வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்: பண்டிதரின் கொடை - விகிதாச்சார உரிமை எனும் சமூக நீதிக் கொள்கை
ஆசிரியர்: கௌதம சன்னா
ஆண்டு: 2007
பதிப்பு: சென்னை சங்கம் வெளியீடு
(ஆசிரியரின் சம்மதத்துடன் இந்த நூல் த.ம.அ மின்னூல் சேகரத்தில் இணைக்கப்படுகின்றது)
நூலைப் பற்றி..
- இந்த நூலில் ஒன்பது பகுதிகள் இருக்கின்றன. அவை:
- சாதி இந்துவின் நன்றி
- இடஒதுக்கீட்டின் தொடக்கம்
- தொடங்கியகதிப்போக்கில்..
- முன் முயற்சிகளும்.. முதற்கட்ட முன்வைப்புக்களும்..
- இந்து - முஸ்லீம் ஒற்றுமை எனும்..
- இடஒதுக்கீடு எனும் சமூகநீதிக் கொள்கை முகிழ்ந்தது
- இடைவெளி
- அனைத்து சமூக நீதியின் முகங்கள்
- மீளும் மணிமுடி
நூலிலிருந்து..
இந்திய துணைகண்ட வரலாற்றில் விகிதாச்சார உரிமை என்றும், இடஒதுக்கீடு கொள்கை என்றும், சமூகநீதி என்றும் அழைக்கப்படுவதின் அத்தனைப் பரிமாணங்களின் அடிப்படையையும் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே வகுத்து இந்த சமூகத்திற்கு பண்டிதர் அளித்தார் எனில் அதை கொடை என சொல்லாமல் எப்படி சொல்வது. ஆனால் அப்படி ஒரு வரலாற்றுக் கட்டமே நடக்கவில்லை என்பது போட்ல இந்திய இடஒதுக்கீடு வரலாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட கருத்தை ஏற்றுக் கொள்பவர்களுக்கு ஒரு மாற்று மருந்தாக பண்டிதரின் கொடை இருக்கும்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 423
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: நூலின் ஆசிரியர் கௌதம சன்னா. அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
நூலை வாசிக்க!
அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
1 comments to "THF Announcement: E-books update: 14/06/2015 *பண்டிதரின் கொடை*"
June 14, 2015 at 1:44 AM
.
.
புதியதலைமுறைக்கு
.
பகுத்தறிவான ....
.
புனித..
பதிவு
.
.
Post a Comment