வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
செங்கல் தயாரிப்பு என்பது மிகப் பழமையான ஒரு கலை. தமிழர் கட்டிடக் கட்டுமானத் துறையில் முக்கிய அங்கம் வகிக்கும் ஒரு அடிப்படைத் தொழில் இது. மதுரைக்கு அருகே இருக்கும் மானாமதுரை, திருப்பாச்சேத்தி ஆகிய பகுதிகளில் செங்கல் தயாரிப்பு தொழில்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குடிசைத் தொழில் என்ற நிலையிலும், சிறு வணிகம் என்ற நிலையிலும், விரிவான வர்த்தக நோக்கத்துடனும் என இத்தொழில் இப்பகுதிகளில் நடைபெற்று வருகின்றது.
விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot. de/2014/10/blog-post.html
யூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/ watch?v=ihSdjPC30uA
இப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.
இப்பதிவினை இவ்வருடம் ஜூன் மாதம் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். இதன் பதிவிற்கு உதவிய திரு நாகரத்தினம் அவர்களுக்கு (முனைவர் காளைராசனின் சகோதரர்) நமது பிரத்தியேகமான நன்றி.
புகைப்படங்கள் எடுத்தவர் மதுமிதா. அவருக்கு நம் நன்றி.
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "மண்ணின் குரல்: அக்டோபர் 2014: செங்கல் தயாரிப்பு (திருப்பாச்சேத்தி)"
Post a Comment