வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்: செண்டலங்காரன் - விறலி விடு தூது
பதிப்பாசிரியர்: புலவர் திரு.கோவிந்தராசனார்.
பதிப்பாளர்: தஞ்சாவூர் சரபோஜியின் சரஸ்வதி மகால் நூல் நிலையம்
நூலைப் பற்றி..
தூது இலக்கியம் தமிழ் மொழிக்குரிய பலவகைப் பிரபந்தகளுள் ஒன்றாகும். புலவர் தாம் விரும்பும் தெய்வங்களிடத்தும் வள்ளல்களிடத்தும் பாணன், விறலி போன்றாருடனும் கிளி, வண்டு, தென்றல் போன்றவற்றையும் தூது விடும் பாங்கில் தூதாகும் பாடல்களைப் பாடியுள்ளனர்.
இத்தூது பாட்டுடைத் தலைவனாகிய செண்டலங்காரன் என்னும் வள்ளலைப் புகழும் வகையில் ஆடலில் சிறந்த விறலியைத் தன்னிடம் ஊடல் கொண்ட மனையாளிடம் தூது விடும் பாங்கில் அமைக்கப்பட்ட நூல்.
நூலில் செண்டலங்காரன் என்ற வள்ளனின் கதையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு வாகுபட்டர் கதையும் உள்ளது.
நூல் முழுதும் செய்யுள் நடையில் உள்ளது
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 418
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: மறைந்த டாக்டர்.கி.லோகநாதன், மலேசியா.
மின்னாக்கம்:சுபாஷிணி
மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்
நூலை வாசிக்க!
அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "THF Announcement: E-books update: 24/05/2015 *செண்டலங்காரன் - விறலி விடு தூது*"
Post a Comment