சரஸ்வதியின் அவதாரம் என்று கருதப் பட்ட மகாகவி காளிதாசன் என்ன நடந்தது என்று தன் ஞானக் கண்ணால் அறிந்தான். அதை ஒரு கவிதையாகவும் சமைத்தான்:

ஸுதம்பதந்தம் ப்ரஸமீக்ஷ்ய பாவகே ந போ³த⁴யாமாஸ பதிம் பதிவ்ரதா |
த³தா³ப⁴வத் தத்பதி ப⁴க்திகௌ³ரவாத்³ த⁴தாஸநஸ்²சந்த³நபங்கஸீ²தல: ||

सुतंपतन्तं प्रसमीक्ष्य पावके न बोधयामास पतिं पतिव्रता |
तदाभवत्तत्पति भक्तिगौरवा द्हुतासनश्चन्दनपङ्कशीतल:: ||

பதிவ்ரதா – பதிவிரதை ஒருத்தி, பாவகே – நெருப்பிலே, பதந்தம் சுதம் – இறங்கி விட்ட மகனை, ப்ரஸமீக்ஷ்ய – விலக்க, பதிம் – கணவனை, ந போ³த⁴யாமாஸ – உறக்கத்திலிருந்து எழுப்பவில்லை. அயர்ந்து உறங்கும் தன் கணவனை எழுப்ப அவள் விரும்பவில்லை. ததா³ – அப்போது, தத்பதி ப⁴க்திகௌ³ரவாத் – அவளுடைய பதி பக்திக்கு மரியாதை கொடுத்து, ஹுதாஸந – தீ, சந்த³நபங்கஸீ²தல: – சந்தனக் குழம்பாக (குழந்தையை சுடாமல்) ஆனது.

இவ்வாறு காளிதாசன் நடந்த சம்பவத்தை கவிதையாக சொன்னான். அரசனும் மகிழ்ந்து காளிதாசனுக்கு பரிசில் கொடுத்தான். தருமங்கள் செழித்து வளர்ந்த போஜன் அரசாட்சியில் பதிவிரதா தர்மமும் சிறந்து விளங்கியது.

***

ஒருமுறை போஜராஜன் காட்டுக்கு வேட்டைக்கு போனான். அப்போது வேட்டையாடிக் கொண்டே காட்டினுள் தனியாக வெகுதூரம் போய்விட்டான். பல காத தூரம் பயணத்தால் களைப்புற்று ஒரு நாவல் மரத்தடி நிழலில் அமர்ந்தான். அந்த மரத்தின் அருகிலேயே ஒரு குளமும் இருந்தது. அந்த மரத்தின் மீது பல குரங்குகள் இருந்தன. அவை ஒவ்வொரு நாவல் பழமாக பறித்து குளத்தில் போட ‘குளுக்’ ‘குளுக்’ என்று சத்தம் எழுந்தது. இதை ராஜன் பார்த்தான். பிறகு களைப்பு நீங்கி தான் வந்த குதிரையில் ஏறி அரண்மனைக்கு திரும்பினான். மறுநாள் அவையில் ஸமஸ்யா பூர்த்தி செய்யும் போட்டி ஒன்றை அறிவித்து “கு³ளு கு³க்³கு³ளு கு³க்³கு³ளு” என்று ஒரு அடியைக் கொடுக்க, எல்லோரும் இதை வைத்து எப்படி கவிதை இயற்றுவது என்று விழித்தனர்.

வரம் பெற்ற கவியான காளிதாசன் அதனை நிறைவு செய்தான்.

ஜம்பூ³ப²லாநி பக்வாநி பதந்தி விமலே ஜலே |
கபிகம்பிதஸா²கா²ப்⁴யோ கு³ளு கு³க்³கு³ளு கு³க்³கு³ளு ||

जम्बूफलानि पक्वानि पतन्ति विमले जले |
कपिकम्पितशाखाभ्यो गुलुगुग्गुलुगुग्गुलु ||

கபிகம்பித ஸா²கா²ப்⁴யோ – குரங்குகளால் அசைக்கப் பட்ட கிளைகளில் இருந்து, பக்வாநி ஜம்பூ³ப²லாநி – பழுத்த நாவல் பழங்கள், விமலே ஜலே பதந்தி – தெளிந்த நீரில் விழுந்தன, விளைவாக “கு³ளு கு³க்³கு³ளு கு³க்³கு³ளு” என்ற சப்தம் எழுந்தது.

குரங்குகளால் உலுக்கப் பட்ட நாவல் மரக்கிளையிளிருந்து பழுத்த பழங்கள் தெளிந்த நீரில் விழும் சப்தமே அது என்று அற்புதமாக நேரில் பார்த்தது போல் சொல்லவும் மகாராஜன் ஆச்சரியப்பட்டு காளிதாசனைப் பலவாறு பாராட்டினான்.

***

ஒரு முறை போஜ ராஜன் குளிப்பதற்காக, அரண்மனையில் இருந்த ஒரு சிறு குளத்திலிருந்து நீரெடுத்துக் கொண்டு அரச குடும்பத்து பெண் ஒருத்தி படி ஏறும் போது கைதவறி குடம் படிகளில் விழுந்து உருண்டது. இதைக் கண்ட அரசன் அந்த குடம் உருண்ட சத்தத்தை கவிதையில் பொருத்தினால் எப்படி இருக்கும் என்று நினைத்து, அரச சபைக்கு வந்தவுடன் காளிதாசனைப் பார்த்து, “டடண்டடண்டண்டடடண்டடண்டம்” – இதைப் பூர்த்தி செய் பார்ப்போம் என்றான், காளிதாசன் கவிதையாக்கினான்

ராஜாபி⁴ஷேகே மத³விஹ்வலாயா ஹஸ்தாச்ச்யுதோ ஹேமக⁴டோ யுவத்யா: |
ஸோபாநமார்கே³ ப்ரகரோதி ஸ²ப்³த³ம் டடண்டடண்டண்டடடண்டடண்டம் ||

[राजाभिषेके मदवीह्वलाया हस्ताच्च्युतो हेमघटो युवत्या:
सोपानमार्गे प्रकरोति शब्दं टटंटटंटंटटटंटटंटम् ]

ராஜாபி⁴ஷேகே – அரசனுக்கு அபிஷேக காலத்திலே, மத³விஹ்வலாயா – காமத்தால் பீடிக்கப் பட்ட, அழகிய கண்களை உடைய பெண், படிகளில் குடத்தை தவற விட்ட போது எழுந்தது சப்தம் “டடண்டடண்டண்டடடண்டடண்டம்”.

***

இவ்வாறு அரசனுடன் நெருங்கிய நண்பனாகவும், தலைசிறந்த கவிஞனாகவும் காளிதாசன் இருப்பது பலருக்கும் பொறாமை ஏற்படுத்தியது. காளிதாசன் மீது காழ்ப்பு கொண்டனர். அரசனிடம் சென்று காளிதாசனைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வெறுப்பு ஏற்படுத்தத் முயன்றனர். போஜன் இது எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. கோள் மூட்ட வந்தவர்களைப் பார்த்து நீங்கள் எல்லோருமாக சேர்ந்து காளிதாசனுடைய கவிதைக்கு ஈடாக ஒரே ஒரு கவிதை எழுதுங்கள் பார்ப்போம் என்று சவால் விட்டான்.

பொறாமைக் காரர்கள் எல்லோரும் ஓருநாள் காலையில் ஒரு தர்ம சத்திரத்தில் உட்கார்ந்து கவிதை எழுத முயன்றனர். மாலைவரை முயன்றும் ஒரே ஒரு வரிதான் எழுத முடிந்தது.

போ⁴ஜநம் தே³ஹி ராஜேந்த்³ர [भोजनम् देहि राजेन्द्र] – ஹே ராஜா, சாப்பாடு கொடு

இவ்வாறு ஆரம்பிக்கவே நாக்கு தள்ளிப் போய்விட்டது அவர்களுக்கு. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் சாப்பாடுதான். அடுத்த வார்த்தை அவர்களில் ஒருவர் எடுத்துக் கொடுத்தார். எப்படிப் பட்ட சாப்பாடு வேண்டும் என்று எழுதுவோமே என்று,

க்⁴ருதஸூபஸமந்விதம் [घृतसूपसमन्वितम्] – நெய்யும் பருப்பும் கலந்ததாக (சாப்பாடு கொடு)

இதற்கு மேல் என்ன முயன்றும் அவர்களுக்கு எழுத இயலவில்லை. வேறு வழியின்றி அந்த வழியாக வந்த காளிதாசனிடமே சரணடைந்தனர். இவர்களுக்காக மனம் இறங்கி சொன்னான்

மாஹிஷம் ச ஸ²ரச்சந்த்³ரசந்த்³ரிகாத⁴வலம் த³தி⁴ [माहिषम् च शरच्चन्द्रचन्द्रिकाधवलम् दधि]
சரத்கால (குளிர்கால) சந்திரனைப் போல வெண்மையான எருமைத் தயிருடன்

அதாவது சரத்கால (குளிர்கால) சந்திரனைப் போல வெண்மையான எருமைத் தயிருடன், நெய்யும் பருப்பும் கலந்ததாக (சாப்பாடு கொடு)…

போ⁴ஜநம் தே³ஹி ராஜேந்த்³ர க்⁴ருதஸூபஸமந்விதம் |
மாஹிஷம் ச ஸ²ரச்சந்த்³ரசந்த்³ரிகாத⁴வலம் த³தி⁴ ||

भोजनम् देहि राजेन्द्र घृतसूपसमन्वितम् |
माहिषम् च शरच्चन्द्रचन्द्रिकाधवलम् दधि ||

ஆவலுடன் இதைக் கொண்டுபோய் தாங்களே எழுதிய கவிதை என்று காண்பித்தார்கள். ஆனால் போஜன் இந்த கவிதை இவர்களால் கண்டிப்பாக எழுதஇருக்க முடியாது. இதில் காளிதாசனின் முத்திரை இருக்கிறது என்று உணர்ந்தான். அதனால் உண்மையில் யார் எழுதியது என்று அவர்களை மிரட்டிக் கேட்கவும், ஒப்புக் கொண்டனர். கோபம் கொண்ட ராஜனை காளிதாசன் சாந்தப் படுத்தி, பொறாமை கொண்டவர்களையும் மன்னித்து அவர்களுக்கும் பரிசில் பெற்றுத் தந்தான்.

***

ஒரு முறை போஜராஜனுக்கு விபரீத ஆசை ஒன்று ஏற்பட்டது. அழகாக கவிதை எழுதுகிற காளிதாசன் வாயால் தனக்கு ஒரு இரங்கற்பா (சரம ஸ்லோகம்) பாடிக் கேட்க வேண்டும் என்பது தான். ஒருவர் இறந்தபின், அவரை நினைத்து இயற்றப் படுவதே இரங்கற்பா. இதை காளிதாசன் இயற்றி தான் உயிரோடு இருக்கும் போதே கேட்கவேண்டும் என்று ஆசைப் பட்டான் போஜன். அவனது பிடிவாத குணம் தெரிந்த காளிதாசன், சரஸ்வதி அனுக்கிரகம் பெற்ற தன் வாயால் ஒரு வார்த்தை சொன்னால் அது அப்படியே சத்தியமாக பலித்து விடும் என்று எண்ணி போஜன் அரண்மனையை விட்டே சென்று விட்டான்.

காளிதாசனைப் பிரிந்து போஜ மகாராஜன் மிகுந்த துயருக்கு ஆளானான். ஒரு காபாலிகன் வேடம் அணிந்து பல நாட்கள் காளிதாசனைத் தேடி அலைந்தான். இறுதியில் ராஜ்ஜியத்தின் எல்லையில் காளிதாசனைக் கண்டு பிடித்தான். சென்று அவனை வணங்கவும், காளிதாசன் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க, தாரா நகரத்தில் இருந்து வருகிறேன் என்றான் காபாலிகன் வேடத்தில் இருந்த போஜன். “அப்படியா, அங்கே போஜராஜன் சௌக்கியமாக இருக்கிறாரா” என்று காலிதாசன் கேட்க, “எப்படிச் சொல்வது, போஜன் மரணம் அடைந்தார். ” என்று போஜனே சொன்னான். சொல்ல ஒண்ணாத துயருடன் தரையில் விழுந்த காளிதாசன் வாயில் எழுந்தது சரம ஸ்லோகம்,

அத்⁴ய தா⁴ரா நிராதா⁴ரா நிராலம்பா³ ஸரஸ்வதி | [अध्य धारा निराधारा निरालम्बा सरस्वति |]
பண்டி³தா: க²ண்டி³தா: ஸர்வே போ⁴ஜராஜே தி³வம் க³தே || [पण्डिता: खण्डिता: सर्वे भोजराजे दिवं गते ||]

இன்று தாரா நகரம் நிராதரவானது. பண்டிதர்கள் சமூகம் சின்னாபின்னமானது. ஏனெனில் போஜராஜன் மரணம் அடைந்தான் (திவம் கதா).

காளிதாசன் வாக்கு சத்தியம். உடனே பலித்தது. அதுவரை பேசிக் கொண்டிருந்த காபாலிகன், பொத்தென்று தரையில் விழுந்தான். ஈனக் குரலில், “நானே போஜன்” என்று சொல்ல, காளிதாசன், “மகாராஜா இப்படி ஏமாற்றி விட்டீர்களே” என்று வருந்தி உடனே அந்த கணமே கவிதையை மாற்றி பாடினான்,

அத்⁴ய தா⁴ரா ஸதா³ தா⁴ரா ஸதா³லம்பா³ ஸரஸ்வதி | [अध्य धारा सदा धारा सदालम्बा सरस्वति |]
பண்டி³தா: மண்டி³தா: ஸர்வே போ⁴ஜராஜே பு⁴வம்° க³தே || [पण्डिता: मण्डिता: सर्वे भोजराजे भुवं गते ||]

இன்று தாரா நகரம் ஆதரவு பெற்றது, சரஸ்வதி மகிழ்ந்தாள். பண்டிதர்கள் அலங்கரிக்கப் பட்டனர். ஏனெனில் போஜன் மண்ணுலகில் வந்து உதித்ததால். என்று மாற்றினான்.

போஜனும் பிழைத்தான். இவ்வாறு பலகாலம் காளிதாசனும் போஜனும் அறிவாற்றல் மிகுந்த இரு நண்பர்களாக, கவிஞனும் ரசிகனுமாக மகிழ்ந்து வாழ்ந்து வந்தனர்.

***
இது வரை விவரித்து வந்த சம்பவங்கள் யாவும் நடந்த வரலாறல்ல. காளிதாசன் காலத்துக்கும், போஜ ராஜன் காலத்துக்கும் சம்பந்தமே இல்லை. இருவரும் வரலாற்றில் வேறு வேறு நூற்றாண்டுகளைச் சேர்ந்தவர்கள். இது வரை விவரித்த சம்பவங்கள் எல்லாம், பதினாறாம் நூற்றாண்டில் (1500-1600) வாழ்ந்த பல்லாளசேனர் என்கிற சம்ஸ்க்ருத கவிஞரின் கற்பனையே இவை. அவர் எழுதி வைத்த போஜ பிரபந்தம் என்கிற நூலில், இது போன்ற பல சம்பவங்களைக் கோர்த்து எழுதி இருக்கிறார்.

போஜனைப் போன்ற புலவர்களைப் போற்றும் ஒரு மகாராஜனும், வரலாற்றின் தலைசிறந்த கவிகளும் ஒரே காலத்தில், ஒரே நாட்டில் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்கிற உயரிய கற்பனைதான் இந்த போஜ பிரபந்தம் என்கிற நூலின் அடிப்படை. சுவாரசியமான இந்த நூல் மிகவும் பிரபலம். இந்த நூலில் விவரித்துள்ள சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்திய தேசத்தின் அனைத்து மொழிகளிலும் நாடகங்கள், திரைப்படங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. சுவாரசியமான இந்த நூல் ஹிந்தி மொழி பெயர்ப்புடன் கீழ்கண்ட உரலில் கிடைக்கிறது.

http://www.archive.org/details/bhojaprabandhaof00balluoft

குறிச்சொற்கள்: sanskrit, समस्या पूर्ति, அரசவை, அறிஞர்கள், இலக்கியம், கவிதை, காளிதாசன், சமஸ்க்ருதம், தண்டி, திருடன், போஜன், போஜராஜன், வடமொழி, வரருசி, ஹாஸ்யம்
Excerpted from போஜராஜன் சபையில்… | Sangatham
http://www.sangatham.com/articles/king-bhoja-court.html
Readability — An Arc90 Laboratory Experiment http://lab.arc90.com/experiments/readability
Follow us on Twitter »Readability version 1.7.1

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES