மண்ணின் குரல்: ஏப்ரல் 2016: திருநாதர்குன்று சமண சிற்பத்தொகுதியும் ''ஐ" வட்டெழுத்தின் தோற்றமும்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 



தமிழ் எழுத்துக்களின் பண்டைய சான்றுகள் பலவற்றை மலைப்பகுதிகளில் உள்ள குகைகளிலோ அல்லது பாறைகளிலோ தான் காண்கின்றோம். 

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள  செஞ்சி கோட்டையின் வடக்கே திருநாதர் குன்று எனும் சிறிய மலை உள்ளது. இம்மலையில் உள்ள பாறைச்சிற்பம் மட்டுமல்ல, கல்வெட்டும் கூட, தமிழ் எழுத்து மொழி வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ள ஒன்றாக அமைகின்றது.

இந்த மலை மீது மூன்று கல்வெட்டுகள் உள்ளன. முதிர்ந்தநிலை பிராமி மொழியிலிருந்து வட்டெழுத்தாகth தமிழ் வளர்ந்த நிலையில் உள்ள, மாறுதல் அடைகிற காலக்கட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டு இது என்ற சிறப்பை பெறுவதாக இக்கல்வெட்டு திகழ்கின்றது.

இந்த திருநாதர்குன்றில் உள்ள தமிழ் பிராமியிலிருந்து வட்டெழுத்துக்கு மாற்றம் பெறுவதாகக் கருதப்படும் கல்வெட்டில்தான்  ‘ஐ’ எனும் தமிழ் எழுத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதொரு செய்தியாகும். இங்குள்ள ஒரு கல்வெட்டு,சந்திரநந்தி ஆசிரியர் எனும் சமணத்துறவி 57 நாட்கள் உண்ணா நோன்பிருந்து வடக்கிருந்து உயிர்நீத்தார் என்ற செய்தியையும் சொல்கின்றது. இது கி.பி2ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு எனக்கூறலாம். 

மற்றொரு கல்வெட்டு, இளையபட்டாரகர் எனும் சமணத்துறவி முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தார் என்ற செய்தியைச் சொல்கின்றது.  அதே போல மேலும் பல்லவ காலத்து தமிழ் கல்வெட்டு ஒன்றும் இங்குள்ளது.

இம்மலையின் உச்சியில் ஒரு பெரிய கற்பாறை உள்ளது. அதில் சமண அறத்தைப் பரப்பிய இருபத்து நான்கு தீர்த்தங்கர்களின் திருமேனிகள் செதுக்கப் பட்டுள்ளன. அவை தீர்த்தங்கரர்கள் அனைவரும் அமர்ந்த நிலையில், இருவரிசைகளில் ஒரே அளவில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தீர்த்தங்கரரின் தலையின் மேற்பகுதியிலும் முக்குடை காணப்படுகிறது. தீர்த்தங்கரர்களுக்கே உரித்தான தனித்தனி சின்னங்கள் என்பன இல்லாமல் இவை காணப்படுகின்றன. 

சிற்பத் தொகுதி இருக்கும் கற்பாறையின் மேற்குப்பகுதியில் குகை காணப்படுகிறது.இந்தக் குகைப்பகுதியில் சமண முனிவர்கள் தங்கி இருந்து இங்கே சமண சமயத்தை வளர்த்தனர்.

மலையின் நடுப்பகுதியில் ஒரு பெரிய பாறையில் ஒரு தீர்த்தங்கரரின் சிலையும், சிலையின் மேற்பகுதியில் கல்வெட்டுச் சான்றும் இருந்துள்ளன.ஆனால் அது இரண்டாக உடைக்கப்பட்டு தற்போது வீழ்ந்து கிடக்கிறது. 

தமிழகத்தில் உள்ளோரே கூட அறியாத ஒரு சிறந்த கலைப்படைப்பாக இது திகழ்கின்றது. எழில் மிகுந்த இந்த சூழலில் அமைந்திருக்கும் இந்த மலைப்பகுதி தரும் தகவல்களைத்  தமிழ் மரபு அறக்கட்டளை பதிவாக்கியிருக்கின்றோம். இப்பதிவில் ஆய்வாளர் டாக்டர்.ரமேஷ் அவர்கள் கல்வெட்டுக்கள், சிற்பங்கள், சமணம் என பல தகவல்களை விளக்கிக் கூறுகின்றார். 

விழியப் பதிவைக் காண:   http://video-thf.blogspot.de/2016/04/blog-post_20.html
யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=7Soskq3M3H8&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

இந்த  தமிழ் கல்வெட்டுக்கள்  பதிவை செய்ய உதவிய நண்பர்கள் டாக்டர்.ரமேஷ், திரு.கோ.செங்குட்டுவன், மற்றும் இணைந்து வந்திருந்த பத்திரிக்கை நிறுபர்கள் ஆகியோருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.








































அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​


த.ம.அ காலாண்டு மின்னிதழ் - மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 5 ஏப்ரல் 2016

2 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது மின்னிதழ் வெளியீடு அமைகின்றது. இதுவரை நான்கு மின்னிதழ்களை வெளியீடு செய்துள்ளோம். இன்று ஐந்தாவது மின்னிதழ் வெளியீடு காண்கின்றது.

காலாண்டு இதழாக வெளிவரும் இந்த மின்னிதழில் ஒவ்வொரு காலாண்டிலும் தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட சிலதேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.

இந்தக் காலாண்டின் வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது தமிழ் வளம் என்பதாகும். 





மின்னிதழை வாசிக்க இங்கே செல்க!

அட்டைப்படக்குறிப்பு:  ​தமிழ் மரபு அறக்கட்டளை திருச்சி உருமு தனலெட்சுமி கல்லூரியின் தமிழ்த்துறையோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை கையெழுத்திட்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழி தமிழ் மரபு அறக்கட்டளையுடன் இணைந்த வகையில் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவர்கள் ஆய்வுகளில் ஈடுபடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நம் மின்னிதழை வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]













த.ம.அ புதிய செயற்குழு அறிவிப்பு - 2016 செயலவை உறுப்பினர் மாற்றம் தொடர்பான செய்தி

1 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ மரபு அறக்கட்டளை செயற்குழுவில் செய்யப்பட்டுள்ள மாற்றம் தொடர்பான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கின்றேன்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலாளராக 2011ம் ஆண்டு தொடங்கி நமக்கு நல்லாதரவை வழங்கி வந்த டாக்டர்.ம.ராசேந்திரன் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விலக விருப்பம் தெரிவித்திருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரது ஆதரவு நம் நடவடிக்கைகளுக்குப் பல வகைகளில் துணையாக இருந்தது என்பதை நினைவு கூற கடமை பட்டுள்ளேன். அவருக்கு எமது நன்றியையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 

கடந்த ஆண்டுகளில் பொருளாளராக நியமிக்கப்பட்டிருந்த திருமதி ஸ்டெல்லா ஆண்டோ பீட்டர் அவர்கள் தனிப்பட்ட காரணங்களினால் செயல்பட முடியாத சூழலில் அவரது விலகலையும் நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். அவருக்கு நமது நன்றி.

திரு. சுவாமிநாதன் கடந்த சில ஆண்டுகளாக தனிப்பட்ட பணிச்சுமை காரணமாக செயற்குழுவில் பங்கெடுத்துக் கொள்ள இயலாத  சூழல் ஏற்பட்டது. அதனைக் கருத்தில் கொண்டும் அவர்கள் விலகிக் கொள்வதற்காக கேட்டுக்கொண்டதை ஏற்றுக் கொண்டுள்ளோம். திரு.சுவாமிநாதன் அவர்கள் த.ம.அ  தொடக்கம் முதல் எமக்கு பல்வேறு வகைகளில் உதவியாக இருப்பவர். இவரது மகத்தான ஒத்துழைப்பினால் தான் பிரித்தானிய நூலகத்தின் தமிழ் நூல்கள் மின்னாக்கப் பணியை நாம் செய்து முடித்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.அவருக்கு நமது நன்றி.


இந்த மாற்றங்களை ஏற்றுக் கொண்டு புதிய செயலவைக் குழு அமைக்கப்பட்டிருக்கின்றது. இன்று முதல் இந்தப் புதிய செயற்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொள்கின்றார்கள்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலாளராக திரு.மாலன் நாராயணன் அவர்கள் செயல்படுவார். திரு.மாலன் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையோடு அதன் ஆரம்பம் முதல் தொடர்பில் இருப்பவர். அவரது நீண்ட கால ஊடகவியல் அனுபவம் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு நிச்சயம் வலு சேர்க்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

இதுவரை  தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழுவில் துணைச் செயலாளர் என்ற பொறுப்பு இணைக்கப்படாமல் இருந்தது. இவ்வாண்டு முதல் துணைச் செயலாளர் பொறுப்பினை இணைத்திருக்கின்றோம்.  துணைச் செயலாளராக முனைவர். தேமொழி அவர்கள் பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றார். இவரது பணிகளாக தமிழ்பொழில் மின்னூல்கள் வெளியீடு என்பது அமையும். 52 ஆண்டு தொகுப்பினை இணைக்கும் பணியினை இவர் ஏற்றுக் கொண்டுள்ளார். அதுமட்டுமன்றி நாம் அறிமுகப்படுத்தியுள்ள மாணவர் மரபு மையச் செயல்பாடுகளின் தொடர்பாளராகவும் இவர் செயல்படுவார்.

நமது அறக்கட்டளையின் புதிய பொருளாளராக திரு.உதயன் நியமிக்கப்பட்டுள்ளார். 

செயலவைக் குழுவில் புதிதாக இணைபவர்கள்:
  1. பேராசிரியை டாக்டர். ரேணுகாதேவி - மதுரை
  2. திரு,செல்வ முரளி - கிருஷ்ணகிரி
  3. திரு.அன்பு ஜெயா - ஆஸ்திரேலியா
  4. டாக்டர்.ரத்தினம் சந்திரமோகன்

மட்டுறுத்துனர் குழுவில் இன்று தொடங்கி புதிதாக இணைக்கப்பட்டிருப்போர்:
  1. திரு.சிங்காநெஞ்சன்
  2. திரு.வினைதீர்த்தான்

தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலவைக் குழுவினர் பற்றிய முழு விபரத்தையும் இங்கே காணலாம்: http://www.tamilheritage.org/old/ec/ec.html


THF Board of Directors and Founders:
1.Prof.Dr.N.Kannan
2.Dr.K.Subashini

Executive Committee
President: Dr.Kannan Narayanan - [Malaysia]
Vice-President: Dr.K.Subashini- [Germany]
Secretary: Mr.Maalan Narayanan - [India]
Assistant Secretary: Dr.Themozhy - [USA]
Treasurer: Mr.M.Udhaya Sankar - [India]

Committee Members: 
1.Dr. M.S. Mathivanan - [Komarapalayam, India]
2.Dr. Renuga Devi - [Madurai, India]
3.Prof.Dr.Ranggasamy Karthigesu - [Malaysia]
4.Dr.Pathmavathy - [Chennai, India]
5.Dr.Arul Natarajan - [Chennai, India]
6.Mr.K R. A. Narasiah - [Chennai, India]
7.Dr.T.K. Thiruvengada Mani - [Chennai, India]
8.Mr.Murali Selvaraj - [Krishnagiri, India]
9.Mr.Anbu Jaya - [Australia]
10.Dr.Rathinam Chandramohan - [Devakottai, India]


[Tamil Nadu Regional Coordinators]
1.Dr. R Malarvizhili Mangayarkarasi - [Madurai, India]
பட்டியல் இன்னமும் இணைக்கப்படவில்லை. வரும் வாரத்தில் இணைக்கப்பட்டு வெளியிடப்படும்.

[MinTamil E-Forum Moderators]
1.Dr.Narayanan Kannan - [Malaysia]
2.Dr.Subashini - [Germany]
3.Mr.Vinaitheerthan - [Karaikudi, TamilNadu, India]
4.Dr.Sampath Kumar - [USA]
5.S.Singanenjam - [Chennai, TamilNadu, India]

இவ்வாண்டில் செயல்படுத்தப்படும் வகையில் பணிகள் சில தொடங்கப்பட்டுள்ளன. தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகள் தொடர்பான செய்திகளை அவ்வப்போது  பகிர்ந்து கொள்கின்றேன். 

புதிதாக செயற்குழுவில் இணைந்தோருக்கு என் வரவேற்பினையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
பேரா..முனைவர்.நா,கண்ணன்
[தமிழ் மரபு அறக்கட்டளை]


த.ம.அ. செய்தி: 2016 செயல்பாடுகள் - மதுரை மணலூர் பள்ளி அருங்காட்சியகம் உருவாக்கம்

0 மறுமொழிகள்
வணக்கம்.

மதுரை  பகுதியில் இந்த ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு பணியாக மணலூர் அழகுமலர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சிறிய அளவிலான ஒரு பள்ளி அருங்காட்சியகத்தை அமைக்க உள்ளோம் என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தப் பணிக்கான ஆரம்ப கட்ட கலந்துரையாடல்கள் முடிந்து விட்டன. ஜூன் மாதம் தொடங்கி செயலாக்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

த.ம.அ வின் மதுரை பகுதி பொறுப்பாளர் இணைப்பேராசிரியர் டாக்டர்.மலர்விழியும்,  த.ம.அ செயற்குழு உறுப்பினர் பேராசிரியர். டாக்டர்.ரேணுகா தேவியும் இப்பணியை பொறுப்பெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

ஆண்டு இறுதி வாக்கில் இந்த த.ம.அ மாணவர் மரபு மைய அருங்காட்சியகம் முழுமை பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

அழகு மலர் பள்ளியின் தமிழ் மரபு அறக்கட்டளை மாணவர் மரபு மையத்தின் செயல்பாடாக இது அமையும்.

ஆரம்ப கட்ட அரும்பொருள் சேகரிப்பு என்பது மூன்று விதமான பொருட்கள் சேகரிப்பினை கொண்டதாக அமையும்.
1.பண்டைய வீட்டுப் பயண்பாட்டுப் பொருட்கள்
2.பண்டையவிவசாய, தொழில் கருவிகள்.
3.பண்டைய விளையாட்டுப் பொருட்கள்

நாம் இவ்வாண்டில் அமைக்க உள்ள பள்ளி அருங்காட்சிகத்திற்கான அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

சில புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.


மதுரை வட்டாரப் பொறுப்பாளர் ​டாக்டர்.மலர்விழி,  நம் செயற்குழு உறுப்பினர் பேராசிரியர். டாக்டர்.ரேணுகா தேவி,  ​​மணலூர் அழகு மலர் பள்ளித்தாளாளர் திருமதி .யோகலட்சுமி.



​த.ம.அ மாணவர் மரபு மையம் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ள அறை. 




இத்திட்டத்தின் வளர்ச்சி பற்றி தொடர்ந்து அவ்வப்போது உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அற்க்கட்டளை]


சித்திரைத் திருநாள் வரவேற்பு - த.ம.அ சிறப்பு வெளியீடு

6 மறுமொழிகள்
தமிழ் மரபு அறக்கட்டளை உலகத் தமிழர் அனைவருக்கும் சித்திரைத் திருநாள் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கின்றது.

இந்த நாளில் மேலும் ஒரு சிறப்பு அம்சமாக அமைவது அண்ணல் அம்பேத்கர் அவர்களது பிறந்த நாள்.  இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரும் சமூக நீதிக்காவலருமான அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முதன் முறையாக தன் ஐ.நா  தலைமையகத்தில் கொண்டாட்டுகின்றது. 






இந்த இனிய நாளில் தமிழ் மரபு அறக்கட்டளை சித்திரை வரவேற்பாக சிறப்பு மலர் ஒன்றினை வெளியீடு செய்கின்றோம். 

இந்த வெளியீட்டில் சுவையான படைப்புக்களைத் தமிழ் மரபு அறக்கட்டளையின்  மின்தமிழ் உறுப்பினர்கள் தமிழ் வாசகர்களுக்காகp  படைத்திருக்கின்றார்கள். சுவாரசியமான படைப்புக்களைக் கொண்டு இந்த மின்னிதழ் உங்களை வந்து சேர்கின்றது.

இந்த சிறப்பிதழில் இடம்பெறும் படைப்புக்களைப் பற்றி ஓரிரு வரிகளாக அறிமுகத்தைத் தருகின்றேன்.

  1. நா.கண்ணனின் துர்முகிக்கான துதி தொடக்கக் கவிதையாக மலர்கின்றது.
  2. உதயனின் கேமரா பிடித்த சித்திரைத்திருவிழா காட்சிகள் இந்தச் சிறப்பிதழின் அட்டைப்படத்தை அலங்கரிப்பதோடு மதுரை சித்திரைத் திருவிழா காட்சிகளில் சிலவற்றை நம் கண் முன்னே கொண்டு வருகின்றன.
  3. திவாகரின் சைத்திரா கதை ஒரு நினைவின் பிரதிபலிப்பாக அமைகின்றது.
  4. இன்னம்பூரானின் மொழியின் வரலாறு எனும் தலைப்பிலான கட்டுரை பல்வேறு காலகட்டங்களில் வெவேறு மொழிகள் பிறந்த விதங்களையும் பேசுகின்றது.
  5. கோ.செங்குட்டுவனின் சன்னியாசியாக மாறிய படைத்தளபதி எனும் கட்டுரை திருமுண்டீச்சுரத்தில் நிகழ்ந்த வரலாற்றைப் பதிகின்றது.
  6. சிங்காநெஞ்சனின் புவிக்குரல் புவியின் வரலாற்றைக் கவிதையாகப் பாடுகின்றது.
  7. ஷைலஜாவின் சாதி இரண்டொழிய எனும் தலைப்பிலான கவிதை அண்மையில் சாதிவெறியினால் வெட்டிக் கொல்லப்பட்ட உடுமைலப்பேட்டை இளைஞனையும், கணவனை இழந்து சித்திரையை மட்டுமல்லாது தன் இன்பத்தை இழந்து வாடும் பெண்ணின் கண்ணீரைப் பாடுகின்றது.
  8. கௌதம சன்னாவின் தந்தை சிவராஜ் கட்டிய மக்கள் விளையாட்டரங்கம் என்ற கட்டுரை பின்னாளில் அது எப்படி நேரு விளையாட்டரங்கமாக மாறியது என்று விளக்குகின்றது.
  9. சிங்காநெஞ்சனின் குடியம்-அதிரம்பாக்கம் - புவியியல் கோணத்தை விவரிக்கின்றது.
  10. ஜெயபாரதனின் கவிதை சித்திரை புத்தாண்டை வரவேற்கின்றது.
  11. பவளசங்கரியின் வைராக்கியம் எனும் தலைப்பில் அமைந்த கட்டுரை மனித மேம்பாட்டை குறித்ததாக அமைகின்றது.
  12. பார்வதி ராமச்சந்திரன் இடும்பிக்கும் ஒரு கோயில் இருக்கின்றது எனச் சொல்லி அதனை விளக்குகின்றார்.
  13. அரிசோனா மகாதேவன் அமெரிக்க ஆற்று மணலில் தங்கம் கிடைத்தது பற்றிய செய்தியைக் கட்டுரையாகச் சொல்கின்றார்.
  14. தேமொழி சித்திரை முழு நிலவு பற்றி இலக்கிய, இயற்கை, அறிவியல் விளக்கங்களைத் தன் கட்டுரையில் தருகின்றார்.

இப்படி, 14 படைப்புக்களுடன் இவ்வாண்டின் சித்திரைத் திருநாள் உங்கள் வாசிப்பிற்காகக் காத்திருக்கின்றது. 

மின்னிதழை வாசிக்க இங்கே செல்க!

சித்திரைத் திருநாளைக் கொண்டாடி  மகிழும் அதே வேளை இந்த உலகில் பாகுபாடற்ற, பிரிவினையற்ற, மனித நேயம் மிகுந்த நட்பும் அன்பும் சூழ்ந்த உறவினை நாம் வளர்த்து மனித குலம் மேண்மையடை தமிழ் மரபு அறக்கட்டளை அனைவரையும் வாழ்த்துகின்றது!

என்றும் அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]







THF Announcement: E-books update:10/4/2016 *மாஜினி

1 மறுமொழிகள்
 வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம்  நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.



நூல்:  மாஜினி, மாஜினியின் மனிதன் கடமை, மாஜினியின் மணிமொழிகள் - மூன்று நூல்களின் தொகுப்பு
ஆசிரியர்:   வெ.சாமிநாதசர்மா
பதிப்பு:  வளவன் பதிப்பகம்

நூல் குறிப்பு: 
பல்துறை அறிஞர் சாமிநாத சர்மா உலகெங்கும் கொட்டிக்கிடந்த அறிவுச் செல்வங்களைத் தமிழ் மொழியில் வழங்கிய ஒரு பன்முகப் பார்வை கொண்டவர். சாமி நாத சர்மா மாஜினி பற்றி இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"இத்தாலிய விடுதலைக்கு விதை போட்ட மூவருள் முதன்மையானவன் மாஜினி. இவன் சிதைக்கப்பட்டும், அடக்கப்பட்டும், குறுகிய வட்டத்திற்குள் பிணைக்கப்பட்டும், அடிமை இருளில் அடைபட்டுக் கிடந்த இத்தாலிய மண்ணையும் மக்களையும் மீட்டெடுத்தவன்.

மாஜினியின் வரலாறு எந்த இனம் தனது சொந்த முயற்சியைக் கொண்டு விடுதலையை வென்றெடுக்கவில்லையோ அந்த இனத்திற்கு விடுதலைப் பெறத் தகுதி இல்லை என்று கூறியவரின் வரலாறு. கட்டாயக் கல்வி முறை, சாதிப்பூசலற்ற, ஏற்றத்தாழ்வற்ற, பொருளியல் புரட்சியைச் செயல் திட்டமாகக் கொண்டவனின் வரலாறு.

இந்தியாவிற்குக் காந்தியடிகள், உருசியாவுக்கு இலெனின், அயர்லாந்துக்கு டிவேலரா, சீனாவிற்கு மாசேதுங், வியட்நாமுக்கு கோசிமின், கியூபாவுக்குப் பெடரல் காஸ்ட்ரோ, பாலஸ்தீனத்துக்கு யாசர் அராபத் போன்ற தலைவர்களுக்கு விடுதலை உணர்வு வருவதற்கு முன்னோடியாக இருந்தவன் மாஜினி."

இத்தனைப் பெருமைகளைக் கொண்ட இந்த அரசியல் தலவனைப் பற்றிய நூலை தமிழ் மரபு அறக்கட்டளை மின் சேகரத்திலிணைத்து வெளியிடுவதில் மகிழ்ச்சியும் பெறுமையும் கொள்கின்றோம்.


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 445

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு,ஜெயராமன்
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு,ஜெயராமன்
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​


மண்ணின் குரல்: ஏப்ரல் 2016: பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர் பேரா.முனைவர் தொ.பரமசிவன்

1 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 



பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் வசித்து வருகின்றார். தமிழ் பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர் இவர். இவர் மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

இவரது ஆய்வுப் படைப்புக்களாக 
  • அழகர் கோயில்
  • பரண்
  • சமயம் (தொ.ப-சுந்தர் காளி உரையாடல்)
  • சமயங்களின் அரசியல்
  • செவ்வி (நேர்காணல்கள்)
  • விடு பூக்கள்
  • உரைகல்
  • இந்துதேசியம்
  • நாள்மலர்கள்
  • அறியப்படாத தமிழகம்
  • பண்பாட்டு அசைவுகள்
  • தெய்வங்களும் சமூக மரபுகளும்
  • தெய்வம் என்பதோர்
  • வழித்தடங்கள்
என்பனவோடு புதிய நூல்களாக இந்த ஆண்டு மேலும் மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன. 

தமிழ்ச்சமூகம் தொடர்பான பன்முகத்தன்மை கொண்ட ஆய்வுகளை தொடர்ந்து நிகழ்த்தி வருபவர்.  இவர் தொல்லியல், மானுடவியல் சமூகவியல், இலக்கியம் என்ற பல்துறைகளில் அறிஞர் என்ற பெருமைக்கும் உரியவர். இந்த நூற்றாண்டின் தமிழ் ஆய்வுலகிற்குக் கிடைத்த சிறந்ததொரு அறிஞர் இவர் என்பது மிகையல்ல.

தமிழ் மரபு அறக்கட்டளை பேரா. தொ.ப அவர்களை 2015ம் ஆண்டின்  ”சிறந்த தமிழ் மானுடவியல் ஆய்வாளர்” என்ற விருதளித்து சிறப்பு செய்தோம். தமிழ் மரபு அறக்கட்டளைக்காக அவர் அளித்த நேர்காணலை இந்த விழியப் பேட்டியில் காணலாம். 

ஏறக்குறைய 59 நிமிட  பேட்டி இது.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2016/04/blog-post.html
யூடியூபில் காண:     https://www.youtube.com/watch?v=j5ttfBFX_xA&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

குறிப்பு: என்னுடன் உடன் வந்திருந்து பதிவுகளில் உதவிய தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள் மதுமிதா, திருமதி யோகலட்சுமி, பேராசிரியர்.முனைவர் கட்டளை கைலாசம் ஆகிய அனைவருக்கும் எனது நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES