வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்: ஆறாயிரப்படி குருபரம்பராப்ரபாவம் (குருபரம்பராவிவரனமென்கிற அருமையான கிரந்தத்துடன் சே.கிருஷ்ணமாசாரியார் பதிப்பு)
ஆசிரியர்: பின்பழகிய பெருமாள் சீயர்
பதிப்பு: திருவல்லிக்கேணி நோபில் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது
ஆண்டு: 1927
நூலைப்பற்றி:
இந்த நூல் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டுள்ளது.
நூல் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் ஆழ்வார்கள் வைபவம் எனவும் இரண்டாம் பாகம் ஆசாரியர்கள் வைபவம் என்றும் வகைப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இறுதிப்பகுதியாக குருபரம்பரா விவரணம் வழங்கப்பட்டுள்ளது.
ஆழ்வார்கள் வைபவம்
- பொய்கையாழ்வார்
- பூதத்தாழ்வார்
- பேயாழ்வார்
- திருமழிசைப்பிரான்
- குலசேகரப் பெருமாள்
- பெரியாழ்வார்
- ஆண்டாள்
- தொண்டரடிப்பொடியாழ்வார்
- திருப்பாணாழ்வார்
- திருமங்கையாழ்வார்
- நம்மாழ்வார்
- மதுரகவியாழ்வார்
ஆசாரியர்கள் வைபவம்
- நாதமுனிகள்
- உய்யக்கொண்டார்
- மணக்கால்நம்பி
- யமுனைத்துறைபவர்
- இளையாழ்வார்
- எம்பார்
- பட்டர்
- நஞ்சீயர்
- நம்பிள்ளை
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 457
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
1 comments to "THF Announcement: E-books update:11/9/2016: ஆறாயிரப்படி குருபரம்பராப்ரபாவம்"
September 11, 2016 at 3:18 AM
தமிழ் மரபு அறக்கட்டளையின் போற்றத்தக்க வரவுகளில் இது ஒன்று. எனக்கு தெரிந்த மற்ற ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
இன்னம்பூரான்
Post a Comment