தாய்ப் பாலின் அவசியம்,
- ஒவ்வொரு தாயின் பாலும் அந்தக் குழந்தைக்கு தகுந்தவாறு சுரக்கிறது. உதாரணமாக குறைவான எடையுள்ள குழந்தைகளுக்கு சுரக்கும் பாலில் புரதச்சத்து அதிகம்.
- தக்க கலவையில் உணவு விகிதம் உள்ளது. தேவையான கார்ப்பொஹைட்ரேட், புரதச் சத்து, கொழுப்பு, தாது உப்புக்ள் , உயிர்சத்துகள் ஆகியவை உள்ளன.
- எளிதில் ஜீரணமாகும் தன்மை உடையது.
- .கலப்படம் இல்லாதது
- விலை கொடுத்து வாங்க முடியாதது.
- குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி தரும் பொருள்கள் பாலில் சுரப்பதால் நோய்த் தொற்றிலிருந்து காக்கிறது.
- ஒவ்வாமை ஏற்படாது.
- உடல் நலம், உள நலம் குழந்தைகு நன்கு வளர்கிறது.
- குழந்தைகும் தாய்க்கும் பாசப் பிணைப்பை உருவாக்குகிறது.
- குழந்தையின் உடல் வயதிற்கேற்ப எடை கூடுகிறது.
- இரண்டு குழந்தைகள் பெறுகின்ற தாய்மார் இரண்டு குழந்தைகளுக்கும் தேவையான பலைத் தரமுடியும்.
- குழந்தையின் புத்திசாலித் தனம் IQ தாய்ப்பால் கொடுப்பதால் பிற குழந்தைகளைவிட ஆதிகமாகக் காணப்படுகிறது.
- .இயற்கையிலேயே குழந்தைகுத் தாய்ப்பால் கொடுப்பதால் அடுத்து உருவாகும் குழந்தைப் பிறப்பு தளிப் போடப்படுகிறது.
- குழந்தை பிறந்தவுடன்கருப்பை பழைய நிலைக்குத் திரும்ப குழந்தை பிறந்த அரை மணி நேரத்துக்குள் கொடுக்கப் படவேண்டும்.
- குழந்தை பிறந்தபின்பு ஏற்படும் உதிரப்போக்கு அரை மணி நேரத்திற்குள் தாய்ப் பால் தந்தால் கட்டுப் படுத்தப்படும்.
- தாய்ப் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பகப்புற்று நோய் வரும் வாய்ப்பு குறைவு.
- ஆறு மாதம் வரை தாய்ப் பால் போதுமானது.
- ஆறு மாதங்களுக்குப்பின் இணை உணவுகள் கொடுக்கப்படவேண்டும்.. குழந்தையின் இரண்டு வயது வரையிலும் தாய்ப் பால் கொடுக்கலாம்.
- இதன் அவசியத்தைத் தெரிவிப்பதற்காக ஆகஸ்டு முதல் வாரத்தை, 1 முதல் 7 வரையிலும் தாய்ப்பால் வாரமாக உலக முழுவதும் கொண்டாடப்படுகிறது.
வெ.சுப்பிரமணியன் ஓம்.
மறுமொழிகள்
0 comments to "தாயின் பால் முழுமை"
Post a Comment