வணக்கம்.
மின்தமிழ் உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
கடந்த ஆண்டு பொங்கலன்று இதே நாளில் தமிழகத்தில் இருந்த நினைவுகள் மனதில் நீங்காமல் உள்ளன. 2012ம் ஆண்டும் முடிந்து 2013ம் ஆண்டில் காலடி எடுத்தும் வைத்து விட்டோம்.
இந்த இனிய நன்னாளில் தமிழ் மரபு அறக்கட்டளையின் கடந்த ஆண்டு பணிகளைப் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்து கொள்வதும் பயனாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சில விஷயங்களைக் குறிப்பாக பட்டியலிடுகின்றேன்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் நிர்வாக குழுவில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. செயற்குழு பட்டியலையும் விபரங்களையும் இங்கே காணலாம்.
களப்பணி மேற்கொண்டு கடந்த ஆண்டில் நாம் மேற்கொண்ட பயணங்களில் கிருஷ்ணகிரி, ஈரோடு, காரைக்குடி பகுதிகளில் தமிழக வரலாற்று தடயங்களை மின்பதிப்பாக்கம் செய்யும் முயற்சியை மேற்கொண்டோம். அந்த வகையில்,
கிருஷ்ணகிரியில்
- பெண்ணேஸ்வர மடத்து நடுகல்கள்
- பெண்ணேஸ்வரர் திருக்கோயில்
- பெண்ணையாற்றங்கரை நடுகல்
- ஐகொந்தம் பாறை ஓவியங்கள்
- புலியட்டைகுட்டை பெருங்கற்கால பாறை ஓவியங்கள்
- மல்லச்சத்திர பெருங்கற்கால ஈமக்கிரியைகள்
ஆகிய பதிவுகள் தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரதான வலைப்பக்கத்திலும், மண்ணின் குரலிலும், விழியப் பதிவு வலைப்பூவிலும் இணைக்கப்பட்டன.
இந்தப் பயண ஏற்பாட்டில் பெரிதும் உதவிய திரு.செல்வமுரளி, திரு.சுகவனம் முருகன் ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
ஈரோடு பதிவுகளாக
- திருச்செங்கோடு ஆலயம் பற்றிய தகவல்கள்
- கொடுமுடி ஆலயம் பற்றிய தகவல்கள்
- பவானி சஙகமேசுவரர் ஆலயம் - திருநணா ஆலயத் தகவல்
- கொங்கு நாட்டில் ஜைனம்
ஆகிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு அப்பதிவுகள் தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரதான வலைப்பக்கத்திலும், மண்ணின் குரலிலும், விழியப் பதிவு வலைப்பூவிலும் இணைக்கப்பட்டன.
இந்தப் பயண ஏற்பாட்டில் பெரிதும் உதவிய திருமதி பவளசங்கரி, திரு.திருநாவுக்கரசு, திரு.ஆரூரன், முனைவர்.புலவர்.இராசு ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
காரைக்குடி பதிவுகளாக
- குன்றக்குடி ஆதீனம் வரலாறு
- செட்டி நாடு - பொது தகவல்கள்
- பிள்ளையார்பட்டி விடுதி
- நகரத்தாரின் கடல் கடந்த பயணங்கள்
- குன்றக்குடி குடவரைக் கோயில்
- குன்றக்குடி ஞானியார் மலை சமணப்படுகை
- தேவகோட்டை ஜமீன்
- திருமலை பாறை ஓவியங்கள்
- திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலய குடைவரைக் கோயில்
ஆகிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு அப்பதிவுகள் தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரதான வலைப்பக்கத்திலும், மண்ணின் குரலிலும், விழியப் பதிவு வலைப்பூவிலும் இணைக்கப்பட்டன.
இந்தப் பயண ஏற்பாட்டில் பெரிதும் உதவிய முனைவர்.காளைராசன், முனைவர்.வள்ளி மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
கடந்த ஆண்டில் கீழ்க்காணும் 15 நூல்கள் மின்னாக்கம் செய்யப்பட்டன.
- கௌசிகசிந்தாமணி
- சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்
- The Fox with the Golden Tail(1914)
- கவிஞர் கண்ணதாசன் உரையுடன் கூளப்ப நாயக்கன் காதல்
- கல்கி புராணம் (Kalki PuraaNam)
- ஸ்த்ரீ பால சிகிச்சை (Stri Bala Sikitchai)
- பெரிய ஜோதிட சில்லரைக் கோவை (Periya Jothida Chillaraik kovai)
- யாழ்ப்பாணம் தந்த சிவஞான தீபம் - ஸ்ரீலஸ்ரீ. நா.கதிரைவேற்பிள்ளை
- சங்கர நயினார் கோயில்
- ஸ்ரீ ஸத்ஸம்பாஷிணி
- ஸஸாம வேத க்ருஹ்ய சூத்ரம்
- ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பாகம் 1
- சூடாமணி நிகண்டு
- கிரேக்க நாடகத்தில் தமிழ் உரையாடல்
- ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பாகம் 2
இன்னூல்கள் மின்னாக்கம் பெற உதவிய டாக்டர்.திருமூர்த்தி வாசுதேவன், திரு.திருஞானசம்பந்தன், திரு.சேசாத்ரி ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
இவர்களோடு கடந்த ஆண்டுகளில் மின்னூலாக்கத்தில் உதவிய திரு.வடிவேலு கன்னியப்பன், திரு.இன்னம்பூரான், தமிழ்த்தேனி, திரு.சந்திரசேகரன், திருமதி.கமலம், திருமதி.காளியம்மா பொன்னன், டாக்டர்.கி.லோகநாதன், திரு.ரகுவீரதயாள், திரு.நூ த லோகசுந்தரம், திருமதி.மவளசங்கரி, திரு.மாலன், திரு.ஆண்டோ பீட்டர், டாக்டர்.ந.கணேசன், டாக்டர்.திருவேங்கடமணி, வினோத் ராஜன் ஆகியோருக்கும் எமது நன்றி.
தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு பகுதியாக விளங்கும் மரபு விக்கியில் கடந்த ஆண்டும் பல கட்டுரைகள் இணைக்கப்பட்டன. மரபுவிக்கிக்காக கட்டுரைகள் வழங்கிய டாக்டர்.கி.லோகநாதன், திரு.வெங்கட் சாமிநாதன், திருமதி.பவளசங்கரி, டாக்டர்.ராஜம், திருமதி கீதா, திரு.திவாகர், முனைவர்.காளைராசன், திரு.செல்வன் ஆகியோருக்கும் கட்டுரைகளை மரபு விக்கியில் இணைக்க உதவிய திருமதி.கீதா, திருமதி.பவளசங் கரி, திரு.செல்வன் ஆகியோருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
மேற்குறிப்பிட்ட பதிவுகளோடு தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திப் பகிர்வு அரங்கமாகத் திகழும் மின்தமிழில் பற்பல சிறந்த சிந்தனைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. சமூகம், சமையம், தமிழ், வாழ்வியல், பெண்கள் நலன், கல்வி, வரலாறு, ஆலயம், புவியியல் என பல்வேறு தலைப்புக்களில் மின்தமிழ் உறுப்பினர்களான உங்களில் பலர் சிந்தனைக்கு விருந்தளிக்கும் தகவல் பதிவுகளை இணைத்திருந்தீர்கள். குறிப்பாக திருமதி.சீதாலட்சுமி (சீத்தாம்மா), டாக்டர்.ராஜம், ஷைலஜா, கீதா, பவளா, தேமொழி, கமலம், ஸ்வர்ணா, திரு.மோகனரங்கன், திரு.தேவ், திரு.நரசய்யா, திரு.இன்னம்பூரான், திரு.ந.உ.துரை, டாக்டர்.திருவேங்கடமணி, திரு.பாலசுப்ரமணியம், முனைவர்.காளைராசன், திரு.திவாகர், திரு.ஹரிகிருஷ்ணன், முனைவர்.பாண்டியராஜா, திரு.பானுகுமார், திரு.சேசாத்ரி, டாக்டர்.கணேசன், திரு.ராஜூ ராஜேந்திரன், திரு .சுவாமிநாதன் (எல்.ஏ), திரு.வெ.சா, பழமைபேசி, திரு.செல்வன், திரு.தமிழ்த்தேனி, திரு.ரிஷான், திரு.வித்யாசாகர், பேராசிரியர்.டாக்டர்.நாகராசன், உதயன், திரு.சொ.வினைதீர்த்தான், எல்.கே, கதிர், ழான், கல்யாண குருக்கள், திரு.சந்தானம் சுவாமிநாதன், திரு.ப்ரகாஷ், திரு.கவி.செங்குட்டுவன், சா.கி.நடராசன், திரு.ஸன்தானம் போன்றோரின் பகிர்வுகள் அமைந்திருந்தன.
நமது பதிவுகளையெல்லாம் வலையேற்றம் செய்வது ஒரு பணி என்றாலும் அதற்கான அடிப்படை செர்வர், அதன் பாதுகாப்பு, கவனிப்பு, மேற்பார்வை ஆகியன. அந்த ரீதியில் என்னுடன் துணை நின்று தமிழ் மரபு அறக்கட்டளை சர்வர்களைப் பாதுகாக்கும் திரு.செல்வமுரளிக்கு எனது பிரத்தியேக நன்றி.
தமிழ் மரபு அறக்கட்டளை 2 வலைப்பகங்களைக் கொண்டுள்ளது.
ஆகிய இரண்டு வலைப்பக்கங்களோடு 7 வலைப்பூக்களைக் கொண்டுள்ளது.அவை
- மண்ணின் குரல்
- மரபுப் படங்கள்
- வீடியோ வலைப்பூ
- மரபுச் செய்திகள்
- விசுவல் குரல்
- கணையாழி
- சிட்டி
பொங்கல் திருநாளில் நமது பதிவுகளைப் பற்றிய இந்தத் தகவல்களோடு மின் தமிழின் 1509 அங்கத்தினர்களில், கருத்துப் பகிர்ந்து கொண்டும், ஏதும் கருத்துக்கள் சொல்லாவிடினும் அமைதியாக வாசித்தும் வருகின்ற எல்லா உறுப்பினர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களும்.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
நா.கண்ணன்
[ஸ்தாபகர்கள்: தமிழ் மரபு அறக்கட்டளை, மின்தமிழ்]