வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் அரசியல் வரலாற்று நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்: சுதந்திரத்தின் தேவைகள் யாவை?
ஆசிரியர்: வெ.சாமிநாத சர்மா
நூல் குறிப்பு:
212 பக்கங்கள் கொண்ட இந்த நூல் மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது.
முதல் பகுதியில் தேசிய தத்துவமும், 2ம் பகுதியில் ஜனநாயக தத்துவமும், 3ம் பகுதியில் வாழ்க்கைத்தத்துவமும் அலசப்படுகின்றன.
சீன சிந்தனையாளர் சன் யாட் சென்னின் சொற்பொழிவுகளை முதன் மொழியில் இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து கொணர்ந்த பெருமை தமிழ் மொழிக்கே உண்டு. இதனைச் செய்தவர் வெ.சாமிநாத சர்மா அவர்கள்.
ஒரு ஏழை விவசாயி குடும்பத்து மகனான சன் யாட் சென், சீன மக்களுக்கு நல்வாழ்வு வரவேண்டி மஞ்சூ ஆதிக்கத்தை எதிர்த்து 18 ஆண்டுகள் போராடியவர். இறுதியில் போராட்டத்தில் வெற்றி கண்டார். 1912ம் ஆண்டு சீன குடியரசு அமைந்தது. அதன் முதல் பிரசிடெண்ட் ஆனார். பல முன்னேற்ற நடவடிக்கைகளை சீனாவில் ஏற்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. இந்த நூலில் உள்ளவை சன் யாட் சென்னின் சொற்பொழிவுகளின் தமிழாக்கமே.
அரசியல் சித்தாந்ததை விரும்பும் வாச்கர்கள் வாசிக்க வேண்டிய நூல்களில் ஒன்று.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 443
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு,ஜெயராமன்
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு,ஜெயராமன்
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]