மண்ணின் குரல்: பெப்ரவரி 2017:திருக்குறள் ஐரோப்பிய மொழி பெயர்ப்புக்கள் - முனைவர்.க.சுபாஷிணி

1 மறுமொழிகள்

வணக்கம்.

11.02.2017 சனிக்கிழமை வட  அமெரிக்காவின் டால்லஸ் நகரில் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் திருக்குறள் விழா நடைபெற்றது. அதில் காலையில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வில் மூன்று சொற்பொழிவுகள் இடம் பெற்றன. அதில் திருக்குறள் - ஐரோப்பிய மொழி பெயர்ப்புக்கள் என்ற சொற்பொழிவின் பதிவு இன்று வெளியிடப்படுகின்றது.
சொற்பொழிவாளர். முனைவர்.க.சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை.

விழியப் பதிவைக் காண:      http://video-thf.blogspot.de/2017/02/blog-post_26.html


நன்றி. இப்பதிவை நமக்காக செய்து வழங்கிய திரு.அருண்குமார் (Frisco, Texas) அவர்களுக்கும் சாஸ்தா அறக்கட்டளை நிறுவனர்கள் திரு.வேலு திருமதி விசாலாட்சி ஆகியோருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரத்தியேகமான நன்றியைப் பதிகின்றோம்.!

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

மறுமொழிகள்

1 comments to "மண்ணின் குரல்: பெப்ரவரி 2017:திருக்குறள் ஐரோப்பிய மொழி பெயர்ப்புக்கள் - முனைவர்.க.சுபாஷிணி"

இராய செல்லப்பா said...
March 4, 2017 at 6:15 PM

டாக்டர் சுபாஷினி அவர்களின் தங்குதடையற்ற தமிழ் உரையைக் கேட்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது. இரண்டே இரண்டு திருக்குறள்கள் தனது வாழக்கையை இன்றளவும் இயக்கிவருவதை அழகாகக் குறிப்பிட்டார். திருக்குறளின் இன்றுள்ள வடிவமே சரியானது எனக் கருதவேண்டாம், பல பிழைகளும் பாடபேதங்களும் இருக்கலாம், அவை ஆராயப்படவேண்டும் என்ற துணிச்சலான கருத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார். தமிழ் மாணவர்களும் ஆர்வலர்களும் இதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்ளவேண்டும். தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளுக்கு துணை நிற்க வேண்டும்.

- இராய செல்லப்பா நியூஜெர்சி.

http://chellappatamildiary.blogspot.com

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES