வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.
நூல்: தமிழ்க் கோயில்கள் - தமிழர் பண்பாடு
ஆசிரியர்: தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்
நூல் குறிப்பு:
வானொலிப் பேச்சாக வந்தவற்றை கட்டுரை வடிவிலும் வழங்கியிருக்கின்றார் பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள்.
நூல் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதி தமிழ்க் கோயில்கள் என்ற தலைப்பில் 5 கட்டுரைகள் ஆகமங்கள், குடைவரை அமைப்பு, கோயில்கள், மாளிகைகள் சரித்திரச் சான்று என்ற விஷயங்களை முன் வைத்து அமைந்துள்ளன.
அடுத்த பகுதியாக அமைவது தமிழர் பண்பாடு பற்றிய விஷயங்கள். இதில் பாஸ்கரத் தொண்டைமான் அவர்களின் சிற்பத்தில் ஓவியத்தில் தமிழர் பண்பாடு என்ற கட்டுரையுடன், பி.ஸ்ரீ.ஆச்சார்யாவின் இலக்கியத்தில் தமிழர் பண்பாடு, கே.வாசுதேவ சாஸ்திரியின் இசையில் தமிழர் பண்பாடு, எஸ்.சிவகுமாரின் மடாலயங்களில் தமிழர் பண்பாடு, அ.ரா.இந்திராவின் தினசரி வாழ்வில் தமிழர் பண்பாடு என்ற 4 கட்டுரைகளும் இடம்பெறுகின்றன
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 397
நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]