THF Announcement: E-books update: 01/01/2015 *தமிழ்க்கூறும் நல்லுலகம் -பகுதி 2 *

2 மறுமொழிகள்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.

நூல்:  தமிழ்க்கூறும் நல்லுலகம் - பகுதி 2 (தஞ்சை காஞ்சி காண்டங்கள்)
ஆசிரியர்: பொறிஞர் புருடோத்தமன்
பதிப்பு: கோயம்பத்தூர் தனா  பப்ளிகேஷன்ஸ்


நூல் குறிப்பு:  

120 பக்கங்கள் கொண்ட நூல் இது. இது ஏற்கனவே நமது சேகரத்தில் இணைக்கப்பட்டுள்ள தமிழ்க்கூறும் நல்லுலகம் நூலின் தொடர்ச்சி. அந்த நூலில் பாண்டிய மரபு தோற்றம் முதல் அது அழிந்து பட்ட 18ம் நூ வரையிலான செய்திகளை ஆசிரியர் வழங்கியிருந்தார். இந்த நூல் காஞ்சி, தஞ்சை காண்டங்களைத் தொகுத்துத் தருவதாக அமைகின்றது.

மிகச் சிறப்பான வகையில் அக்கால சட்டங்கள், நடைமுறை வழக்கங்கள், தொழில், கல்வி, வாணிகம், ஆகிய புற வளர்ச்சியுடன் அகவளர்ச்சிகளாகிய உணர்வு எழுச்சி, அறிவுடைமை ஆகியவை இரண்டறக் கலந்தவை. இவை அந்தந்த கால மாறுதல்களுக்கு ஏற்ப சமூகம், தொழில்வளம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாறுபட்டு வந்திருப்பதையும் எடுத்துக் காட்டும் வகையில் நூல் எழுதப்பட்டுள்ளது.

காஞ்சிக் காண்டம்
  • பல்லவப் பேரரசு மன்னர் படலம்
  • பல்லவப் பேரரசு நாட்டுப் படலம்

தஞ்சைக் கண்டம்
  • சோழப் பேரரசு மன்னர் படலம்
  • சாளுக்கிய சோழ மன்னர் படலம்
  • சோழப் பேரரசு நாட்டுப் படலம்

ஆகியன் இந்த நூலில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 413

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்:  திரு.தென்கொங்கு சதாசிவம்

நூலை வாசிக்க!

அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​

மறுமொழிகள்

2 comments to "THF Announcement: E-books update: 01/01/2015 *தமிழ்க்கூறும் நல்லுலகம் -பகுதி 2 *"

இன்னம்பூரான் said...
January 1, 2015 at 4:22 AM

இது முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று நூல். முதல் பிரசுரம் ஆன வருடம் தெரியுமா? சென்னௌ வரும்போது என்னுடன் சந்திக்குமாறு திரு.தென்கொங்கு சதாசிவம் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். இருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இன்னம்பூரான்

Veenvambu said...
January 1, 2015 at 4:33 AM

ஆக சிறந்தபணி தொடரட்டும்..

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES