வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.
நூல்: இராவணன்
ஆசிரியர்: தோழர் வேலன்
நூல் குறிப்பு:
23 கதை மாந்தர்கள் கொண்ட 112 பக்கங்கள் கொண்ட நாடக நூல் இது.
திரு.ஈ.வே.ரா. அவர்களின் முன்னுரையும் C.N.அண்னாதுரை அவர்களின் முன்னுரையும் கொண்ட நாடக நூல் இது.
அண்ணாவின் முன்னுரையில் அவர் இப்படிப் பதிகின்றார்..
..
இது போது இளைஞர்கள் ஓர் நெருக்கடியான நேரத்தில் வாழ்கின்றார்கள். ஒரு புறத்திலே பழங்காலக் கருத்துக்கள், சமுதாயத்திலே குறிப்பிடத்தக்க பகுதியினரிடம் வேரூன்றி, தழைத்த வண்ணம் இருக்கக் காண்கின்றனர். மற்றோர் புறமோ புதிய கருத்துக்கள், உலவி, உள்ளத்தைக் குளிரச் செய்யக் காண்கின்றனர். இந்த இரு முனைகளிலே இளைஞர்கள், முதியவர்களால் ஓர் முனைக்கும் புதிய உலக அமைப்பாளர்களால் மற்றோர் முனைக்கும் இழுக்கப்படுகின்றார்கள். இதன் பயனால் உள்ளக் குமுறல் ஏற்படுகின்றது.
.....
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 398
நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "THF Announcement: ebooks update: 12/10/2014 *இராவணன்*"
Post a Comment