திருப்பாவை - 22
கண்ணை விழித்து, செந்தாமலர்க் கண்ணினால் எங்களை நோக்குவாயோ?
யமுனா கல்யாணி ராகம், மிச்ரசாபு தாளம்
அங்கண் மாஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்;
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே,
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்,
அங்கணி ரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.
அழகிய அகன்ற உலகத்து அரசர்கள் அகங்காரம் குலைந்து
உன்னுடைய அரியணையின் கீழே கூடியிருப்பது போல
நாங்களும் நெருங்கி வந்துள்ளோம்.
சலங்கையின் மணியைப் போல, பாதி திறந்த தாமரைப்பூ என்னும்படி
உன் கண்கள் சிறுது சிறுதாக எங்கள் மேல் விழிக்கலாகாதோ ?
சந்திரனும் சூரியனும் உதித்தாற் போல
அழகிய இருகண்களாலும் எங்களைப் பார்த்தால்
எங்கள் பாவங்கள் தொலைந்து விடும்.
Thiruppavai - 22
Raga Yamaunakalyani, Misra Chapu
Like the great kings of the wide world,
who came in hordes and stood humbly at your bedstead
we have come to you.
O lord will you not look at us, with your exquisite eyes
resembling the half-blown lotus similar to dancers ankel bells.
May the gaze of your two eyes fall upon us
like the sun and the moon risen together.
May the curse of sins on us be lifted.
[ Picture shows - During the great Bharata war, the Kaurava king Duryodhana and the Pandava, Arjuna both went to Krishna for help. They found Kirshna sleeping. The haughty Duryodhana sat down by the bedstead, while Arjuna quietly sat by Krishna's feet. When Krishna woke up his gaze instantly fell on Arjuna. To Duryodhana he gave all his army, to Arjuna he gave himself. The girls are arrayed at Krishna's feet like Arjuna, seeking him, not his wealth]
திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
திருப்பாவை உபன்யாசம்
நாள்: 16.12.2008 முதல் 14.01.2009 வரை
இடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033
இன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்
நன்றி :
தேசிகன் வீடு
குமுதம் வெப் டிவி
திருவள்ளுவர் யார் - நூல் திறனாய்வு நிகழ்ச்சி
4 years ago
மறுமொழிகள்
0 comments to "திருப்பாவை - 22"
Post a Comment