வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்: ரூசோ
ஆசிரியர்: வெ.சாமிநாதசர்மா
பதிப்பு: மணிவாசகர் பதிப்பகம்
நூல் குறிப்பு:
பேரறிஞர் ரூசோ சிறந்த சிந்தனையாளர். புரட்சிகர சிந்தனைகள் கொண்டவர். அவர் உருவாக்கிய கருத்துக்கள் மனிதகுலத்தின் விழுமியங்களை உலகுக்கு உணர்த்துவனவாக உள்ளன. உலகச் சிந்தனையாளர் வரிசையில் ரூசோவுக்கு என்றும் ஒரு சிறப்பிடம் உண்டு. அவர் உருவாக்கிய சமுதாய ஒப்பந்தம் என்னும் நூல் ரூசோ இவ்வுலக மாந்தர்களுக்கு வழங்கியிருக்கும் பெருங்கொடை.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 439
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு,ஜெயராமன்
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு,ஜெயராமன்
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
நூலை வாசிக்க!
அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
1 comments to "THF Announcement: E-books update:05/10/2015 * ரூசோ"
October 5, 2015 at 5:52 PM
சில நல்ல விஷயங்களில் ஒன்று, வைகறையில் எழுந்தவுடன், சிந்தனையை தூண்டும் நூல் கிடைப்பது. மனம் 60 வருடங்களை 'கட கட' கடந்து பின்னோக்கி செல்வது: நான் முதலில் ரூஸோவை பாடமாகத் தான் படித்தேன், பின்னர் ஆங்கிலத்தில் மூலம். பல நாட்களுக்கு பின்னால் தமிழில், வெ.சா.ச. அவர்களின் பரிசுத்த நடையில். கார்ல் மார்க்ஸ்ஸை விட ரூஸோ தான் என் மனதைக் கவர்ந்தார், என் சிறிய அறைக்குக்கூட அவருடைய வீட்டின் விலாசம் வைத்தேன். அவருடைய சிந்தனைக்களம் உலகை ஆட்டியிருக்கிறது. தமிழில் ஐஏஎஸ் எழுத விரும்பும் மாணவர்கள் இதை முதலில் படிக்கவேண்டும். பிரபஞ்ச பிரசுராலயம் நிறுவிய முறையூர் பெரியவருக்கும், வெ,சா,ச, அவர்களுக்கும், திரு.ஜெயராமனுக்குன், சுபாஷிணிக்கும் வருங்காலம் பட்ட கடன் பின்னர் தான் தெரியும்.
அன்புடன்,
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com
Post a Comment