ணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.
நூல்: வீரமாமுனிவர் அருளிய தேம்பவாணி (நாட்டுப் படலம், நகரப் படலம் உரையுடன்)
ஆசிரியர்: வித்துவான் ந.சேதுராமன் (விருதுநகர் செந்திக்குமார் நாடார் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்)
பதிப்பு: திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
நூல் குறிப்பு:
இந்த நூல் பதிப்புரை, முகவுரை, பாயிரம், நாட்டுப் படலம், நகரப் படலம், பாட்டுமுதற் குறிப்பகராதி என 6 பகுதிகளாக அமைந்துள்ளது.
பதிப்புரையில் ஆசிரியர் தேம்பவாணி பற்றிய குறிப்பை முதலில் வழங்குகின்றார்...
தேம்பாவணியென்பது கிறித்துவ சமயத்தை நிறுவியருளிய இயேசுநாதரின் தந்தையாராகிய வளனின் (சூசையின்) வரலாற்றைக் கற்போருள்ளத்துக்கு ஒரு புத்தமுதாக அமையுமாறு செய்யுளால் காப்பிய நிலையிற் சிறிதும் வேறு படாது இய்ற்றப் பெற்றதொரு மாண்பு சான்ற நூலாகும். சிந்தாமணி, கம்பராமாயணம், திருக்குறள் முதலிய தலைசிறந்த நூல்களில் உள்ள சீரிய கருத்துக்களையும் கற்பனைகளையும் இன்னூலில் பல இடங்களில் காணலாம். இதனால் இந்த நூலாசிரியருக்கு நூல்களில் உள்ள பயிற்சி தெள்ளிதின் விளங்கும்.
அயல்னாட்டினராகவும் அயல் மொய்ழியினராகவும், பிறசமயத்தினராகவுமிருந்தும் தமிழில் உள்ள காவியங்களையும், இலக்கணங்களையும் ஐயந்திரிபுகளறப் பயின்று தமிழன்னைக்கு ஒரு புத்தணியாக விளங்குமாறு இன்னூலை இயற்றிக் கொடுத்தமைக்காக இன்னூலாசிரியராகிய வீரமாமுனிவருக்குத் தமிழகம் என்றும் நன்றிபாராட்டக் கடமைப்பட்டுள்ளது.. எனக் கூறி தேம்பவாணி நூலை எழுதிய Constantine Joseph Beschi (வீரமாமுனிவர்) பற்றி சிறு குறிப்பும் வழங்குகின்றார்.
பெஸ்கி அவர்கள் இந்த நூலை 1729ம் ஆண்டில் இயற்றினார். தேம்பாத அணி (வாடாத மாலை) என்றும் தேம் + பா +அணி =தேன் போன்ற பாக்களாலாகிய அணி என்றும் இந்த நூலுக்குப் பொருளாகும் என விளக்குகின்றார்.
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 399
நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "THF Announcement: ebooks update: 19/10/2014 *வீரமாமுனிவர் அருளிய தேம்பாவணி *"
Post a Comment