வட்டார வழக்கு - ஒப்பாரிப் பாடல்கள் -ஆண் பாடகர்

0 மறுமொழிகள்
வணக்கம்.

ஒப்பாரிப் பாடல்கள் வழி  வழியாய் தமிழர் பாரம்பரியத்தில் வருகின்ற ஒரு கலை.  பொதுவாக இறந்தோர் இல்லங்களில் வயதான பெண்கள் ஒப்பாரிப் பாடல்களைப் பாடுவர். ஆனால் வித்தியாசமாக ஆண் ஒருவர் ஒப்பாரிப் பாடலை பாடுவதை இப்பதிவில் கேட்கலாம்.



இந்தியாவின் மிகப் பழைமையான மாநகராட்சியான மெட்ராஸ் பட்டிணத்தின் வட சென்னையில் வாழும் மக்களிடையே நிலவும் வாய் மொழிப் பதிவு இது. மரண நிகழ்வில் பாடப்படும் பட்டினத்தார் பாடல்கள் இதில் முக்கியத்துவம் பெருகின்றன.

பூதவுடலை எடுக்கும்போதும், இடுகாட்டிற்குக் கொண்டு போகும் வழியிலும், இடுகாட்டின் நுழை வாயிலில் உள்ள அரிச்சந்திரன் கோயிலின் முன்னேயும், பின்பு பிணத்தைப் புதைக்கும்போதும் ஏராளமான பாடல்கள் பாடப்படுகின்றன. அந்தப் பாடல்கள் பெரும்பாலும் பட்டினத்தார் பாடல்களாக இருக்கின்றன. அந்த பாடல்களின் சிறப்பு அவற்றைக் கேட்கும் போது புலப்படும். அந்தப் பாடல்களை அவர்கள் ஒப்பாரிப் பாடல்களாவும் சடங்குப் பாடல்களாவும் கருதுகின்றனர்.



குறிப்பு.  இந்த ஒலிப்பதிவுகளையும் புகைப்படங்களையும் நமக்கு வழங்கிய திரு.கௌதம சன்னா அவர்களுக்கு நமது நன்றி.

பாடல் பதிவு 1
பாடல் பதிவு 2






அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​​


மண்ணின் குரல் ஒலிப்பதிவுகள்: நகரத்தார் பேச்சு வழக்கு - பகுதி 3

0 மறுமொழிகள்
வணக்கம்.

இந்தப் பதிவில் திருமதி.விசாலாட்சி வேலு, நகரத்தார் வழக்கில் பாடப்படும் சில பாடல்களைப் பற்றி விவரிக்கின்றார்.

கிராமிய பாடல்கள் என்றாலே எளிமையும் அழகும் நிறைந்திருக்கும் தானே. சின்னச் சின்னப் பாடல்கள் தாம் என்றாலும் இவையும் மறக்கப்படும் சூழல் உருவாகிக்கொண்டிருப்பதைத் தானே காண்கின்றோம்!


பதிவைக் கேட்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​​


மண்ணின் குரல்: பெப்ரவரி 2017: கோரிப்பாளையம் தர்கா, மதுரை

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழகத்தின் மதுரையில் வைகையாற்றின் வடகரையில் உள்ள நகர்ப்பகுதிக்கு முகமது கோரியின் நினைவாக, அல்லது கோரியின் படைகள் வந்திறங்கிய இடம் என்ற பொருளில் கோரிப்பாளையம் என்ற பெயர் வழங்கி வருகின்றது. இங்கே ஒரு தர்காவும், பள்ளிவாசலும் உள்ளன. இங்குள்ள தர்காவில் சுல்தான் அலாவுதீன் உதௌஜி அவர்களும், அவரது மருமகனான குத்புதீன் பிரோம் ஷாக்குஸ் அவர்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



இந்த தர்க்காவின் உட்புறம் நடைவழியில் உள்ள மதுரை நாயக்க மன்னன் வீரப்பநாயக்கர் காலக் கல்வெட்டு (கி.பி.1573) தில்லி ஒரு கோல் சுல்தானென்று குறிப்பிடுகின்றது. வாரங்கல் என்பது இக்கல்வெட்டில் ஒரு கோல் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்களிடையே ஒரு கருத்தும் நிலவுகின்றது..

இப்பள்ளிவாசலுக்கு கூன் பாண்டியன் காலத்தில் 14 ஆயிரம் பொன் அளிக்கப்பட்டுள்ளதென்றும் அதனைக் கொண்டு ஆறு  சிற்றூர்கள் வாங்கப்பட்டு இப்பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டது என்றும் வீரப்ப நாயக்கன் காலக்கல்வெட்டிலிருந்து அறிய முடிகின்றது.

பாண்டிய மன்னர்களுக்குத் தேவையான குதிரைகளை அரேபியாவிலிருந்து தருவித்த போது, குதிரை வணிகத்தை ஒட்டி அரேபிய நாட்டைச் சேர்ந்த இசுலாமியர் பலர் மதுரைக்கு வந்தனர் என்பதும் ஒரு குறிப்பிடத்தக்க விசயமாகின்றது.

நன்றி: மாமதுரை - பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்.


விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2017/03/blog-post_12.html
யூடியூபில் காண:     https://www.youtube.com/watch?v=gYV0Ptg0ioA&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​


மண்ணின் குரல் ஒலிப்பதிவுகள்: நகரத்தார் பேச்சு வழக்கு - பகுதி 2

0 மறுமொழிகள்
வணக்கம்.

இந்தப் பதிவில் திருமதி.விசாலாட்சி வேலு, நகரத்தார் வழக்கில் உள்ள பண்டிகைகள் பற்றியும் அப்பண்டிகைகளின் போது செய்யப்படும் உணவு பதார்த்தங்கள் பற்றியும் சொல்கின்றார்.

பொதுவான நம் பேச்சு வழக்கில் கேட்டிராத பல சொற்கள் இதில் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருப்பதை இப்பதிவைக் கேட்கும் போது உணரலாம்.

பதிவைக் கேட்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​​


மண்ணின் குரல் ஒலிப்பதிவுகள்: நகரத்தார் பேச்சு வழக்கு - பகுதி 1

0 மறுமொழிகள்
வணக்கம்.

​காரைக்குடி, தேவகோட்டை, கானாடுகாத்தான், இப்படி நகரத்தார் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் நகரத்தார் வட்டார வழக்கினை மக்கள் பேசும் போது கேட்டிருப்போம். இன்றோ நகரத்தார்கள் மலேசியா, சிங்கை, பர்மா என்று மட்டுமல்லாமல் அமெரிக்கா ஐரோப்பா என பல நாடுகளிலும் வசிக்கின்றார்கள். நகரத்தார் பேச்சு வழக்கு இங்கேயும் அவ்வப்போது கேட்கத்தான் முடிகின்றது.

வட அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் வசிக்கும் திருமதி.விசாலாட்சி வேலு தமிழகத்தின்  அரிமளத்தில் பிறந்து வளர்ந்தவர்.  இன்றும் மிக இயல்பாக நகரத்தார் தமிழில் உரையாடும் திறனோடு இருக்கின்றார்.

அவர் நகரத்தார் பேச்சு வழக்கிலேயே செட்டி நாட்டு மக்களிடையே உறவு முறைகளை எப்படி பெயரிட்டு அழைப்பர் என்பதனை விளக்குகின்றார்.

பதிவினைக் கேட்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​​


மண்ணின் குரல்: பெப்ரவரி 2017: சமணமலை - மதுரை

0 மறுமொழிகள்
வணக்கம்.

மதுரை நகரின் தெற்கே தேனி செல்லும் சாலையில் நாகமலைப் புதுக்கோட்டைக்குத் தெற்கில் அமைந்துள்ளது சமண மலை. இங்கு இயற்கையான பாறை ஒன்று அமைந்துள்ளது. இதில் ஏறக்குறைய கிபி 8ம் நூற்றாண்டு வாக்கில் அமைக்கப்பட்ட சுமார் ஆறு அடி உயரமுள்ள அமர்ந்த நிலையில் காணப்படும் மகாவீரர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

இச்சிற்பத்தை உருவாக்கக்காரணமான குறண்டி திருக்காட்டாம் பள்ளியின் மாணாக்கர்கள் பெயர் இங்கே வட்டெழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1.வெண்புநாட்டுக் குறண்டி திருக்காட்டாம்பள்ளி கனக நந்திப்ப
2.டாரர் அபினந்தபடார் அவர் மாணாக்கர் அரிமண்டலப்ப டார்அ
3.பினந்தனப்படார் செய்வித்த திருமேனி

என்பது இக்கல்வெட்டு குறிப்பிடும் செய்தியாகும்.

இதற்கடுத்து இங்குள்ள குகையில் ஐந்து புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. முக்குடை அண்ணல்கள் அமர்ந்திருக்க  ஒரு இயக்கி சிம்மத்தின் மீது அமர்ந்து யானை மீது அமர்ந்துள்ள அசுரனோடு வீராவேசமாகப் போரிடுவது போல செதுக்கப்பட்டுள்ளது. வலது ஓரம் அம்பிகா இயக்கியின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள சிற்பங்களின் கீழ் வட்டெழுத்தில் இவற்றைச் செய்வித்தோர் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

முதல்கல்வெட்டில்

1. ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளிவுடையகு
2.ணசேனதேவர் சட்டன் தெய்வ
3.பலதேவர் செய்விச்ச திருமேனி


அடுத்த கல்வெட்டில்

1. ஸ்வஸ்திஸ்ரீ வெண்பு நாட்டுக் குறண்டி
2. த் திருக்காட்டாம்பள்ளிக்
3. குணசேனதேவர் மாணாக்கர் வ
4. ர்தமானப் பண்டிதர் மாணாக்
5. கர் குணசேனப் பெரிய
6. டிகள் செய்வித்த தி
7. ருமேனி

என்றும்

மூன்றாம் கல்வெட்டில்

1. ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளி ஆள்
2. கின்ற குணசேனதேவர் சட்டன்
3. அந்தலையான் களக்குடி தன்னை
4. ச் சார்த்தி செய்வித்த திரு
5. மேனி

என்றும் வழங்கப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டுக்கள் தரும் செய்திகளின் வழி இச்சமணப்பள்ளிக்கு நெடுங்காலம் பொறுப்பு வகித்தவர் குணசேனதேவர் என்பது அவரது சீடர்கள் இப்பள்ளியை நிர்வகித்து இச்சிற்பங்களைப் பாதுகாத்தனர் என்றும் அறியலாம். மதுரைப்பகுதியிலேயே மிகப்பெரிய பள்ளியாக இது திகழ்ந்தது.

நன்றி: மாமதுரை - பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்.


விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2017/03/blog-post.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=HrnlAxeX-ls&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

























வட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு - பகுதி 3

0 மறுமொழிகள்

நெல்லை சீமையிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் அண்ணாச்சி இரா.நாறும்பூநாதன் அவர்கள் குரலில் நெல்லைத் தமிழ்ச்சொற்களுக்கான விளக்கம் அளிக்கின்றார். பதிவின் மூன்றாம் பகுதி இன்று வெளியிடப்படுகின்றது.

​பதிவினைக் கேட்க  செல்க !

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES