THF Announcement: E-books update: 17/05/2015 *மகனே உனக்கு*

2 மறுமொழிகள்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.


நூல்:  மகனே உனக்கு
எழுதியவர்: வெ. சாமிநாத சர்மா
பதிப்பாளர்: பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம்

நூலைப் பற்றி..
இரங்கூனில் நடைபெற்று வந்த ஜோதி என்ற மாதப்பத்திரிக்கையில் திரு.சாமிநாத சர்மா  வ.பார்த்தசாரதி என்ற புனைப்பெயரில் 1938ஆம் ஆண்டு தொடங்கி 1941 வரை இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் சில கடிதங்களை எழுதி வந்தார். அத்தோடு கூடுதலாக அப்பத்திரிக்கையில் வெளிவராத இரண்டு கடிதங்களையும் சேர்த்து இந்த நூல் உருவாக்கப்பட்டது. இதில் ஆசிரியரின் கவிதைகளும் இடம்பெறுகின்றன.

புனைப்பெயரில் எழுதிய கடிதங்களை ரசித்த தனது மகனுக்கு முகவுரையில் மிக அழகான அறிமுகப் பகுதியை எழுதியிருக்கின்றார். இதனை வாசித்து விட்டு நூலுக்குள் செல்வது நன்று.

இந்த நூலில்
  • கடமையை செய்
  • மன உறுதி
  • தன்னம்பிக்கை
  • ஓய்வு கொள்வது தேவையா?
  • சத்தியத்தைச் சொல்
  • உன் மனசாட்சியை விற்று விடாதே
  • சொல்லாதே - செய்
  • முயற்சியை கைவிடாதே
...
இப்படி எளிமையான அதேவேளை ஒரு மனிதருக்கு அடிப்படை சக்தி தரும் சொற்களில் தமது எண்ணங்களை கடிதமாக வடித்திருக்கின்றார் ஆசிரியர்.

ஒவ்வொரு இளைஞரும் வாசிக்க வேண்டிய நூல் இது.
கிரேக்க ரோமானிய பண்பாட்டின் உதாரணங்களையும் காட்டி கடிதங்கள் எழுதப்பட்டிருப்பது சிந்தனை விசாலத்தை விரிவாக்கிக் காட்டுகின்றது.


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 417

மின்னாக்கம், மின்னூலாக்கம்:  (சுந்தரராஜன் ஜெயராமன், கோயம்புத்தூர்)


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​

மறுமொழிகள்

2 comments to "THF Announcement: E-books update: 17/05/2015 *மகனே உனக்கு*"

இன்னம்பூரான் said...
May 17, 2015 at 4:04 AM

சர்மாஜி என் வாழ்க்கையை நிர்ணயம் செய்தவர். இந்த நூலின் சில பக்கங்களை மறுபடியும் படித்தேன்; மன நிறைவு பெற்றேன். ஒரு உபரி தகவல். திரு.வி.க. அவர்களின் தேசபக்தன் இதழில் உதவி ஆசிரியராக இருந்த சர்மாஜி ஒரு நாள் தலையங்கம் எழுதினார். அதன் படைப்பாளரின் பெயரை சொல்வது இதழியல் மரபு அல்ல. அதை தாக்கி ஈ.வே.ரா. வின் குடியரசு எழுத, ஒரு சொற்போரே நடந்தது. திரு.வி.க. வும் ஈ.வே.ரா. வும் நண்பர்கள். சாது அச்சகத்துக்கே வந்து ஈ.வே.ரா. சண்டை போட்டார். ஆனால், தலையங்கம் எழுதியது திரு.வி.க. தான் என்று அவர் நினைத்து வலுவாக சண்டை போட்டார். இந்த நூலின் பிரசுரகர்த்தா சொன்னது போல, சர்மாஜியின் உரை நடை திரு.வி.க. நடையை ஒத்து இருந்தது.
நன்றி, வணக்கம்.



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

இளங்குமரன் said...
May 17, 2015 at 7:17 PM

இந்த நூலை எப்படி வாசிப்பது முதல் பக்கத்தை மட்டுமே பார்க்க முடிகின்றது.

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES