இதயத்துள் தீபம்

0 மறுமொழிகள்

ஓம்.அன்பர்க்கு வணக்கம். திருக் கார்த்திகை தீபம்.=======================
 கார்திகை மாத பெªர்ணமி தினத்தன்று இப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது.ஆதிகாலம் தொட்டே மக்கள் அக்கினியைத் தெய்வமாகக் கொண்டாடி வந்தனர். அந்த அடிப்படைக் காரணம் தான் பெரும்பாலும் நம் பண்டிகைகளில் தீபங்களை ஏற்றிவைத்துக் கொண்டாடுகின்றோம். பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்கினியைத்திருப்தி செய்வதுதான் இப்ப்ண்டிகையின் நோக்கமாகும் .அருட் பெருஞ்ஜோதியாம் ஆண்டவன் அருவமாகவும், உருவமாகவும் விளங்குவது போன்று அக்கினியும் பிரகாசிக்கின்றது. அக்கினியிலே பல விதமான தீபங்கள் தோன்றுவது போல் 'சிவம்' என்ற நாமம் ஒன்றே பல தத்துவங்களைக் கடந்து பற்பல ஜோதி சொரூபமாகக் காட்சி தருகிறது. அக்கினியின் சக்தியால் அழுக்கு களையப்படுகிறது. அக்கினிப் பிரவேசம் சீதா பிராட்டியை புனிதவதிஎனக் காட்டியதாக இராமயணம் உலக்குக்கு உணர்த்தியது. ஹோமத்தில் எழுகின்ற அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கின்றோம். கார்த்திகை மாதம் முதல் தேதி தொட்டு கடைசி நாள் வரை தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வைத்துக் கொண்டாடுவர். தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பெªர்ணமி ஆகிய மூன்று தினங்களிலாவது தவறாது எண்ணெய் விளக்கேற்ற வேண்டும். கார்த்திகைமாதம் 1, 28 ஆகிய இரு தேதிகளில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின் 28-ம் தேதி வரும் நட்சத்திரத்தில்தான் திருக்கார்த்திகைப் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும். திருவண்ணாமலையில் குன்றின் சிகரத்தில் கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் ஜோதியானது, உலகம் முழுதும் உள்ள அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞான ஒளியைப் பரப்பும் சிவஞான ஜோதியாகப் பிரகாசிக்கும் என்பது ஐதீகம். "உடம்பெனு மனையகத்து உள்ளமே தகழியாக மடம்படும் உணர்நெய்யட்டி உயிரெனும் திரிமயக்கி இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கிற் கடம்பமர் காளைத்தாதை கழலடி காணலாமே." "ஆடிப்பாடி அண்னாமலை தொழ ஓடிப்போம் நமதுள்ளவினைகளே" என்கின்றனர் அப்பர் சுவாமிகள். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுவதற்கான புராண வரலாறு மிகவும் பிர்சித்தமானது. அடி முடி காண முடியாத அனற் பிழம்பாகத் திருவண்ணாமலையில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள தத்துவத்தை உலகிர்க்கு உணர்த்தவே திருமாலும் நான் முகனும் எம் பெருமானின் அடிமுடி தேடினர் என்று சொல்லப்படுகிறது. அனற்பிழம்பாக ஓங்கி உயர்ந்து நின்றார் எம் பெருமான். அன்னப்பறவை வடிவங் கொண்டு சதுரமுகப் பிரம்மன் அம்பலவாணரைத் தேடி விண்ணுலகம் சுற்றினார். திருமால், வராஹ் அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அடிமலரடியைத் தேடினார். அடிமுடி காணமுடியாத பரம்பொருளாக விளங்கினார் எம்பெருமான். ஓவ்வொரு சிவன் கோவிலின் பின்புற பிரகாரத்திலும் இந்த தத்துவத்தை விளக்கும் சிவனின் தோற்றத்தை சித்திர வடிவத்தில் காணலாம். ஜோதிலிங்கமாக காட்சி தரும் திருவாண்ணாமலை ஓர் அக்கினித் தரமாக விளங்குகிறது. சிவபேருமான் கோயில் கொண்டுள்ள ஆயிரத்தெட்டு முக்கிய ஸ்தலங்களில் காசி, சிதம்பரம், திருவாருர், திருவண்ணாமலை, காளஹஸ்தி ஆகிய ஐந்து க்ஷேத்திரங்களும் பஞ்சமூர்த்தி ஸ்தலங்களாகக் கொண்டாடப்படுகின்றன. பிருத்வி, அப்பு, தேயு, வாயு,ஆகாசம் ஆகியவை பிருத்வி பஞ்சமூர்த்தி ஸ்தலங்களாகும். காந்த மலையிலே கலியுக தெய்வம் அருள்மிகு ஐயப்பனின் மகர ஜோதி! திருவண்ணாமலையிலே அவர்தம் ஐயனின் அண்ணாமலை ஜோத்ி! மலை மீது காணப்படும் பெரும் செப்புக் கொப்பரையில் இருபத்து நான்கு முழம் துணி திரியாகப் போடப்படும். ஒரு மணங்கு கற்பூரத்தூள்சேர்த்துத் திரி சுற்றப்பட்டிருக்கும். இருபது மணங்கு நெய் ஊற்றி தீபத்தை ஏற்றுவார்கள். அந்த ஜோதியைக் காண்பதற்கு பஞ்ச மூர்த்தியும் எழுந்தருளுவதாக ஐதீகம். அன்றைய தினம் பக்த கோடிகள் ஜோதியைக் கண்டு சேவிப்பதால் பஞ்ச மூர்த்திகளின் அருட்கடாட்சத்தால் பஞ்சேந்திரியங்களை அடக்கும் ஆற்றல் பெற்று, மெய்ஞான சிந்தையுடையவர்களாக விளங்குவர் என்பது உட்பொருள். இந்த ஜோதியின் காரணமாகத்தான் மற்ற இடங்களில் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கோவிலுக்கு முன்னால் பனை மரத்தைத் தரையில் ஊன்றி அதனுள் பனை ஓலையயும் வெடிகளையும், வண்ண மத்தாப்புக்களையும் கட்டி வைத்துக் கொளுத்துவர். சிவ பெருமானை ஜோதி வடிவாகக் காண்பது தான் சொக்கப்பனை கொளுத்துவதின் முக்கியமான ஐதீகம். இந்த கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள்.சிவபெருமானின் நெற்றிக்கண்ணினின்றும் தோன்றிய ஆறு அருட்சுடர் சரவணப் பொய்கையில் வந்து தங்கி ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலுட்டிச் சீராட்டித் தாலாட்டினர். சிவபெருமான் பிராட்டியாருடன் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளி உமாதேவியார்அக்குழந்தைகளை வாரி அணைக்க, ஆறு உருவங்களும் ஓருருவாய்-ஆறுமுகக்குழந்தையாய்- தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது. அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானைப் பணிந்து போற்றி நின்றனர். சிவபெருமான் அவர்களை அருள் நோக்கி" உங்களுக்கு மங்களம் உண்டாகுக! உங்களால் வளர்க்கபட்ட இப்பாலகனுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமத்தைச் சூட்டுகிறோம். உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளில் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டுவதாகுக!" என்று திருவாய் மலர்ந்தருளினார். இறைவனை விளக்கேற்றி வழிபடுவது தொன்றுதொட்டு வந்த பழக்கமாயினும், அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது. வைஷ்ணவ ஆலயங்களிலும் விளக்கொளிப் பெருமாள் என்று ஒரு பெருமானைக் கொண்டாடுகினனர். அகல், எண்ணெய், திரி, சுடரொளி ஆகிய நான்கும் அறம், பொருள். இன்பம், வீடு என்ற தத்துவங்களை உணர்துவது போலாகும். பலிமகராஜன் தனது உடம்பிலே தோன்றிய வெப்பத்தைக் கார்த்திகை விரதமிருந்து தீர்த்துக்கொண்டார் என்று புராணம் கூறுகிறது.எம்பெருமான் தன்மீது திருவடி சாதித்து ஆட்கொண்ட போது தனதுமறைவு நாளை தீபங்களை ஏற்றி உலகோர் அனைவரும் கொண்டாடவேண்டும் என்று அனந்தனைப் பணிந்த் கேட்டான். திருஞானசம்பந்தர், மயிலையில் அங்கம் பூம்பாவைக்கு புத்துயிர் அளிப்பதற்காய்ப் பாடிய திருப்பதிகத்தில்,' கார்த்திகை விளக்கீடு காணாத போதியோ' என்று பாடியுள்ளார். ஒருமுறை அம்பிகை மகிஷாசுரனுடன் போர்புரியும் போது தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்துவிட்டார் என்றும் அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்திசெய்துகொள்வதற்குக் கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி விரதம் இருந்து பெருமானின் பேரருளால் தோஷ நிவர்த்தி கிடைத்ததாக தேவி புராணம் கூறுகிறது. இவ்வாறு பெருமையும் மேன்மையும் கொண்ட கார்த்திகைத் திருநாளை திருச்செங்கோடு, வேதாரண்யம் பழனி, திருச்செந்தூர் முதலிய கோயில்களில் திருவண்ணாமலைக் கோயிலைப்போன்றே கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். சில ஊர்களில் மந்தாரை இலையில்,தீபம் ஏற்றுகிறார்கள்.வடநாட்டில் தீபத்தை தீப ஓடங்களில் ஏற்றி நீரில் விடுவது உடன்பிறப்பிற்கு நன்மை பயக்கும் என்று கருதுகிறார்கள். கர்த்திகைத் தீபங்கள் ஏற்றும் போது கூறப்படும் ம்ந்திரம்: கீட :பதங்கா மதகாஸ்ச வ்ருதா ஜ்லே ஸ்தயே விசரந்தி ஜீவா த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜந்ம பாகிந: பவந்தி நித்யம் சவ பசா ஹி விப்ரா. இந்த மந்திரத்தைச் சொல்லி விளக்கேற்றி வழிபடுவதால் இம்மையில் அனைத்து சுபீட்சங்களுடன் வாழ்ந்து எம்பெருமானின் பேரருளால் பிறவாப் பெருவாழ்வு பெறலாம். தீபத்தின் ஒளி காணும் இடத்தில் ஸ்ரீதேவி மங்களம் பொங்க வாசம் புரிவாள். இக்கார்த்திகை தினத்தன்று நெற்பொரி வைத்து நிவேதனம் செய்வர். கார்த்திகை விரதத்தை பன்னீரண்டு ஆண்டுகள் கடைப்பிடித்து நாரத மகரிஷி சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடந்தார். திரிசங்கு மன்னன், பகீரதன் கிருத்திகை விரதத்தின் பயனால் பேரரசானார்கள். அனைவருக்கும் பேரருள் கிட்டுவதாகுக நன்றி: செய்தி மூலம் தம்பிராஸ்,அன்புடன் வெ.சுப்பிரமணியன், ஓம்.

2009/11/30 Natrajan Kalpattu Narasimhan <knn1929@gmail.com>
கவிதை வழியே மக்கள் மனத்துள் உள்ள இருட்டினை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டீர்கள்.  அவ்விருட்டினை அழிக்கும் வழியையும் சொல்லி விட்டீர்கள்.
 
ஏற்றுவோம் விளக்குகளை.
 
நடராஜன் கல்பட்டு

2009/11/29 jayashree shankar <jayashree43@gmail.com>

கார்த்திகை வரும் முன்னே உங்கள் கவிதையும் , படங்களும் வந்து பரவசப் படுத்தியது.
அகண்ட  தீபம் ஏற்றி வைத்து அவன் அருள் தேடுவோம்..
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.


2009/11/29 vishalam raman <rvishalam@gmail.com>

கார்த்திகைத்திருநாள்
சுடர் விடும் நன்னாள்,
எங்கும்   ஒளிசுடர் ,
அகல்விளக்கின் திவயச்சுடர்
வீட்டுமாடியில் அழகு வரிசை,
பிரகாரத்தில் மின்னும் வரிசை ,
கோலங்களில் சுடர் விடும் வரிசை ,
ஐயப்பன் படியிலும் ஒளிரும் வரிசை ,
இருளைப்போக்கும் ஒளி வரிசை
அண்ணாமலையில் மங்கள வரிசை.

நாமும் விளக்கு ஏற்றுவோம்
ஒழுக்கத்துடன் நம்மை மாற்றுவோம்

அன்பாய் பிறருடன் இதமாய் நடக்க,
குத்துவிளக்கை ஏற்றுவோம்

பண்பாய் நடந்து தன்முனை அகற்ற
அகல்விளக்கை எற்றுவோம் .

சிந்தைத்தெளிந்து சினத்தை அகற்ற
தூண்டாவிளக்கை ஏற்றுவோம் .

சாதி மத பேதம் ஒழிய
ஜோதி விளக்கை ஏற்றுவோம்

பணிவு அடக்கம் கொண்டு கர்வம் அகல
பாவை விளக்கை ஏற்றுவோம் .

ஏற்றத்தாழவு நீங்கப்பெற்று சமத்துவம் காண ,
தொங்கு விளக்கை ஏற்றுவோம் .

முதலும் முடிவுமில்லா சோதியைக்காண ,
இதயத்துள் அகண்ட விளக்கை ஏற்றுவோம்

--
You received this message because you are subscribed to the Google Groups "Palsuvai - a Potpourri" group.
To post to this group, send email to palsuvai@googlegroups.com
To unsubscribe from this group, send email to palsuvai-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/palsuvai?hl=en

Azhagi - She just rules - Should we say more? Visit us at http://azhagi.com.
If at all you can find a better Tamil Transliterator than Azhagi, please show it to us.

--
You received this message because you are subscribed to the Google Groups "Palsuvai - a Potpourri" group.
To post to this group, send email to palsuvai@googlegroups.com
To unsubscribe from this group, send email to palsuvai-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/palsuvai?hl=en
 
Azhagi - She just rules - Should we say more? Visit us at http://azhagi.com.
If at all you can find a better Tamil Transliterator than Azhagi, please show it to us.

--
You received this message because you are subscribed to the Google Groups "Palsuvai - a Potpourri" group.
To post to this group, send email to palsuvai@googlegroups.com
To unsubscribe from this group, send email to palsuvai-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/palsuvai?hl=en
 
Azhagi - She just rules - Should we say more? Visit us at http://azhagi.com.
If at all you can find a better Tamil Transliterator than Azhagi, please show it to us.

மறுமொழிகள்

0 comments to "இதயத்துள் தீபம்"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES