THF Announcement: ebooks update: 29/9/2013 *அகிலாண்டநாயகி மாலை*

0 மறுமொழிகள்
வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:

அகிலாண்டநாயகி மாலை

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 351

நூலை வாசிக்க!

நூல் மின்னாக்கம் & மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணிதிருவாவடுதுறை மடத்தின் வரவேற்பு பகுதியில் மேற்சுவற்றில் உள்ள படங்களில் ஒன்று. ஆன்ம நாத சுவாமி வாதவூரடிகளுக்கு ஸ்பரிஸ தீட்ஷை செய்வதைக் காட்டும் சித்திரம்.

----
அகிலாண்ட நாயகி கோயில்கொண்டு விளங்கும் ஆனைக்கா
திருத்தலமே ஒரு நெடிய வரலாற்றுப் பின்புலம் கொண்ட
அற்புதமான தலமாகும்.

அப்பர், சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் பாடிய சிவத்தலம் திரு ஆனைக்கா; காவை என்பது தலத்தின் மற்றொரு பெயர். சிவாலயம் அரனாரின் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. காவிரி வடகரைச் சிவத்தலங்களில் இது அறுபதாவதாக திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ளது

இறைவரின் திருப்பெயர் - நீர்த்திரள்நாதர். இத்திருப்பெயரை இவ்வூர்த் திருத்தாண்டகத்தில்  அப்பர் பெருமான் ``செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே`` எனப் பாடியுள்ளார்.  இதுவன்றி ஜம்புகேசுவரர் என்று வேறு திருப்பெயரும் உண்டு. வெண்ணாவல் மரத்திற்கடியில்
எழுந்தருளியிருப்பதால் இப்பெயர் பெற்றார். (ஜம்பு -நாவல்).

சிலந்தி ஒன்று இலிங்கத் திருமேனிக்கு மேல் விதானம்போல் வலை அமைத்துத் தொண்டு செய்தது. அதுவே மறுபிறவியில் கோச்செங்கட் சோழ மன்னராகப் பிறந்தது என வரலாறு.

சோழ, பாண்டிய, நாயக்க மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். அகிலாண்ட ஈசுவரி கோயில், ஜம்புநாதர் கோயில் இவற்றின்  தளவரிசைகளைச் செய்தவர் பாஸ்கரராயர் ஆவார்.

இறைவியின் பெயர் அகிலாண்ட நாயகி. கவி காளமேகம் இந்த இறைவியின் அருள் பெற்றவர். இவர் செய்த நூல் திருவானைக்கா உலா. ஸதாசிவ மகி காவை நூல்கள் என எழுதியுள்ளார்.

ஆதி சங்கரர் அன்னையின் செவிகளில் தாடங்க ப்ரதிஷ்டை செய்ததாக வரலாறு. ஸ்ரீ முத்து ஸ்வாமி தீக்ஷிதர் அவர்களும் அன்னையைப் பாடியுள்ளார்.
-தேவ்.

----

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

THF Announcement: ebooks update: 28/9/2013 *கலைசைச்சிதம்பரேசுவரர்மாலை*

0 மறுமொழிகள்
வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:

கலைசைச்சிதம்பரேசுவரர்மாலை

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 350

நூலை வாசிக்க!

நூல் மின்னாக்கம் & மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி

திருவாவடுதுறை மடத்தின் வரவேற்பு பகுதியில் மேற்சுவற்றில் உள்ள படங்களில் ஒன்று. ஆன்ம நாதசுவாமி மாணிக்கவாசகருக்கு திருவடி தீஷை செய்தமையைக் குறிக்கும் சித்திரம்.

கலைசை என்பது  தொட்டிக்கலை எனும் ஊரின் மற்றொரு பெயர்; திருவள்ளூருக்குக் கிழக்கே 8 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர் இது. 
ஆலயத்தின் இறைவனின் பெயர்  சிதம்பரேசுவரர் 
தகவல் வழங்கியவர் - திரு.தேவ்

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Announcement: ebooks update: 22/9/2013 *திருஞானசம்பந்த சுவாமிகள் ஆனந்தக்களிப்பு*

0 மறுமொழிகள்
வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:

திருஞானசம்பந்த சுவாமிகள் ஆனந்தக்களிப்பு

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 349

நூலை வாசிக்க!

நூல் மின்னாக்கம் & மின்னூலாக்கம்:முனைவர்.க. சுபாஷிணி

திருவாவடுதுறை மடத்தின் வரவேற்பு பகுதியில் சுவர் சித்திரமாகத் தீட்டப்பட்டிருக்கும் அரசியார் தீபாம்பாய் உருவப்படம்.

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Announcement: ebooks update: 20/9/2013 *திருஞானசம்பந்த சுவாமிகள் பதிற்றுப்பத்தந்தாதி*

0 மறுமொழிகள்

வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:

திருஞானசம்பந்த சுவாமிகள் பதிற்றுப்பத்தந்தாதி

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 348நூல் மின்னாக்கம்:முனைவர்.க. சுபாஷிணி, பரந்தாமன்
மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி

திருவாவடுதுறை மடத்தின் வரவேற்பு பகுதியில் சுவர் சித்திரமாகத் தீட்டப்பட்டிருக்கும் ஏகோஜி மகாராஜாவின் உருவப்படம்.

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

THF Announcement: ebooks update: 15/9/2013 *பாலைவனப்பதிற்றுப்பத்தந்தாதி*

0 மறுமொழிகள்
வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:

பாலைவனப்பதிற்றுப்பத்தந்தாதி

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 347

நூலை வாசிக்க!

நூல் மின்னாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி, பரந்தாமன்
மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி
திருவாவடுதுறை ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் ஆலய பிரகார முன்பகுதியில் அமைந்திருக்கும் தல விநாயகர்.

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

THF Announcement: ebooks update: 14/9/2013 *திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி*

1 மறுமொழிகள்
வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:

திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 346

நூலை வாசிக்க!

நூல் மின்னாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி, பரந்தாமன்
மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி

தலக்குறிப்பு
திருச்சி மண்ணச்ச நல்லூருக்கு மேற்கில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருபைஞ்ஞீலி திருத்தலம். (திருப்பஞ்சீலி என்பது தற்போதைய வழக்கு.) பேருந்து வசதிகள் சிறப்பாக இருக்கின்றன. ஆலயத்தின் வாசலிலேயே இறங்கலாம். 

இறைவன் - மாற்றறி வரதர், நீலகண்டர், ஞீலிவனநாதர், ஞீலிவனேஸ்வரர். 
இறைவி - விசாலாட்சியம்மை, நீணெடுங்கண்ணி.

பொய்கை - விசாலாட்சிப் பொய்கை.

தலமரம் - வாழை.

பாடியவர்கள் - திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்.

[ஞீலி என்பது மனிதர்கள் உண்ண இயலாத இறைவனுக்கு மட்டுமே படைப்பாகிற ஒரு வகைக் கல்வாழை. இதுவே இத்தல மரமாக அமைந்ததால், இது ஞீலிவனம் எனப் பெயர் பெற்றது]

தேவ்
திருவாவடுதுறை ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் ஆலய பிரகார இடது சுற்றுப்புரத்தில் அமைந்திருக்கும் துர்க்கையம்மன்.

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

நாடார் குல மித்திரன் - 1921 டிசம்பர் (2) மின்னூல்

0 மறுமொழிகள்
வணக்கம்.

நாடார் குல மித்திரன் 1921ம் ஆண்டு டிசம்பர் மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. டிசம்பர் மாதம் வெளிவந்த இரண்டாம் இதழை இன்று வெளியிடுகின்றோம்.
குறிப்பு:மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.

இந்த இதழின் உள்ளடக்கம்:

 • சமயோசித நன்மொழி
 • கடிதங்கள்
 • பத்திராதிபர் கடிதத்திற்கு தேவதாஸ் காந்தியின் பதில்
 • நமது மித்திரன் புதியபோஷகப்பிரபு
 • நம் குல கல்விப்பிரியர்களுக்கு ஓர் விண்ணப்பம்
 • சங்க விஷயங்கள்

இந்த மின்னிதழை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

THF Announcement: ebooks update: 06/Sept/2013 *தென்னாட்டுக் கோயில்கள்*

0 மறுமொழிகள்
வணக்கம்.

இன்று மேலும் ஒரு நூல்  மின்னாக்கம் செய்யப் பெற்று தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் சேகரத்தில் இணைக்கப்படுகின்றது.

நூல் பெயர்:தென்னாட்டுக் கோயில்கள்
நூல் எண்: 341

மின்னாக்கம், மின்னூலாக்கம்: டாக்டர்.திருமூர்த்தி வாசுதேவன்

இந்த நூல் எழுபதுகளில் வைதிக தர்ம வர்த்தினி என்னும் பத்திரிகையில் வந்த கட்டுரைகளின் தொகுப்பாகும். இதன் ஆசிரியர் திரு.கிருஷ்ணன் அவர்கள் அருமையாக எழுதி இருக்கிறார். இதில் திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள கோவில்கள் மற்றும் தொண்டை மண்டல கோவில்கள் ஆகியவற்றைக்குறித்து எழுதப்பட்டுள்ளது.

இடம் பெறும் கோவில்களின் பட்டியல்:

 • பழைய பாபநாசம்
 • அம்பாசமுத்திரம்
 • நெல்லையப்பர் கோவில்
 • சிந்துபூந்துறை
 • குறுக்குத்துறை
 • பாளையம்கோட்டை- திரிபுராந்தகம்
 • ஸ்ரீவைகுண்டம்
 • ஆழ்வார்திருநகரி - திருக்குருக்கூர்.
 • திருகாந்தீசசுரம்
 • திருச்செந்தூர்
 • சங்கரநயினார் கோவில்
 • குற்றாலம்
 • தென்காசி விஸ்வநாதர்
 • இலஞ்சி
 • தொண்டை மண்டலம்:
 • திருநீர்மலை
 • திருத்தணிகை
 • சோளசிங்கபுரம். (திருக்கடிகை)
 • திருவல்லம்.
 • திருவிரிஞ்சிபுரம்
 • பள்ளிகொண்டான்
 • திருவாலங்காடு

இறுதியாக தன்வந்திரி கவசமும் இணைக்கப்பட்டிருக்கின்றது.

இந்நூல் ஸ்ரீ ரா.கணபதி அவர்களின் சேகரத்தில் இருந்து வருகிறது. ​ ஆங்காங்கே அவர் நூலில் எழுதிய சில குறிப்புகளும் அப்படியே உள்ளன!​ ஒரிடத்தில் இது தவறு என்கிறார்! இன்னொரு இடத்தில் சந்தேகம் எழுப்புகிறார்.
வாசித்து மகிழுங்கள்!

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

நாடார் குல மித்திரன் - 1921 டிசம்பர் (1) மின்னூல்

0 மறுமொழிகள்
வணக்கம்.

நாடார் குல மித்திரன் 1921ம் ஆண்டு டிசம்பர் மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. டிசம்பர் மாதம் வெளிவந்த முதல் இதழை இன்று வெளியிடுகின்றோம்.
குறிப்பு:மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.

இந்த இதழின் உள்ளடக்கம்:

 • மகாத்மா காந்தியவர்களுக்கு பத்திராதிபர் 20-6-21ல் எழுதிய கடிதம்
 • நாடார் மகாஜன சங்கமும் பிரசாரமும்
 • கடிதங்கள்
 • சங்க விஷயங்கள்
 • கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார்களுக்கு விஞ்ஞாபனம்
 • முற்கால ஜப்பான்இந்த மின்னிதழை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

THF Announcement: ebooks update: 04/Sept/2013 *பாஷ்ய ஹ்ருதயம்*

1 மறுமொழிகள்
வணக்கம்.

இன்று மேலும் ஒரு பழம் நூல் ஒன்று மின்னாக்கம் செய்யப் பெற்று தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் சேகரத்தில் இணைக்கப்படுகின்றது. 

நூலின் பெயர்: பாஷ்ய ஹ்ருதய
ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் வடமொழியில் எழுதிய பாஷ்யத்தை பிரம்மஞான வெங்கிடேசுவர சுவாமிகள் தமிழில் மொழிபெயர்த்த நூல் இது. அ.இராமசுவாமி அவர்களால் திருத்தியும் கூட்டியும் புதிப்பிக்கப்பட்ட் பதிப்பாக இது வெளிவந்தது.

நூல் வெளி வந்த ஆண்டு 1888

நூல் எண்: 340

நூலை வழங்கியவர். திரு.ரகுவீர தயாள் (திருப்புல்லாணி)

குறிப்பு: இந்த நூல் இந்தியன் டிஜிட்டல் லைப்ரரியிலிருந்து எடுத்து த.ம.அ சேகரத்தில் இணைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு திரு ரகுவீரதயாள் அவர்கள் வழங்கியிருக்கின்றார்கள். அவரது விருப்பத்தின் படி இந்த நூல் இங்கு இணைக்கப்படுகின்றது. 
தமிழ் மரபு அறக்கட்டளை 2003-2004ம், ஆண்டுகளில் இந்தியன் டிஜிட்டல் லைப்ரரி திட்டத்திற்காக 100 பழம் தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்து வழங்கியுள்ளோம் என்பதை இத்தருணத்தில் பகிர்ந்து கொள்வதும் சிறப்பான செய்தியாக இருக்கும் என்று கருதுவதால் அதனையும் இணைத்துக் குறிப்பிடுகின்றேன். 

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]நாடார் குல மித்திரன் - 1921 நவம்பர் மின்னூல்

0 மறுமொழிகள்
வணக்கம்.

நாடார் குல மித்திரன் 1921ம் ஆண்டு நவம்பர் இதழை இன்று வெளியிடுகின்றோம்.
குறிப்பு:மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.

இந்த இதழின் உள்ளடக்கம்:

 • சங்க விஷயம்
 • செய்தித் திரட்டு
 • ஆளைக்கண்டு மிறட்டுதாம் ஆலங்காட்டுப் பிசாசு
 • தமிழ் நாடுகளில் வழங்கி வரும் பழமொழிகள்
 • குலக்குறிப்பு
 • கடிதங்கள்
 • சுவாமி விவேகாநந்தரின் பிரச்சாரம்
 • மலபார் ஜில்லாவும் மாப்பிள்ளைமாரும்இந்த மின்னிதழை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES