திருநெல்வேலி மாவட்டத்தின் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் 22.12.2016 அன்று ஒரு நாள் கருத்தரங்கத்தினைத் தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தோம். இந்தக் கருத்தரங்கு ஆவணப்படுத்துதலின் அவசியம் ,மற்றும் அதன் தொழில்நுட்ப முறைகள், சவால்கள் ஆகியன பற்றி அலசும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருநெல்வேலி மாவட்டத்தின் பல கல்லூரிகளிலிருந்து ஆய்வு மாணவர்கள் திரளாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வினை முழு மூச்சுடன் ஏற்பாடு செய்த இக்கல்லூரியின் நூலகர் முனைவர் பாலச்சந்திரன் அவர்களும் கல்லூரி முதல்வரும் பாராட்டுதலுக்குறிவயவர்கள்.
அத்தோடு இந்த நிகழ்வில் தலைமையேற்று உரையாற்றிய நெல்லை மாவட்ட ஆட்சியர் முனைவர் கருணாகரன் அவர்கள், மாணவர்களுடன் ஆசிரியர்களுடனும் மிகுந்த அன்புடனும் ஈடுபாட்டுடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதோடு எனது உரையினையும் முழுமையாக கேட்டு கேள்வி பதில் அங்கத்திலும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டமை பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது.
இத்தகைய நிகழ்வுகள் உடனடி தீர்வுகளுக்கும் வித்திடுகின்றன என்பதை மாணவர்களது தொடர்ந்த கருத்துப் பதிவுகளின் வழி அறிந்து கொள்ள முடிந்தது.
இக்கருத்தரங்கு பற்றி பத்திரிக்கைகளும் செய்திகள் வெளியிட்டு உதவின.
சில புகைப்படங்களும் செய்திகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன.
சுபா