வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்: மாஜினி, மாஜினியின் மனிதன் கடமை, மாஜினியின் மணிமொழிகள் - மூன்று நூல்களின் தொகுப்பு
ஆசிரியர்: வெ.சாமிநாதசர்மா
பதிப்பு: வளவன் பதிப்பகம்
நூல் குறிப்பு:
பல்துறை அறிஞர் சாமிநாத சர்மா உலகெங்கும் கொட்டிக்கிடந்த அறிவுச் செல்வங்களைத் தமிழ் மொழியில் வழங்கிய ஒரு பன்முகப் பார்வை கொண்டவர். சாமி நாத சர்மா மாஜினி பற்றி இப்படிக் குறிப்பிடுகின்றார்.
"இத்தாலிய விடுதலைக்கு விதை போட்ட மூவருள் முதன்மையானவன் மாஜினி. இவன் சிதைக்கப்பட்டும், அடக்கப்பட்டும், குறுகிய வட்டத்திற்குள் பிணைக்கப்பட்டும், அடிமை இருளில் அடைபட்டுக் கிடந்த இத்தாலிய மண்ணையும் மக்களையும் மீட்டெடுத்தவன்.
மாஜினியின் வரலாறு எந்த இனம் தனது சொந்த முயற்சியைக் கொண்டு விடுதலையை வென்றெடுக்கவில்லையோ அந்த இனத்திற்கு விடுதலைப் பெறத் தகுதி இல்லை என்று கூறியவரின் வரலாறு. கட்டாயக் கல்வி முறை, சாதிப்பூசலற்ற, ஏற்றத்தாழ்வற்ற, பொருளியல் புரட்சியைச் செயல் திட்டமாகக் கொண்டவனின் வரலாறு.
இந்தியாவிற்குக் காந்தியடிகள், உருசியாவுக்கு இலெனின், அயர்லாந்துக்கு டிவேலரா, சீனாவிற்கு மாசேதுங், வியட்நாமுக்கு கோசிமின், கியூபாவுக்குப் பெடரல் காஸ்ட்ரோ, பாலஸ்தீனத்துக்கு யாசர் அராபத் போன்ற தலைவர்களுக்கு விடுதலை உணர்வு வருவதற்கு முன்னோடியாக இருந்தவன் மாஜினி."
இத்தனைப் பெருமைகளைக் கொண்ட இந்த அரசியல் தலவனைப் பற்றிய நூலை தமிழ் மரபு அறக்கட்டளை மின் சேகரத்திலிணைத்து வெளியிடுவதில் மகிழ்ச்சியும் பெறுமையும் கொள்கின்றோம்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 445
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு,ஜெயராமன்
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு,ஜெயராமன்
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
1 comments to "THF Announcement: E-books update:10/4/2016 *மாஜினி"
April 10, 2016 at 6:33 AM
மாஜினி ஒரு யுக புருஷர். அவரும், கரிபால்டியும், கவூர் பிரபுவும் தான் இத்தாலியை உயிர்ப்பித்தார்கள். I was moved to tears as a school boy on reading about Mazzini in Sir Arthur Quiller-Couch. சொல்லப்போனால், அவருடைய ஆங்கில நூலையும். சர்மாஜியின் இந்த நூலையும், வீர் சவர்க்காரின் மாஜினி தொழுகையும் படித்தால் தான், இந்திய மாணவர்கள் உன்னத முறையில் செயல்படமுடியும்.
Post a Comment