வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்: ஸ்ரீ தில்லையம்மன் வரலாறு
எழுதியவர்: புலவர்.து.சோ நடராசன், சிதம்பரம்
வெளியிடுவோர்: சிதம்பரம் தில்லையம்மன் கோயில் குடமுழுக்கு விழாக் குழுவினர்.
நூலைப் பற்றி..
சிதம்பரத்தில் உள்ள தில்லை நடராசப்பெருமான் கோயில் போல தில்லையம்மன் கோயிலும் தலபுராணம் கொண்ட ஒரு வழிபடுதலம். பழமையான வரலாற்றைக் கொண்ட இக்கோயில் மீண்டும் 13ம் நூற்றாண்டில், கி.பி.1229 முதல் 1275 வரை சோழனாட்டின் வடபகுதியை கைப்பற்றி ஆட்சி புரிந்த பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் மீண்டும் கட்டப்பட்டது.
இப்படி மேலும் பல வரலாற்றுத் தகவல்களையும் புராணத் தகவல்களையும் விளக்கும் சிறு நூல் இது.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 419
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.
மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
மின்னூலாக்கம்: திரு.அன்பு ஜெயா
இவர்கள் அனைவருக்கும் நன் நன்றி!
நூலை வாசிக்க!
அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
1 comments to "THF Announcement: E-books update: 31/05/2015 *ஸ்ரீ தில்லையம்மன் வரலாறு*"
May 30, 2015 at 11:18 PM
சிறிய நூல் தானே. முழுதும் படித்தேன். குடமுழுக்கு விழா எடுத்த ஆத்திகர்களின் பக்தி நன்கு தெரிகிறது. திரு. சிவராமகிருஷ்ணனுக்கும், முனைவர் திருவேங்கடமணிக்கும், திரு. அன்பு ஜெயாவுக்கும், சுபாஷிணிக்கும் வாழ்த்துக்கள்.
Post a Comment