THF Announcement: E-books update: 22/11/2015 *யதி ஆச்சாரம் - ஓலைச்சுவடி வெளியீடு*

1 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு ஓலைச்சுவடி நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.



நூல்:யதி ஆச்சாரம்
காலம்: அனேகமாக 9ம் நூற்றாண்டு

சுவடி நூல் குறிப்பு: 
சமண முனிவர்களின் ஒழுக்கம், இல்லறத்தார் ஒழுக்கம் என்பது பற்றி விரிவாகக் கூறும் நூல். 311 ஓலைகளைக் கொண்டது. ஓலைகளின் இரு பக்கமும் எழுதப்பட்டுள்ளன.


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 442

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: முனைவர்.இரா.பானுகுமார், பெங்களூரு
மின்னாக்கம், மின்னூலாக்கம்: முனைவர்.சுபாஷினி

இவர்கள் அனைவருக்கும் நம் நன்றி!

குறிப்பு: நூலின் பக்கங்கள் மிகச் சிறிய அளவில் குறைக்கப்பட்டு நூலாக்கி இருக்கின்றேன். இதனை சுவடி வாசிக்கும் பணி  ஆரம்பிக்கும் போது என்னிடம் இருக்கும் அசல் பக்கங்களை ஆய்வில் பயன்படுத்த என்ணியுள்ளேன். 

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​


மண்ணின் குரல்: நவம்பர் 2015: சீகன்பால்கின் தமிழ் ஆவணங்கள் - டாக்டர். டேனியல் ஜெயராஜ்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 



தரங்கம்பாடி எனும் பெயரைக் கேட்டால் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனிகள் பற்றியும் அதன் தொடர்பில் 18ம் நூற்றாண்டு தொடங்கி தமிழகம் வந்த ஜெர்மானிய லூத்தரன் பாதிரிமார்களைப் பற்றிய சிந்தனையும் தோன்றும்.

ஜெர்மனியிலிருந்து தமிழகம் வந்த லூத்தரன் பாதிரிமார்களில் சீகன்பால்க் தனிச் சிறப்பு பெறுபவர். இவரது ஆவணங்களை ஆய்வு செய்தவரும் ஜெர்மனியின் ஹாலெ நிறுவனத்தில் உள்ள தமிழ் நூல்களையும் கையெழுத்துச் சுவடிகளையும் காட்டலோகிங் செய்தவருமான டாக்டர். டேனியல் ஜெயராஜின் பேட்டி இது.

இப்பேட்டியில் டாக்டர்.டேனியல் ஜெயராஜ் அவர்கள் சீகன்பால்க் தமிழ் கற்ற விதம், அவரது தமிழ் மொழி பயற்சிக்கு உதவிய தமிழ் மக்கள், அவரது கையெழுத்து ஆவணங்கள், அவற்றைப் பற்றிய இவரது ஆய்வுகளும் நூல்களும் என்ற வகையில் விரிவான விளக்கத்தை வழங்குகின்றார்.

இதில் முkகியமாக சீகன்பால்கின் Genealogy of Malabarian Gods  நூலின் உள்ளடக்கம், அவை பற்றிய விளக்கம், சீகன்பால்க் தயாரித்த இலக்கண நூல்கள் ஆகியன பற்றியும், அவை தொடர்பாக தான் எழுதியிருக்கும் 13 நூல்களைப் பற்றியும் எடுத்துரைக்கின்றார்.

டாக்டர். டேனியல் ஜெயராஜ் தற்சமயம் இங்கிலாந்தின் லிவர்ப்பூல் நகரில் உள்ள லிவர்பூல் ஹோப் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துவ மத தத்துவத்துவத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்.


ஐரோப்பாவில் கோப்பன்ஹாகனின் ஆர்க்கைவிலும், ஜெர்மனியின் ஹாலே ப்ராங்கன் நிறுவனத்திலும் இருக்கும் லூத்தரன் பாதிரிமார்களின் கையெழுத்து ஆவணங்களை ஆராய்ச்சி செய்வ்தன் மூலம் இன்றைக்கு ஏறக்குரைய 300 ஆண்டுகளுக்கு முந்தய தமிழக சமூஅக் சூழலையும் மொழியியல் சூழலையும் நன்கு அறிந்து கொள்ள முடியும் என்ற கருத்தை முன் வைக்கின்றார்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கமாக அமைவது இவ்வகை ஆய்வுகள் பல்கலைக்கழகங்களாலும் அரசினாலும் முன்னெடுத்து செய்யப்பட வேண்டும் என்பதே. அயல்நாடுகளில் இருக்கும் தமிழ் நிலத்தின் வரலாறு சொல்லும் தரவுகளை மின்னாக்கம் செய்வதும் அவற்றை வாசிப்புக்கு உட்படுத்தி ஆய்வு மாணவர்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்து அவற்றை பதிப்பிக்க வைத்து சீரிய ஆய்வினைத் தொடங்க வேண்டியதும் காலத்தின் அவசியம். இத்துறைகளில்  ஆய்வுகள் பெருக தமிழக அரசும் பல்கலைக்கழகங்கலும் முன் வரவேண்டும் என்ற கோரிக்கையை இந்த வெளியீட்டின் வழி தமிழ் மரபு அறக்கட்டளை முன் வைக்கின்றது.

ஏறக்குறைய 20 நிமிடப்  பதிவு இது.

விழியப் பதிவைக் காண:   http://video-thf.blogspot.de/2015/11/blog-post.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=h6YGU6jOd3U&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​


கொரியாவின் மகாராணி ஒரு தமிழ் இளவரசி

0 மறுமொழிகள்



THF Announcement: E-books update: 08/11/2015 *திருக்குடந்தைத் தல வரலாறு*

2 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.


நூல்:திருக்குடந்தைத் தல வரலாறு
நூல் பதிப்பு: என்.ராஜகோபால் அய்யங்காரால் பதிப்பக்கப்பெற்று வெளியிடப்பெற்றது.

நூல் குறிப்பு: 
ஆலயம் பற்றிய பல தகவல்களை வழங்கும் நூல்.


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 441

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.
மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்

இவர்கள் அனைவருக்கும் நன் நன்றி!


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​


THF Announcement: E-books update:31/10/2015 * சுப்பிரமணிய சிவாவின் கட்டுரைகள்

1 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம்  நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:  சுப்பிரமணிய சிவாவின் கட்டுரைகள்

நூல் குறிப்பு: 
சிவம் என்றும் சிவா என்றும் அழைக்கப்படும் சுப்பிரமணிய சிவா அவர்கள் 4-10-1884ல் மதுரை மாவட்ட வத்தலகுண்டு என்ற கிராமத்தில் பிறந்தார். தம் இளம் வயதில் தேசபக்தியால்திருவனந்தபுரத்தில் தர்ம பரிபாலன சமாஜம் என்ற அமைப்பை உருவாக்கினார். இளைஞர்களைக் கூட்டுவித்துச் சொற்பொழிவுகள்னிகழ்த்திதேசீய உணர்ச்சியை வளர்க்கும் திருப்பணியில் பெரிதும் ஈடுபட்டார். அரசாட்சிக்கு எதிராகச் சிவாவின் செயல்கள் அமைந்ததால் இவர் திருவனந்தபுரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் தூத்துக்குடிக்கு வந்த போது வ.உ.சி.அவர்களைச் சந்தித்தார். சிதம்பரனாரும் சிவாவும் இணைந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு நெல்லைச் சீமயிலே தேசீயத்தை வளர்த்தனர். இவர் ஞானபாநு என்ற பத்திரிக்கையையும் நடத்தினார்.

இந்த நூலில் 28 கட்டுரைகள் உள்ளன. 
அனத்தும் தேசபக்தியை வெளிப்படுத்தும் கட்டுரைகளாக அமைந்துள்ளமையே இவற்றின் தனிச் சிறப்பு.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 440

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு,ஜெயராமன்
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு,ஜெயராமன்
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​


மண்ணின் குரல்: அக்டோபர் 2015: திருநணா - பவானி சங்கமேஸ்வரர் ஆலயம்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

"ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மி. தொலைவிலும், சேலத்திலிருந்து 56 கி.மி. தொலைவிலும், பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. . அருகில் உள்ள ரயில் நிலயம் ஈரோடு. சேலம் மற்றும் ஈரோட்டிலிருந்து பேருந்து வசதியும் உண்டு.

திருஞானசம்பந்தப் பெருமான், அருணகிரிநாதர் போன்ற சான்றோர்களால் பாடல் பெற்றத் தலமான, திருநணா எனப்படும் பவானி சங்கமேசுவரர் ஆலயம், சுயம்பு மூர்த்தியாக உருவான சங்கமேசுவரப் பெருமான் உறையும் பழம்பெரும் ஆலயம். காவிரி, பவானி, அமிர்தநதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமம் ஆகும் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப் பெறும் இடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளதால் இத்திருத்தலத்திற்கு சங்கமேசுவரர் ஆலயம் என்ற பெயர் பெற்றது. பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இக்கோவில் அமைந்துள்ளது. கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாகவும், இரண்டு வாயில்கள் உள்ளதாகவும் அமைந்துள்ளது. வேதங்களுக்கெல்லாம் தலைவியாக விளங்குவதாலும், சதுர் வேதங்களால் பூசை செய்யப் பெற்றதாலும் அம்பாள் வேதநாயகி என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

தட்சிண அளகை,தட்சிண கைலாயம், கட்சிணப் பிரயாகை போன்ற சிறப்புப் பெயர்களுடன், மூன்று நதிகளும் கூடுவதால் முக்கூடல் , கூடுதுறை என்றும், பராசர முனிவரால் வழிபடப்பட்டதால் பராசர தலம் என்றும், குபேரனால் வழிபடப்பட்டதால் குபேரபுரி என்றும் வக்கிராசுரன் இறைவனை வழிபட்டதால் வக்கிரபுரி என்றும், விஜய அரசரால் வழிபடப்பட்டதால் விசயபுரி என்றும் அழைக்கப்படுகிறது.

வேதகிரி (ஊராட்சிக் கோட்டை மலை), சங்ககிரி, நாககிரி (திருச்செங்கோட்டு மலை), மங்களகிரி (பெருமாள் மலை), பதுமகிரி ஆகிய இம்மலைகளுக்கிடையே “பவானி” திருத்தலம் அமைந்துள்ளதால் “பஞ்சகிரி மத்திய பிரதேசம்” என்றும் அழைக்கப்படுகிறது. ஒரே ராஜகோபுரத்தின் கீழ், சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அமைந்துள்ளதால் “சேத்திர சங்கமம்” என்றும், அமிர்தலிங்கேஸ்வரர், சகசுவரலிங்கேசுவரர் மற்றும் காயத்ரி லிங்கேசுவரர் என பல்வேறு மூர்த்திகள் ஒருங்கிணைந்து உள்ளதால் “மூர்த்தி சங்கமம்” என்றும் வழங்கப்படுகிறது."
-பவளசங்கரி - திருநணா (பவானி) -தமிழ் மரபு அறக்கட்டளையின் மாசி மகம் 2012 சிறப்பு வெளியீடு

ஏறக்குறைய 30 நிமிடப்  பதிவு இது.

விழியப் பதிவைக் காண:   http://video-thf.blogspot.de/2015/10/2015_29.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=mZIJVOVa5-E&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​


மண்ணின் குரல்: அக்டோபர் 2015: இலங்கை தமிழ் நாட்டுக் கூத்து

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 



இலங்கையின் பிரதேச ரீதியான நாட்டுக் கூத்து பல பாணிகளைக் கொண்டது.
  • மட்டக்களப்பு மரபில் வடமோடி தென்மோடி, மகுடிக் கூத்து, வாசாப்பு, வசந்தன்கூத்து ஆகியவை உள்ளன.
  • யாழ்ப்பாணப்பிரதேசத்தில் வடமோடி தென்மோடி, கத்தோலிக்கப் பாங்கு, வசந்தன்கூத்து..
அதுமட்டுமன்று
  • வட்டுக் கோட்டை மரபு
  • காத்தவராயன் மரபு என்பனவும் ..
  • மன்னார் பிரதேசத்தில் வடபாங்கு தென்பாங்கு, மாதோட்டப்பாங்கு, கத்தோலிக்க மரபு, வாசாப்பு என்பன..
  • முல்லைத்தீவு பிரதேசத்தில் முல்லைத்தீவு பாங்கு - கண்ணகி கூத்து, கோவலன் கூத்து ஆகியன முக்கியமாக அமைந்திருக்கின்றன..
  • வன்னிப்பிரதேசத்தில் காத்தவராயன் கூத்து
  • மலையகத்தில் அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர், காமன் கூத்து..
இப்படி, பிரதேசத்துக்குப் பிரதேசம் மாறுபடுகின்றது இலங்கைத் தமிழர் கூத்துக்கலை மரபின் பாணி.

இதனை விளக்கி ஆடிக்காட்டுகின்றனர் லண்டன் நகரில் Tamil Theatre & Visual Arts நிறுனத்தினரின் இயக்குனர்களான ரஜிதா சாம், சாம் ப்ரதீபன் தம்பதியர்.

இந்தக்கூத்து நிகழ்ச்சி கடந்த 10.10.2015 பாரீஸ் நகரிஸ் நடைபெற்ற ஐரோப்பிய தமிழ் மாநட்டில் இடம்பெற்ற நிகழ்ச்சியாகும்

35 நிமிட விழியப் பதிவு இது. 

விழியப் பதிவைக் காண:   http://video-thf.blogspot.de/2015/10/2015.html
யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=_uQaYGuqqBc&feature=youtu.be

இப்பதிவில் பிரதேச ரீதியாக உள்ள வேறுபாட்டினை  விவரிக்கும் விதமாக
கட்டியக்காரன் தன்னுடைய பாத்திரப் படைப்பை விளக்கும் வகயில் தொடங்கப்படுகின்றது.

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​


தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் - மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 3 அக்டோபர் 2015

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது மின்னிதழ் வெளியீடு அமைகின்றது. 

காலாண்டு இதழாக ​இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் ​வெளிவ​ரும் இந்த மின்னிதழில் தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட சிலதேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படு​கின்றன.

இந்தக் காலாண்டின் மின்னிதழ் இன்று  வெளியீடு காண்கின்றது. இதில் ஆகஸ்ட் தொடங்கி அக்டோபர் வரை இணைக்கப்பட்ட தேர்ந்தெடுத்த பதிவுகள் இந்த மின் சஞ்சிகையில் இணைகின்றன.









இந்த வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது தமிழக கல்வெட்டுக்கள் என்பதாகும். 

நம் மின்னிதழை வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!

அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​


மண்ணின் குரல்: அக்டோபர் 2015: பேரா.டாக்டர்.யாரோச்லாவ் வாட்சேக் பேட்டி

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

ஐரோப்பாவின் செக் ரிப்பப்ளிக் நாட்டின் தலைநகரான ப்ராக்-ல் அமைந்துள்ள சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இயங்கும் தென்கிழக்காசிய, மத்திய கிழக்காசியத்துறையின் தலைவராகப் பணிபுரிந்து தற்சமயம் அதே கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர். யாரோச்லாவ் வாட்சேக் அவர்களுடனான பேட்டியை இன்று வெளியிடுவதில் மகிழ்கின்றேன்.




ஐரோப்பாவில் தமிழ் ஒரு பாடமாக பயிற்றுவிக்கப்படும் ஒரு பல்கலைக்கழகம் இது என்ற பெறுமையையும் இந்தப் பல்கலைக்கழகம் பெறுகின்றது.
தமிழும் சமஸ்கிருதமும் கற்றுக் கொடுப்பதோடு பணி காரணமாக மங்கோலிய மொழியையும் கற்றுக்கொண்டு போதிக்க வேண்டிய சூழ்னிலை காரணத்தால் மங்கோலிய மொழியைக் கற்றுக் கொண்ட இவர் மங்கோலிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்பு இருக்கின்றது என்ற வகையில் தமது ஆய்வினை கொண்டு செல்கின்றார். 

பாரீசில் நடைபெற்ற ஐரோப்பாவில் தமிழ் என்ற மானாட்டில் தமிழ் மக்கள் செய்ய வேண்டிய ஆய்வுகளில் மங்கோலிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வும் மிகத் தேவை என்ற கருத்தை தனது மானாட்டு கட்டுரையில் முன் வைத்து அவர் பேசினார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

மிக எளிய வகையில் தமிழ் மொழியில் உரையாடக் கூடிய திறனும் பெற்றவர் இவர்.  அவரை கடந்த 11.10.2015 அன்று பாரீஸ் நகரில் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக ஒரு பேட்டி பதிவு செய்டிருந்தேன்.

ஏறக்குறைய 15 நிமிடப் பதிவு இது.

இப்பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி பயிலும் மாணவர்க்ள் தமிழர் மொழி, பாரம்பரியம் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளையுடன் இணைந்த வகையில் செயல்படுத்தக்கூடிய திட்டங்களைப் பேசியிருக்கின்றோம். அவை 2016ம் ஆண்டில் செயல்படுத்தப்பட ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.com/2015/10/tamil.html
யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=Ili0mii42U8&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​


மண்ணின் குரல்: அக்டோபர் 2015: மேல்சித்தாமூர் பார்சுவநாதர் ஜினாலயம்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

தமிழகத்தின் செஞ்சி வட்டம் வல்லம் அருகில் உள்ள மேல்சித்தாமூர் சமண சமயத்தின் தலைமை ஊராக இருந்து வருகின்றது. இங்குள்ள சமண மடம் ஜினகாஞ்சி மடம் என்று அழைக்கப்படுகின்றது. இவ்வூரில் பழைய சமணப்பள்ளிகளும் கோயில்களும் உள்ளன.

பகவான் பார்சுவநாதர் இக்கோயிலின் மூலவர்.  மடத்தோடு இணைந்தவடிவில் அதன் பக்கவாட்டில்  அமைந்திருக்கின்றது இந்த ஆலயம். கிரந்தத்தில் அமைந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஆலயத்தின் முகப்புப் பகுதியில் அமைந்துள்ளன.  




இக்கோயிலில் இடது புறத்தில் நின்ற கோலத்தில் மாதவிக் கொடி கால்களை படர்ந்திருக்கும் வகையில் அமைக்கப்பட்ட பாகுபலி சிற்பம் உள்ளது.  

கோயிலின் ஒரு பக்கத்தில் இருக்கும் தனி அறையில்   கருங்கற்களால் செய்யப்பட்ட சமணப் பெரியோர்களின் பாதச்சுவடுகள் உள்ளன. அதன் அருகில் சமண ஐயனார் உருவச் சிலையும் உள்ளது. இது மிகப் பழமையான ஒரு சிற்பம்.

இங்கு ஒரு தனிப்பகுதியில் சாந்தி நாத தீர்த்தங்கரரின் சிற்பமும் உள்ளது.  சாந்தி நாத தீர்த்தங்கரர் சிற்பத்தின் அடிப்பகுதியில் அவரது சின்னமாகிய மான் வடிவத்தையும் காணலாம்..

இக்கோயிலின் ஒரு தனிப்பகுதியில் ஞ்வாலாமாலினி இயக்கி, பத்மாவதி இயக்கி,  ஸ்ரீஜினவானி அல்லது சரஸ்வதி , ஸ்ரீ கணதரர், பிரம்மதேவர் ஆகியோருக்குத் தனி சன்னிதிகளும் உள்ளன. 



கோயிலின் வெளிப்புறத்தில் கல் தேர் ஒன்று உள்ளது. இது தேர் போன்ற வடிவத்தை ஒத்தது. இந்தத் தேரை இழுத்து வரும் யானை வடிவம் கற்பாறையில் செய்யப்பட்டது.  இந்த யானையின் வடிவம் மிக நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கழுத்தில் உள்ள மணிகளும் உடலின் ஒவ்வொரு பகுதிகளும் கை தேர்ந்த சிற்பக் கலைஞர்களது ஆற்றலை வெளிபடுத்தும் வகையில் உள்ளன. 

ஏறக்குறைய 10 நிமிடப் நேரப் பதிவு இது.

விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2015/10/blog-post.html
யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=Y9zTw7fcDLs&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​


​THF Announcement: E-books update:05/10/2015 * ரூசோ

1 மறுமொழிகள்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம்  நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.


நூல்:  ரூசோ
ஆசிரியர்:   வெ.சாமிநாதசர்மா
பதிப்பு:  மணிவாசகர் பதிப்பகம்


நூல் குறிப்பு: 
பேரறிஞர் ரூசோ சிறந்த சிந்தனையாளர். புரட்சிகர சிந்தனைகள் கொண்டவர். அவர் உருவாக்கிய கருத்துக்கள் மனிதகுலத்தின் விழுமியங்களை உலகுக்கு உணர்த்துவனவாக உள்ளன. உலகச் சிந்தனையாளர் வரிசையில் ரூசோவுக்கு என்றும் ஒரு சிறப்பிடம் உண்டு. அவர் உருவாக்கிய சமுதாய ஒப்பந்தம் என்னும் நூல் ரூசோ இவ்வுலக மாந்தர்களுக்கு வழங்கியிருக்கும் பெருங்கொடை. 
 

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 439

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு,ஜெயராமன்
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு,ஜெயராமன்
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​


மண்ணின் குரல்: அக்டோபர் 2015: திரு.மாவை சேனாதிராஜாவுடனான பேட்டி

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 



இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழ் மக்களிடையே வரவேற்பைப் பெற்று தற்சமயம் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியாக செயல்பட்டு வருகின்றது. இந்தத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் கட்சியின் துணைத்தலைவரும், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், இலங்கை பாராளுமன்றத்தின் பதில் எதிர்கட்சித் தலைவருமான மதிப்புமிகு திருவாளர் மாவை சேனாதிராஜா அவர்களுடனான பேட்டி இன்று வெளியீடு காண்கின்றது.
 
இந்தப் பேட்டியில் திருவாளர் மாவை சேனாதிராஜா அவர்கள்
  • இலங்கைத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த இலங்கைக்கும் நன்மையைத் தரும் வகையில் அமைந்திருக்கின்றதா?
  • செப்ட் 28 தொடங்கி நடைபெற்ற ஐ.நா மனித உரிமை தீர்மானம் தொடர்பான முடிவுகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நன்மை வழங்கக்கூடிய வகையில் அமையுமா?
  • தற்சமயம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உடனடி தேவை எவை ? 
  • எவ்வகையில் புணரமைப்பு, மக்கள் மறுவாழ்வு, மீள்குடியேற்றம் ஆகியன மேற்கொள்ளப்பட வேண்டும்?
.. ஆகிய விடயங்கள் தொடர்பாக தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.


ஏறக்குறைய 50 நிமிடப் நேரப் பதிவு இது.

விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.com/2015/10/2015_4.html
யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=2h0eRNRixlU&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


THF Announcement: E-books update:03/10/2015 *தாவர போசன சமையல்

0 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று பழம் சமையல் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.




நூல்: தாவர போசன சமையல்
ஆசிரியர்:  திருமதி முருகேசப்பிள்ளை
பதிப்பு: திருமக்ள் அழுத்தகத்தார்


நூல் குறிப்பு: 
சமையல் வகைகளில் தான் இத்தனை முறைகளா என வியக்கும் வண்ணம் பல குறிப்புக்களைக் கொண்டுள்ளது இன்னூல். அதுமட்டுமல்ல. சமயலறையில் இருக்கும் பாத்திரங்களின் பெயர்கள் மேலும் குறிப்புக்கள் என சமையல் கலையை மிக விரிவான விளக்கங்கள் மிக நல்ல முறையில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இலங்கை தமிழ் நடையை ஆங்காங்கே காண முடிகின்றது என்பதும் இன்னூலின் மேலும் ஒரு சிறப்பு.


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 439

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: அன்றில் கரிகாலன்
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​


THF Announcement: E-books update:26/09/2015 *வயித்தியாநுகூலஜீவரட்சணி முதற்பாகம்*

2 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று நூறாண்டுகளுக்கு முந்தையதான ஒரு பழம் வைத்திய சாத்திர நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.



நூல்: வயித்தியாநுகூலஜீவரட்சணி முதற்பாகம்
ஆசிரியர்:  அங்கமுத்து முதலியார் (நேட்டிவ் டாக்டர்)
பதிப்பு: இராமசாமி நாயுடு - ஸ்ரீலட்சுமி நாராயன விலாச அச்சியந்திரசாலை

ஆண்டு: 1896


நூல் குறிப்பு: 
பல்வேறு நோய்களுக்கான வைத்திய முறைகள் செய்யுள் நடையில் வழங்கப்பட்டுள்ளன.


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 438

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: அன்றில் கரிகாலன்
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.



அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​


THF Announcement: E-books update:20/09/2015 *ஒரு பைசாத்தமிழன்* - பாகம் 2

0 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று நூறாண்டுகளுக்கு முந்தையதான ஒரு வார இதழின் மூன்றாண்டு தொகுப்பு மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்: ஒரு பைசாத்தமிழன் - பாகம் 2

வார இதழின் ஆசிரியர்: அயோத்திதாசப் பண்டிதர்



நூல் குறிப்பு: 

10ம் திகதி மார்ச் மாதம் 1909 முதல்  9ம் திகதி ஆகஸ்ட் 1911 வரை வாராவாரம் புதன்கிழமைகளில் வெளிவந்த ஒரு பைசாத்தமிழன் வார இதழின் மின்னாக்கப் பதிவின் இரண்டாம் பகுதி இது. இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னதான தமிழக செய்திகளை இதில் காணமுடிகின்றது என்பதோடு பர்மா, மலேசிய, இங்கிலாந்து தொடர்பான செய்திகளையும் இந்த வார இதழில் காணமுடிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

அன்றைய செய்திகள் இன்றைய வரலாற்றுச் செய்திகள் என்பதை வலியுறுத்தும் வகையில் நமது சேகரத்தில் இணையும் ஒரு பெருமை மிகு மின்னாக்கமாகவே இதனைக் கருதுகின்றேன். இந்த நூலை வாசித்து ஆய்வு செய்வது இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முந்தைய தகவல்களை சரியாக அறிந்து கொள்ள மிக நன்கு உதவும் என்பதில் அய்யமில்லை. ஏறக்குறைய 480 பக்கங்கள் கொண்ட ஒரு வார இதழ் தொகுப்பு  இது.


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 438

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: பாரி செழியன்
மின்னாக்கம், மின்னூலாக்கம்:  பாரி செழியன், அயோத்தி தாசர் ஆய்வு நடுவம், மதுரை

மதுரை அயோத்தி தாசர் ஆய்வு நடுவகத்திற்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி!


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​
 


மண்ணின் குரல்: செப்ட் 2015: திருமலை குந்தவை ஜினாலய பாறை சிற்பங்களும் ஓவியங்களும்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

குந்தவை ஜினாலயம் என்பது இராஜராஜ சோழனின் சகோதரியான குந்தவை நாச்சியார் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்திற்குப் பின்னர் கட்டியதாக அறிகின்றோம். இது கி.பி.11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ​



கருவறைக்கு அடுத்தார் போலக் காணும் தூண்கள் மட்டுமே சோழர்காலத் தூண்கள். ஏனைய தூண்கள் ஏனைய கட்டுமானப் பணிகளின் போது புணரமைக்கப்பட்டன. இக்கோயிலில் குன்றினில் அமர்ந்த குருவாய் இருப்பவர் நேமிநாதர். கருவறைக்கு வெளியே வந்தால் அங்கும் ஒரு மூலவர் சிலை இருப்பதைக் காணலாம். இதுவே இவ்வாலயத்தைக் குந்தவை கட்டியபோது  வைக்கப்பட்டிருந்த நேமிநாதர் சிற்பமாகும். இதன் வேலைப்பாடு கி.பி.11ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வேறு எங்கும் காணாத வகையில் இச்சிலையில் மூங்கிற் கீற்றுகள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.  இதே கோவிலில் பிரம்மதேவருக்கும் ஜ்வாலாமாலினிக்கும் கற்சிலைகள் உள்ளன.



கோயிலுக்கு வடக்கில் பாறையில் கலைச்செழுமை வாய்க்கப்பெற்ற ஒரு பகுதி உள்ளது. புதையல் போன்று காட்சியளிக்கும் இப்பகுதி பொக்கிஷம் போல பாதுகாக்கப்பட வேண்டியது என்பதில் அய்யமில்லை. குறுகலான படிகளில் ஏறிச்சென்றால் உள்ளே குகைக்குள்  தருமதேவி, நேமிநாதர், பாகுபலி ஆகியோரது சிற்பங்கள் இருப்பதைக் காண முடியும்.

தருமதேவியின் சிற்பம் நான்கரை அடி உயரம் கொண்டது. தனது இடது காலை சிம்மத்தின் மீது  வைத்த வண்ணம் காட்சி தருகின்றார். 




பாகுபலியின் சிற்பத்தின் அருகில் இருக்கும் காட்சி அற்புதமானது. அவரது உடலை மாதவிக் கொடிகள் (காட்டு மல்லிக)  படர்ந்திருப்பதையும் அதனை அவரது ஒரு சகோதரிகள் தூய்மை செய்வதையும் காட்டும் வகையில் இச்சிற்பத்தைத் செதுக்கி உள்ளனர்.




இதனை அடுத்து வெளியேறி மறு பக்கத்துக் குகைக்குச் சென்றால் அங்கே பல அறைகள் கொண்ட குகைப்பள்ளி இருப்பதைக் காணலாம். காண்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் மிக விரிவாக  கல்லினால் செய்யப்பட்ட அறைகள் பாறைக்குள் குடைந்து செதுக்கப்பட்டிருப்பது விந்தையிலும் விந்தை.



இந்த குகைப்பள்ளிக்குள் சுவர்களில் ஆங்காங்கே சமனச் சின்னங்கள் சித்திரங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இவற்றில் பல சிதிலமடைந்து போயுள்ளன. இவை மிக விரைவாகப் பாதுகாக்கப்பட வேண்டியது மிக அவசியம். 

இங்குள்ள ஓவியங்களில் குறிப்பிடத்தக்கனவாக இருப்பவை:
  • ஜ்வாலாமாலினி வடிவம்
  • சமவசரண வட்டம்
  • லோக ஸ்வரூபம்
  • ஜம்புத் தீவு ஓவியம்
  • படை பட்டையான சிவப்பு மேற்கூரை ஓவியங்கள்.

சிவப்பு நிறத்தினால் கீறப்பட்ட  அனைத்து ஓவியங்களும் சோழர் காலத்தவையே.







இந்த குகைப்பள்ளிக்கு வெளியே சில கல்வெட்டுக்களும் இங்குள்ளன.

குறிப்பு - முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு என்னும் நூலை வாசிக்கவும்.


10 நிமிடப் நேரப் பதிவு இது.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2015/09/blog-post_19.html
யூடியூபில் காண:  https://www.youtube.com/watch?v=V5VbqJGmyLs&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​


THF Announcement: E-books update:13/09/2015 *ஒரு பைசாத்தமிழன்*

3 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று நூறாண்டுகளுக்கு முந்தையதான ஒரு வார இதழின் மூன்றாண்டு தொகுப்பு மின்னூல் வடிவில் இணைகின்றது.



நூல்: ஒரு பைசாத்தமிழன்
வார இதழின் ஆசிரியர்: அயோத்திதாசப் பண்டிதர்

நூல் குறிப்பு: 
19ம் திகதி ஜூன் மாதம் 1907 முதல்  3ம் திகதி மார்ச் 1909 வரை வாராவாரம் புதன்கிழமைகளில் வெளிவந்த ஒரு பைசாத்தமிழன் வார இதழின் மின்னாக்கப் பதிவின் முதல் பகுதி இது. இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னதான தமிழக செய்திகளை இதில் காணமுடிகின்றது என்பதோடு பர்மா, மலேசிய, இங்கிலாந்து தொடர்பான செய்திகளையும் இந்த வார இதழில் காணமுடிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

அன்றைய செய்திகள் இன்றைய வரலாற்றுச் செய்திகள் என்பதை வலியுறுத்தும் வகையில் நமது சேகரத்தில் இணையும் ஒரு பெருமை மிகு மின்னாக்கமாகவே இதனைக் கருதுகின்றேன். இந்த நூலை வாசித்து ஆய்வு செய்வது இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முந்தைய தகவல்களை சரியாக அறிந்து கொள்ள மிக நன்கு உதவும் என்பதில் அய்யமில்லை. ஏறக்குறைய 480 பக்கங்கள் கொண்ட ஒரு வார இதழ் தொகுப்பு  இது.


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 437

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: பாரி செழியன்
மின்னாக்கம், மின்னூலாக்கம்:  பாரி செழியன், அயோத்தி தாசர் ஆய்வு நடுவம், மதுரை

மதுரை அயோத்தி தாசர் ஆய்வு நடுவகத்திற்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி!


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​


THF Announcement: E-books update:7/09/2015 *திருவிடைமருதூர்க் காருணியாமிருத தீர்த்த மகிமை*

1 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ்   தலபுராண நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:திருவிடைமருதூர்க் காருணியாமிருத தீர்த்த  மகிமை
நூல் ஆசிரியர்: ஸ்ரீலஸ்ரீ  அம்பலவாண    தேசிக சுவாமிகள்

நூல் குறிப்பு: 
திருவிடைமருதூர்  ஆலயத்தின் சிறப்பை விவரிக்கும் சிறு நூல் இது.


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 436

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.
மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்

இவர்கள் அனைவருக்கும் நன் நன்றி!


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​


THF Announcement: E-books update:28/08/2015 *வினோதவிடிகதை*

1 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ்   நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

இது இங்கிலாந்தின் பிரித்தானிய நூலகத்தின் சேகரிப்பில் இருக்கும் ஒரு நூல்.

நூல்: வினோதவிடிகதை

பதிப்பு: பூவிருந்தவல்லி சௌந்தரமுதலியாரது சுந்தரவிலாச அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது
ஆண்டு:  1892

நூல் குறிப்பு: சுவையான விடுகதைகளைக் கொண்டிருக்கின்றது இந்த நூல்.




தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 435

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக  பிரித்தானிய நூலகம் சென்று மின்பதிவாக்கியவர்: திரு.சந்தானம் சுவாமிநாதன் (லண்டன்)
மின்னூலாக்கம்: டாக்டர்.சுபாஷிணி

இவர்கள் அனைவருக்கும் நம் நன்றி!


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES