THF Announcement: ebooks update: 14/9/2013 *திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி*

1 மறுமொழிகள்

வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:

திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 346

நூலை வாசிக்க!


நூல் மின்னாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி, பரந்தாமன்
மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி

தலக்குறிப்பு
திருச்சி மண்ணச்ச நல்லூருக்கு மேற்கில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருபைஞ்ஞீலி திருத்தலம். (திருப்பஞ்சீலி என்பது தற்போதைய வழக்கு.) பேருந்து வசதிகள் சிறப்பாக இருக்கின்றன. ஆலயத்தின் வாசலிலேயே இறங்கலாம். 

இறைவன் - மாற்றறி வரதர், நீலகண்டர், ஞீலிவனநாதர், ஞீலிவனேஸ்வரர். 
இறைவி - விசாலாட்சியம்மை, நீணெடுங்கண்ணி.

பொய்கை - விசாலாட்சிப் பொய்கை.

தலமரம் - வாழை.

பாடியவர்கள் - திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்.

[ஞீலி என்பது மனிதர்கள் உண்ண இயலாத இறைவனுக்கு மட்டுமே படைப்பாகிற ஒரு வகைக் கல்வாழை. இதுவே இத்தல மரமாக அமைந்ததால், இது ஞீலிவனம் எனப் பெயர் பெற்றது]

தேவ்




திருவாவடுதுறை ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் ஆலய பிரகார இடது சுற்றுப்புரத்தில் அமைந்திருக்கும் துர்க்கையம்மன்.

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

மறுமொழிகள்

1 comments to "THF Announcement: ebooks update: 14/9/2013 *திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி*"

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன் said...
September 14, 2013 at 8:27 AM

\\\1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.\\\
தங்களது சீரிய பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.

அன்பன்
கி.காளைராசன்

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES