வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
முதன் முதலில் நாகப்பட்டினத்தில் தூயவளனார் கல்லூரி தொடங்கப்பட்டது. பின்னர் திருச்சிக்கு மாற்றம் செய்து அது முதல் திருச்சியிலேயே இக்கல்லூரி செயல்பட ஆரம்பித்தது.
தூய வளனார் கல்லூரியின் செயலாளர் திரு.செபாஸ்டியன், இந்த கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் திரு.சூசை ஆகியோர் கல்லூரியைப்பற்றிய அறிமுகத்தை வழங்குகின்றனர்.
கல்லூரியின் அதிபர் அருட்தந்தை.பிரிட்டோ இக்கல்லூரியின் வரலாற்றை விவரிக்கின்றார். அதில் குறிப்பாக:
- 170 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்படும் கல்லூரி
- 16ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தின் கடலோரப்பகுதிகளிலும் மேலும் பல நகர்களிலும் சமயம் பரப்பும் பணியிலும் நலிவுற்ற மக்களுக்குச் சேவைகளைச் செய்து வந்தமை
- வீரமாமுனிவரின் சமய, தமிழ் மொழி நடவடிக்கைகள்
- பிரான்சு நாட்டிலிருந்து வந்த பாதிரிமார்களின் சேவைகள்
- ராபர்ட்.டி.நோபிலியின் சமய, தமிழ் மொழி நடவடிக்கைகள் - மதுரை
- கல்வியை பரவலாக அனைத்து தரப்பு மக்களுக்கும் உரியதாக்க பாதிரிமார்கள் செய்த முயற்சி
- இக்கல்லூரியின் ஆய்வுத் துரைகள்
- இக்கல்லூரியின் மிகப்பெரிய நூலகம்
- இக்கல்லூரியில் படித்த அறிஞர்கள்
...
இப்படி பல தகவல்களை விரிவாக இப்பேட்டியில் கேட்கலாம்.
இப்பேட்டியைச் செய்ய உதவிய தமிழ்த்துறை பேராசிரியர் திரு.சூசை அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/ 2016/11/blog-post_34.html
யூடியூபில் காண: https://www.youtube.com/ watch?v=68-p5W-Pq8I&feature= youtu.be
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "மண்ணின் குரல்: நவம்பர் 2016: திருச்சி தூயவளனார் கல்லூரியின் வரலாறு"
Post a Comment