வணக்கம்.
இன்று ஒரு தமிழ் நூல் மின்னாக்கம் செய்யப்பட்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் இடம் பெறுகின்றது.
நூல் பெயர்: திருவெம்பாவை - அவிரோதி நாதர் இயற்றியது
(புலவர் கு.பாலசுந்தர முதலியார் அவர்கள் உரையைத் தழுவியது)
வெளியீடு: திரு.கு.சக்ரவர்த்தி-திருமதி.பிரியகாருணி மணிவிழா வெளியீடு 1999
திருநூற்றந்தாதி என்னும் அரிய நூலை எழுதிய அமர மகாகவி அவிரோதிநாதர் இயற்றிய நூல் இது. மார்கழி மட்டுமின்றி எல்லா காலத்திலும் வாசிக்கக் கூடிய ஒரு பாமாலை. இதில் தீர்த்தங்கரர்களைப் போற்றி பாக்கள் இயற்றப் பட்டுள்ளன.
இந்த நூல் 1963ல் அமரர் ஜீவபந்து அவர்களால் ஜினகாஞ்சி ஜைனத் தமிழ் இலக்கிய மன்றத்தினரால் புலவர் கு.பாலசுந்தர முதலியார் அவர்கள் உரையுடன் வெளியிடப்பட்டது. தொடர்ந்து 1977ல் தஞ்சை ஆதிபகவன் ஜைன சேவா சமாஜத்தினரால் வெளியிடப்பட்டது.
குறிப்பாக வேறு பிரதிகளில் விடுபட்ட செய்யுட்களும் இந்தப் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலில் வருகின்ற முத்தென்ன வெண்ணகையாய்... வாழி அருகன் மலர்த்தாமரை போன்ற செய்யுட்கள் மாணிக்கவாசகரின் திருவெம்பாவையை நினைவிருத்துகின்றன. வாசித்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 360
நூலை வாசிக்க!
- நூலை த.ம.அ மின்னாக்கத்திற்காக வழங்கியவர் திரு.இரா.பானுகுமார்
- நூல் மின்னாக்கம்: டாக்டர் திருவேங்கடமணி
- நூல் மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "THF Announcement: ebooks update: 11/12/2013 *திருவெம்பாவை - அவிரோதி நாதர் இயற்றியது*"
Post a Comment