ORIENTAL MANUSCRIPTS LIBRARY
MADRAS-5
ORIGIN
The collections of Colonel Colin Mackenzie (1754-1821), Dr.Leyden and Mr.C.P.Brown constitute the nucleus of the vast collection of manuscripts preserved in the Government Oriental Library, Madras, which consists of manuscripts of works in literature, history, philosophy and science, written in South Indian and Oriental languages, and of Kaifiyats and inscriptions, found in many places belonging to different periods.
MACKENZIE’S COLLECTION
Colonel Colin Mackenzie who came to India in 1783 as a Cadet of Engineers on the Madras Establishment of the East India Company took a keen interest in the study of ancient mathematics and, of the Logatithm in particular, and in Oriental languages. He collected a large number of manuscripts, coins, inscriptions,maps etc., bearing on literature, religion, history, manners and customs of the people not only from different parts of India but also from Ceylon and Java.
On his appointment as the Surveyor - General of India in 1818, Colonel Mackenzie took his valuable collections with him to Calcutta and went on adding to them till his death in 1821.
This collection was bought from Mrs. Mackenzie for 10,000 pounds by the East India Company in 1821 and divided into three parts. While one part was retained in London, the other parts were sent to Calcutta and Madras.
LEYDEN’S COLLECTIONS
In the India Office Library, London, a collection of manuscripts in Tamil, Telegu and Kannada characters belonging to Dr. Leyden ( a remarkable linguist and traveller who was in India from 1803 to 1811) was noticed by Mr. C.P.Brown in 1837. The valuable collection of Dr.Leyden which was purchased by the East India Company after his death and lodged at the India House, London was subsequently brought to India, thanks to the efforts of Mr. C.P.Brown who had joined the Indian Civil Service.
BROWN’S COLLECTION
Mr. C.P.Brown (1798 -1184) presented to the East India Company his own valuable collections of paper manuscripts of Sanskrit and Telegu works. This collection was brought to India in 1855.
GROWTH
Full-fledged library in the true sense was started in 1869. Three collections i.e, the Mackenzie Collection, the East India House Collection and Brown Collection were transferred to the Presidency College, Madras in 1870 and Mr. Pickford who was Professor of Sanskrit in Presidency College, was directed to prepare a Catalogue for them.
He was then called upon to prepare a scheme for publication of important literary and historical manuscripts. In 1876 he was requested to discover new manuscripts and to purchase them or aquire them by transcription.
Accordingly, many manuscripts have been acquired from time to time and added to the Library collection.
STOCK
From such small beginnings, the GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS LIBRARY, MADRAS has grown to its present dimensions and it possesses 71180 manuscripts in the following languages:-
Tamil | 16398 |
Sanskrit | 48884 |
Telegu | 2150 |
Kannada | 250 |
Marathi | 956 |
Urdu | 184 |
Arabic | 497 |
Other Oriental Languages | 407 |
Local Records | 1454 |
Total | 71180 |
Consequent on the formation of linguistic States in our country about 7,000 manuscripts in Telegu, Kannada and Malayalam were transferred to Andhra Pradesh, Karnataka and Kerala respectively. Apart from this 22,887 printed books are available for reference in the Library.
FUNCTIONS
The main functions of the GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS LIBRARY, are as follows:-
- Acquisition and preservation of manuscripts.
- Classification and Cataloging of manuscripts.
- Publication of rare manuscripts. and Library Catalogs.
- Purchase of books and periodicals for reference, and
- Supply of of information of manuscripts to the scholars.
PRESERVATION
The rare and valuable palm-leaf manuscripts are carefully preserved by adopting manual and chemical methods. The injured and damaged paper manuscripts. are preserved by being mended with Chiffon cloth.
PUBLICATION
The GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS LIBRARY has brought out so far 350 publications including Descriptive and Triennail Catalogues of its manuscripts in various languages. The publications have been brought under two series. GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS SERIES and GOVERNMENT ORIENTAL SERIES, those in the latter being edited by the Curator and the staff of the Library.
BULLETIN
Multilingual Bulletin published annually by the GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS LIBRARY contains in print rare and unpublished manuscripts in various languages. Twenty one volumes have been published so far.
PARTICIPATION IN EXHIBITION
The rare and valuable manuscripts of the GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS LIBRARY have been displayed in the manuscript exhibitions on the following occasions:-
- The Twenty Sixth International Congress of Orientalists at new Delhi in 1964.
- The third All India Agama Silpa Bharatha Folklore Conference at Kanchipuram in 1964.
- The world Telegu Conference at Hyderabad in 1965.
- The Second World Tamil Conference at Madras in 1968.
- The Lord Mahaveera’s 25th Parinirvana Centenary Celebratrations at Madras in 1974.
- The Silver Jubilee Celebrations of the Sanskrit Department Vivekananda College at Madras in 1980.
- The Chitirai Festival at Madurai in 1980.
- The Fifth World Tamil Conference at madurai in 1981 and
- Seminar on Sanskrit Literature at Vivekananda College, Madras in 1982.
ADMINISTRATION
The GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS LIBRARY is a govenment institution headed by the Curator under the control of the Director of Archaelogy, Government of Tamil Nadu.
SERVICE
Manuscripts and books are issued to visitors for study or consultation on request. Permission is accorded for studying, copying and comparing the manuscripts.
LOCATION
THE GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS LIBRARY is located in the Western Wing of the first floor of the Madras University Library. It is kept open fro 10-00 A.M. to 5-45 P.M. on all working days and shall remain closed on Fridays and Saturdays and the government holidays’.
அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
சென்னை - 600 005
தோற்றம்
இந்தியாவின் முதல் சர்வேயர் செனரல் ஆன ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த காலின் மெக்கன்சி (1754-1821), முனைவர் லேடன், இந்தியாவில் பிறந்த ஆங்கிலேயரான திரு. சி.பி.பிரெளன் (1798-1884) ஆகியோர் தொகுத்து வைத்த ஓலை மற்றும் நாட்சுவடிகளே அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தின் தோற்றத்திற்கு காரணமாகும். இவர்கள் தொகுத்த சுவடிகளில் இலக்கியம், வரலாறு, தத்துவம், அறிவியல், கைபீதுகள் எனப்படும் வட்டார வரலாறுகள், கல்வெட்டுகள் முதலிய பொருட்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, உருது, அரபு பாரசீகம் முதலிய மொழிகளில் உள்ளன. இச்சுவடிகள் தற்போதைய ஆந்திர மாநிலம், மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வரலாறு மற்றும் பண்பாட்டுச் சிறப்புகளை கொண்டுள்ளன.
மெக்கன்சியின் தொகுப்பு
காலின் மெக்கன்சி என்பவர் கி.பி. 1783 - இல் இந்தியாவிற்கு வருகை தந்தார். கிழக்கிந்தியக் கம்பெனியின் ஒரு பொறியியல் பிரிவின் பணியாளராக இவர் இங்கு பணியாற்றினார். பழங்கணக்குகள், இந்திய வரலாறுகள், கீழ்த்திசை மொழிகள் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் உள்ளவராக இருந்தார். அவர் ஏராளமான சுவடிகள், வரை படங்கள், நாணயங்கள் ஆகியவற்றைச் சேகரித்தார். தமிழ் நாடு தொடர்பானது மட்டுமல்லாமது சிலோன், சாவா ஆகிய பகுதிகள் தொடர்பாகவும் அவருடைய தொகுப்புகள் இருந்தன.
கி.பி. 1818 - இல் காலின் மெக்கன்சி, சர்வேயர் செனரலாக பதவி உயர்வு பெற்றார். இவர் தமது தொகுப்புகளைக் கல்கத்தாவிற்குக் கொண்டு சென்றார். அங்கு மேலும் பல சுவடிகளை, தாம் மறையும் வரை சேகரித்தார்.
இவருடைய மொத்தத் தொகுப்புகளையும் 10,000 பவுண்டுகளுக்கு கிழக்கிந்திய கம்பெனியார் விலைக்கு வாங்கினர். மெக்கன்சியின் தொகுப்பை மூன்று பகுதிகளாகப் பிரித்து, ஒரு பகுதியை சென்னைக்கும், இன்னொரு பகுதியை கல்கத்தாவிற்கும், மூன்றாவது பகுதியை இலண்டனிற்கும் அனுப்பினர்.
லேடனின் தொகுப்பு
பேராசிரியர் லேடன் என்பவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த (1803 -1811) மொழியியல் அறிஞர் ஆவார். இவருடைய தொகுப்பு இலண்டனில் உள்ள இந்தியா அலுவலகத்தில் இருந்ததை, சி.பி. பிரெளன் கி.பி. 1937-இல் கண்ணுற்றார். லேடனில் அத்தொகுப்பில் , தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிச்சுவடிகள் இருந்தன. அவற்றை சி.பி. பிரெளனின் முயற்சி காரணமாக கிழக்கிந்திய கம்பெனி, லேடனின் மறைவுக்குப் பிறகு, விலைக்கு வாங்கி இந்தியாவுக்குக் கொண்டு வந்தது.
பிரெளனின் தொகுப்பு
சி.பி.பிரெளன் என்பவர் ஆந்திர மாநிலத்தில் மாவட்ட ஆட்சித்தலைவராகவும், சென்னை பல்கலைக் கழக மன்றச் செயலாளராகவும் (1843), சென்னை கல்லூரி நூலகக் காப்பாட்சியாரகவும் (1848) இருந்தார். இவர் தொகுத்த தெலுங்கு, தமிழ் மற்றும் வடமொழிச்சுவடிகளை கிழக்கிந்திய கம்பெனி விலைக்கு வாங்கி, 1855-இல் இந்தியாவிற்கு அளித்தது.
வளர்ச்சி
அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் முழுக்கட்டமைப்பில் கி.பி. 1869 -இல் தொடங்கப்பட்டது. மெக்கன்சியின் தொகுப்பு, கிழக்கிந்தியக் கம்பெனியின் தொகுப்பு, பிரெளன் தொகுப்பு ஆகிய மூன்று தொகுப்புக்களும் 1870-இல் சென்னை மாநிலக்கல்லூரியில் ஒரே தொகுப்பாக வைக்கப்பட்டது. அப்போது மாநிலக்கல்லூரியில் வடமொழி பேராசிரியராக இருந்த பிக்போர்டு என்பவர் அச்சுவடிகளுக்கு விரிவட்டவணை தயாரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.
இன்றியமையாத இலக்கிய, வரலாற்றுச் சுவடிகளை அச்சிடுமாறும் அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். 1876-இல் மேலும் பல புதிய சுவடிகளைச் சேகரிக்குமாறும், படியெடுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டார். அதற்கிணங்கப் பல்வேறு சுவடிகள் காலந்தோறும் சேகரிக்கப்பட்டன.
இருப்பு:
மேற்கொண்டவாறு தோற்றம் கண்ட அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகமானது தற்பொழுது மிகச் சிறந்த முறையில் வளர்ந்து, கீழ்வருமாறு மொத்தம் 72314 சுவடிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
___________________________________________________________________
மொழி ஓலை தாள் மொத்தம்
___________________________________________________________________
தமிழ் 10783 5775 16558
வடமொழி 38282 11473 49755
தெலுங்கு 806 1426 2232
கன்னடம் 182 72 254
மராத்தி _ 967 967
உருது _ 184 184
அரபு _ 407 407
பாரசீகம் _ 1396 1396
ஒரிய, பாலி, 127 _ 127
சிங்களம், பர்மியம்
வட்டார ஆவணங்கள் - 434 434
________________________________________________________________
மொத்த சுவடிகள் 50180 22134 72314
________________________________________________________________
மேற்படி சுவடிகள் அல்லாமல் தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாளம் ஆகிய மொழிச்சுவடிகள் மொத்தம் 7,000, மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட போது, ஆந்திரா, கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன:
தற்பொழுது இந்நூலகத்திலுள்ள அச்சு நூற்கள் மொத்தம் 25372 கீழ் வருமாறு அமைந்துள்ளன.
தமிழ் 5442
வடமொழி 7320
தெலுங்கு 1575
கன்னடம் 70
மராத்தி 137
மலையாளம் 444
அரபு 230
பாரசீகம் 265
உருது 705
ஆங்கிலம் 6926
பிரெஞ்சு, செர்மனி மற்றும்
ஐரோப்பிய மொழிகள் 194
இந்தி 130
விவர அட்டவணை 805
அகராதிகள் 182
வங்காளம் 18
_____
25373
_____
செயல்பாடுகள்
அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தின் தலையாய பணிகள் கீழ்வருமாறு :
1. சுவடி சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல்
2. சுவடிகளை வகைப்படுத்தலும் அட்டவணைப்படுத்தலும்
3. அரிய சுவடிப் பதிப்பும், அட்டவணைப்பதிப்பும்
4. பருவ இதழை ஆண்டுதோறும் வெளியிடுதல்
5. அச்சு நூற்கள் மற்றும் பருவ இதழ்களை சேகரித்தல்
6. கல்வியாளர்களுக்குச் சுவடி விவரங்களை அளித்தல்
பாதுகாப்பு
நூலகத்தில் ஓலைச்சுவடிகள் மற்றும் நாட்சுவடிகள் தூசி அகற்றியும், இரசாயனப் பொருட்கள் இட்டும், குளிர் சாதனம் செய்யப்பட்டுள்ள பெரியதொரு அறையில் பாதுகாக்கப்படுகின்றன. இருப்பறையில் 1997 -இல் குளிர் சாதன வசதி செய்யப்பட்டது.
சிதிலமான நாட்சுவடிகள் மற்றும் அச்சு நூற்கள் சிப்பான் துணி ஒட்டிச் செப்பனிடப்படுகின்றன.
வெளியீடுகள்
அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் மொத்தம் இது வரை வெளி வந்துள்ள 419 வெளியிடுகள் கீழ்வருமாறு :
___________________________________________________________________
மொழி வெளியீடுகளின் அட்டவணைகளின் மொத்தம்
எண்ணிக்கை எண்ணிக்கை
___________________________________________________________________
தமிழ் 81 40 121
வடமொழி 55 52 107
தெலுங்கு 30 28 58
கன்னடம் 22 10 32
மலையாளம் 29 5 34
மராத்தி 2 4 6
இசுலாமிய
மொழிகள் 19 11 30
பல்வகை _ 7 7
பருவ இதழ் 24 _ 24
________________________________________________________________
மொத்தம் 262 157 419
________________________________________________________________
பருவ இதழ்
தமிழ், தெலுங்கு, வடமொழி, உருது, ஆகிய மொழிகளில் பதிக்கப்பெறும் சில நூற்களைத் தாங்கி ஆண்டு தோறும் ஒரு பருவ இதழ் வெளி வருகிறது. அது வரை மொத்தம் 24 தொகுதிகள் வெளி வந்துள்ளன. 24 -ஆம் தொகுதி 1999 -ஆம் ஆண்டு வெளிவந்தது.
பொறுப்பாளர்
அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் காப்பாட்சியரின் கீழ் இயங்கி வரும் ஓர் அரசு நிறுவனமாகும். இந்நூலகம் தற்பொழுது தொல்பொருள் ஆய்வுத்துறையைச் சேர்ந்துள்ளது.
தொண்டு
சுவடிகள் மற்றும் அரிய அச்சு நூற்கள் கல்வியாளர் அனைவருக்கும் கட்டணம் எதுவுமின்றி நூலகத்தில் அமர்ந்து படிப்பதற்கு வழங்கப்படுகின்றன. ஆய்வு மாணவர்களுக்கும், அச்சிட்டு வெளியிடுவோர்களுக்கும் சுவடிகளை படியெடுத்துக்கொள்ளவும், ஒளியச்சுப்படி வழங்கவும் நிலைமைக்கு ஏற்றவாறு அனுமதி வழங்கப்படுகிறது. நூலகத்தின் ஒளியச்சுக்கருவி 1997-இல் வாங்கப்பட்டது. நூலகத்தின் வெளியீடுகள் அனைத்தும் 25 விழுக்காடு கழிவுடன் விற்பனை செய்யப்படுகின்றன.
இருப்பிடம்
அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் சென்னை பல்கலக்கழக நூலகத்தின் முதல் மாடியில் அமைந்துள்ளது.
அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வெள்ளி, சனி ஆகிய வார விடுமுறை நாட்கள் தவிர்த்து, ஏனைய எல்லா நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5. 45 வரை இந்நூலகம் செயல் படுகிறது.
12 நிமிடங்கள் வருகின்ற இப்பதிவில் காலின் மெக்கன்சியின் தொகுப்பாக அமைந்திருக்கும் பல சுவடிகளையும் வியப்பில் ஆழ்த்தும் வடிவிலான சுவடிக்கட்டுக்களையும் காணலாம். சில உதாரணங்கள் புகைப்படங்களாக.
சிவலிங்க வடிவத்திலான ஓலைச்சுவடி கட்டு - மெக்கன்சி சேகரிப்பு
குருந்தகடு வடிவில் ஓலைச்சுவடிக்கட்டு
விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/04/blog-post_12.html
யூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch?v=l2cTvQ2T3hI
விழியப் பதிவு, புகைப்படங்கள், செய்தி தொகுப்பு: சுபாஷிணி.
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]