வணக்கம்.
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.
இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.
இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட நூல்/ தொகுப்பு:
ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூது
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 366
நூலை வாசிக்க!
நூல் மின்னாக்கம் & மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
2 comments to "THF Announcement: ebooks update: 12/1/2014 *ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூது*"
January 12, 2014 at 1:02 AM
மிகச் சிறந்த முயற்சி. தமிழ் அறக்கட்டளையின் மகுடத்தில் மற்றொரு வைரம்! சுபாவுக்குப் பாராட்டுகள்.
நரசய்யா
January 12, 2014 at 1:09 AM
இது நல்வரவு மட்டும் அல்ல. மேல்வரவும் ஆகிறது. நெஞ்சே தூதுசென்று வருவதை நினைத்து மாய்ந்து போகிறேன். வாழ்த்துக்கள்.
Post a Comment