வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஏறக்குறைய 300 ஆண்டுகள் பழமையான செப்பேடு ஒன்றின் செய்திகள் முழுமையாக மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்: இடையன்வயல் கோபாலமடத்துச் செப்பேடு
வாசித்து அளித்தவர்: முனைவர் வள்ளி சொக்கலிங்கம், காரைக்குடி
நூலைப் பற்றி
இராமநாதபுரம் அருகே செயினர்பள்ளி எனக் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் இருப்பது இடையன்வயல் கோபாலமடம் ஆகும். இராமேச்சுரம் செல்லும் பாதயாத்திரிகர் இங்கே தங்கிச் செல்வதற்காகவும், யாத்திரிகர்களுக்கு நீர்மோர் வழங்குவதற்கும் இந்த மடத்தை இராமநாதபுரம் மன்னர் கிழவன் ரெகுநாத சேதுபதி அவர்கள் இடையன்வயல் அம்பலம் அவர்களுக்குத் தானமாக வழங்கியுள்ளார். இதற்கானச் செப்புப் பட்டயம் ஒன்று உள்ளது. இதனை வாசித்து அதில் உள்ள தகவல்களைப் பதிவாக வழங்கியிருக்கின்றார் இராமசாமி தமிழ்க்கல்லூரியின் முன்னாள் முதல்வர் காரைக்குடி முனைவர் வள்ளி சொக்கலிங்கம் அவர்கள். இந்த நூலை நமக்காக தட்டச்சு செய்து வழங்கியவர் முனைவர்.காளைராசன். இவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 465
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]