வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய தமிழ் சஞ்சிகை மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்: சோவியத் யூனியன்
இதழ்: 9 (485) 1990
சஞ்சிகையைப்பற்றி:
சோவியத் இதழ்கள் பற்றின அறிமுகம்.
விளாடிமிர் இலியிச் லெனின் தலைமையில் இயங்கிய போல்ஷ்விக் கட்சி, 1917ஆம் ஆண்டு ஜார்ஜ் மன்னரை எதிர்த்து ரஷ்யாவில் புரட்சியினை நடத்தி ஆட்சியதிகாரத்தினைக் கைப்பற்றியது. வரலாற்றில் நவம்பர் புரட்சி என்று அது அழைக்கப்படுகிறது. உலகில் அமைக்கப்பட்ட இரண்டாவது கம்யூனிஸ்ட் ஆட்சியாக அது அறிவிக்கப்பட்டது. புரட்சியினைத் தொடர்ந்து ரஷ்யாவினை சுற்றியுள்ள சிறு நாடுகள் அதன் தலைமையில் சேர்ந்தப்பிறகு சோவியத் கூட்டமைப்பு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, தேசிய இனங்களின் முழு அங்கீகாரம் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பாக அது விளங்கியது. இந்த ஜனநாயக்கப் பண்பினார் தமது கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் பண்பாடு மற்றும் இலக்கியங்களின் செழுமைகளை மற்ற நாடுகள் புரிந்துக் கொள்ளும் வகையில் பல்வேறு முயற்சிகளை சோவியத் யூனியன் மேற்கொண்டது.
அந்த முயற்சியில் சோவியத் படைப்பாளிகளின் ஆகச் சிறந்த படைப்புகள் உலகின் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டு, கோடிக்கணக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டு உலக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கப்பட்டன. இது ரஷ்யா மற்றும் சோவியத் கூட்டரசின் மக்களின் இலக்கிய மற்றும் வரலாற்று பங்களிப்பை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டின.
அதில் ஒரு அங்கமாக சோவித்தின் நிர்மாணக் கட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை பற்றி உலகம் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சோவியத் யூனியன் என்ற இதழ் 1930ஆம் ரஷ்யாவின் மாபெரும் எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி அவர்களால் தொடங்கப்பட்டது. அவர் மறைந்த பிறகு அந்த இதழ் வெளிவருவதில் தடைகள் வந்தன. பிற்பாடு சோவியத் அரசினால் அதிகாரப் பூர்வமாக 1950ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டு சோவியத் கூட்டரசு சிதறும் வரையில் தொடர்ந்து வந்தது. அது மட்டுமின்றி ரஷ்ய, தமிழ், வங்காளி, உருது, ஆங்கிலம்,அரபு, சீன, பின்னிஷ், பிரெஞ்ச், ஜெர்மன், கிரேக்க, அங்கேரி, இத்தாலி, ஜப்பானிய, கொரிய, மங்கோலிய, போர்ச்சுகீசிய, ருமேனியா, செர்போ-குரோத்திய, ஸ்பானிஷ், வியாத்நாமிய மொழிகளில் அது வெளியிடப்பட்டது.
மேற்கண்ட மொழிகளிலில் அது வெளியிடப்படும்போது அந்த மொழியில் நாட்டுடன் சோவியத் கூட்டரசுக்கு உள்ள அரசியல் மற்றும் பண்பாட்டு உறவுகள் முன்னிலைப்படுத்தப்பட்ட கட்டுரைகள் படைப்புகள் அதில் பிரதானமாக இருந்தன, அதன் ஒரு பகுதியாக தமிழில் வெளியிடப்பட்ட சோவியத் யூனியன் இதழ்களில் ஒன்று இது.
சர்வதேசத் தரத்தில் தமிழ் எப்படி பயணிக்க முடியும் என்பதற்கு இந்த இதழ் ஒரு சான்று. மிக உயர்ந்த தரத்தில் வெளியிடப்பட்ட சோவியத் யூனியன் இதழ்களில் 1990 ஆண்டு வெளிவந்த இரண்டு இதழ்கள் தமஅ வாசகர்கள் மட்டுமின்றி சர்வதேசத் தரத்தில் தமிழை கொண்டு செல்ல முயலும் அனைவருக்குமான பரிசாக வழங்குகின்றேன். ரஷ்ய புரட்சி 1917 நவம்பர் மாதம் 7ஆம் நாள் அதிகாரப் பூர்வமாக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது. அது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 7 அன்று கொண்டாடப்படுகிறது. அதன் பரிசாக வாசகர்களுக்கு என்னுடைய சேகரத்திலிருந்து.
-கௌதம சன்னா
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 459
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.கௌதம சன்னா
இந்த நூலை தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் சேகரத்திற்காக வழங்கிய திரு.கௌதம சன்னா அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "THF Announcement: E-books update:07/11/2016: சோவியத் யூனியன் இதழ்: 9 (485) 1990"
Post a Comment