THF Announcement: ebooks update: 30/11/2014 *பாண்டிய மன்னர்கள் - பகுதி 2*

2 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.

நூல்:  பாண்டிய மன்னர்கள் - பகுதி 2
ஆசிரியர்:  பண்டித நா.கனகராஜையர்
நூல் வெளிவந்த ஆண்டு: 1946 (2ம் பதிப்பு)


நூல் குறிப்பு:  
பண்டையர் என்ற பெருமைக்கு உரியவர்கள் பாண்டியர்கள்.சங்க நூல்கள் வளர தமிழ்ப்பணி செய்தோரில்  வரலாறுகள் சிறப்புடன் விளக்கப்பட வேண்டும் என மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஒன்றாக இந்த நூலைக் கருதலாம்.

இந்த நூல் 2 பாண்டிய மன்னர்களின் வரலாற்றை விவரிப்பதாக அமைந்திருக்கின்றது.
1. உக்கிரப் பெருவழுதி
2.தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: தென்கொங்கு சதாசிவம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 405

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்:  தென்கொங்கு சதாசிவம்


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​


நாடார் குல மித்திரன் - 1922 -மே 2வது சஞ்சிகை

0 மறுமொழிகள்
வணக்கம்.

நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகையில் இன்று வெளியிடப்படுவது 1922ம் ஆண்டு மே மாதம் வெளிவந்த சஞ்சிகை. மே மாதம் இரண்டு வெளியீடுகள் இருந்திருக்கின்றன. இன்று இரண்டாவதாக வெளியிடப்பட்ட சஞ்சிகை இணைகின்றது

இந்த இதழின் உள்ளடக்கம்
  • நாடார் மகஜனசங்க 5-வது கான்பரன்ஸ் ரிப்போர்ட்
  • ஹிதோபதேசம்
  • ஜீவகாருண்யம்
  • நிருபத்திரட்டு
  • நமது மித்திரன் வளர்ச்சி
  • குலமாதா வருந்துகின்றாள்
  • குலவர்த்தமானம்
  • அபிப்ராயம்
  • ஆசிரமவாசம்

இத்தோடு விகடவேசயர்மாலை, திருமுத்துமாரியின் திருவிழாச்சிந்து ஆகிய நூல் வெளியீடுகளைப்பற்றிய செய்திகளையும் காணலாம்.

நன்றி: திலகபாமா, அருண்குமார் ஞானசம்பந்தம்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]



THF Announcement: ebooks update: 23/11/2014 *வரலாறு கண்ட கடிதங்கள்*

1 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.

நூல்:  வரலாறு கண்ட கடிதங்கள்
ஆசிரியர்:  வெ.சாமிநாத சர்மா


நூல் குறிப்பு:  
தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழி பெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப்பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும் என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறவேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு.வெ.சாமிநாத சர்மா அவர்கள்.  1895ம் ஆண்டில் பிறந்த இவர் முதலில் அரசுப் பணியில் ஈடுபட்டவரெனினும் திரு.வி.க அவர்களின் குரு-சீடர் போன்ற நட்பின் காரணத்தால் அரசுப் பணியையும் விட்டு தேசபக்தன், நவசக்தி நாளேடுகளில் பணியாற்றினார். 

இந்த நூலைப் பற்றி .. அறிமுகமாகச் சில கருத்துக்களை ஆசிரியர் முன் வைக்கின்றார்.. அவற்றில் ஒன்று..
ஒரு நாட்டின் விடுதலைப்போக்கையோ, குமுகாயத்தின் வாழ்க்கைப் போக்கையோ மாற்றுவதற்குப் பல நேரங்களில் மடல்கள் கரணியமாக அமைவதுண்டு. ஒருவருடைய உள்ளத்தில் ஏற்படுகின்ற உணர்வுகள், எண்ணங்கள், இருவருடைய எண்ணங்களை இணைக்கும் மடல்கள் செயலில் இறங்க துணிந்தவர்களின் மனத்தில் உருவாகியிருக்கும் திட்டங்களை அறிவிக்கும் முன்னோடிகள் மடல்களாகும்..

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.ஜெயராமன்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 405

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்:  திரு.ஜெயராமன்


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​


மண்ணின் குரல்: நவம்பர் 2014:அயலகத் தமிழ் - சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு *முனைவர்.க. சுபாஷிணி

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

ஜூன் மாதம் எனது தமிழகத்திற்கான தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணியின் போது ஒரு நாள் மாலை நிகழ்வாக சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. அயலகத் தமிழ் என்ற தலைப்பில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர் சாகித்ய அகாதெமியின் சென்னைக் குழுவினர் அந்த நிகழ்வில் இடம்பெற்ற சொற்பொழிவுகளை வரும் நாட்களில் தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருக்கின்றேன். மொத்தம் நான்கு விழியப் பதிவுகள் உள்ளன. அதில்   இன்று வெளியிடப்படுவது முனைவர்.க. சுபாஷிணி வழங்கும் உரை.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.com/2014/11/blog-post_21.html

யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=uUGTB6iNBzM&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 18 நிமிடங்கள் கொண்டது.







அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


மண்ணின் குரல்: நவம்பர் 2014:அயலகத் தமிழ் - சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு *இளங்கோவன்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

ஜூன் மாதம் எனது தமிழகத்திற்கான தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணியின் போது ஒரு நாள் மாலை நிகழ்வாக சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. அயலகத் தமிழ் என்ற தலைப்பில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர் சாகித்ய அகாதெமியின் சென்னைக் குழுவினர் அந்த நிகழ்வில் இடம்பெற்ற சொற்பொழிவுகளை வரும் நாட்களில் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கின்றேன். மொத்தம் நான்கு விழியப் பதிவுகள் உள்ளன. அதில்   இன்று வெளியிடப்படுவது திரு.இளங்கோவன் அவர்களின் அறிமுக உரை.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/11/2014.html

யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=rJkfkkuQJ2E&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 18 நிமிடங்கள் கொண்டது.

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!



​திரு.இளங்கோவன்



​​முனைவர். ம.ரா, திரு.மாலன்​, முனைவர்.க. சுபாஷிணி, முனைவர்.நா.கண்ணன்


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


மண்ணின் குரல்: நவம்பர் 2014:அயலகத் தமிழ் - சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

ஜூன் மாதம் எனது தமிழகத்திற்கான தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணியின் போது ஒரு நாள் மாலை நிகழ்வாக சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. அயலகத் தமிழ் என்ற தலைப்பில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர் சாகித்ய அகாதெமியின் சென்னைக் குழுவினர் அந்த நிகழ்வில் இடம்பெற்ற சொற்பொழிவுகளை வரும் நாட்களில் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கின்றேன். மொத்தம் நான்கு விழியப் பதிவுகள் உள்ளன. அதில் முதலாவதாக இன்று வெளியிடப்படுவது திரு.மாலன் நாராயணன் அவர்களின் அறிமுக உரை.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/11/blog-post.html

யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=Y_MFQk3wSdg&feature=youtu.be
இப்பதிவு ஏறக்குறைய 18 நிமிடங்கள் கொண்டது.


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!



திரு.மாலன் நாராயணன்​




​முனைவர். ம.ரா, திரு.மாலன் நாராயணன்​, முனைவர்.க. சுபாஷிணி

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


THF Announcement: ebooks update: 16/11/2014 *இந்திய சரித்திரக் கதைகள்*

1 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.

நூல்:  இந்திய சரித்திரக் கதைகள்
ஆசிரியர்:  M.L. சுந்தரவரதாச்சாரியார்
பதிப்பு: லாங்மன்ஸ், க்ரீன் அண்ட் கம்பனி லிமிடெட்
நூல் வெளிவந்த அண்டு: 1936


நூல் குறிப்பு:  
ஒரு நாட்டுச் சரித்திரம் எனும் போது அதன் அரசன் அரசி பற்றி பொதுவாகச் சொல்வது வழக்கம். இந்த நூல் இந்திய அளவிலும் உலக அளவில் தாக்கங்களை ஏற்படுத்திய சில முக்கிய மனிதர்கள் பலரை பட்டியலிட்டுச் சொல்கின்றது. உதாரணமாக:
  • தருமபுத்திரன்
  • புத்தர்
  • ஸ்ரீவர்த்தமானர்
  • இயேசு கிறிஸ்து
  • சீன யாத்திரிகர்கள்
  • முகம்மது நபி
  • ஹிந்து மதாசாரியார்கள்
  • தென் இந்திய மாலுமி அரசர்
  • ருத்ராம்பா தேவி
  • ராணி துர்க்காவது
  • சிப்வாஜி
  • ஜயஸிங்
  • ஆனந்தரங்கம்பிள்ளை
  • ரிப்பன் பிரபு

இப்படி சில.

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 403

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​


நாடார் குல மித்திரன் மே மாத முதலாம் சஞ்சிகை

0 மறுமொழிகள்
வணக்கம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாடார் குல மித்திரன் சஞ்சிகையின் மின்னாக்கம் தொடர்கின்றது. நண்பர் அருண்குமார் ஞானசம்பந்தம் 1922ம் ஆண்டிற்கான மின்னூலாக்கப்ப்பணிகளைத் தொடங்கியிருக்கின்றார். ஏனைய சஞ்சிகைகளையும் அவரே தொடர்ந்து செய்தளிப்பாரென்று நினைக்கின்றேன். இது தொடரும் பட்ஷத்தில் வாரம் 2 என்ற வகையில் இந்தச் சஞ்சிகையின் தொடர்ச்சியான வெளியீடுகளைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

இன்று வெளியிடப்படுவது 1922ம் ஆண்டு மே மாதம் வெளிவந்த சஞ்சிகை. மே மாதம் இரண்டு வெளியீடுகள் இருந்திருக்கின்றன. இன்று முதலாவது சஞ்சிகை வெளியிடப்படுகின்றது.

இந்த இதழின் உள்ளடக்கம்
  • பொது சமாச்சாரங்கள்
  • நாடார் மகாஜன சங்கம் பிரசாரம்
  • 8-வது கான்பரன்ஸ் சிவகாசி
  • எச்சரிக்கை
  • கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா?
  • ஆசிரம வாசம்
நன்றி: திலகபாமா, அருண்குமார் ஞானசம்பந்தம்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]



​THF Announcement: ebooks update: 9/11/2014 *பிளேட்டோவின் அரசியல்*

0 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் நூல் இணைகின்றது.

நூல்:  பிளேட்டோவின் அரசியல் (Plato's Republic)
ஆசிரியர்:  வரலாற்றறிஞர் வெ.சாமிநாத சர்மா
குறிப்பு: ஆசிரியரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டவை




நூல் குறிப்பு:  
பிளேட்டோவின் கிரேக்க மூல நூலான Plato's Republic நூலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் குறிப்பிடத்தக்கன வந்துள்ளன.  தமிழில் வந்த ஒரு நூல் இது.

340 பக்கங்களைக் கொண்டது இந்த நூல். நூலின் பிரிவு வகை மிக வித்தியாமாக உள்ளது. ஆரம்பத்தில் நூலாசிரியர் வாசகர்களுக்கு இந்த நூலைப் பற்றிய ஒரு அறிமுகத்தைத் தருகின்றார்.  அதனைத் தொடர்ந்து பிளேட்டோவும் நானும் என்ற வகையில் தன்னோடு தொடர்பு படுத்திக் கொண்டு தமக்கு இப்பணியில் ஏற்பட்ட நாட்டத்தை விளக்குகின்றார். இதனைத் தொடர்ந்தார் போல பிளேட்டோவின் 10 நூல்கள் ஒவ்வொன்றாக விளக்கம் செய்யப்படுகின்றன.

நூலில் பிளேட்டோவும் நானும் என்ற பகுதியில் ஆசிரியர் இந்த  மொழிபெயர்ப்பு செய்த நாட்களை விவரிக்கின்றார். 2ம் உலக்ப் போர் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில் ஆசிரியர் ரங்கூனில் தமது மொழிபெயர்ப்பைத் தொடங்கிய வேளையில் அங்கிருந்து கட்டாயமாக வெளியேற வேண்டிய சூழல் அவருக்கு ஏற்படுகின்றது. கால் நடையாக அங்கிருந்து புறப்பட்டு வெவ்வேறு ஊர்களின் வழியாகக் கடந்து தமிழகம் வரவேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரங்கள் அந்தப் பயணத்தின் ஊடே, மிகுந்த சிரமத்துக்கிடையேயான சூழலில் உடல் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் தொடர்ந்து செய்திருக்கின்றார்.

எத்தகைய தீவிரமான ஆர்வம் அவருக்கு இப்பணியில் இருந்தது என்பதை நோக்கும் போது திரு.வெ.சாமிநாத சர்மா அவர்களின் இந்த மொழிபெயர்ப்பு பணிக்கான தமது அர்ப்பணிப்பை புறந்தள்ளி பார்க்க முடியவில்லை.

முதலில் 2 தொகுதிகளாக வெளியிட நினைத்திருந்து பின்னர் இரண்டையும் ஒன்றாக முழு நூலாக்கி தந்திருக்கின்றார் நூலாசிரியர்.

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்:  கோயம்பத்தூரைச் சேர்ந்த சுந்தரராஜன் ஜெயராமன். அவருக்கு நமது நன்றி.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 401

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: சுந்தரராஜன் ஜெயராமன்

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES