திருப்பாவை - 15

0 மறுமொழிகள்

திருப்பாவை - 15

எழுந்திராமல் வாயாடுவதை விட்டு எங்களுடன் சேர்ந்து மாயனைப்பாட எழுந்துவா!
பேகடா ராகம், மிச்ரசாபு தாளம்

எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;
'வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!'
'வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!'
'ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?'
'எல்லோரும் போந்தாரோ?' 'போந்தார், போந்து எண்ணிக்கொள்'
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.



குறிப்பு: சென்ற பாடல் வரை ஆண்டாள் கோபியரை எழுப்பிக்கொண்டிருந்தாள். முதல் முறையாக இப்பாடலில் துயிலில் இருந்து விழித்துக்கொண்ட கோபியருடன் ஆண்டாள் உரையாடுவதைக் காணலாம்.

[எழுப்புபவர்] இளங்கிளி போன்றவளே என்னே இன்னமா தூங்குகிறாய் ?
[எழுந்திருப்பவர்] பெண்களே ! இதோ வருகிறேன் ! 'சில்' என்று கூச்சலிட்டு எழுப்பாதீர்கள் !
[எழுப்புபவர்] நீ வாயாடி. நீ சொல்லும் கட்டுக்கதைகள் முன்னமே நாங்கள் அறிவோமே !
[எழுந்திருப்பவர்] நீங்கள்தான் வாயாடிகள்;பரவாயில்லை; நானே தான் வாயாடியாக இருத்துவிட்டு போகிறேன்
[எழுப்புபவர்] நீ உடனே புறப்பட்டு வா வேறு என்ன வேலை இருக்கிறது ?
[எழுந்திருப்பவர்] எல்லாப் பெண்களும் வந்துவிட்டார்களா ?
[எழுப்புபவர்] எல்லோரும் வந்து விட்டார்கள். நீயே வந்து எண்ணிப்பார்.
குவலயாபீட யாணையையும் கம்சன் முதலிய பகைவர்களையும்
அழித்த கண்ணன் புகழ் பாட எழுந்துவா

Thiruppavai - 15
Raga : Begada, Misra Chapu

Note: This verse is in the form of a conversation/argument between the maidens at the threshold of a house the maiden within the house
"What is this, Pretty-like damsel! Are you still sleeping ?"
"Do not use harsh words!, I am coming
"You can talk well; we know it already"
" As it is, you are all strong; doesn't matter, let me be the one(harsh in speech)"
"Come quickly and join us"
"Has everyone come?"
"Yes, everyone has come, count for yourself"
"Let us all sing in praise of the Krishna who killed the elephant (Kuvalayapida) and Kamsa.

[ Picture shows Andal in an argument between the girl in bed and the others who have come to wake her]



நன்றி : தேசிகன் வீடு

திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி அவர்களின் உரையை குமுதம்.காம் வழங்கவில்லை.

மறுமொழிகள்

0 comments to "திருப்பாவை - 15"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES