மண்ணின் குரல்: பெப்ரவரி 2014: மகா சிவராத்திரி - ஈரோடு மஹிமாலீஸ்வரர் கோயில்

0 மறுமொழிகள்
வணக்கம்.

இவ்வருட மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

இந்தப் பதிவு கடந்த ஆண்டு (2013) சிவராத்திரி தினத்தன்று ஈரோடு ஸ்ரீ மஹிமாலீஸ்வரர் சமேத மங்களாம்பிகைதிருக்கோயிலில் பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினத்தில் கோயிலில் செய்யப்பட்ட சிறப்பு சிவலிங்க பூஜை இந்தப் பதிவில் இடம் பெறுகின்றது. 

Inline image 1

பூஜை ஏற்பாட்டில் இடம்பெறும் சிவலிங்கம், பூஜை பொருட்கள் ஆகியவை தயாரானதும் ஆலயத்தில் கருவறையில் இருக்கும் மூலஸ்தான தெய்வத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது. அந்தச் சிறப்பு பூஜையும் இந்தப் பதிவில் பதிவாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து பொது மக்கள் இணைந்து ஈரோடு திரு தங்க. விசுவநாதன் தலைமையில் சிவபுராணம் ஓதி சிவலிங்க பூஜை செய்வதைக் காணலாம். 

இந்த விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/02/2014_26.html

யூடியூபில் இப்பதிவைக் காண: http://www.youtube.com/watch?v=t8I64GTDiHM


இந்த விழியம், மற்றும் புகைப்படங்கள் பதிவினை நான் செய்திட உதவிய திருமதி பவள சங்கரிக்கும் அவர் தம் துணைவர் திரு.திருநாவுக்கரசு அவர்களுக்கும், அனுமதி வழங்கிய ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கும், திரு தங்க விசுவநாதன் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின்  நன்றி.



Inline image 2
ஆலய வரலாறு


Inline image 3
ஆலயத்தின் உள்ளே

Inline image 4
சிவ பூஜை செய்ய தயார் நிலையில் இருக்கும் பக்தர்கள்


Inline image 5
சிவலிங்கங்கள் தனி பிரகாரங்களில்


Inline image 6
பூஜைக்கான  தயாரிப்பு பொருட்கள்


Inline image 7
சிவ பூஜை செய்ய தயார் நிலையில் இருக்கும் பக்தர்கள்


Inline image 8
சிவ பூஜை செய்ய தயார் நிலையில் இருக்கும் பக்தர்கள்


Inline image 9
நாதஸ்வரக் கலைஞர்கள்

Inline image 10
திரு. தங்க விசுவநாதன்

Inline image 11
மூலஸ்தான தெய்வத்திற்கு அபிஷேகம்


Inline image 12
சுபா,  திரு.திருநாவுக்கரசு - இல்லத்தில் சிவராத்திரி பூஜைக்கு செல்லும் முன்


Inline image 14
திரு.திருநாவுக்கரசு, பவள சங்கரி - இல்லத்தில் சிவராத்திரி பூஜைக்கு செல்லும் முன்


Inline image 15
சுபா, பவள சங்கரி - இல்லத்தில் சிவராத்திரி பூஜைக்கு செல்லும் முன்

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


அனைத்துலக தாய்மொழிகளின் தினம் 22.2.2014 - ஸ்டுட்கார்ட் பல்கலைக்கழக நிகழ்ச்சி

1 மறுமொழிகள்
Inline image 1

நேற்று மாலை ஸ்டுடார்ட் பல்கலைக்கழகத்தில் தாய்மொழிகளின் தினம் நிகழ்ச்சி நலமே நடைபெற்றது. மொழிகளில் ஆர்வமுள்ள பலர் வந்து கலந்து சிறப்பித்தனர். 

Inline image 9

தமிழ் மொழி பற்றிய ஒரு அறிமுக நிகழ்ச்சியைத் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக நானும் நண்பர் யோக புத்ராவும் வழங்கினோம். நண்பர் யோகா இலங்கைத் தமிழர். ஏறக்குறைய கடந்த 25 ஆண்டுகளாக ஸ்டுட்கார்ட் நகரில் வசிப்பவர். SWR  தொலைகாட்சி நிருவனத்தில் பணிபுரிபவர்.  எங்களுக்கு ஏறக்குறைய 30 நிமிடங்கள் பேச வழங்கியிருந்தார்கள்.

அதோடு எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை வங்காளதேசத்து மக்களின் கலையைச் சிறப்பிக்கும் ஒரு அறை. அதனால் அந்த அறைக்கு ஸ்டுட்கார்ட் நகரில் இருக்கும் மோனோகொல் என்ற ஒரு அமைப்பு பொறுப்பெடுத்துக் கொண்டிருந்தது. அந்த  அறையின் அலங்காரம் வரவேற்பு என அனைத்தும் வங்காள தேச முறைப்படி என ஏற்பாடு செய்திருந்தனர்.

மாலை உணவு வகை அந்த அறையில் வங்காள தேச உணவு என்பதாகவும் ஏற்பாடாகியிருந்தது. 

Inline image 2

தமிழ் பொழி பற்றிய உரையுடன் தமிழ் நூல்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் நாங்கள் ஒரு சிறு தமிழ் நூல் கண்காட்சி ஏற்பாடு செய்திருந்தோம். அந்த கண்காட்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை - மின்தமிழ் நண்பர்கள்
  • டாக்டர்.மா.ராஜேந்திரன்
  • டாக்டர்.பத்மா
  • திரு.மோகனரங்கன்,
  • டாக்டர்.கார்த்திகேசு
  • திரு.நரசய்யா
  • திரு.மாலன்
  • திருமதி பவளசங்கரி,
  • திரு.திவாகர்
  • டாக்டர்.நா.கண்ணன்
ஆகியோரது நூல்களையும் ஏனை பிற நூல்களையும் இணைத்திருந்தேன்.

Inline image 3

எங்கள் நிகழ்ச்சியை பாடர்ன் உட்டன்பெர்க் மானில ஆட்சிக்குழுவிலிருந்து வந்திருந்த திரு.ஹெல்முட் ஆல்பெர்க் தொடக்கி வைத்து பேசினார். பொதுவான ஒரு பேச்சாக அது அமைந்தது.

எங்கள் தமிழ் மொழி பற்றிய உரையில் நானும் யோகாவும் தமிழ் எழுத்துக்கள் அறிமுகம்,. தமிழ் மொழி பேசப்படும் நாடுகள், அதன் ஆரம்பகால எழுத்து வடிவம், தமிழ் நூல் அச்சு வரலாறு, முதல் தமிழ் நூல், குட்டன்பெர்க் அச்சு இயந்திரம், அச்சுக் கலை வளர்ச்சியில் போர்த்துக்கீஸிய தாக்கம், ஜெர்மானிய பாதிரிமார்களின் தமிழ்-ஜெர்மன் மொழி தொடர்பான செயற்பாடுகள், ஹாலே தமிழ் தொகுப்புக்கள் என பல தகவல்களை வழங்கினோம்.

Inline image 4

வந்திருந்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசிய திரு. ஆல்பெர்க் ஹாலே தொகுப்புக்களைப் பற்றி தாம் இதுவரை கேள்விப்பட்டதில்லை என்றும் அதனை பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளதாகவும் பின்னர் தேனீர் நேரத்தில் என்னிடம் குறிப்பிட்டார். வேறொரு சமயத்தில் இதுபற்றி மேலும் தகவல் அளிப்பதாக உறுதி கூறியிருக்கின்றேன். 

Inline image 10

அடிப்படையில் ஒரு எண்ணெய் சோதனைத்துறை எஞ்சீனியரான திரு.ஆல்பெர்க் இந்தோனீசியாவிலும் தாய்லாந்திலும் பல ஆண்டுகள் தொழில் முறையில் கழித்தவர் என்பதும் மலாய் கலாச்சாரமும் மொழியும் ஓரளவு அறிந்தவர் என்பதும் எனக்கு ஆர்வத்தை அளித்தது. எனது தமிழக தொடர்புகள், பயணங்கள், தமிழ் மரபு அறக்கட்டளை பணிகள் பற்றி பின்னர் அதிக நேரம் உரையாடினோம். இது அவருக்கு ஒருமுறை தமிழகம் வந்து கட்டாயம் ஆலயங்களில் உள்ள கல்வெட்டுக்களை காண ஆவலை உருவாக்கியுள்ளது. 

எங்கள் உரையோடு அதற்கு பின்னர் ஹங்கேரி நாட்டின் மொழி பற்றி ஒருவர் சிறு விளக்கம் அளித்தார்.

Inline image 6

அதன் பின்னர் வங்காள மொழி பற்றி டோய்ச்ச வெல்ல தொலைகாட்சி நிறுவனத்தில் பணிபுரியும் நிருபர் ஒருவர் ஆங்கிலம், வங்காளம் என இரு மொழிகளில் உரையாற்றினார்.

Inline image 7

அதன் பின்னர் வங்காள மொழி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மிகச் சிறப்பாக தேசிய உணர்வை வெளிப்படுத்தும் பாடல்களாகத் தேர்ந்தெடுத்து இவர்கள் நிகழ்ச்சியை நடத்தினர். அழகிய சேலைகளில்,  கண் கவரும் அலங்காரத்துடன் பெண்மணிகள் வந்து கலை நிகழ்ச்சியை செய்தது மிக அருமையாக அமைந்திருந்தது.

Inline image 8

இந்த நிகழ்ச்சி இரவு உணவுடன் முடிவுற்றது. இத்தாலிய உணவகத்தில் இரவு உணவை முடித்து இல்லம் திரும்பினேன்.

பல இனங்கள் வாழும் ஜெர்மனி போன்ற நாடுகளில் இவ்வகை நிகழ்ச்சிகள் மாறுபட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளையும் மொழி கலாச்சார பண்பாட்டு விஷயங்களையும் அறிந்து கொள்ள உதவுகின்றன. அருமையானதொரு நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்ட மகிழ்ச்சி மனதில் நிறைந்திருக்கின்றது.

சுபா


அனைத்துலக தாய்மொழிகளின் தினம் 22.2.2014 - ஸ்டுட்கார்ட் பல்கலைக்கழக நிகழ்ச்சி

0 மறுமொழிகள்
வணக்கம்.

பெப்ரவரி 22 உலக தாய்மொழிகளின் தினம். அன்றைய நாளில் உலகின் பல  மூலைகளிலும் அவரவர் தாய்மொழியைச் சிறப்பித்து  பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 

அந்த வகையில் ஜெர்மனியில் உள்ள ஸ்டுட்கார்ட் பல்கலைக்கழகம் உலக மொழிகளைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. வெவ்வேறு மொழிகளைப் பற்றிய, மொழிகளை அறிமுகம் செய்து சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. 

அந்த வகையில் தமிழ் மொழி, தமிழ் எழுத்து வகைகள் அதன் வளர்ச்சி என்ற தலைப்பில் ஒரு சிறிய சொற்பொழிவை திரு.யோக புத்ராவும் நானும் செய்ய விருக்கின்றோம்.

இந்தநிகழ்ச்சி சனிக்கிழமை 22.2.2014 ஸ்டுட்கார்ட் பல்கலைக்கழகத்தில் மதியம் 4 மணிக்கு ஆரம்பிக்க உள்ளது. அருகாமையில் உள்ளோர் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். 


Inline image 1

​அன்புடன்
சுபா


THF Announcement: ebooks update: 19/2/2014 *திருவாவடுதுறைச் சிவஞானயோகிகள் சரித்திரம்*

0 மறுமொழிகள்
வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட நூல்:

திருவாவடுதுறைச் சிவஞானயோகிகள் சரித்திரம்
குறிப்பு: இந்த நூல் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைவர்களின் இறுதி காலத்தில் அவர் உடல் நலிவுற்றைருந்த வேளையில் எழுதத் தொடங்கிய ஒன்று. இது முற்றுப்பெறாத நிலையிலேயே உள்ளது. இதனை எழுதி முடிக்கும் முன்னரே பிள்ளைவயர்கள் இறைவனடி சேர்ந்தார்கள்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 372


நூல் மின்னாக்கம் & மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி


சிவஞான யோகிகள் சிற்பம் - இது மாசிலாமணீஸ்வரர் ஆலய முன்சுவற் வாசற்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்றது.


சிவஞான யோகிகள் சிற்பம் - இது மாசிலாமணீஸ்வரர் ஆலய முன்சுவற் வாசற்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்றது.


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


THF Announcement: ebooks update: 16/2/2014 *பட்டீச்சுரப் புராணம்*

0 மறுமொழிகள்
வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட நூல்:

பட்டீச்சுரப் புராணம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 371


நூல் மின்னாக்கம் & மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி


Inline image 1
பட்டீஸ்வரம் கோயில் - தேனுபுரீஸ்வரர் சன்னிதி


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


மண்ணின் குரல்: பெப்ரவரி 2014:திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமி கோயில்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமி கோயில் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கும் முந்தைய பழமையான ஒரு கோயில். இக்கோயிலினுள் சென்று கோயிலின் அமைப்பை பார்க்கும் போது நமக்கு மிக முக்கியமாக மூன்று மாறுபட்ட வகையிலான கட்டிட கட்டுமான அமைப்பு அங்கு இருப்பது தெரியும்.

இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்தக் கோயிலின் ஆரம்பகால தோற்றம் பற்றிய செய்திகள் அறிய முடியாதவையாக உள்ளன. ஆயினும் கோயிலின் பழமையான வடிவம், சிற்பங்கள் மற்றும் இக்கோயிலில் இருந்த கல்வெட்டுகள் ஆகியவை இக்கோயில் படிப்படியாக விரிவாக்கப்பட்டமையை நன்கு வெளிப்படுத்துவனவாக அமைந்திருக்கின்றன. 

கும்பகோணத்தில் இந்த ஆலயம் இருந்த பகுதி வரகுண பாண்டியன் காலத்தில் அதாவது 9ம் நூ. பிற்பகுதியில் பாண்டியர் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பது தெளிவு. அதனை சாட்சியாகக் கொள்ளும் வகையில் ஆலயத்திற்குள் வரகுண பாண்டியனுக்கு ஒரு சன்னிதி அமைந்திருக்கின்றது. 

Inline image 1
வரணகுண பாண்டியன் 

சோழர் வரலாற்றில் மிக முக்கியமாகக் குறிப்பிடப்படுவது திருப்புறம்பயப்பெரும் போர். இப்போரில் சோழர்கள், பாண்டியர்கள் இருவர் அணியிலும் ஏறாளமானோர் இறந்தனர் என்பதும் இதன் இறுதியில் விசயாலயசோழனின் மகன் ஆதித்த சோழனின் படைகள் பாண்டியப் படைகளைத் தோல்வியுறச் செய்து வெற்றி கண்டது என்பதை அறிகிறோம் (பிற்காலச் சோழர் வரலாறு - சதாசிவ பண்டாரத்தார்). இந்த போருக்குப் பின்னர் கும்பகோணமும் போரில் வெற்றி கொண்ட சோழ நாட்டின் ஏனைய பகுதிகளும் சோழர்களால் மீட்கப்பட்டன. 

அதன் பின்னரும் போர்கள் பல நடந்தாலும் ஆதித்தனுக்குப் பின் வந்த முதலாம் பராந்தகன் தன் ஆட்சியை மேலும் விரிவு படுத்தி பெரிதாக்குகிறார். திருவிடை மருதூர் ஆலயத்தின் மிகப் பெரிய கட்டுமானப் பணி இந்த  முதலாம் பராந்தகன் காலத்தில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும். (மத்திய தொல்லியல் துறை -கல்வெட்டு செய்திகள் தொகுப்பு 19) 

அதன் பின்னர் இக்கோயிலில் மேலும் பல புதிய பகுதிகள் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சோழ மன்னர்களால் விரிவாக்கப்பட்டிருக்கின்றன. பராந்தக சோழன், சுந்தர சோழன், உத்தம சோழன், ராஜராஜ சோழன் கால கல்வெட்டுக்கள் இக்கோயில் முழுமையும் நிறைந்திருந்தன. ஆனால் அந்தக் கல்வெட்டுக்கள் அனைத்தும் ஆல்ய புணரமைப்பு என்ற பெயரில்  சிதைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிவோமா?

மத்திய தொல்பொருள் துறை இக்கோயிலின் கல்வெட்டுக்களை 1970க்கு முன்பே படியெடுத்து பதிப்பித்து வைத்தமையால் இன்று நமக்கு இக்கோயிலில் என்னென்ன கல்வெட்டுக்கள் இருந்தன என்ற சான்றுகள் கிடைக்கின்றன. இவையே சோழ மன்னர்களின் செய்திகளைத் தாங்கிய முறையான ஆவணங்களாக இன்று நமக்கு கிடைக்கின்றன. 1970க்குப் பின்னர் ஆலய நிர்வாகம் செய்த புணரமைப்பு பணி ஆலயத்திற்கு குறிப்பிடத்தக்க சேதத்தை விளைவித்திருக்கின்றது.  

கல்வெட்டுக்கள் புணரமைப்பின் போது அழிக்கப்பட்டமை போலவே கோயிலைக் கட்டியபோது வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கப்பட்ட பகுதிகள் புணரமைப்பு என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளமையும் இன்றைய நிலையில் காண்கின்றோம். வானலிங்கங்கள் என்ற வகையில் ஆலயத்தின் வேறிடத்தில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கங்கள் எல்லாம் பெயர்த்தெடுக்கப்பட்டு ஒரு பகுதியில் இரண்டு வரிசையாக நட்சத்திரங்களின் பெயர் கொடுக்கப்பட்டு ராசி நட்சத்திரங்களுக்கான லிங்கங்களாக இங்கே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆகம முறைப்படி விநாயகர் இருக்க வேண்டிய இடத்திலிருந்து பெயர்க்கப்பட்டு வேரிடத்திலும், துர்க்கை பெயர்க்கப்பட்டு வேறிடத்திலும் என வைக்கப்பட்டிருப்பது நமக்கு இப்படியும் கூட கவனக் குறைவுடன் புணரமைப்பு பணிகளைச் செய்கிறார்களா என திகைக்க வைக்கின்றது.  இது இன்று நம் முன்னே இத்தகைய புணரமைப்பு பணிகளால் ஏற்படும் சேதங்களையே காட்டுகிறது.

தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 19ல் இக்கோயிலின் அனைத்துக் கல்வெட்டுகள் பற்றிய செய்திகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த அரும்பெருங் காரியத்தை செயத மத்திய தொல்பொருள் ஆய்வு நிருவனத்திற்கு வரலாற்றில் ஆர்வமுள்ளோர் அனைவரும் நன்றி செலுத்தக் கடமை பெற்றுள்ளோம்.

இன்று வெளியிடப்படும் விழியப் பதிவு இரண்டு பகுதிகளைக் கொண்டது. இவை இரண்டையும் தொடர்ச்சியாகக் காணும் போது ஆலயத்தின் பகுதிகளையும், எவ்வகையில் கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களையும் நன்கு அறிந்து கொள்ள முடியும்.

21 நிமிட விழியப் பதிவு இது. பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதை வரவேற்கிறேன்.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/02/2014_14.html

யூடியூபில் இப்பதிவைக் காண: http://www.youtube.com/watch?v=Yhc4KM4p7Vo&feature=youtu.be

புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும்


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


THF Announcement: ebooks update: 9/2/2014 *சிறப்புப் பாயிரங்கள்*

0 மறுமொழிகள்

வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட நூல்:

சிறப்புப் பாயிரங்கள்
*ஏனைய நூல்களில் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை எழுதிய சிறப்புப் பாயிரங்களின் தொகுதி இது.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 370

நூலை வாசிக்க!

நூல் மின்னாக்கம் & மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி



திருவாவடுதுறை திருமடத்தின் நூலகத்தில் உள்ள மெலும் சில சுவடிக் கட்டுகள்.


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


மண்ணின் குரல்: பெப்ரவரி 2014:சோழ நாட்டு கோயில் - குடந்தை கீழ்கோட்டம் (நாகேஸ்வரசுவாமி கோயில்)

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

சோழ பரம்பரையின் மாவீரன் ஆதித்த கரிகாலனின் மரணச் செய்தியும் அதன் பின்னனியில் இருக்கும் உண்மையும் தெளிவு பெறா விஷயங்களாகவே உள்ளன. பொன்னியின் செல்வன் நாவலை வாசித்தவர்களில் பலருக்கு அருள்மொழிவர்வனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருப்பது போலவே ஆதித்த கரிகாலனின் உருவத்தோற்றத்தையும் காண நிச்சயம் ஆவல் இருக்கும். அந்த ஆவலை பூர்த்தி செய்கின்றது சோழர்கள் கட்டிய கோயில்களில் ஒன்றான குடந்தை கீழ்கோட்டம் (கும்பகோணம்). இளம் தோற்றத்துடன் இந்த இரண்டு அரச குமாரர்களின் உருவச் சிலையும் மேலும் பல அழகிய சிற்பங்களும் இக்கோயிலில் அமைக்கப்பட்டிருக்கின்றன. தற்சமயம் இந்தக் கோயில் நாகேஸ்வர சுவாமி கோயில் என்ற பெயருடனேயே அழைக்கப்படுகின்றது.

கல்வெட்டுத்துறை ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆய்வு செய்வதற்குப் மிகப் பிடித்தமானதொரு கோயில் இதுவென்றால் அது மிகையில்லை. 

முதலாம் பராந்தக சோழன் தொடங்கி, ஆதித்த சோழன், உத்தம சோழன், ஆதித்த கரிகாலன், ராஜராஜ சோழன் ஆகியோரின் கல்வெட்டுக்களைத் தாங்கி நிறகும் ஒரு ஆலயம் இது.

கோப்பரகேசரி வர்மன் எனச் சிறப்பு பெயர் கொண்டழைக்கப்பட்ட ஆதித்த கரிகாலனின் பெருமை சொல்லும் கல்வெட்டுக்கள் மிகத் தெளிவாக வாசிக்கும் நிலையில் இன்றளவும் உள்ள கோயில் இது. 

கோயில் அமைப்பில் வியக்கவைப்பது கோயில் கட்டுமானமும் சிற்ப வேலைப்படுகளுமே!  ஏனைய கோயில்களை விட மாறுபட்ட முறையில் சோழ குலத்தோரின் அழகிய உருவச் சிலைகள் அற்புதமாக வடிக்கப்பட்ட கோயில் இது. 

Inline image 1

வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி வர்மன் என சொல்லப்படும் சோழர்களுக்குப் பெருமை சேர்க்கும் நிகழ்வைச் சித்தரிக்கும் கற்சிற்பமும் இந்தக் கோயிலில் இடம்பெறுகின்றது. பாண்டியனின் தலையை தன் ஒரு கையால் தூக்கிப் பிடித்து மறு கையில் வாளுடன் வரும் காட்சி இது.

இந்தக் கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் செய்திகள் சோழ மன்னர்கள் கோயிலில் விளக்கேற்ற நிலங்களைக் கொடையாக வழங்கிய செய்திகளையும், சோழ மன்னர்கள் சில பெயர் குறிப்பிடப்படும் பிராமணர்களுக்குக் கொடையாக வழங்கிய நிலங்களைப் பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியிருக்கின்றன. எவ்வகை விளக்குகள் ஏற்றப்பட்டன, அதன் தன்மைகள், விளக்கேற்ற தேவையான எண்ணெய் போன்ற தகவல்கள் கல்வெட்டுச் செய்தியில் அடங்கும்.

இக்கோயிலுக்குச் செல்லும் ஒருவர் இங்கு காணக்கிடைக்கும் கல்வெட்டுக்களை முழுமையாக வாசித்து முடித்தால் சோழர்கால அரச நடைமுறைகளைப் பற்றி விரிவாக தகவல்களை அறிந்து கொள்ளலாம். இக்கோயில் இந்திய மத்திய தொல்பொருள் நிலையத்தால் முழுமையாக படியெடுக்கப்பட்டு விட்டது என்பதும் அவை தொகுதியாக வெளியிடப்பட்டுள்ளன என்பதும் சிறப்பான விஷயம்.

இந்தப் பதிவில் கோயிலின் பகுதிகளைக் காண்பதோடு டாக்டர் பத்மாவதியும், பரந்தாமனும் கல்வெட்டுக்களை வாசித்து பொருள் சொல்வதையும் காணலாம்.

ஏறக்குறைய 21 நிமிட விழியம் இது. தொடர்ச்சியாக விளக்கம் என்றில்லாமல் இடைக்கிடையே  விளக்கங்கள் இடம்பெருகின்றன.. இதனை மாற்றி வெட்டி ஒட்டுவதில் சிரமம் ஏற்பட்டதால் பெருமளவு மாற்றாமல் ஓரளவு மட்டுமே எடிட் செய்து வெளியிடுகின்றேன். பார்த்து கருத்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

வலைப்பூவில் காண: http://video-thf.blogspot.de/2014/02/2014.html

யூடியூபில் காண:http://www.youtube.com/watch?v=4m7hTtYTeKQ&feature=youtu.be


இக்கோயிலின் சில படங்களை வலைப்பக்கத்தில் இணைத்திருக்கின்றேன். புகைப்படங்களின் முதல் தொகுப்பு இது. 

உதாரணமாக ஒன்று

Inline image 1



மேலும் காண...

இந்தத் தொகுப்பில் ஆலய கோபுரம், சிற்பங்கள், ஆடல்வல்லான் சன்னிதி சிற்பங்கள் என 50 படங்கள் இடம்பெறுகின்றன. கற்சிற்பங்களின் கலை வண்ணம் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.


பதிவு செய்யப்பட்ட நாள்: 01.03.2013

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


THF Announcement: ebooks update: 02/02/2014 *ஸ்ரீ குமர குருபர ஸ்வாமிகள் சரித்திரம்*

0 மறுமொழிகள்
வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட நூல்:

ஸ்ரீ குமர குருபர ஸ்வாமிகள் சரித்திரம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 369

நூலை வாசிக்க!

நூல் மின்னாக்கம் & மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி

குறிப்பு. நூலின் பக்கங்கள் இடையில் இரண்டு பக்கங்கள் இணைந்து ஒன்றாக வருவதால் பிடிஎப் கோப்பை இடையில் திருப்பி வாசிக்க வேண்டும்.



திருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர் ஆலயத்தூண்களில் தென்படும் தமிழ் கல்வெட்டுக்கள்

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES