வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய தமிழ் நூல் இணைகின்றது.
நூல்: கார்ல் மார்க்ஸ் - இரண்டாம் பாகம்(முதற் பதிப்பு)
ஆசிரியர்: வெ.சாமிநாத சர்மா
நூல் குறிப்பு:
சென்ற பகுதியின் தொடர்ச்சி இது. இந்த நூலும் 112 பக்கங்கள் கொண்டது. லண்டன் வாசம், முதல் இண்டர்னேஷனல் என சில முக்கியப் பகுதிகளை விவரிக்கும் பகுதி இது.
வாசகர்களுக்கு நூலாசிரியர் தரும் குறிப்பு..
கார்ல் மார்க்ஸின் வாழ்க்கையும் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய சரித்திரமும் பின்னிக் கொண்டிருக்கின்றன. பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் என்ற அறிஞன் கூறுகிற மாதிரி மார்க்ஸுக்கு ஜெர்மனி ஒழுங்கான ஒரு திட்டத்தை வகுக்கக்கூடிய ஆற்றலை அளித்தது. பிரான்ஸ் அவனை ஒரு புரட்சியாளனாக்கியது. இங்கிலாந்து அவனை ஒரு அறிஞனாகச் செய்தது. எனவே இந்த நூலில் மார்க்ஸை மையமாக வைத்துக் கொண்டு அவனுடைய வாழ்க்கையோடு ஒட்டிய ஐரோப்பிய நிகழ்ச்சிகளை ஆங்காங்கே சந்தர்ப்பத்திற்கேற்றவாறு சுருக்கிக் கூறியுள்ளேன்.. என்கின்றார் ஆசிரியர்.
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.ஜெயராமன்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 411
நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.ஜெயராமன்
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
1 comments to "THF Announcement: ebooks update: 21/12/2014 *கார்ல் மார்க்ஸ் - இரண்டாம் பாகம்*"
December 21, 2014 at 2:39 AM
சுபாஷிணியின், ஜெயராமனின் இந்தத் தொண்டு என்றென்றும் நிலைத்து நிற்கும். 67 வருடங்களுக்கு முன்னால் படித்தெதெல்லாம் நினைவில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியே.
Post a Comment