THF Announcement: ebooks update: 31/8/2014 *தலைசிறந்த பாண்டிய மன்னர்கள்*

0 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.

நூல்:  தலைசிறந்த பாண்டிய மன்னர்கள்
ஆசிரியர்: அ.கி.பரந்தாமனார்

நூல் குறிப்பு:   
இந்த நூல் பாண்டிய நாட்டு வரலாற்றைச் சுருக்கமாக அறிவிப்பதோடு வாசிக்க எளிமையாகவும் சிறப்பாகவும்  அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி சங்க நூல்களில் ஒன்றான புறநானூற்றைக் கற்பதற்கும் வாயிலாக அமையும் முறையில் எளிமையாக அமைந்திருக்கின்றது


இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 392

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​


தமிழ் மரபு அறக்கட்டளை 13ம் ஆண்டு நிறைவும் 14ம் ஆண்டு வரவேற்பும் - சிறப்பு வெளியீடு சென்னை அருங்காட்சியகம்

0 மறுமொழிகள்
வணக்கம்.

13 ஆண்டுகளை நாம் கடந்து வந்துள்ளோம். இன்று 14ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம்.

அருங்காட்சியகங்கள் விலை மதிப்பு இல்லாத மனித குல வரலாற்றின் பல்வேறு பரிமாணங்களை தேடி சேகரித்து பாதுகாத்து ஆய்வு செய்து, தொடர்ந்து நாம் நம் பழமையை உணர நமக்கு வாய்ப்புக்களை வழங்கும் கல்விக் கூடங்கள்.

அந்த வகையில் நமது தமிழ் மரபு அறக்கட்டளையின் சேகரிப்புக்களை நோக்கும் போது நாமும் ஒரு மின்வெளி அருங்காட்சியக்த்தை தாம் உருவாக்கி வைத்திருக்கின்றோம் என்று நான் நம்புகின்றேன். 

இந்த மின்வெளி அருங்காட்சியகத்தில் இன்று இந்தச் சிறப்பு மிக்க நாளில் இணைகின்றது ஒரு விழியப் பதிவு.

எழும்பூர் மியூஸியம் என்று எல்லோராலும் சாதாரணமாக குறிப்பிடப்படும் சென்னை அரசு அருங்காட்சியகம், ஆசிய நாடுகளின் மிகப் பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்று.  இந்தியாவின் கல்கத்தா அருங்காட்சியகத்து அடுத்து இரண்டாவது பெரிய அருங்காட்சியகம் என்ற பெருமையையும் பெருவது இந்த அருங்காட்சியகம்.

1 மணி நேர பதிவாக இந்த விழியப் பதிவு அமைந்திருக்கின்றது. ஆக நன்கு நேரம் எடுத்துக் கொண்டு அமர்ந்து பார்த்து ரசிக்கலாம். இந்தப் பதிவில் அருங்காட்சியக கல்வித்துறை தலைவர் டாக்டர். பாலசுப்ரமணியம் மிக விரிவான விளக்கத்தை தமிழில் வழங்குகின்றார். இந்த விளக்கங்கள் குறிப்பாக
  • அருங்காட்சியகத்தின் ஆரம்ப கால நிலை
  • இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பு சேகரிப்புக்கள்.
  • அருங்கலைச்சிற்பங்கள் தொகுப்பின் போது நிகழ்ந்த சிக்கல்கள்
  • இந்த அருங்காட்சியகத்தில் சேகரிக்கப்பட்ட கலைப்பொருட்கள் 
  • இங்கு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டதால் இங்கிலாந்தின் லண்டன் அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்படாமல் தமிழகத்திலேயே இருக்கும் நிலை அமைந்த விஷயங்கள்
  • கால நிலைகளில் சிற்ப வடிவங்கள் - பல்லவர், சாளுக்கியர், முற்காலச் சோழர், பிற்காலச் சோழர், நாயக்கர் கால சிற்பங்கள், தற்கால சிற்பங்கள்
  • யட்ஷி, தாந்திரீகம் பற்றிய தகவல்கள்
  • வெங்கலச் சிலை செய்யப்படும் விதம்
  • வெங்கலச் சிற்பங்கள் சேகரிப்புக்கூடம்
  • சைவம், வைஷ்ணவம் வெண்கலச் சிலைகளின் கூடம்
  • காசுகள், சின்னங்கள்
  • சிலைகள் பஞ்ச லோகத்தில் சிலை செய்யப்படுவதன் காரணம்
ஆகிய விஷயங்கள் பேசப்படுகின்றன.

​அர்த்தனாரீஸ்வரர் வடிவம்

விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2014/08/blog-post_11.html

யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=2c01fmD1d88&feature=youtu.be

குறிப்பு:
இந்தப் பதிவை நான் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் திரு.நரசய்யா அவர்கள். என்னோடு சேர்ந்து மிகுந்த ஆர்வத்தோடு முழு பதிவின் போதும் உடனிருந்து உதவிய இவருக்கு நம் மனமார்ந்த நன்றி. புகைப்படங்களில் சிலவற்றை எடுத்து உதவிய நண்பர் கோபுவுக்கும் நம் நன்றி.


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


THF Announcement: ebooks update: 24/8/2014 *மதுரை நாயக்க அரசர்கள்*

0 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.

நூல்:  மதுரை நாயக்க அரசர்கள்
ஆசிரியர்: ஆர்.எஸ்.நாராயணஸ்வாமி ஐயர்

நூல் குறிப்பு:   
இந்த நூல் 1559 முதல் 1730 வரையுள்ள பாண்டிய தேச சரித்திரத்தை கூறுகின்றது. இதில் நாயக்க வம்ச ஸ்தாபனம், தொடங்கி அடுத்தடுத்து அரசர்களின் பெயர்கள் விளக்கப்பட்டு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வாசிக்க எளிமையாகவும் சிறப்பாகவும் இந்த நூல் அமைக்கப்பட்டுள்ளது.


இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 391

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​


THF Announcement: ebooks update: 10/8/2014 *தென்னாட்டுப் பேரரசர்*

0 மறுமொழிகள்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் நூல் இணைகின்றது.

நூல்:  தென்னாட்டுப் பேரரசர்
ஆசிரியர்: புலவர் W.V.குப்புசாமி (சென்னை சிந்தாதிரிப்பேட்டை உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்)

நூல் வெளிவந்த ஆண்டு : 1947

நூல் குறிப்பு:   
இந்த நூல் சேரன் செங்குட்டுவன், பல்லவன் நரசிம்மன், சோழன், இராஜராஜன் என்னும் பேரரரசர் மூவரின் வரலாற்றை எளிய நடையில் சுருக்கமாக வழங்குகின்றது. சங்க கால அரசனான செங்குட்டுவன் (கி.பி 150-200), இடைக்கால அரசனான நரசிம்மன் (கி.பி 630-668), பிற்கால அரசனான இராஜராஜன் (கி.பி 985 - 1014) ஆகிய இம்மூவர் வரலாறு தமிழகத்தின் நடைமுறைகளையும் நாகரிகத்தையும் அறிய உதவும் வகையில் ஆசிரியர் இந்த நூலை எழுதியிருக்கின்றார். பள்ளி மாணவர்களை மனதில் கொண்டு எழுதப்பட்ட நூல் இது.




இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 390

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​


மண்ணின் குரல்: ஆகஸ்ட் 2014: குன்னண்டார் குடைவரை கோயில்

0 மறுமொழிகள்


வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

தமிழ் நாட்டின் கோயிற்கலையில் பிரமிக்க வைக்கும் தன்மையுடையன குடைவரை கோயில்கள். அந்த வரிசையில் இன்றைய வெளியீடாக மலர்வது புதுக்கோட்டைக்கு 35 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் குன்னண்டார் கோயில்.


பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு,  பின்னர் சோழர் காலத்தில் விரிவாக்கப்பட்டு, பாண்டியர் காலத்தின் வரலாறுகளையும் கொண்டு, முத்தரையர்களின் ஆட்சியிலும் இருந்து பின்னர் நாயக்க மன்னர்களின் காலத்தில் மேலும் விரிவடைந்த ஒரு கோயில் இது. ஆலயத்தின் மூர்த்தி திருக்குன்றக்குடி மாதேவர் அல்லது திருக்குன்றக்குடி நாயனார் என்ற குறிப்பு இந்த ஆலயத்தில் உள்ள ராஜராஜ சோழனின் ஒரு கல்வெட்டில் காணக்கிடைக்கின்றது. இக்கோயிலுக்குத் தேவரடியார்கள் செய்த தொண்டுகளை விவரிக்கும் கல்வெட்டுக்களும் இக்கோயிலின் பல பகுதிகளிலும் மண்டபத்திலும் இடம் பெருகின்றன.

கோயில் முழுமைக்கும் 37 கல்வெட்டுக்கள் பல்வேறு காலகட்டத்தின் வரலாற்றுத் தகவல்களைத் தாங்கி நிற்கின்றன. தமிழகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் இதுவும் ஒன்று என்பதில் மறுப்பேதுமில்லை.

விழியப் பதிவைக் காண: இங்கே

யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=BeuNSWcvVT0&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 8 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்!

இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். 

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


THF Announcement: ebooks update: 2/8/2014 *சோழ வேந்தர் மூவர்*

0 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் நூல் இணைகின்றது.

நூல்:  சோழ வேந்தர் மூவர்
ஆசிரியர்: லெ.ப.கரு.இராமநாதன்

நூல் குறிப்பு:  (நூலிலிருந்து)
சங்க காலத்திற்குப் பின்பு தமிழ் வேந்தர்களின் வீரத்தையும் பிற இயல்புகளையும் பல நாட்டார்க்கும் உணர்த்திய பெருமை இராசராசன் முதலிய பிற்காலச் சோழர்க்கே உரியது. இவர்கள் தென்னிந்தியா முழுவதையும் ஆண்டனர். இலங்கை முதலிய தீவுகளை வென்றனர். கடல் கடந்த  நாடுகளிலும் தம் வீரத்தையும் நாகரிகத்தையும் நிலைநிறுத்தினர்.

இச்சிறப்புடைய சோழருள், முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன், முதற் குலோத்துங்கன், ஆகிய மூவரும் குறிப்பிடத்தக்க பெருமையுடையவர். வீரத்திலும் ஆட்சிமுறையிலும் இலக்கியத் தொண்டிலும் சமயத் திருப்பணியிலும் தலைச்சிறந்தவர். இப்பெருமக்கள் வரலாறுகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 389

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES