கிட்டூர் ராணி சென்னம்மா
****************************
கர்நாடக மாநிலம் கிட்டூர் சிற்றரசு என்பது பெங்களூர் பூனா இடையே அமைந்துள்ள பகுதியாகும். சுமார் நானூறு கிராமங்களைக் கொண்டதாக விளங்கியது கிட்டூர் சிற்ரரசு. கிட்டூரின் 12-வது அரசாகப் பதவியேற்றவர் மல்லசராஜா என்பவர்.
மல்லசராஜா சிறந்த நிர்வாகியும், மாபெரும் வீரராகவும் இருந்ததால் அருகில் உள்ள எந்த சிற்றரசும் இவரை எதிர்க்கத் துணியவில்லை. இவரைப் போலவே இவருடைய மனைவி ருத்திரம்மாவும் வீராங்கனையாகவே விளங்கினார்.
இந்தக் காலத்தில்தான் திப்பு சுல்த்தான் தன் ஆட்சி அதிகாரத்தைப் பலமாக்குவதற்காக மற்ற பல சிற்ற்ரசுகள் மீது போர் தொடுக்கத் திட்டமிட்டார். கிட்டூரின் வளத்தையும், அதன் வலிமை மிக்க கோட்டை களையும் கைப்பற்றிக் கொள்ள தன் படையொன்றை அனுப்பி வைத்தான்.
ஒரு சில நாட்களில் கிட்டூரை எளிதாகக் கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்தில் தாக்குதலைத் துவக்கிய திப்பு சுல்த்தான் படைவீரர்களுக்கு கிட்டூர் வீரர்களின் அதிரடியான ஆவேசத் தாக்குதல்களால் அதிர்ச்சியும் அச்சமும் ஏற்பட்டன.
ராணி ருத்திரம்மா தலைமியிலான கிட்டூர் படை திப்புசுல்த்தானின் படைகளைத் துவம்சம் செய்தது. நூறுக்கணக்கான திப்புவின் வீரர்கள் கொல்லப்பட்டனர். மீதமிருந்தவர் தப்பியோடினர்.
இந்துப் பெண் ஒருத்தி தன் படையைத் தோற்கடித்துவிட்ட அவமானத்தை திபு சுல்த்தானால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. சில மாதங்கள் காத்திருந்து பெரும் படையைத் திரட்டி மீண்டும் கிட்டூரைக் கைப்பற்ற படை அனுப்பினான் சுல்த்தான்.
இம்முறை மல்லசராஜாவே தாமே படைக்குத் தலைமை தாங்கிப் போரில் ஆவேசமாகப் போர்புரிந்தார். ஆனாலும் திப்பு சுல்த்தானின் பெரும்படைகளுக்கு முன் ஈடு கொடுக்க முடியவில்லை. இறுதியில் மன்னர் கைது செய்யப்பட்டு கபாலதுர்க்கா என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
கிட்டூரைத் திப்பு சுல்த்தான் கைப்பற்றியிருந்தாலும் தொடர்ந்து அந்தப் பகுதியை அவ்ர்களால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. சத்ரபதி சிவாஜிக்குபின்னர் வந்த பேஷ்வாக்கள் சில மாதங்களில் கிட்டூர் மீது படையெடுத்து திப்புவின் படைகளைச் சிதரடித்து கிட்டூரைக்கைப்பற்றி ஆட்சி நடத்திவந்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட மல்லசராஜா சிறைக் காவலையும் மீறி சில மாதங்களுக்குப் பின் தப்பி தன் நாட்டிற்கு வந்த போது, நாடு பேஷ்வாக் களிடமிருந்த்து. ஒரு உடன்படிக்கையில் பேஷ்வாக்களுக்கு கப்பம் கட்ட மல்லசராஜா ஒப்புக்கொள்ளவே மீண்டும் கிட்டூர் மன்னரானார்.
இந்தக் காலக் கட்ட்த்தில் ஆங்கிலேயர்கள் நாட்டின் பலபகுதிகளைத் தனது சூழ்ச்சியாலும் நயவஞ்சகத்தாலும் கைப்பற்றி ஆட்சி செய்துவந்தனர். பேஷ்வாக்கள் மீது ஆங்கிலேயர் படையெடுத்துச் சென்றபோது கிட்டூரும் தாக்குதலுக்கு உள்ளானது..
திப்புவைத் தோற்கடிக்க பேஷ்வாக்களின் படை தேவை என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள் போரில் கைப்பற்றிய பகுதிகளை பேஷ்வாக்களிடமே மீண்டும் ஒப்படைத்தனர்.
ஒருபுறம் திப்புவின் படைகள், மறுபுறம் ஆங்கிலேயர்களின் தாக்குதல் இவைகளை முறியடிக்க நாட்டின் பல சிற்றரசர்களின் ஆதரவையும் நாடினார் மல்லசராஜா.. அப்போது காகட்டி என்ற சிற்றரசன் ஆதரவு கிட்டியது மட்டுமல்ல, காகட்டி, மன்னரின் மகள் சென்னம்மாவைத் தன்னுடைய இரண்டாவது மனைவியாக மண்ந்துகொண்டான்.
34 ஆண்டுகள் கிட்டூரை ஆட்சிபுரிந்த மல்லசராஜா மரணமடையவே அவருடைய முதல் மனைவி ருத்ரம்மா ஆன்மீக ஈடுபாடு கொண்டு ஆசிரம்ம் ஒன்றை அமைத்து அங்கேயே வாழ்த்தொடங்கினார். இவருடைய மகனும் நோய்வாய்ப்பட்டு சில ஆண்டுகளில் காலமாகிவிட்டார். நேரடியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்று நிவகிக்கத் தொடங்கினார் ராணி சென்னம்மா..
தனக்குப் பின்னால் ஒரு வாரிசு தேவை என்பதால் சிவலிங்கப்பா என்ற சிறுவனைத் த்த்தெடுத்துக் கொண்டார் . அப்போது பரவலாக ஆங்கிலேய அரசு ஒரு சட்டம் இயற்றி இருந்த்து. எந்த மன்னருக்கு வாரிசு இல்லையோ அந்த மன்ன்சுக்குப் பின் அந்த நிலப் பரப்பு ஆங்கில அரசின்பகுதியாக ஆக்கப்படும்.
ராணி சென்னம்மா சுவீகாரம் எடுத்துக் கொண்ட்தைக் கண்ட ஆங்கிலேயர் பெரும்படை ஒன்றை அனுப்பி கோட்டையை முற்றுகையிட்டு கோட்டையிலிருந்து யாரும் வெளியே செல்ல முடியாத அளவிற்கு காவலுக்கு ஆங்கிலேயச் சிப்பாய்களை நிறுத்திவைத்திருந்தனர்.
கிட்டூர் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டு விட்ட்தையும் கோட்டை முற்றுகை இடப்பட்டிருப்பதையும் சென்னம்மாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எப்படியும் தாய் மண்ணை மீட்கவேண்டும் என உறுதி பூண்டாள்.
படைத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினாள். படைவீர்ர்களுகு நம்பிக்கை ஊட்டினாள். யுத்த்த்திற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் கோட்டைக்கு உள்ளேயே தயார்படுத்தினாள். உள்ளே ஏதோ நடக்கிறது என்ற சந்தேகம் காவலுக்கு நின்ற ஆங்க்கில சிப்பாய்களுக்கு ஏற்பட்ட்து. உடனடியாக கலெக்டர் தாக்ரேவிற்கு தகவல் சொல்லப்பட்ட்து.
கணவனை இழந்த ஒரு விதவைப் பெண்ணிற்கு இவ்வளவு தீரமா என ஆத்திரப்பட்ட அவன் நான்கு பீரங்கிகளுடன் பெரும்படையுடன் கிட்டூர் கோட்டைக்கு வந்து சேர்ந்தான்.
படையைப் பார்த்த்தும் பயந்தே சென்னம்மா சரணடைந்துவிடுவார் என மனப்பால் குடித்த கலெக்டர் குதிரைப் படையினர் நூறு பேரை அனுப்பி சென்னம்மாவைக் கைதுசெய்து கொண்டுவரும்படி உத்திரவிட்டான். . கோட்டைக் கதவுகள் ஏற்கானவே திறந்தே இருந்த்ன.. நூறு பேர் உள்ளே போனதும் கோட்டைக் கதவுகள் மூடப்பட்டன. கிட்டூர் வீர்ர்கள் ஆங்கிலப் படையை வெட்டிச் சாய்த்தனர். 98 பேர் கொல்லப்பட்டனர் இரண்டு ஆங்கில அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்த அதிரடித் தாக்குதலைச் சற்றும் எதிர்பாராத கலெக்டர் உயிர்பலியைத் தவிர்க்க சமாதானத் தூதனிப்பினான்.. பத்து கிராமங்களை விட்டுக் கொடுக்கிறோம். எஞ்சியதை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் என எழுதிக்கொடுத்து அனுப்பிய கடித்த்திற்குப் பதிலே இல்லை.
நான்கு பீரங்கிகளில் இரண்டைக் கோட்டைக்கு மிக அருகில் நிறுத்தி வைத்தான். நாளை காலைக்குள் செனம்மா சரணடையாவிட்டால் கோட்டையைத் தகர்த்துவிடுமாறு உத்திரவிட்டான் கலெக்டர். மறுநாள் காலை அந்த இரண்டு பீரங்கிகளையும் காணவில்லை. கிட்டூர் வீர்ர்கள் தந்திரமாக்க் கோட்டைக்குள் கொண்டுசென்றுவிட்டனர்.
எஞ்சியிருந்த இரண்டு பீரங்கிகளைக் கோட்டைக்கு முன் நிறுத்தி கோட்டையைத் தகர்க்க ஆணையிட்டான் கலெக்டர். ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக கோட்டைக்குள் இருந்த் பீரங்கியிலிருந்து குண்டுகள் கோட்டைக் கதவைப் பிளந்துவிட்டு ஆங்கிலேயர்கள் மீது பாய்ந்த்து. கோட்டைக்கு மேலிருந்த வீர்ர்கள் அம்புகளால் ஆங்க்கிலேயர் உடல்களைத் துளைத்தனர்.
ராணி சென்னம்மா கவசமணிந்த குதிரையில் கம்பீரமாக அமர்ந்து வீர்ர்களுக்கு உத்த்திரவிட்டுக் கொண்டிருந்தாள். ராணியைக் கொல்லத் தன் கைத்துப்பாக்கியால் குறிபார்த்த கலெக்டரை ராணியின் மெய்க்காப்பாளன்
பாலப்பா சுட்டுக் கொன்றான். தலைவன் இறந்த்தும் ஆங்கிலப் படைகள் சிதறி ஓடின.
நவீனப் போர்கருவிகள் கொண்ட ஆங்கிலேயரைத் தனது வீரத்தாலும், தந்திரத்தாலும் தோற்கடித்த ராணி சென்னம்மாவின் புகழ் எட்டுத் திசைகளிலும் பரவியது.
தென்பகுதியில் உள்ள எல்லா சமஸ்த்தான்ங்களையும் ஒன்றிணைத்து ஆங்கிலேயரைத் தோற்கடிக்கவேண்டும் என்ற சென்னம்மாவின் முயற்சிக்குச் சிற்றரசர்கள் பலரும் ஒத்துழைக்கவில்லை.
அவமானப்பட்ட வெள்ளையர்கள் பல இடங்களில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ஆயிரக் கணக்கான படைவீர்ர்களையும் ஒருங்கிணைந்து மூன்று படைப் பிரிவுகளாகப் பிரிந்து கிட்டூர் கோட்டையை சாப்ளின் என்பவர் தலைமையில் முற்றுகையிட்டனர்.
சென்னம்மா சரணடையாவிட்டால் கோட்டை தகர்க்கப்படும் எனச் செய்தி அனுப்ப்ப்பட்ட்து. சரணடைவதைவிட சாவதே மேல் எனக் கருதியசென்னம்மா யுத்த்த்தை எதிர்கொண்டார்.
பலநாட்கள் நடந்த கடுமையான போரில் இரு தரப்பிலும் எண்னற்ற வீரஉயிர் இழப்புகள்.. பீரங்கிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் ஈடு கொடுக்க முடியாத கிட்டூர் வீர்ர்கள் கடைசிவரை போராடி மாண்டனர்.
கிட்டூர் கோட்டை தகர்க்கப்பட்ட்து. ராணி சென்னம்மாள் உயிருடன் பிடிக்கப்பட்டாள். வெள்ளையருக்குப் பணிந்திருந்தால் ஆட்சி அதிகாரம் கிடைத்திருக்கும். ஆனால் ,தன்மானத்திற்கும், தாய் மண்னிற்காகவும் போர்ராடியதற்குக் கிடைத்த பரிசு சிறைச்சாலை.. 5 ஆண்டுகள் தனிமைச் சிறையிலேயே இருந்து 1829 பிப்ரவரி 2-இல் மரணமடைந்தார்.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
செய்திமூலம்:ஈரோடு சண்முகசுந்தரம்.(பசுத்தாய் மாத இதழ்)
வெ.சுப்பிரமணியன், ஓம்
திருவள்ளுவர் யார் - நூல் திறனாய்வு நிகழ்ச்சி
4 years ago
மறுமொழிகள்
0 comments to "Re: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்"
Post a Comment