THF Announcement: ebooks update: 28/9/2014 *தமிழ்க் கோயில்கள் - தமிழர் பண்பாடு*

0 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.

நூல்:  தமிழ்க் கோயில்கள்  - தமிழர் பண்பாடு
ஆசிரியர்: தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்
பதிப்பு: எஸ். ஆர்.சுப்பிரமணியப் பிள்ளை, திருநெல்வேலி
நூல் குறிப்பு:  
வானொலிப் பேச்சாக வந்தவற்றை கட்டுரை வடிவிலும் வழங்கியிருக்கின்றார் பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள்.

நூல் இரண்டு பகுதிகளாக  அமைந்துள்ளது. முதல் பகுதி தமிழ்க் கோயில்கள் என்ற தலைப்பில் 5 கட்டுரைகள் ஆகமங்கள், குடைவரை அமைப்பு, கோயில்கள், மாளிகைகள் சரித்திரச் சான்று என்ற விஷயங்களை முன் வைத்து அமைந்துள்ளன.

அடுத்த பகுதியாக அமைவது தமிழர் பண்பாடு பற்றிய விஷயங்கள். இதில் பாஸ்கரத் தொண்டைமான் அவர்களின் சிற்பத்தில் ஓவியத்தில் தமிழர் பண்பாடு என்ற கட்டுரையுடன், பி.ஸ்ரீ.ஆச்சார்யாவின் இலக்கியத்தில் தமிழர் பண்பாடு, கே.வாசுதேவ சாஸ்திரியின் இசையில் தமிழர் பண்பாடு, எஸ்.சிவகுமாரின் மடாலயங்களில் தமிழர் பண்பாடு, அ.ரா.இந்திராவின் தினசரி வாழ்வில் தமிழர் பண்பாடு என்ற 4 கட்டுரைகளும் இடம்பெறுகின்றன


இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 397

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​


Fwd: Tagore in Tamil - 48 verses

0 மறுமொழிகள்
Thanks to Sri subbaraman.
Aum V.Subramanian
---------- Forwarded message ----------
From: Subbaraman NV <nvsubbaraman@gmail.com>
Date: 2014-09-22 9:17 GMT+05:30
Subject: Tagore in Tamil - 48 verses
To: Subbaraman NV <nvsubbaraman@gmail.com>


​ஒரு சிறந்த முயற்சி. கவி ரவீந்திரர் அவர்களின் பாடல்களின் தமிழாக்கம்

--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101

Visit http://www.youngpoet.org
Visit http://www.poemhunter.com/subbaraman-n-v/

--THF Announcement: ebooks update: 19/9/2014 *ப்ரிட்டிஷ் சரித்திரச் சுருக்கம்*

0 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.

நூல்:  ப்ரிட்டிஷ் சரித்திரச் சுருக்கம்  *2ம் பதிப்பு
ஆசிரியர்: T.F. டௌட் LL.D. D.Litt இயற்றி ஸர் பிலிப் ஹார்ட்டாக் தொகுத்தது.நூல் குறிப்பு:   1937ல் வெளிவந்த நூல் இது.

இந்த நூலில் கிபி 410 வரை ப்ரிட்டானியரும் ரோமானியர் ஆங்கிலேயர் ப்ரிட்டன் தேசத்திற்கு எப்படி வந்தனர் என்பது, ஆங்கிலேயர் கிறிஸ்துவர்களானது, 597-664 இங்கிலாந்து ஒரே ராஜ்ஜியமானது, ஆல்ப்ரெட் முதல் எட்வர்ட் பக்த சீலன் வரைக்கும், நார்மன் அரசர்கள், 2ம் ஹென்றியும் அவனுடைய  குமாரர்களும் ....
என மிக விரிவாக பிரித்தானிய வரலாற்றிச் சொல்கின்றது.


இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 396

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​


மண்ணின் குரல்: செப்டம்பர் 2014: கேரித் தீவில் தமிழர் குடியேற்றம்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழகத்தின் நாமக்கல்லிலிருந்து புலம்பெயர்ந்து சென்று மலேசியாவின் கேரித்தீவில் வசிக்கும் திரு முனுசாமி-காளியம்மாள் தம்பதியினரின் பேட்டி இன்றைய வெளியீட்டில் இடம் பெறுகின்றது. 

1930ம் ஆண்டில் தமக்கு 1 வயதாக இருக்கும் போது ரஜூலா கப்பலில் மலாயா வந்தமை பற்றியும் அக்கால மலேசிய தமிழர்களின் வாழ்க்கை முறை பற்றியும் சுவாரஸியமாக பல தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றார்கள் இத்தம்பதியினர். அவர்களோடு இவரது தம்பி மகள் காந்தியும் உடன் வருகின்றார்.

கப்பலில் சென்னையிலிருந்து பயணித்து பின்னர் நாகபட்டினம் வந்து அங்கும் மக்களை ஏற்றிக் கொண்டும் வெங்காயத்தை ஏற்றிக் கொண்டும் வரும் கப்பல் மலேசியாவின் பினாங்குக்கு வந்து ஆட்களையும் பொருட்களையும் இறக்கிய பின்னர் போர்ட் க்ளேங் துரைமுகத்தில் நிறுத்தி பயணத்தை முடித்துக் கொள்ளுமாம். 5 நாட்கள் பயணமாக கடலில் இந்தப் பயணம் இருந்திருக்கின்றது. 

ரஜுலா கப்பல்

கல்வி பெறுவது என்பதை விட தோட்டத்தில் காடுகளை அழிக்கும் தொழில் செய்வதும் பின்னர் செம்பனைகளை நட்டு அங்கு பணி புரிவதுமே கனவாக அக்காலத்தில் இங்கு வந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு இருந்திருக்கின்றது. ஆயினும் கால மாற்றத்தில் இவர்களது குழந்தைகள் கல்வி கற்று உத்தியோகத்திற்குச் சென்று விட்ட நிலையில் இவர்களது வாழ்க்கை மலேசிய சூழலுடனேயே ஐக்கியப்பட்டு விட்டது. ஆயினும் தமிழகத்திற்கான இவர்களது தொடர்புகள் இன்னமும் உறுதியாகவே இருக்கின்றன.

இவர்களோடு தஞ்சாவூரைச் சேர்ந்த திருமதி வசந்தாவும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார். இவர்களும் இவர்களது குடும்பத்தினர் அனைவருமே இந்தியாவிலிருந்து கப்பல் பயணம் மேற்கொண்டு மலாயா வந்தவர்கள்.

விழியப் பதிவைக் காண:   http://video-thf.blogspot.de/2014/09/blog-post_17.html

யூடியூபில் இப்பதிவைக் காண:    https://www.youtube.com/watch?v=AXXVvu26PLE&feature=youtu.be


இப்பதிவு ஏறக்குறைய 23நிமிடங்கள் கொண்டது.


இப்பதிவினைக் கடந்த வருடம் அக்டோபர் மாத இறுதியில் மலேசியாவின் கேரித்தீவில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். 

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு ஏப்ரல் - 2

0 மறுமொழிகள்
வணக்கம்.

இன்றும் ஒரு சஞ்சிகையை வெளியிடுகின்றோம்.

நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு ஏப்ரல் மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. ஏப்ரல் மாதம் வெளிவந்த இரண்டாம் இதழை இன்று வெளியிடுகின்றோம்.

குறிப்பு: இந்த மின்னிதழின் மின்னாக்கப் பதிவு தெளிவு சற்று குறைவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.


இந்த இதழின் உள்ளடக்கம்:
  • பொதுச் சமாச்சாரங்கள்
  • ஔவையின் வாக்கு
  • இந்தியாவின் இராணுவச் செலவு
  • குலக்குறிப்பு
  • சங்க விஷயங்கள்
  • தியாக புத்தியுள்ள 42 வீரர்கள்
  • ஆசிரம வாசம்


அத்துடன் ..
அனுபோக கைத்தொழில் போதினி என்ற தலைபிலான கைத்தொழில் சாஸ்திரத்தை விளக்கும் நூல் பற்றிய விளம்பரமும் இந்த இதழில் உள்ளது.


வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


THF Announcement: ebooks update: 13/9/2014 *தமிழ்க்கவி சரிதம்*

0 மறுமொழிகள்


வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.

நூல்:  தமிழ்க்கவி சரிதம்  *2ம் பதிப்பு
ஆசிரியர்: ராவ் ஸாஹிப் மு. இராகவையங்கார், தலைமைப் பண்டிதர், யூனிவர்ஸிடி தமிழ் லெக்ஸிகன் ஆபீஸ்


நூல் குறிப்பு:   1937ல் வெளிவந்த நூலின் 1958ம் ஆண்டு இரண்டாம் பதிப்பு இது.

தமிழ்க்கவி சரிதம் எனும் இந்த நூல் சங்க கால புலவர்களான அகத்தியனார்,  பாண்டியனார், கபிலர் எனத் தொடங்கி ஒரு நீண்ட பட்டியலை வைத்து அதனை விளக்குவதாக அமைந்திருக்கும் ஒரு நூல். 


இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 394

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​


மண்ணின் குரல்: செப்டம்பர் 2014: மலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

புலம்பெயர்வு என்பது தொடர்ந்து நிகழ்வது. மலேசியாவில் இருக்கும் கேரித் தீவில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் செம்பனைத்தோட்டங்களில் பணி புரிய வந்த நாமக்கல் பகுதி தமிழர்களின் குடியேற்றம் பற்றி சில செய்தியும் கோயில் வழிபாடு செய்யும் அம்மையாரைப் பற்றியும் சென்ற வாரம் ஒரு விழியப் பதிவு வெளியீடு செய்தேன்.இன்று மேலும் ஒரு விழியம் வெளியீடு காண்கின்றது. கேரித்தீவில் சுற்றுப் பயணம் செய்து அங்கு மக்கள் வாழ்வியல், இந்தத் தீவில் உள்ள மிகப்பெரிய செம்பனை ஆலையான  Sime Darby, கோயில்கள், தமிழ் பள்ளிகள், மருத்துவமனை ஆகியனவற்றைப் பதிந்துள்ள விழியம் இது.  

தமிழிலும் சாலை பெயர் உள்ள மலேசிய தீவு இது என்பது கூடுதல் விஷயம்,

இன்றும் தமிழர்களே இத்தீவின் அதிகப் பெரும்பாண்மையினராக இருக்கின்றனர் என்பதுவும் ஒரு கூடுதல் செய்தி. அத்தோடு இங்கு வாழும் பழங்குடியினரும் மலாய் மக்களும் கூட தமிழ் பேசுகின்றனர். அதே போல தமிழ் மக்கள் மலாய் மொழியோடு பழங்குடியினர் மொழியையும் பேசுகின்றனர்.

பசுமை நிறைந்த இக்கிராமத்திற்கு உங்களை அழைத்துச் செல்கின்றோம். வாருங்கள்.

Inline image 1

விழியப் பதிவைக் காண:   http://video-thf.blogspot.de/2014/09/20.html

யூடியூபில் இப்பதிவைக் காண:    https://www.youtube.com/watch?v=QXEoQcxzpMY&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 12 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்!

இப்பதிவினைk கடந்த வருடம் அக்டோபர் மாத இறுதியில் மலேசியாவின் கேரித்தீவில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். 

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


THF Announcement: ebooks update: 7/9/2014 *நெடுந்தொகை ஆகிய அக நானூறு வசனம்*

0 மறுமொழிகள்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.

நூல்:  நெடுந்தொகை ஆகிய அக நானூறு வசனம்
ஆசிரியர்: பண்டிட் ந.சி.கந்தையா பிள்ளை (யாழ்ப்பாணம், இலங்கை)
பதிப்பு: தமிழ் நிலையம், நவாலியர், இலங்கை

நூல் வெளிவந்த ஆண்டு: 1938

நூல் குறிப்பு:   
இந்தச் நூல் சங்க இலக்கியமான அகனானுறு பாடல்களை எளிமையாக விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் தமிழறிஞர் ந.சி.கந்தையா பிள்ளையவர்களின் இலக்கியக் கொடைகளில் ஒன்று என்றும் குறிப்பிடலாம்.

இந்த நூலை தொகுப்பித்தார்  கானப் பேரெயில் எறிந்த பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. தொகுப்பித்தவர் உப்பூரி குடிக் கிழார் மகனார் உருத்திரசன்மனார். ஆக இந்த நூல் தொகுப்பித்த காலம் கி.பி.50 என அறியலாம். இந்த நூலுக்குக் கடவுள் வாழ்த்து எழுதியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். 400 செய்யுள்கள் கொண்ட அக நானூறு தொகுப்பில் உள்ள பாடல்களைப் பாடியோர் ஏறக்குறையை 143 பேர். ஒரு சில பாடல்களின் ஆசிரியர் பெயர் காணக் கிடைக்கவில்லை.


இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 393

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​


Fwd: ஓம்....புனலில் வரைந்த ஓவியங்கள்

0 மறுமொழிகள்
​புனலில் வரைந்த ஓவியங்கள்

---------- Forwarded message ----------
From: Venkatachalam Dotthathri <v.dotthathri@gmail.com>
Date: Fri, Sep 5, 2014 at 10:48 AM
Subject: ஓம்..​​..புனலில் வரைந்த ஓவியங்கள்
To: mintamil <mintamil@googlegroups.com>


ஓம் வெ.சுப்பிரமணியன்மண்ணின் குரல்: செப்டம்பர் 2014: மலேசியாவில் கிராமப்புர ஆலய பெண் பூசாரி

1 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

இறைவழிபாட்டு முறை என்பது பல்வகைப் படுகின்றது. தமிழகத்து சூழலில் ஒரு வகை என்றால் தமிழகத்தைக் கடந்து அயல்நாடுகளுக்குப் புலம் பெயரும் தமிழர்களின் நிலை சில மாறுபாடுகளை உள்ளடக்கியதாகவே இருக்கின்றது. 

மலேசியாவில் 1920லிருந்து 1940வரை ரப்பர் தோட்டங்களிலும் செம்பனை தோட்டங்களை உருவாக்கவும் தமிழகத்தின் தென் பகுதியிலிருந்து தமிழ் மக்கள் கப்பலில் நாகப்பட்டினம் வழியாக பிரித்தானிய காலணித்துவ அரசினால் அழைத்து வரப்பட்டனர். நாமக்கல் பகுதியிலிருந்து வந்தவர்களில் பலர் கேரித் தீவில் தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கினர்.

அப்படி வந்தவர்களில் பலர் இன்னமும் கேரித் தீவிலேயே தங்கி வாழ்கின்றனர். இங்கு வாழும் ஒரு பெண்மணி கோயில் ஒன்றினைத் தமது குடும்பத்தார் உதவியுடன் அமைத்து அதற்கு தாமே பூசாரியாகவும் இருந்து செயல்படுகின்றார். பூசை மந்திரங்கள் ஏதும் அறியாதவர். ஆனால் காலை மாலை கோயிலைச் சுத்தம் செய்து பூசை செய்து வழிபாடு இந்த ஸ்ரீ ராஜமுனீஸ்வரர் ஆலயத்தில் நிகழ்வதை பார்த்துக் கொள்கின்றார். அருகாமையிலேயே அவரது இல்லமும் இருக்கின்றது. 

எழுதப் படிக்கத் தெரியாதவர். ஆனால் கற்பனையிலேயே பாடல் பாடக் கூடியவர். அவரது கோயில் பூசையையும் கற்பனை திறத்தில் அவர் பாடும் மக்கள் நலன் நாட்டுப் பாடல் ஒன்றையும் காட்டும் விழியப் பதிவே இன்று வெளியிடப் படுகின்றது.


விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2014/09/blog-post_3.html

யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=9gGCE08n7O4&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்!

இப்பதிவினை கடந்த வருடம் அக்டோபர் மாத இறுதியில் மலேசியாவின் கேரித்தீவில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். 

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES