தெய்வத்தமிழில் வடமொழிச் சுலோகம்
இறுதிக் காலத்தில் இவ்வாறு காட்சி அளிக்கவேண்டும் எனக் கண்ணபிரானை வேண்டல் (பதினான்குசீர்க் கழில் நெடிலடியாசிரிய விருத்தம்) அச்சுதா கோவிந்த மாதவா வசுதேவர் அன்புடன் ஈன்ற மதலாய் அடியேற்கு வரப்போகும் மரணோற்ச வத்தினில் ஐயநீ குழந்தை வடிவாய் இச்சையுடன் இணையடியைப் பிணையல்போல் வைத்துமே எழிலுடன் சாய்ந்த வண்ணம் இணையிலா உச்சியிற் கொண்டையும் மயிலினது இறகையும் அதிற் சேர்த் தியே நச்சியே கையினில் வேய்ங்குழலை ஏந்தியே நளினவாய் தன்னில் வைத்து நயமுடன் ஓசைதனை எழுப்பிய வண்ணமே நாதநீ காட்சி தருவாய் எச்சகமும் நிறைந்தபே ரொளியாய் விளங்குநீ என்பொருட் டுருவ மாக எழிலுடன்காட்சியருள் கண்ணனே வண்ணனே எங்கும் நின்ற் கருணை வடிவே
(திரு வடிவெல் முதலியார் அவர்கள்) அன்புடன் ஓம் வெ.சுப்பிரமணியன் |
மறுமொழிகள்
0 comments to "தமிழில் வ்டமொழிச் சுலோகம்"
Post a Comment