வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் நூல் இணைகின்றது.
நூல்: சோழ வேந்தர் மூவர்
ஆசிரியர்: லெ.ப.கரு.இராமநாதன்
நூல் குறிப்பு: (நூலிலிருந்து)
சங்க காலத்திற்குப் பின்பு தமிழ் வேந்தர்களின் வீரத்தையும் பிற இயல்புகளையும் பல நாட்டார்க்கும் உணர்த்திய பெருமை இராசராசன் முதலிய பிற்காலச் சோழர்க்கே உரியது. இவர்கள் தென்னிந்தியா முழுவதையும் ஆண்டனர். இலங்கை முதலிய தீவுகளை வென்றனர். கடல் கடந்த நாடுகளிலும் தம் வீரத்தையும் நாகரிகத்தையும் நிலைநிறுத்தினர்.
இச்சிறப்புடைய சோழருள், முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன், முதற் குலோத்துங்கன், ஆகிய மூவரும் குறிப்பிடத்தக்க பெருமையுடையவர். வீரத்திலும் ஆட்சிமுறையிலும் இலக்கியத் தொண்டிலும் சமயத் திருப்பணியிலும் தலைச்சிறந்தவர். இப்பெருமக்கள் வரலாறுகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 389
நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "THF Announcement: ebooks update: 2/8/2014 *சோழ வேந்தர் மூவர்*"
Post a Comment