THF Announcement: E-books update:26/09/2015 *வயித்தியாநுகூலஜீவரட்சணி முதற்பாகம்*

2 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று நூறாண்டுகளுக்கு முந்தையதான ஒரு பழம் வைத்திய சாத்திர நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.நூல்: வயித்தியாநுகூலஜீவரட்சணி முதற்பாகம்
ஆசிரியர்:  அங்கமுத்து முதலியார் (நேட்டிவ் டாக்டர்)
பதிப்பு: இராமசாமி நாயுடு - ஸ்ரீலட்சுமி நாராயன விலாச அச்சியந்திரசாலை

ஆண்டு: 1896


நூல் குறிப்பு: 
பல்வேறு நோய்களுக்கான வைத்திய முறைகள் செய்யுள் நடையில் வழங்கப்பட்டுள்ளன.


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 438

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: அன்றில் கரிகாலன்
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​


THF Announcement: E-books update:20/09/2015 *ஒரு பைசாத்தமிழன்* - பாகம் 2

0 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று நூறாண்டுகளுக்கு முந்தையதான ஒரு வார இதழின் மூன்றாண்டு தொகுப்பு மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்: ஒரு பைசாத்தமிழன் - பாகம் 2

வார இதழின் ஆசிரியர்: அயோத்திதாசப் பண்டிதர்நூல் குறிப்பு: 

10ம் திகதி மார்ச் மாதம் 1909 முதல்  9ம் திகதி ஆகஸ்ட் 1911 வரை வாராவாரம் புதன்கிழமைகளில் வெளிவந்த ஒரு பைசாத்தமிழன் வார இதழின் மின்னாக்கப் பதிவின் இரண்டாம் பகுதி இது. இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னதான தமிழக செய்திகளை இதில் காணமுடிகின்றது என்பதோடு பர்மா, மலேசிய, இங்கிலாந்து தொடர்பான செய்திகளையும் இந்த வார இதழில் காணமுடிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

அன்றைய செய்திகள் இன்றைய வரலாற்றுச் செய்திகள் என்பதை வலியுறுத்தும் வகையில் நமது சேகரத்தில் இணையும் ஒரு பெருமை மிகு மின்னாக்கமாகவே இதனைக் கருதுகின்றேன். இந்த நூலை வாசித்து ஆய்வு செய்வது இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முந்தைய தகவல்களை சரியாக அறிந்து கொள்ள மிக நன்கு உதவும் என்பதில் அய்யமில்லை. ஏறக்குறைய 480 பக்கங்கள் கொண்ட ஒரு வார இதழ் தொகுப்பு  இது.


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 438

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: பாரி செழியன்
மின்னாக்கம், மின்னூலாக்கம்:  பாரி செழியன், அயோத்தி தாசர் ஆய்வு நடுவம், மதுரை

மதுரை அயோத்தி தாசர் ஆய்வு நடுவகத்திற்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி!


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​
 


மண்ணின் குரல்: செப்ட் 2015: திருமலை குந்தவை ஜினாலய பாறை சிற்பங்களும் ஓவியங்களும்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

குந்தவை ஜினாலயம் என்பது இராஜராஜ சோழனின் சகோதரியான குந்தவை நாச்சியார் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்திற்குப் பின்னர் கட்டியதாக அறிகின்றோம். இது கி.பி.11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ​கருவறைக்கு அடுத்தார் போலக் காணும் தூண்கள் மட்டுமே சோழர்காலத் தூண்கள். ஏனைய தூண்கள் ஏனைய கட்டுமானப் பணிகளின் போது புணரமைக்கப்பட்டன. இக்கோயிலில் குன்றினில் அமர்ந்த குருவாய் இருப்பவர் நேமிநாதர். கருவறைக்கு வெளியே வந்தால் அங்கும் ஒரு மூலவர் சிலை இருப்பதைக் காணலாம். இதுவே இவ்வாலயத்தைக் குந்தவை கட்டியபோது  வைக்கப்பட்டிருந்த நேமிநாதர் சிற்பமாகும். இதன் வேலைப்பாடு கி.பி.11ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வேறு எங்கும் காணாத வகையில் இச்சிலையில் மூங்கிற் கீற்றுகள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.  இதே கோவிலில் பிரம்மதேவருக்கும் ஜ்வாலாமாலினிக்கும் கற்சிலைகள் உள்ளன.கோயிலுக்கு வடக்கில் பாறையில் கலைச்செழுமை வாய்க்கப்பெற்ற ஒரு பகுதி உள்ளது. புதையல் போன்று காட்சியளிக்கும் இப்பகுதி பொக்கிஷம் போல பாதுகாக்கப்பட வேண்டியது என்பதில் அய்யமில்லை. குறுகலான படிகளில் ஏறிச்சென்றால் உள்ளே குகைக்குள்  தருமதேவி, நேமிநாதர், பாகுபலி ஆகியோரது சிற்பங்கள் இருப்பதைக் காண முடியும்.

தருமதேவியின் சிற்பம் நான்கரை அடி உயரம் கொண்டது. தனது இடது காலை சிம்மத்தின் மீது  வைத்த வண்ணம் காட்சி தருகின்றார். 
பாகுபலியின் சிற்பத்தின் அருகில் இருக்கும் காட்சி அற்புதமானது. அவரது உடலை மாதவிக் கொடிகள் (காட்டு மல்லிக)  படர்ந்திருப்பதையும் அதனை அவரது ஒரு சகோதரிகள் தூய்மை செய்வதையும் காட்டும் வகையில் இச்சிற்பத்தைத் செதுக்கி உள்ளனர்.
இதனை அடுத்து வெளியேறி மறு பக்கத்துக் குகைக்குச் சென்றால் அங்கே பல அறைகள் கொண்ட குகைப்பள்ளி இருப்பதைக் காணலாம். காண்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் மிக விரிவாக  கல்லினால் செய்யப்பட்ட அறைகள் பாறைக்குள் குடைந்து செதுக்கப்பட்டிருப்பது விந்தையிலும் விந்தை.இந்த குகைப்பள்ளிக்குள் சுவர்களில் ஆங்காங்கே சமனச் சின்னங்கள் சித்திரங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இவற்றில் பல சிதிலமடைந்து போயுள்ளன. இவை மிக விரைவாகப் பாதுகாக்கப்பட வேண்டியது மிக அவசியம். 

இங்குள்ள ஓவியங்களில் குறிப்பிடத்தக்கனவாக இருப்பவை:
  • ஜ்வாலாமாலினி வடிவம்
  • சமவசரண வட்டம்
  • லோக ஸ்வரூபம்
  • ஜம்புத் தீவு ஓவியம்
  • படை பட்டையான சிவப்பு மேற்கூரை ஓவியங்கள்.

சிவப்பு நிறத்தினால் கீறப்பட்ட  அனைத்து ஓவியங்களும் சோழர் காலத்தவையே.இந்த குகைப்பள்ளிக்கு வெளியே சில கல்வெட்டுக்களும் இங்குள்ளன.

குறிப்பு - முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு என்னும் நூலை வாசிக்கவும்.


10 நிமிடப் நேரப் பதிவு இது.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2015/09/blog-post_19.html
யூடியூபில் காண:  https://www.youtube.com/watch?v=V5VbqJGmyLs&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​


THF Announcement: E-books update:13/09/2015 *ஒரு பைசாத்தமிழன்*

3 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று நூறாண்டுகளுக்கு முந்தையதான ஒரு வார இதழின் மூன்றாண்டு தொகுப்பு மின்னூல் வடிவில் இணைகின்றது.நூல்: ஒரு பைசாத்தமிழன்
வார இதழின் ஆசிரியர்: அயோத்திதாசப் பண்டிதர்

நூல் குறிப்பு: 
19ம் திகதி ஜூன் மாதம் 1907 முதல்  3ம் திகதி மார்ச் 1909 வரை வாராவாரம் புதன்கிழமைகளில் வெளிவந்த ஒரு பைசாத்தமிழன் வார இதழின் மின்னாக்கப் பதிவின் முதல் பகுதி இது. இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னதான தமிழக செய்திகளை இதில் காணமுடிகின்றது என்பதோடு பர்மா, மலேசிய, இங்கிலாந்து தொடர்பான செய்திகளையும் இந்த வார இதழில் காணமுடிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

அன்றைய செய்திகள் இன்றைய வரலாற்றுச் செய்திகள் என்பதை வலியுறுத்தும் வகையில் நமது சேகரத்தில் இணையும் ஒரு பெருமை மிகு மின்னாக்கமாகவே இதனைக் கருதுகின்றேன். இந்த நூலை வாசித்து ஆய்வு செய்வது இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முந்தைய தகவல்களை சரியாக அறிந்து கொள்ள மிக நன்கு உதவும் என்பதில் அய்யமில்லை. ஏறக்குறைய 480 பக்கங்கள் கொண்ட ஒரு வார இதழ் தொகுப்பு  இது.


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 437

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: பாரி செழியன்
மின்னாக்கம், மின்னூலாக்கம்:  பாரி செழியன், அயோத்தி தாசர் ஆய்வு நடுவம், மதுரை

மதுரை அயோத்தி தாசர் ஆய்வு நடுவகத்திற்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி!


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​


THF Announcement: E-books update:7/09/2015 *திருவிடைமருதூர்க் காருணியாமிருத தீர்த்த மகிமை*

1 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ்   தலபுராண நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:திருவிடைமருதூர்க் காருணியாமிருத தீர்த்த  மகிமை
நூல் ஆசிரியர்: ஸ்ரீலஸ்ரீ  அம்பலவாண    தேசிக சுவாமிகள்

நூல் குறிப்பு: 
திருவிடைமருதூர்  ஆலயத்தின் சிறப்பை விவரிக்கும் சிறு நூல் இது.


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 436

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.
மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்

இவர்கள் அனைவருக்கும் நன் நன்றி!


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES