THF Announcement: E-books update:31/10/2015 * சுப்பிரமணிய சிவாவின் கட்டுரைகள்

1 மறுமொழிகள்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம்  நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:  சுப்பிரமணிய சிவாவின் கட்டுரைகள்

நூல் குறிப்பு: 
சிவம் என்றும் சிவா என்றும் அழைக்கப்படும் சுப்பிரமணிய சிவா அவர்கள் 4-10-1884ல் மதுரை மாவட்ட வத்தலகுண்டு என்ற கிராமத்தில் பிறந்தார். தம் இளம் வயதில் தேசபக்தியால்திருவனந்தபுரத்தில் தர்ம பரிபாலன சமாஜம் என்ற அமைப்பை உருவாக்கினார். இளைஞர்களைக் கூட்டுவித்துச் சொற்பொழிவுகள்னிகழ்த்திதேசீய உணர்ச்சியை வளர்க்கும் திருப்பணியில் பெரிதும் ஈடுபட்டார். அரசாட்சிக்கு எதிராகச் சிவாவின் செயல்கள் அமைந்ததால் இவர் திருவனந்தபுரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் தூத்துக்குடிக்கு வந்த போது வ.உ.சி.அவர்களைச் சந்தித்தார். சிதம்பரனாரும் சிவாவும் இணைந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு நெல்லைச் சீமயிலே தேசீயத்தை வளர்த்தனர். இவர் ஞானபாநு என்ற பத்திரிக்கையையும் நடத்தினார்.

இந்த நூலில் 28 கட்டுரைகள் உள்ளன. 
அனத்தும் தேசபக்தியை வெளிப்படுத்தும் கட்டுரைகளாக அமைந்துள்ளமையே இவற்றின் தனிச் சிறப்பு.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 440

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு,ஜெயராமன்
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு,ஜெயராமன்
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​

மறுமொழிகள்

1 comments to "THF Announcement: E-books update:31/10/2015 * சுப்பிரமணிய சிவாவின் கட்டுரைகள்"

இன்னம்பூரான் said...
October 31, 2015 at 6:17 PM

சுபாஷிணிக்கும் எனக்கும் ஒரு மனபொருத்தம் யாதெனில், அதிகாலையில் ஜெர்மனிலிருந்து, இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ, இங்கிலாந்த்திலே இருக்கும் என்னை எழுப்பி, தமிழும், இலக்கியமும், வரலாறும், நாட்டுப்பற்றும் அறிக, அறிக என்று சுவாமி விவேகானந்தரைப்போல் எழுப்பி விட்டு, பிரகாசத்தை அருளுவார். வாழ்த்துக்கள். இது கண்டு ஆனந்தப்படுவார், சிவா அவர்கள். சிறுவயதில் படித்த நூலை நாட்தோறும் படிக்க எனக்கு அருளி விட்டார். நன்றி. அவரது ஜன்மதினத்தன்று மின் தமிழில் நான் எழுதிய கட்டுரையையும் அவருக்கு அனுப்பியிருக்கிறேன்.
அன்புடன்,
இன்னம்பூரான்

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES