திருப்பாவை - 18

0 மறுமொழிகள்

திருப்பாவை - 18

நந்த கோபரின் மருமகளான நப்பின்னை பிராட்டியை எழுப்புதல்
ஸாவேரி ராகம், ஆதி தாளம்உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்;
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

மத யானையை மோதி தள்ளுகின்ற வலிமையும், போரில் பின் வாங்காத
தோள்ளை படைத்தவனுமான நந்தகோபாலன் மருமகளே ! நப்பின்னையே!
மணம் வீசும் கூந்தலை உடையவளே கதவைத்திற!
கோழிகள் சுற்றிலும் வந்து கூவுவதைக்கேள்!
குருக்கத்தி(மல்லிகைப்பூ) கொடிப் பந்தலில் குயில்கள் பலமுறை கூவி விட்டன
பந்தைத் தாங்கிய விரல்களையுடையவளே ! உன் கணவன் பேர் பாட வந்துள்ளோம்.
உன் தாமரைக் கையால் வளையல்கள் ஒலிக்க
மகிழ்ச்சியுடன் வந்து கதைவை திறக்கவேணும்.

ராமானுஜருக்கு பிடித்த திருப்பாவை ராமானுஜருக்கு திருப்பாவையில் ஈடுபாடு மிக அதிகம். அதனால் அவர் திருப்பாவை ஜீயர் என்ற பெயர் பெற்றார். இந்த பெயரையே அவர் விரும்பினார். "உந்துமத களிற்றன்" என்ற திருப்பாவை பாடிக்கொண்டு பிக்ஷைக்கு ஒரு நாள் பெரிய நம்பி திருமாளிகைக்கு (வீட்டிற்கு) சென்ற போது "செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்துதிறவாய்" என்று பாடி முடிக்க, நம்பியின் மகள் அத்துழாய் கைவளை குலுங்கக் கதவை திறப்பதும் ஒரோ சமயம் நிகழ, ராமானுஜர் அவளை நப்பின்னை என்று நினைத்து ஸாஷ்டாங்கமாக விழுந்து தண்டம் சமர்ப்பித்தார் (சேவித்தார்) என்று கூறுவர். இதனால் இந்த பாட்டை கோயில்களில் இன்றும் இரண்டு முறை பாடுவது வழக்கம்.

Thiruppavai - 18
Raga: Saveri, Adi

Open the door, Nappinnai Daughter-in-law of Nandagopala
who has broad shoulders and invincible strength like that of a valiant tusker
Look the cocks crows everywhere;
cuckoos atop the bower of Kurukkatti(jasmine) have cooed
O lady with ball-clasping slender fingers
as we wish to sing your husband's praise
May you come happily to open the door with your lotus-like hand
making the bangles jingling softly
Most favourite Hymn of Sri Ramanujar This was the most favourite hymn of Sri Ramanujar. Ramanujar himself preferred the name "Thiruppavai Jeer" to all other names. This hymn is sung twice in sequence when Thiruppavai is recited in the temples, even today to honor Sri Ramanujar. As legend has it, Ramanuja one day, on his usual alms collection round, was singing the 18th song "Unthu Matha Kalitran". When he approached the house of his preceptor - Guru Perianambi, he finished singing the hymn with the last line - "Come along! throw Open delighted to clang the bangle bright, In lotus hand a sight". It so happened, the door opened and there came unlocking the latches of the door, Athulai, Perianambi's daughter, to give alms. Ramanujar went into ecstasy and postrated before her, talking her for Nappinnai herself come alive.

[ Picture shows Nappinnai reclining with coiffured hair and jewelled bangles. The cock crows, the birds on the matavi bower twitter, the girls are knocking at the door]


திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
திருப்பாவை உபன்யாசம்
நாள்: 16.12.2008 முதல் 14.01.2009 வரை
நேரம்: காலை 7.00 மணியளவில்
இடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033

இன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்
நன்றி :
தேசிகன் வீடு
குமுதம் வெப் டிவி

மறுமொழிகள்

0 comments to "திருப்பாவை - 18"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES