Fwd: [தமிழ்ச் சிந்தனை (v.dotthusg)] Re: [MinTamil] அனுமத்தோடி

0 மறுமொழிகள்



---------- Forwarded message ----------
From: V.Subramanian <v.dotthusg@gmail.com>
Date: 2009/12/16
Subject: [தமிழ்ச் சிந்தனை (v.dotthusg)] Re: [MinTamil] அனுமத்தோடி
To: v.dotthusg@gmail.com



ஓம்.
16-12-09 ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி.

ஹனுமத் ஸ்துதி

ஆஞ்சனேயமதி பாடலாலனம்
காஞ்னாத்ரி கமனீய விக்ரகம்
பாரிஜாத தருமூலவாசினம் பாவயாமி பவமானநந்தனம்
கோஷ்பதீக்ருத வாரிசம் மசகீக்ருத ராக்ஷஸம்
ராமாயண மஹாமாலா
ரத்னம் வந்தே நிலாத்மஜம்
யத்ர ய்த்ர ரகுராம கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்சலீம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதீம் நமத ராக்ஷஸாந்தகம்
அஞ்சனானந்தனம் வீரம்
அசோகவன சஞ்சாரம்
ஜானகி சோக நாசனம்
கபீசமக்ஷஹந்தாரம்
வந்தே லங்கா பயங்கரம்
அதுலித பல தாமம்
சுவர்ணசைலாப தேஹம்
தனுஜவனக்ரிசானும்
ஜ்ஞானி நாமக்ரகண்யம்
சகலகுண நிதானம் வாநராணாமதீசம்
ரகுபதி வரதூதம் வாதஜாதம் நமாமி

இதி ஹனுமத் ஸ்துதி:
சமாப்தம்.

ஸ்ரீ பஞ்சரத்ன ஸ்தோத்ரம்-
(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது)

      ஸீதாகில விஷயேச்சம்
      ஜாதானந்தாஸ்ரு புளகமத்யுச்சம்
      சீதாபதி தூதாத்யம்
      வாதாத்மஜ மத்ய பாவயே ஹ்ருத்யம்

(காமக்ரோதாதிகள் விட்டு இதய சுத்தியுடன் ஸ்ரீ ராமனைப் பிரர்த்தித்து ஆனந்த கண்ணீர் பொழிந்து மெய் சிலிர்த்து நிர்மலமான உருவத்தோடு இருக்கும் ஸ்ரீ ராமனின் முக்கியதூதுவராகிய ஆஞ்சனேயனை நான் மனதில் தியானிக்கிறேன்)

      த்ருணாருண முககமலம்
      கருணாசரசபூர புரிதாபாங்கம்
      சஞ்சீவனமாசாஸே மஞ்சுள
      மஹிமானமஞ்சனா பாக்யம்

(உதய சூரியனின் ஒளிபோல் பிரகாசிக்கின்ற முககமலம் உடையவனும், அபயம் தேடி வருபவர்களைக் கருணையுடன் காத்தருள்பவனும், மகானும், ஜீவனைக் கொடுப்பவனும், அஞ்சனையின் சௌபாக்யமும் ஆகிய ஆஞ்சனேயனைச் சரணடைகிறேன்.)

      சம்பர வைரி சராதிகமம்புஜதள
      விபுல லோசநோதாரம்
      கம்புகளமனில திஷ்டம்
      விம்பலஜ்வலிதோஷ்ட மேகவலம்பே

(காம தேவனின் ஆசை அம்புகளைத் தோற்கடித்தவனும், விசாலமான கமலதளம் போன்ற கண்களை உடையவனும், சங்கு போன்ற அழகுள்ள கழுத்தும்  சிவந்து துடித்த கவிள் தடங்களும் உதடுகளும் உள்ளவனும், வாயுதேவனின் பாக்யத்தால் பிறந்தவனுமாகிய ஆஞ்சனேயனை நான் சரணடைகிறேன்.)

      தூரீக்ருத சீதார்த்தி:
      ப்ரகடீக்ருத ராம வைபவ ஸ்பூர்த்தி
      தாரித தசமுக கீர்த்தி:
      புரதோ மம பாதுஹனுமதோ மூர்த்தி:

(சீதாதேவியின் இதய துக்கம் அகற்றியவனும் ஸ்ரீராமசந்திரனின் சிறப்புக்கு மறு உருவமாக விளங்கியவனும், பத்துதலை ராவணன் என்கின்ற ராட்சஸனின் கீர்த்தியை நாசம் செய்தவனுமாகிய ஹனுமான் சுவாமி என்முன்பு தோன்றவும்)

      வானர நிராத்யக்க்ஷம் தான குல
      குமுதரவிகர ஸத்ரிக்ஷயம்
      தீன ஜனாவன தீக்ஷம்
      பவனதப: பாகபுஞ்ச மத்ராக்ஷம்.

(வானர சேனை நாயகனும் ராட்சஸ குலமாகிய ஆம்பல் பொய்கைக்கு சூரிய கிரணத்திற்கு ஒப்பானவனும், ஜனங்களைக் காப்பதில் சிரத்தை ஊன்றியவனும், வாயுதேவனின் பிரார்த்தனைப் பயனாகப் பிறந்த ஆஞ்சனேயனை நான் கண்டேன்.)

      ஏதத் பவனசுதஸ்ய ஸ்தோத்ரம் ய:
      படதி பஞ்சரத்னாக்யம்
      சிரமிஹ நிகிலான் போகான் முக்த்வா
      ஸ்ரீ ராம பக்திபாக்பவதி

(பவன சந்ததியான ஹனுமானின் புனிதமான இந்த பஞ்சரத்ன ஸ்தோத்ரம் பக்தியுடன் சொல்பவர்கள் நீண்டகாலம் எல்லா சுக சௌகரியங்களும் பெற்று வாழ ஸ்ரீ ராமன் கிருபையும் கடாட்சமும் நல்கி அனுக்ரகிப்பார்.)
-=-=-=-=-=-=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

ஹனுமான் கோயில்களும் சங்கற்பங்களும்.

      இந்தியாவில் எல்லப் பிரதேசங்களிலும் ஹனுமன் கோயில்களைக் காணலாம். மிகப் புரதனமான ஹனுமான் கோயில் அயோத்தியில் சரயு நதிக்கரையிலுள்ள ஹனுமான் கட்டியிலுள்ளது. ஸ்ரீ ராமன் அயோத்தியில் ஆட்சி புரிகின்ற கலத்தில் ஸ்ரீ ஹனுமான் அங்கு வசித்த இடத்தில் அந்தக் கோயில் உள்ளது. தவம் செய்யும் நிலையிலுள்ள அங்குள்ள மூர்த்திக்கு ஞான ஹனுமான் என்று பெயர். சங்கட மோட்சன் ஹனுமானையும் துளசிதாசருக்குக் காட்சி தந்த பல ஹனுமானையும் காசியில் தரிசிக்கலாம். இலட்சுமணபுரியிலும் ஹனுமான் கோயில் உண்டு. ஏழ்மை அகற்றுவதில் பெயர் பெற்ற ஜனக்புரி கோயிலில் உள்ள ஹனுமானை லக்ஷ்மீகர ஹனுமான் என்று அழைக்கிறார்கள். 

      பத்ரிநாத்திலிருப்பது யுக்தோத்யுக்த ஹனுமான். பீமாபூரில் உளநோய் குணப் படுத்தும் தேவதையாக ஹனுமானைத் தரிசிக்கலாம். கொல்கொத்தாவில் உள்ள ஹனுமான் சித்த பீடமாகக் கருதப்படுகிறது. ராஞ்சியில் வசிக்கும் உம்ர என்ற கிரிவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் ஹனுமானின் பின்காமிகள் எனத் தங்களைக் கருதுகின்றனர். அஞ்சனாதேவியும் பால ஹனுமானும் இவர்களுடைய முக்கிய தெய்வங்கள்.

      ஹனுமான் பிறந்த இடமெனக் கருதப்படும் குகையும் ராஞ்சியில் பார்க்கலாம். தன் மனதை மாற்ற வந்த காமதேவனை ஹனுமான் தோற்கடித்தது ஜெகந்நாத் பூரியில் என்று நம்ப்ப் படுகிறது. அதனால் இங்குள்ள ஹனுமானுக்கு மகர்த்வஜ ஹனுமான் என்று பெயர்வந்தது. பூரியில் ஜெகந்நாத சுவாமியின் பூந்தோட்டக் காவலராக சுரங்க ஹனுமான் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறார். குடஜாத்ரி மலையானது மருத்துவ மலையை ஹனுமான் திரும்பக் கொண்டு செல்கையில் அதன் உச்சிப் பகுதி இடிந்து கீழே விழுந்ததால் உண்டானது என்று கூறப்படுகிறது. கிஷ்கிந்தா ஆந்திராவில் இருந்தது என்று சொல்லப்படுகிறது. தண்டகாரண்யம் சுக்ரீவனின் மது வனம் இவையும் ஆந்திரா வில்தான் இருந்ததெனக் கூறுகிறார்கள். இம்மாநிலம் முழுவதும் ஹனுமத் சேவை நடக்கிறது. புட்டப் பர்த்தியில் சத்திய சாய் பாபா நிறுவிய ஹனுமான் விக்ரகம்  உலகப் பெயர் பெற்றது. ஸ்ரீகாகுளத்திலுள்ள கூர்மாவதார கோயிலில் வீர ஹனுமான் உப தேவனாக இருக்கிறார். கோதாவரி நதிக்கரையிலுள்ள முதிடிவரம் கோயிலில் கௌதம முனிவர் நிறுவிய தாண்டவ ஹனுமான் இருக்கிறார். தேர்வில் வெற்றிபெற வரம் வேண்டி அவுரங்கா பாத்திலுள்ள ஆஞ்சநேயரைத் தேடி அனேகர் செல்கிறார்கள்.

      கர்நாடகாவில் உள்ள பலகூரில் சர்ப்ப துக்கத்தை அகற்றும் ஹனுமான் உள்ளார். மந்திராலயம் கோயிலில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்  நிறுவிய பஞ்சமுக ஹனுமான் உள்ளார். பீஜப்பூர் துளசி கிரி கோயிலில் உடன் வரந்தரும் ஹனுமானுக்கு சிறப்பான பூஜைகள் நடைபெறுகின்றன. உடுப்பி கிருஷ்ணன் கோயிலில் ஹனுமானை பிரதிஷ்டை செய்தவர் ஸ்ரீ மத்வாச்சாரியார். கர்நாடகாவில் உள்ள உடற்பயிற்சி நிலையங்களெல்லாம் வீர ஹனுமனை முக்கிய தேவனாக வைத்துள்ளார்கள்.முல்பாகல் ஹனுமான் மிகவும் பிரசித்தம். கொல்லூர் மூகாம்பிகா கோயிலில் உப தேவர்களில் ஒருவர் ஸ்ரீ ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சனேயர்.

       தமிழ் நாட்டில் சோளிங்கபுரம் கடிகாசலத்தில் சங்கு சக்கரத்துடன் யோக நிஷ்டையில்  நிற்கும் ஹனுமானைப் பாண்டிய மன்னன் இந்திரத்யும்னன் பிரதிஷ்டை செய்துள்ளார். அதே போல ராயப்பேட்டையிலும், செங்கற்பட்டிலும், படப்பையிலும், காஞ்சீபுரம், விருத்தாசலம், நாமக்கல், கும்பகோணம் நங்க நல்லூர் ஆகிய இடங்களில் உள்ள ஹனுமான் கோயில்கள் முக்கியமானவை. தாம்பரம் செல்லும் வழியில் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் ராஜபாக்கத்தில் பிரசித்தி பெற்ற பஞ்ச முக வினாயகர், பஞ்ச முக ஆஞ்சனேயர் ஆகியோர் அருளாட்சி செய்கின்றனர். பாரதத்திலேயே மிகப் பெரிய ஹனுமான் ஸ்தாணு மாலையர் கோயிலில்  ஹனுமான்,சுசீந்திரத்தில் உள்ளார்.

      கேரளத்தில் கண்ணூர் மாவட்டத்தில் செறுதாமும் ஸ்ரீராகவபுரம் கோயிலில் பட்டாபிஷேகம் முடித்து ராஜாதி ராஜனாக வீற்றிருக்கும் ஸ்ரீ ராமர் விக்கிரகம் நிறுவப்பட்டுள்ளது. அங்கே வட மேற்கில் சிறிய கோயிலில் கைகூப்பி வணங்கி நிற்கும் ஹனுமார் உள்ளார். ஹனுமான் பெயரில் தான் அந்தக் கோயில் அறியப்படுகிறது. ராகவபுரம் என்பதை ஹனுமாரம்பலம் என்றே அழைக்கிறார்கள். தலைச் சேரி திருவங்காட்டுள்ள ஸ்ரீ ராமர் கராந்தகன். அங்கு ஹனுமான் பிரசித்தம். ஸ்ரீ ராம லெக்ஷ்மணர்  இருக்கும் திருவில்லாமலைக் கோயிலில் ஹனுமான் சங்கற்பஸ்தானம்மும் அலங்கார பிம்பமும் மட்டுமே உள்ளன. திருப்ரகயாறில் ஹனுமானுக்கு முக்கியத்துவம் கோடிமுனையில் கொடுகப்படுகிறது. அண்டல்லூர் காவில் தெய்வத்தார் என்ற ஸ்ரீராமருக்கு நேர் முகமாக ஹனுமான் சேவை செய்கிறார். கண்ணூர் மாவட்டத்தில் பெரளச்சேரிக்கு அருகில் மக்ரேரியில் திரு சுப்பிரமணிய சுவாமியைப் பிரதிஷ்டை செய்தது ஹனுமானே என்று வரலாறு கூறுகிறது. மர்க்கடசேரி என்பது மக்ரேரி என்றாயிற்று என்கிறார்கள். பந்தனம் திட்டை மாவட்டத்தில் கவியூரில் ஸ்ரீராமர்பிரதிஷ்டை செய்த இராமநாத சிவன் விக்கிரகம் உள்ளது.  முகூர்த்தத்தைத் தாண்டி சொற்ப காலதாமதம் ஏற்பட்டதால் ஹனுமான் கொண்டுவந்த சிவலிங்கம் கோயில் மதில்கட்டுக்குள் மற்றொரு இடத்தில் தனியாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்திலுள்ள செறுவத்தூருக்கு அருகில் மேலே மட்டலாயி ஸ்ரீராமசுவாமி கோயிலுக்கு சுற்றிலும் குரங்குகள் வாழ்ந்துவருகின்றன. இங்கு ஹனுமான் இருப்பதால் குரங்குகள் தாவளமடிக்கின்றன. மட்டலாயிக் குன்றும் மயிலாடிக் குன்றும் மருத்துவக் குன்றை ஹனுமான் எடுத்துச் செல்லும் போது அதிலிருந்து அடர்ந்து விழுந்த மண்தரிகள் என்ற நம்பிக்கையும் உள்ளது. திருவனந்தபுரம் பாளையத்தில் அங்குள்ள சேனையுடன் சேர்ந்து ஹனுமான் கோயில் இருக்கிறது. ஒரே மாதிரியான இரண்டு கர்ப்பகிரகங்களில் சிவனும் ஹனுமானும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். தந்தை சிவனுக்குப் பூஜைகள் செய்த பின்னரே தனயன்ஹனுமானுக்குபூஜை செய்வார்கள் இருப்பினும் மகனுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருவனந்தபுரம் தெற்குத் தெரு நர்மதேஸ்வரம் சிவன் கோயிலில் ஹனுமானுக்கு முக்கிய இடம் உள்ளது. கோசாயிச்சாவடியிலும் ஹனுமான் பிரதிஷ்டை உள்ளது ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் உள்ள ஸ்ரீராமஸ்தானத்திலும், கோட்டைக்குள் இருக்கும் ஸ்ரீ சீதாராமபக்த ஹனுமான் சபையின் தலைமையகத்திலும் ஆஞ்சனேயர் அருள்புரிகிறார். 

     ஸ்ரீராமபக்தி வளர்பதற்கும் உலகம் ஆர்ஷ கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்வதை வேகப்படுத்து வதற்கும் பிறந்திருக்கின்ற ஜகத் குரு சந்தியாநந்த சரஸ்வதியின் வழி ஸ்ரீ ராமதாசன் ஆவது தான். செங்கோட்டுக் கோணம் ஸ்ரீ ராமதாச மிஷன் கோயிலலிலும் கிளைகளிலும் ஆஞ்சனேயர் பிரதிஷ்டை உள்ளது. திருச்சிவ பேரூர் நரசிம்ஹ சுவாமி கோயிலில் ஹனுமானுக்கு தனி கோயிலும் தனி பூஜையும் உண்டு. பறவூர் மூகாம்பிகா கோயில்,  அலைப்புழை முல்லக்கல் பகவதி கோயில் ஆகிய இடங்களில் உபதேவனாக ஹனுமான் பிரதிஷ்டை உள்ளது. பம்பா கணபதி கோயிலுடன் சேர்ந்தார்போல் ஸ்ரீ ராமனுக்கும் ஹனுமானுக்கும் பிரதிஷ்டை உண்டு. மூவாற்றுப் புழையிலுள்ள காவுங்கரைச் சந்தைக்கு சீரும் சிறப்பும் தருவது முன்பு காடாக இருந்த அவ்விடத்திலுள்ள ஹனுமான் கோயிலே ஆகும்.. திருச்சூர் திருவம்பாடி கோயிலிலும் ஹனுமான் இருப்பதாக சங்கற்பம். கோழிக்கோட்டிலுள்ள வைராகி மடத்தின் பூஜை ஏற்பாடுகளுடன் மிட்டாய்த் தெருவில் உள்ள ஹனுமான் அநேக ஆயிரம் பக்தர்களை ஈர்க்கிறார். கோழிக்கோடு பந்தீராங்கவிலுள்ள கொடல் நடக்காவில் மங்கலசேரி பகவதி கோயிலில் ஒரு ஹனுமான் திடல் உண்டு.

      திப்பு சுல்த்தான் படை ஓட்டகாலத்தில் தானூர் திருக்கைக்காட்டு மடத்திலுள்ள நாகேரி சுவாமிகள் தன் சீடர்களுடன் நித்திய பூஜை செய்யும் சாளக்கிராமம் எடுத்துக்கொண்டு கோழிக்கோடு ராஜா சாமூதிரி மன்னரின் உபதேசப்படி திருவனந்தபுரம் புறப்பட்டார். வழியில் மதியத்துடன் வள்ளிக் குன்றிலுள்ள நெறும்கைதக் கோட்டையை அடைந்த்தார்.  ஸ்ரீ கோயிலுகுள் புகுந்து ஸ்ரீராமத்  தியானத்துடன் பூஜை நடத்தி திருமதுரம் பிரசாதத்துடன் வெளியே வந்ததும், இறையருள் காட்டி சுற்றுமுள்ள காடுகளிலிருந்து ஏராளமான குரங்குகள் இறங்கி வந்தன. இங்குள கோயிலின் பலிக் கற்களில் இருபுறமும் ஹனுமான் உருவம் செதுக்கப்பட்டுள்ளன. ஏர்ணாகுளம் சிவன் கோயிலில் வடக்கும் கிழக்கும் ஹனுமானுக்கு பிரதிஷ்டை உண்டு. செறுப்புளச்சேரிக்கு அடுத்த மணிக்கச்சேரியில் சமுத்திரம் தாண்ட தயாராகி நிற்கும் ஹனுமானின் பிரதிஷ்டை உண்டு.

     பாலக்காடு புதுச்சேரி நறுகம்புள்ளி ஆற்றுக்கு அருகில் ஒரு ஹனுமான் கோயில் உள்ளது. காஞ்சங்காட்டுள்ள ஹனுமான் கோயில் மிகவும் புகழ் வய்ந்தது. ஒற்றழிப் பாலத்திற்கு அடுத்து கரிம்புழை என்ற இடத்தில் ஒரு ஹனுமான் கோயில் உண்டு. கோழிக்கொடு வெள்ளிமாடு குன்றிலுள்ள நும்ப்ரா பகவதி கோயிலில் ஹனுமார் இருக்கிறார்.

       பதவியில் உபதேவன் என்றாலும் முக்கியத்துவத்தில் சற்றும் குறையாதவர் ஸ்ரீ ஹனுமான். கோழிக்கோடு பன்னியங்கரை கிழக்கே முரிங்கத்து பகவதி கோயிலிலும் ஹனுமான் குட்டி இருக்கிறார். கோட்டைகளுக்கு துவார பாலகனாக இருப்பது ஸ்ரீ ஹனுமான். அரிக்காட்டி, காசர்கோடு, பேக்கல் கோட்டைகளில் ஹனுமான் கோவில்கள் உள்ளன. மன்னார்க்காடு அனங்கன் மலையில் ஹனுமான் கைப்பத்தி பதிந்த அடையாளம் இருக்கிறது. திரூர்தாலுகா, திருப்பராங்கோடு பஞ்சாயத்தில் ஆலத்தியூர் கிராமத்தில்  உள்ள கோயிலில் பிரதான தேவனும், புருஷோத்தமனும் ஆன ஸ்ரீ ராமரை ஒரு பிரத்தியேகமான சங்கற்பத்தில்கண்டு ஜனங்கள் வழிபடுகிறார்கள். இங்கு சீதா பிராட்டி இல்லை. சீதையைத் தேடிச் செல்லும்  உத்தம பக்தனுக்கு சீதையிடம் சொல்லவேண்டிய அடையாள வாக்கியத்தை காதில் ஓதும் பாவத்தில் நிற்கிறார் ஸ்ரீராமர். தன் சுவாமி சொல்வதைக் கூர்ந்து நோக்கும் பாவத்தில் நிற்கிறார் ஸ்ரீ ஹனுமான். கதையுடன் நிற்கும் ஹனுமான் தன் சுவாமி சொல்லும் வார்த்தைகளைக் கேட்க தலையைச் சற்று சரித்து கவனத்துடன் நிற்கிறார்.
      புத்திர்பலம் யசோதைர்யம்
      நிர்பயத்வமரோகத
      அஜாட்யம் வக்படுத்வம்
      ஹனுமத் ஸ்மரணாத் பவேத்.

செய்தி மூலம்"ஹனுமான் மஹாத்மியம், ஆலத்தியூர் பெரும் திருக்கோயில் திரூர்"
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்.

.







--
Posted By V.Subramanian to தமிழ்ச் சிந்தனை (v.dotthusg) at 12/16/2009 06:11:00 AM

மறுமொழிகள்

0 comments to "Fwd: [தமிழ்ச் சிந்தனை (v.dotthusg)] Re: [MinTamil] அனுமத்தோடி"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES