வணக்கம்
அனைவருக்கும் ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு ஓலைச்சுவடி நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
ஓலைச்சுவடி: தன்வந்திரி உடற்கூறு
நூலைப் பற்றி
தமிழகத்தில் இன்று கிடைக்கின்ற உடற்கூறு ஆய்வு பற்றிய சுவடிகளில் இதுவும் ஒன்று. இதுவே இன்று நமக்குக் கிடைக்கின்ற உடற்கூறு ஆய்வினை விளக்கும் முதல் சுவடியாகவும் இருக்கலாம். இதனை ஆராய வேண்டும். இந்த உடற்கூறு பற்றின சுவடியைத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகப்படுத்துவதில் தமிழ் மரபு அறக்கட்டளை பெருமை கொள்கின்றது.
மேலும், இச்சுவடியை ஆராய்ந்து இதனைப் பதிப்பிக்க தமிழ் மரபு அறக்கட்டளை எண்ணம் கொண்டுள்ளோம். இந்தச் சுவடிக்கு விளக்கவுரை பொழிப்புரை எழுத ஆர்வமுள்ள மருத்துவம் தெரிந்த தமிழறிஞர்கள், சுவடிப்புல ஆய்வாளர்கள், பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி தமிழ்த்துறையினர் எம்மைத் தொடர்பு கொள்க.
இந்தச் சுவடி நூல் பிரான்சு நாட்டிலுள்ள பாரீஸ் தேசிய நூலகத்தில் பாதுக்கக்கப்படும் ஓலையாகும். இதனை நூலகத்தின் அனுமதி பெற்று மின்னாக்கம் செய்தவர்:முனைவர்.சுபாஷிணி
மின்னாக்கம், மின்னூலாக்கம்: முனைவர்.சுபாஷிணி , ஜெர்மனி
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 468
நூலை வாசிக்க இங்கே அழுத்தவும்!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "THF Announcement: E-books update:1/1/2018 *ஓலைச்சுவடி- தன்வந்திரி உடற்கூறு"
Post a Comment